இயேசு கிறிஸ்துவைப் அறிந்துக் கொள்வது
கிறிஸ்துவை புதிதாக தன்னுடைய இரட்சகராய் விசுவாசிக்கும் ஒரு விசுவாசி வேதத்தில் புதைந்துள்ள சில காரியங்களைப் படிக்க, சிந்திக்க, ஆராய நேரம் ஒதுக்குவார். சுவிசேஷ கூட்டங்களுக்குச் செல்வதன் மூலமும், பிரசங்கங்களைக் கேட்பதன் மூலமும் ஆத்மீக ரீதியில் பலப்படுத்தப்படுவோம் என்று அவர் ஆசைப்படுவார். பல நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படிப்பதும், மற்றும் பல வேதாகம கருத்தரங்குகளில் கலந்துகொள்வதும் வேதத்தில் பல காரியங்களை கற்றுக்கொள்ள ஆசைப்படுவார். இது மிகவும் போற்றத்தக்கது ஆனால் ஒரு விசுவாசி மிக முக்கியமான காரியத்தை கவனிக்கவில்லை; அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வேதப்பூர்வமான புரிதளோடு இருப்பது.
இந்த கடைசி நாட்களில் பொய்யான கிறிஸ்துவைப் போதிக்கும் குழப்பமான பிரிவுகள் காளான்களாக வளர்ந்துக் கொண்டிருப்பதால், உண்மையான இயேசு கிறிஸ்தவத்துவை குறித்து வேதத்தின் அடிப்படையில் பற்றுதல் உடையவராக இருப்பது விசுவாசிக்கு மிகவும் அவசியம். இதுவே கிறிஸ்தவ வாழ்விற்கு முதல் படியாகும். இன்று பல விசுவாசிகள் வேதத்தில் மறைந்திருக்கும் மர்மங்களை & இரகசியங்களை வெளிக்கொண்டுவர மிகவும் ஆர்வமாகவும் மற்றும் கிறிஸ்துவைப் பற்றிய வேதப்பூர்வமான புரிதல் இல்லாமல் முடிவடைகிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் தவறான உபதேசத்தால் எளிதில் பாதிக்கப்பட்டு மற்றும் குழப்பமடைகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை ஏற்காத ஒவ்வொரு கருத்தும் பிசாசின் தந்திரம். ஒவ்வொரு விசுவாசியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிம், அவருடைய மகத்துவத்தை குறித்து பேசுவதற்கு வேத வசனம் முன்வைக்கப்படுகிறதா இல்லையா என்பதைப் பகுத்தறியும் அறிவு ஒவ்வொரு விசுவாசிக்கும் இருக்க வேண்டும். வேதத்தில் உள்ள மற்ற மர்மங்களையும்,இரகசியங்களையும் அறியாத இழப்பை விட வேதத்தின்படி கிறிஸ்துவை அறியாமல் இருக்கும் நிலை மாபெரும் இழப்பு.
அன்றைய யூதர்கள் மோசேயின் நியாய பிரமாணம், தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் மற்றும் சங்கீத புத்தகத்தில் உள்ள பல இரகசியங்களையும் & மர்மங்களையும் அறிந்திருந்தனர், ஆனால் மேசியா பிறந்தார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. புறஜாதி ஞானிகள் வந்து அதை அவர்களுக்கு நினைவூட்டாத வரை, கிறிஸ்துவின் பிறப்பை உணர முடியாமல் அவர்கள் ஆத்மீக குருட்டுத் தனத்தில் இருந்தனர். கிறிஸ்துவைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் பல மர்மங்களையும், இரகசியங்களையும் அறிந்து என்ன பயன்? வேதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது. கிறிஸ்துவைப் பற்றிய வேத அறிவு வேண்டும். அவை இல்லை என்றால் வேதத்தை மட்டும் தெரிந்து கொண்டு கிறிஸ்துவை கொன்ற & இழந்த யூதர்கள் போல் ஆகிவிடுவோம். நம்முடைய நிலை,
இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். எந்த ஒரு விசுவாசி சாட்சி சொன்னாலும் சரி, போதகர் வேதத்திலிருந்து எந்த பகுதியையும் பிரசங்கித்தாலும் சரி, அது இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் என்ற சத்தியத்தை வலியுறுத்தப்பட வேண்டும். அவர் வழங்கிய இலவசப் இரட்சிப்பைக் குறிப்பிட வேண்டும். ஒருவனுடைய வாழ்க்கையில் செயல்படும் வல்லமை கிறிஸ்துவுக்கு மட்டுமே உண்டு. இரட்சிப்பு என்பது அவருடைய நாமத்திலேயன்றி வேறொருவரிடத்திலும் இல்லை, (அப்போஸ்தலர். 4:12). “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.” இந்த இரட்சிப்பின் நற்செய்தி பிரசங்கத்திலும், சாட்சியிலும் இணைக்கப்படாவிட்டால், அது எப்படிப்பட்ட பிரசங்கம்அல்லது சாட்சி எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், அது உயிரற்றதாகவே இருக்கும். ஆதியாகமம் முதல் மல்கியா வரை எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில், ஒவ்வொரு அடியிலும் கிறிஸ்துவை மறைமுகமாக குறிப்பிடுவதைக் காண்கிறோம். அதாவது அவர் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே தீர்க்கதரிகள் அவரைப் பற்றி அவர்கள் எழுதிய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவர் பிறந்து, வாழ்ந்து, மாரித்து, உயிர்த்தெழுந்த பிற்காலத்தில் வாழும் விசுவாசிகள். எனவே நாம் நமது முன்னோடி தீர்க்கதரிசிகளை விட கிறிஸ்துவைப் பற்றி அதிகம் அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். முதலாவதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அளித்த மீட்பைப் பற்றியும் ஒருவன் புரிந்து நன்கு அறிந்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு விசுவாசி நியாயப்படுத்தப்படுவான்.
2. ஞானஸ்நானம் பற்றிய புரிதல்
பரலோகம் செல்வதற்கு ஞானஸ்நானம் முற்றிலும் அவசியம் என்பதை வேதப்பூர்வமாகப் பார்ப்போம். ஒரு நபர் தனது பழைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு கிறிஸ்துவின் இரத்தத்தில் சுத்திகரிக்கப்பட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதே இரட்சிப்பு ஆகும். ஒருவன் தன்னுடைய எல்லா பாவங்களையும் ஒப்புக்கொண்டு, முழுமையாக மனந்திரும்பி தேவனை தன் சொந்த இரட்சகராக பெற்றுக்கொள்வதின் & ஏற்றுக்கொள்வதின் மூலம் அவனுக்கு இரட்சிப்பு கிடைக்கும். இதற்கு அடையாளமாக நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவதாகும். அதாவது ஞானஸ்நானம் என்பது இரட்சிப்பின் அடையாளம், இரட்சிப்பு ஞானஸ்நானத்தினால் அல்ல. இரட்சிப்பு என்பது கிறிஸ்துவில் உள்ளது. அவருடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் நமது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து, நாம் மீட்கப்பட்டோம். அவருடைய பரிசுத்த இரத்தத்தில் நம்முடைய பாவங்களைக் கழுவுவதன் மூலம் நாம் நீதிமான்களாக அவரால் அங்கீகரிக்கப்படுகிறோம். இதுதான் இரட்சிப்பு.
“தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23).
ஞானஸ்நானத்தின் மூலமாக தான் நாம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும் என்றால் கிறிஸ்து சிலுவையில் மரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தேவனுக்கு ஒருவன் கீழ்ப்படிவதில் ஞானஸ்நானம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அந்த ஞானஸ்நானம் எடுக்காததினால் பரலோகம் செல்ல முடியாது என்று நினைப்பது வேதத்திற்கு எதிரானது.
ஒருவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரண தருவாயில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட நேரத்தில், கிறிஸ்துவைப் பற்றி சுவிசேஷகர் மூலம் அறிந்து, தன் பாவ வாழ்க்கையைப் பற்றி முழுவதுமாக மனந்திரும்பி, கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொண்டு மாரித்தால், அவர் நிச்சயமாக பரலோகம் செல்வார். அவர் படுக்கையில் இருந்து எழுந்து ஞானஸ்நானம் பெற இயலவில்லை என்றாலும், கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதன் காரணமாக அவர் பரலோகத்திற்கு செல்வதை உறுதி செய்யலாம். வெளிப்புற ஞானஸ்நானம் இல்லாவிட்டாலும், உள்புற ஞானஸ்நானம் இந்தயிடத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருகிறது. மரணத்தருவாயில் கள்ளன் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தை இதோடு ஒப்பிடலாம். “அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (லூக்கா 23:39-43).
ஆனால் “எத்தியோப்பியவின் மந்திரியின்” விஷயத்தில் அவ்விதமாக தோன்ராது. அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு சாதகமான நிலையில் இருந்ததால் தயக்கமின்றி பிலிப்பால் ஞானஸ்நானம் பெற்றார். இங்கே அவர் ஒரு வெளிப்புற ஞானஸ்நானத்திற்கும் உள்ளான ஞானஸ்நானத்திற்கும் அடிபணிந்தார். இந்த உவமை & நிகழ்வு நம் அறிவுரைக்காக எழுதப்பட்டது. (அப்போஸ்தலர் 8:36). எத்தியோப்பியவின் மந்திரியின் விஷயத்தில் நாம் தெளிவாகக் காண்பது என்னவென்றால், ஒரு நபர் தனது பாவங்களுக்கு மனந்திரும்பினார் என்பதைக் காண்பிக்க தண்ணீர் ஞானஸ்நானம் மூலம் ஒரு பொதுவான சாட்சியைப் பெற்றுள்ளார். தண்ணீர் ஞானஸ்நானம் பெறும் வாய்ப்பு இருந்தும் அவர் ஞானஸ்நானம் பெற மறுத்தால், கிறிஸ்துவை உடையவன் என்று கூறிக்கொள்ளும் தார்மீக உரிமையை இழக்கிறான்.
தண்ணீர் ஞானஸ்நானத்தை நிராகரித்து, தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியாத ஒருவன், கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறார் என்று சொன்னாலும், அவர் தேவனால் நீதியுள்ளவராக அங்கீகரிக்கப்படுவார் என்று எப்படி சொல்ல முடியும்? எனவே தண்ணீர் ஞானஸ்நானம் இரட்சிப்பின் அடையாளமாக இன்றியமையாதது என்பதை கிறிஸ்துவே தெளிவுபடுத்தினார். “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,” (மத்தேயு 28:18-19). ஆனால் ஒரு நபர் சிலுவையில் இருந்த கள்ளன் எதிர்கொள்ளப்பட்ட ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டால், அந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர மற்றப்படி ஞானஸ்நானம் அவசியம்.
3. வேதத்தைக் குறித்த அறிவு
தேவனுடைய வார்த்தையை பலர் படிப்பது பல்வேறு காரணங்களுக்காக வாசிக்கலாம். சிலர் இலக்கிய தாகத்தைத் திருப்திப்படுத்திக்கொள்ள வாசிக்கிறார்கள். மற்றவர்கள் தங்களுடன் உடன்படாதவர்களுடன் திறம்பட விவாதிக்க படிபார்கள். மற்றவர்கள் அதை வேத காரியங்களில் தேர்ச்சி பெறுவது மிகவும் மரியாதைக்குரியது அவ்வாறு இல்லாதது கனவீனமானது என்ற அர்த்ததத்தோடு வாசிப்பார்கள். தயவுசெய்து கவனிக்கவும், இதுபோன்ற காரணங்களுக்காக வேதத்தை வாசிப்பது சபைகள் மற்றும் விசுவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம், ஆனால் அது ஆத்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்காது மற்றும் ஆத்மாவை பலப்படுத்தாது. தினமும் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டாலும், அதில் ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால், உடல் பலவீனமடையும். அதுபோலவே, வேதத்தைத் தவறாமல் வாசித்தாலும், அதை வாசிக்கும் முறை சரியில்லாமல் போனால் நம் ஆத்மா செழிப்படையாது.
வேதியியல் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அறிவைப் பெறுவது போல, வேதத்தைப் படிப்பதன் மூலம் அறிவைப் பெற முடியும் என்று பல விசுவாசிகள் கருத்தை வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சியினால் ஒருவர் அறிவார்ந்த ஞானத்தைப் பெறலாம் ஆனால் ஆத்மீக அறிவைப் பெற முடியாது. அண்ட சராசரங்களுக்கு அப்பாற்பட்ட தேவனை அண்ட சராசரங்களுக்கு அப்பாற்பட்டதாக தான் அறிய முடியும். அதற்கு வேத வாசிப்புடன் ஜெபமும் மிக அவசியம். வேதத்தைப் பற்றிய நமது அறிவார்ந்த அறிவின் அடிப்படையில் நாம் மற்றவர்களால் அறிவானவர்களாக அங்கீகரிக்கப்பட விரும்பினால், அண்ட சராசரங்களுக்கு அப்பாற்பட்ட தேவனுடன் நமது தனிப்பட்ட ஆவிக்குரிய உறவை நாம் இழக்க நேரிடும்.
புறமத பிரசங்கிகள் கூட தங்கள் பிரசங்கங்களில் வேத வசனங்களை மேற்கோள் காட்டி, இயேசு இவ்விதமாகச் சொன்னார் அவ்விதமாகச் சொன்னார் என்று சொல்வார்கள். வேத வசனங்களை வெளிப்படையாகக் காட்டுவதால் அவர்களுக்கு தேவனைப் பற்றிய புரிதலும் ஆத்மீக முதிர்ச்சியும் இருப்பதாக நாம் சொல்ல முடியாது. வேதபாரகர்களும் பரிசேயர்களும் வேதவாக்கியங்களை உன்னிப்பாக ஆராய்ந்தார்கள். ஆயினும் அவர்கள் கிறிஸ்துவைக் குறித்து அறியவில்லை, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.” (யோவான் 5:39). இறுதியில், தேவனைப் பற்றிய புரிதல் கூட அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. “அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.” (யோவான் 8:19). காரணம், அவர்களால் வேதத்தின் மேலோட்டமான காரியத்தை மட்டுமே பார்த்து, வேத சாரத்தை அவர்களால் அறிய முடியவில்லை. மேலும், அவர்கள் தேவனுடன் தினசரி உறவைக் கொண்டிருப்பதாக பெருமையாகக் கூறினர், ஆனால் அவ்விதமாக இல்லாமல் இருகின்றனர்.
கோட்பாட்டு அறிவு மட்டுமல்ல, நடைமுறை அறிவும் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. அதுபோலவே, தத்துவார்த்த அறிவை மட்டுமின்றி, வேத வசனங்களைப் பற்றிய அனுபவ அறிவையும் பெறும் நிலைக்கு நாம் வளர வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. ஜெபத்தை பற்றிய விழிப்புணர்வு
ஒரு விசுவாசி ஜெபத்தை தேவனிடமிருந்து தேவையான வரங்களைப் பெறுவதற்கான வழிமுறையாகப் பார்க்கிறான். ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்ற மனப்பான்மை இருப்பது தவறல்ல, ஆனால் மிகவும் மதிப்புமிக்க கருவியான ஜெபத்தை அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகவும் தவறானது.
தேவனுக்கும் விசுவாசிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த ஜெபம் ஒரு அற்புதமான கருவி என்பதை அங்கீகரிக்க வேண்டும். தேவனுடன் தனிப்பட்ட தொடர்பை வளர்த்துக்கொள்ள இது ஒரு சிறந்த ஆத்மீக பரிசாக கருதப்பட வேண்டும். ஜெபத்தை வெறும் நம்முடைய தேவைகளுக்காக துஷ்பிரயோகம் செய்யாமல் தன்னலமின்றி தேவனுடன் தொடர்புக் கொள்வதற்கான ஆத்மீக கருவியாக பார்க்க வேண்டும். தேவனுடனான தனிப்பட்ட தொடர்பைப் பழக்கமாக வலுப்படுத்திக் கொள்வதில், தேவன் இயல்பாகவே விசுவாசிகளின் தேவைகளை அறிந்திருக்கிறார். அதன் பிறகு தேவனுடைய சித்தத்தின் படியான தேவைகளை அறிந்திருக்கும் போது, விசுவாசி கேட்காமலே அவற்றை தேவனிடமிருந்துப் பெறுகிறான். நாம் தேவனிடம் கேட்கும் ஒவ்வொரு தேவியிலும் தேவன் மகிமைப்படுகிறாரா? இல்லையா? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தாத எந்தவொரு தேவையும் நம்மிடம் இருக்க முடியாது. அவருக்கு மகிமை தராத உலக காரியங்களைப் பற்றி நாம் ஜெபித்து முறையிட்டாலும், அதன் முடிவில் ஒன்றுமில்லாமை தான். “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.” (யாக்கோபு 4:3). அவருடைய சித்தத்தின்படி அவரை மகிமைப்படுத்த நாம் எதைக் கேட்டாலும், தேவன் கொடுக்கிறாவராக இருக்கிறார். “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோவான் 5:14).
நாம் தேவனிடம் கேட்டு பெறுவதில் உரிமையும் அதிகாரமும் உள்ளவர்கள் அல்ல, தேவனின் கிருபையைச் சார்ந்து இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்த இரட்சிப்பு கிருபையின் மூலமாக பெற்றிருக்கும் போது, மீதமுள்ள ஈவுகளை நாம் எவ்வாறு அதிகாரத்தோடும் உரிமையோடும் பெறுவது? எனவே, விசுவாசிகள் ஜெபத்தில் தேவனுடன் போராடாமலும், வற்புறத்தாமலும் மிக கவனமாக இருக்க வேண்டும். உமக்கு சித்தமானால், உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைக்குமெயானால் இவை எனக்காகச் செய்யும் பிதாவே! என்ற பணிவோடும், தாழ்மையோடும் ஜெபம் செய்ய வேண்டும். நாம் கவனிக்க வேண்டியவை, ஜெபம் எப்போதும் தாழ்மையுடன் இருக்க வேண்டுமே, தவிர அது நம்முடைய உரிமை அவைகளுக்காக போராடுவது அல்ல.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விசுவாசி ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஜெபத்திற்கு ஒதுக்குவது முக்கிய கடமையாகும். நாம் ஜெபத்தை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். ஆண்டவர் இரவு நேரத்தில் ஒலிவ மலைக்குச் சென்று ஜெபம் செய்வதை வழக்கமாக்கினார். ஜெபம் இவ்வாறு செய்வதன் மூலம், நம் விசுவாச வாழ்வில் ஒவ்வொரு நாளும் வலுப்பெறுவோம். மேலும், தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கவும், அந்த நேரத்தை ஜெபத்தில் பொறுப்புடன் நாம் செலவிடவும் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்கிறோம். எனவே ஜெபத்தைக் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும்.
5. சோதனைகள் பற்றிய விழிப்புணர்வு
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் சோதனைகளும் கண்ணீரும் நீங்கிபோகும் என்ற கருத்து பல விசுவாசிகளிடம் உறுதியாக வேரூன்றியிருக்கிறது. சுவிசேஷ கூட்டங்களிலும் இவைகளையே பிரசங்கிக்கிறார்கள். ஆனால் இந்த காரியத்தில் வேதப்பூர்வமான ஆய்வைக்கொண்டு திருத்தப்பட வேண்டும். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.” (யோவான் 16:33). இந்த வசனத்தில்
கிறிஸ்து சொன்ன இந்த வார்த்தைகளைப் பார்த்தால், விசுவாசிகளுக்கு துன்பங்களும், உபவத்திரங்கள் சந்திக்க வேண்டியது அவசியம் என்பது புரிகிறது. ஆனால் அந்தக் துன்பங்களிலும், உபவத்திரங்களிலும் கிறிஸ்துவானவர் கொடுக்கும் தைரியமும், ஆறுதலும் விசுவாசியை ஆத்மீக வாழ்க்கையில் மேலும் தொடரச் செய்யும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.
மனிதன் செய்யும் பாவங்கள் தான் அவனுடைய துன்பங்களுக்கும் கண்ணீருக்கும் காரணம் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வேதத்தை கருத்தில் கொண்டு, பார்த்தால் அது உண்மையாக இருந்தாலும், எல்லா துன்பங்களும் அவன் செய்த பாவங்களின் விளைவு என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. யோபு நீதியுள்ளவராக இருந்து, சோதனைகளையும் இன்னல்களையும் சந்தித்தார். இருப்பினும், தேவன் மீதான விசுவாசமே அவருக்கு துன்பங்களையும், இன்னல்களையும் சகித்துக்கொள்ள உதவியது. அப். பவுல் தேவனின் சிறந்த மனிதராகவும் இருந்தும், பல துன்பங்களையும் இக்கட்டான சூழ்நிலைகளையும் அனுபவித்தார். ஆனாலும் அவர் கர்த்தரால் ஊக்கப்படுத்தப்பட்டார்.
அரச குடும்பத்தில் வளர்ந்து மோசே கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு துன்பப்படுவதே சிறந்தது என்று நினைத்தார். “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,” (எபிரேயர் 11:24). இவ்வாறு சொல்லிக்கொண்டு போனால், துன்பங்களைச் சுவைக்காத தேவ மனிதர்களை வேதத்தில் பார்க்க முடியாது. அவர்கள் அனைவரும் இக்கட்டிலும், துன்பங்களிலும் வலுவிழக்காமல் அல்லது நழுவாமல் கிறிஸ்துவால் பலப்படுத்தப்பட்டு, விசுவாச வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
துன்பங்களும் கண்ணீரும் ஏன் நிகழ்கின்றன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவன் தகுந்த வழியை எற்ப்படுத்துவார் என்று என்னால் சந்தேகமில்லாமல் சொல்ல முடியும். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13). ஒரு விசுவாசி தனது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை வெல்லகூடிய மார்க்கத்தை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஒரு குயவனின் இரும்பை உலையில் வைத்து சுத்தியலால் பலமாக அடித்தால்தான் அந்த இரும்பு வளைகிறது; ஆனால் ஆசாரி தங்கத்தை உலையில் வைத்து சுத்தியலால் மென்மையாக அடித்தால் அது வளைகிறது. அதுபோலவே, விசுவாசியும் தேவனின் கைகளில் இருக்கும் போது சிறிய அடிகளுக்கு வளைந்துக் கொடுக்கும் மென்மையான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் தேவனும் கொல்லனாக மாறிவிடுவார். கண்ணீர் இல்லாத வாழ்க்கை உண்மையான வாழ்க்கை அல்ல. இன்பங்களும், துன்பங்களும் விஷயங்கள் இணைந்தால் தான் முழுமையான வாழ்க்கை. எனவே, நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால், துன்பங்களும் கண்ணீரும் வராது என்று நினைப்பதை விட அவைகளில் இருந்து கடந்து செல்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அர்த்தமுள்ள பயணம் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.
'கிறிஸ்துவும் துன்பப்பட வேண்டியிருந்தது, இப்படியிருக்க நாம் மட்டும் இதற்கு விதிவிலக்க என்ற தவறான எண்ணமும் சில விசுவாசிகளுக்கு உள்ளது. நாம் முன்னர் குறிப்பிட்ட தீர்க்கதரிசிகளும் பக்தர்களும் அழிந்து வரும் மனிதகுலத்திற்காக துன்பப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்காகவே அவர்கள் துன்பப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்து மட்டுமே மனித குலத்திற்காக துன்பப்பட்டார். “ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.” (எபிரெயர் 2:8).
ஒரு அடிமை எஜமானனை விட பெரியவனாக இருக்க முடியாது. அவர் அனுபவிக்காத துன்பங்களிலிருந்து தப்பிக்க நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை விட நாம் சிறந்தவர்கள் அல்லவா! நமக்குப் பதிலாக அவர் துன்பங்களை அனுபவித்தாரே தவிர, அவர் துன்பங்களிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் விடுபடவில்லை என்று நாம் நினைக்கக்கூடாது. துன்பங்களும் கண்ணீரும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானது என்பதை விசுவாசிகள் அறிந்திருக்க வேண்டும், ஆனால் அவற்றைக் கடக்கும் சக்தி கிறிஸ்துவின் மூலம் பெறப்படும்.
ஆறாவது ஆதிகாரம்
புறஜாதிகள் பின்பற்றும் சடங்குகளிலிருந்து விடுதலையைப் பெறுவதற்கான புரிதல்...
விசுவாசிகளை தவறாக வழி நடத்த சாத்தான் பல தந்திரங்களை பயன்படுத்துகிறான். அதில் ஜோதிடம், நல்ல நேரம், வாஸ்து சாஸ்திரம், சிலைகளுக்கு படைத்த பிரசாதம், தாயத்து அணிவது போன்ற மூடநம்பிக்கைகள் அவற்றில் அடங்கும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றும் புறஜாதிகள் அந்த காரியத்தைப் பற்றி அறியாதவர்கள் என்று வாதிடலாம். ஆனால் விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் சில கிறிஸ்தவர்கள் இவற்றைப் பின்பற்றினால், அவைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? இவை புறஜாதியினரின் மூட நம்பிக்கையின் நடைமுறைகள் என்பதை இன்றைய விசுவாசிகளுக்கு நிச்சயமாகத் தெரியும். அவைகளில் இருந்து விடுப்படாத நிலையில் இன்றைய விசுவாசிகள் இருக்கிறார்கள் மேலே குறிப்பிட்டுள்ள முறைகள் நமக்குப் பலனளிப்பதாகத் தோன்றினாலும், வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, அவை அனைத்தும் ஆபத்தான சாத்தானிய நம்பிக்கைகள் என்று நமக்கு தெரிகிறது.
ஜோதிடரின் கணிப்பு நொடிப்பொழுதில் நிறைவேறும், துர்முகூர்த்தத்தில் (கேட்ட நேரத்தில்) நினைத்த காரியம் பாதியில் நிற்கும், ஜாதகம் பொருந்தா விட்டால், சில நாட்கலுக்குள்ளே திருமண தம்பதிகள் பிரியும் நிலை வரும், வாஸ்துப்படி வீடு கட்டாவிட்டால், குடும்ப உறுப்பினர்கள் நோய்கள் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள், கும்பம் கட்டிய சில நாட்களில் அந்த கடினமான சூழ்நிலைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வெளிப்படையாக, இவற்றில் பெரும்பாலானவை உண்மைகளாக இருக்கலாம், சிலவற்றை நாம் மறுக்க முடியாது.
நாம் குறிப்பிடும் இந்த முறைகள் மற்றும் நம்பிக்கைகள் குறைந்தபட்சம் அவை சக்தி வாய்ந்ததாக தோன்றாலாம், அவை ஏன் மனிதனை ஈர்க்கின்றன? அவைகளுக்கு குறைந்தபட்ச திறன் இல்லை என்றால், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் இறுதியாக கிறிஸ்தவர்களும் ஏன் அந்த தீய வட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்? ஆம், இது மிக முக்கியமான கேள்வி. இதற்கான வேதப்பூர்வமான பதிலைப் பார்ப்போம்.
அபிஷேகம் செய்யப்பட்ட கேருப்பின் (லூசிபர்) & (அவதூறு செய்பவன்) தனது ஞானம் மற்றும் புத்திசாலித்தனம் குறித்து பெருமிதம் கொண்டான், மேலும் அவன் தன்னை தேவனாக வணங்கப்பட வேண்டுமென்று எதிர்பார்த்தான். அவன் தேவ தூதர்களை அடக்கி அவர்களைத் தம் பக்கம் திருப்பினார், அவர்களின் உதவியால் இறுதியில் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து தோற்கடிக்கப்பட்டான். தேவனைக் கட்டுப்படுத்தும் சக்தி அவனிடம் இல்லாததால், தேவனின் குமாரனான ஆதாமையும், அவனுடைய சந்ததியையும் அழிக்க ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வகுத்து, பல தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் பயன்படுத்தினான். அந்தத் திட்டத்தில் உள்ள விஷங்கள் நாம் மேலே சொன்ன நம்பிக்கைகளும் நடைமுறைகளும் தான். சாத்தான் மனிதர்களை விட வலிமையானவர் மற்றும் தேவனை விட பலவீனமானவன். அதனால் தான் அவனுடைய தந்திரங்களைக் கட்டுப்படுத்த கிறிஸ்துவின் வல்லமை நமக்குத் தேவை. “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.” (எபேசியர் 6:10-16).
மக்களை ஏமாற்றவும், குழப்பவும், சாத்தான் சில மாய தந்திரங்களை செய்கிறது. மோசேயும் ஆரோனும் பார்வோனின் அரசவையில் மோசே அற்புதங்களைச் செய்தபோது, எகிப்திய மந்தரவாதிகளும் அதே போன்ற சிலவற்றைச் செய்தனர். “மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று;” (யாத்திராகமம் 8:18). தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தியது போல, சாத்தானும் மந்தரவாதிகளைப் பயன்படுத்தினான். அங்குள்ள நடக்க இருக்கும் தேவனுடைய பணியை சீர்குலைக்க முயன்றான். ஆனால் அது அவனால் முடியவில்லை. சாத்தான் தனது மட்டுப்படுத்தப்பட்ட சக்தியால் சில அற்புதங்களைச் செய்ய முடியும், ஆனால் அவனால் தேவனின் சக்திக்கு முன் நிற்க முடியாது.
ஜோதிடர்கள் கையைப் பார்த்து ஜாதகம் சொல்லலாம். எது நல்ல நேரம் எது கெட்ட நேரம் என்று அவர்களால் சொல்ல முடியும். ஆனால், அவர்களால் அப்படிப்பட்ட அறிவை எப்படி பெறுகிறார்கள்? என்ற கேள்விக்கு 1சாமுவேல் 28 -ம் அதிகாரத்தில் பதிலைக் காண்கிறோம். சவுல் தனது நிலைமை என்ன என்பதை அறிய அஞ்சனம் பார்க்கிறவர்களைடமாக திரும்பினான். அதாவது, தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தைச் சொல்வது போல், சாத்தானும் தன்னை பின்பற்றுபவர்களை தனது சக்தியால் எதிர்காலத்தைச் சொல்ல பயன்படுத்துகிறான். அவர்கள் சொன்ன எதிர்காலத்தை குறித்து நாம் திகைக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், மக்களைக் குழப்புவதற்காக அவன் ஏமாற்று வித்தையைக் கண்பிக்கிறான். தேவன் இதைப் பற்றி இஸ்ரவேலர்களை எச்சரித்தார்.
“உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக. (உபாகமம் 13:1-4).
நேபுகாத்நேச்சரின் காலத்திலும் சாத்தானை பின்பற்றியவர்கள் இருந்தனர். அரசன் தான் கண்ட கனவை மறந்தபோது, சாஸ்திரிகளையும் கல்தேயரையும் வரவழைத்து, தன் கனவை நினைவுபடுத்தி அதில் உள்ளான பாவத்தை சொல்லும்படி கட்டளையிட்டான். அதாவது, சாத்தான் தன் வல்லமையால் தேவனின் திட்டத்தை முறியடிக்க கல்தேயர்களைப் பயன்படுத்தினான். ஆனால் அவர்களால் அந்த கனவை விவரிக்க முடியாத படியால் சாத்தானுடைய வல்லமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. “கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.” (தானியேல். 2:10-11).
இன்றைய காலகட்டத்திலும், இத்தகைய சாத்தானை பின்பற்றுபவர்கள் பரவலாக புழக்கத்தில் உள்ளனர். அமானுஷ்ய ஆவிகள் மூலம் எதிர்காலத்தைச் சொல்வதும், எந்த நாள் நல்லது, எந்த நாள் கேட்டது என்று சொல்வது, பொல்லாத ஆவியின் உதவியால் சொல்வது இவையெல்லாம் சாத்தானின் செயல்கள். இப்படிச் செய்வதால் மனிதர்களுக்கு எது தேவனின் அற்புதம் எது சாத்தானின் மாயம் என்று அறிய முடியாமல் மக்கள் குழம்பும் நிலை ஏற்படுகிறது, இறுதியில் அவர்கள் தேவனிடமிருந்து அந்நியப்படுகிறார்கள். தேவனின் பிள்ளைகளை தேவனிடமிருந்து பிரிக்க சாத்தானின் சதி என்று இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சாத்தனின் தந்திரங்களில் வாஸ்து சாஸ்திரமும் அனைவருக்கும் தெரிந்ததே. பல விசுவாசிகள் அதன் மாயையிநாள் விழுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றும் கிறிஸ்தவர்களிடம் சென்று ஏன் வாஸ்து பின்பற்றுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், அவர்கள் கொடுக்கும் பதில், வேதத்தில் வாஸ்து குறிப்பிடப்பட்டுள்ளதே! என்று சொல்லி நோவா பேழை, சாலோமன் தேவாலயம் போன்றவற்றை வேதத்திலிருந்து காட்டுவார்கள். அதாவது, வாஸ்து சாஸ்திரத்தை மறுக்காமல், அதை நியாயப்படுத்துவதற்காக வேதத்தையே திரித்து காட்ட முயற்சிக்கிறார்கள்.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தை ஆதரிக்கும் எந்தவொரு வேத ஆதாரமும் வேதத்தில் இல்லை. இது மனிதர்கள் மீது செல்வாக்கு செலுத்த சாத்தான் ஏற்படுத்திய ஒரு கேவலமான முறையாகும். சொல்லப்போனால் வாஸ்து சாஸ்திரம் புறஜாதி தெய்வங்களின் பெயர்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதால், அது வேதத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்று சொல்லமுடியும்?
எனவே, விசுவாசியே, சாத்தானின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளில் ஞானமாக இருங்கள், வேதத்தில் ஞானமாக இருங்கள், தேவனின் அறிவுறுத்தல் எது, சாத்தானின் தந்திரான்கள் எது என்பதை அறிய பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுங்கள்.
ஒரு கிறிஸ்தவனாக, இது போன்ற சாத்தானின் செயல்களில் ஆர்வம் காட்டியோ அல்லது சிறிய விஷயம் என்று உங்கள் இதயத்தில் சொல்லியோ கிறிஸ்துவை விட்டு விலகாதீர்கள். இந்த உலக ரீதியான நடைமுறைகளில் நீங்கள் இருந்தால், அது படுக்கையின் நிழலில் பாம்பு தலையை மறைப்பது போன்றது. பாம்பின் நிழல் எப்போதும் ஆபத்தானது. எச்சரிக்கை.