உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: K. வித்யாசாகர்.
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 14 நிமிடங்கள்

 

Can Christians watch movies

       இன்று திருச்சபை சமரசம் செய்துகொண்டுள்ள பல எதிர்விளைவின் நடவடிக்கைகளில் ஒன்றாக சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள் (தொடர்கதைகள்) இருப்பதை பார்க்கிறோம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது பாவத்தைக் குறித்து திருச்சபைக்கு போதிக்க வேண்டிய போதகர்கள் பலர் எந்தவித பொறுப்புணர்வு இல்லாமல் இருப்பதும், அவர்களில் சிலர் போதிக்கும் பிரசங்கத்திலே திரைப்பட வசனங்களை & உரையாடல்களை மீண்டும் மீண்டுமாக குறிப்பிடுவதை நாம் பார்க்கலாம்.

சில போதகர்கள் சினிமா பார்ப்பது தவறில்லை என்றும், எந்த திரைபடத்தை பார்த்தாலும் அதில் உள்ள நல்லதை எடுத்துகொண்டு கெட்டதை விட்டுவிட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். இதன் காரணமாகவே, உண்மையான தேவன் மீது விசுவாசம் உள்ளவர்களும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்த அயோக்கியத்தனமான செயலில் அவர்களும் தொடர்கிறார்கள்.

எனவே இன்றைய திரைப்படங்களில் எந்தளவிற்கு நல்ல விஷயங்களை இருக்கிறதோ? நாம் எப்படிப்பட்டதை பார்க்கலாம் என்பதை வேதத்தின் அடிப்படையில் விளக்க முயற்சிப்பதற்காக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அதற்கு முன் நான் மேலே குறிப்பிட்ட சில போதகர்களை பற்றிய சில எச்சரிப்புகளை வேதத்தின் வசனங்களை பாருங்கள்.

(1 பேதுரு 2:18) “வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.” இந்த வசனத்தில் பேதுரு சொல்வது போல், கடந்த காலத்தில் வேதத்திற்கு முரணான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தேவனின் கிருபையால் அந்த தவறான வழிகளில் இருந்து விடுபட்டு, திருச்சபையில் சேர்க்கப்பட்டுள்ள விசுவாசிகளை, அவர்கள் விட்டுச் சென்ற அந்த தவறான வழிகளில் தொடர சில போதகர்கள் ஊக்குவிக்கிறார்கள். திரைப்படம் பார்ப்பது பாவமில்லை என்று போதிகிறார்கள். விசுவாசிகளை திரும்பவும் அந்த பழைய நிலைக்கு தள்ளுகிறார்கள். எனவே அப்படிப்பட்ட போதகர்கள் விசயத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

(தீத்து 1:11) “அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.”

எபேசியர் 5:6 “இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

இனி நாம் தலைப்புக்குள் சென்றால், முதலில், தற்போதைய சினிமாக்கள், தொடர் கதைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவை வேதம் போதிக்கும் விதிகளுக்கு முரணானவையா அல்லது அவை நமக்கு ஏதாவது நல்லதைக் போதிக்கிறதா என்பதைப் பார்ப்போம், இரண்டாவதாக, இந்த தலைப்பை ஒட்டி எழுப்பக்கூடிய சில கேள்விகளுக்குப் பதிலை பார்ப்போம்.

1, ரோமர் 12:19 “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்”. வேதம் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதை தடை செய்கிறது. ஒரு நபர் இன்னொருவரால் திடிரென ஆபத்தை சந்திக்க நேரிடும் போது தற்காப்புக்காக அவசியமான சூழ்நிலையில் இன்னொருவரை தாக்குவதற்கும், கடந்த காலத்தில் ஒருவர் முன்பு செய்ததை மனதில் வைத்து அவரை தாக்குவதற்காக திட்டமிட்டு அந்த நபரை பழிவாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த இரண்டாவது நிகழ்வை வேதம் ஏற்காத அளவுக்கு (யாத்திராகமம் 21:12,23 பற்றிய விளக்கத்தைப் பார்க்கவும்) அனைத்து விசுவாசிகளும் இந்த விதிக்கு கண்டிப்பாகக் கீழ்ப்படிய வேண்டும்.

ஆனால் இன்றைய பெரும்பாலான சினிமாக்கள் & மற்ற தொடர் கதைகள் வில்லனை சட்டப்படி தண்டிக்காமல், ஒரு திட்டப்படி கதாநாயகன் வில்லனைப் பின்தொடர்ந்து பழிவாங்க முயல்கிறார். அந்த முயற்சியும் பொதுவாக இல்லாமல் மிகவும் கொடூரமானதாக இருக்கும். காதநாயகன் அவ்விதமாக செய்தால், அதை பார்க்கும் பார்வையாளர்கள் மிகவும் (த்ரில்லிங்காக) & வியப்பாக உணர்வார்கள். உன் தேவன் வேண்டாம் என்று சொன்னதை, அதை யாராவது செய்தால், அதுவும் மனித குலத்தை அவமதிப்பதாக இருந்தால், அதை கிறிஸ்துவின் விசுவாசியாக இருக்கிற நீங்கள் எப்படி மெய்சிலிர்ந்து பார்க்க முடியும்? அதில் எது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்பதை கவனிக்கவும்; தனிப்பட்ட பழிவாங்குதல்களை திட்டத்துடன் மேற்கொள்ளக்கூடாது, ஆனால் போர்க்கால நடவடிக்கைகளில் அது பொருந்தாது என்று முன்பே நான் கூறியுள்ளேன். ஏனெனில் இது தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல, தேசிய பாதுகாப்பு திட்டம். அதனால்தான் ஒரு இராணுவவீரன் மற்றொரு இராணுவவீரனைக் கொன்றால் அது கொலையாகக் கருதப்படுவதில்லை. இதைக் குறித்து விவராமாக அறிய “பத்துக் கட்டளைகளின் விளக்கம்” என்ற கட்டுரையைப் படியுங்கள்.

2, (ரோமர் 13:13) களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.

(எபேசியர் 5:3,4) “மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்”.

இந்த வசனத்தில் அப். பவுல், விசுவாசிகளிடம் இருக்கக்கூடாத காரியங்களின் பட்டியலை விவரிக்கிறார். இவைகள் இல்லாமல் தற்போது எத்தனை திரைப்படங்கள், & தொடர் கதைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எத்தனை உள்ளன? அவைகளில் கதாநாயகன் மதுபான பாட்டிலை வைத்துக் கொண்டு குடிப்பதும், சிகரெட் பிடிப்பது, உணர்ச்சியை துண்டக்கூடிய காட்சிகள், ஆபாசமான ஆடைகள், உச்சரிக்க தகாத பாடல்கள், இதெல்லாம் திரைப்படங்களில் சகஜம் தானே! திரைப்படங்களில் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் இரட்டை அர்த்தம் தரக்கூடிய உரையாடல்கள், நகைச்சுவைகள் மற்றும் அருவருப்பான வார்த்தைகளால் நிரப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்த்து இன்பமாக உணர்கிறோமா? மெய்மறந்து சிரிகிறோமா? ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளுங்கள் இவை அனைத்தும் நம்முடைய மனதிற்குப் பிடிக்காமல் செய்கிறோமா? என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

உதாரணமாக; நம் கண்முன்னே விரும்பத்தகாத ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதை இன்பமாகவும் பொழுதுபோக்காகவும் பார்க்க முடியுமா? நாம் சிரிக்க முடியுமா? தேவன் வெறுப்பதை நாம் எப்படி பார்த்தும் கேட்டும் மகிழ்ச்சி அடைய முடியுமா? சிரிக்க முடியுமா? அவருடைய பார்வை மிகவும் தூய்மையானது, அவரால் தீமையைக் பார்க்க முடியாது! “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; (ஆபகூக் 1:13).

எபேசியர் 5:1,8-11 “ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.”

நம்முடைய இடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தால் அவர் அவ்வாறே செய்வாரா? அக்கால மக்களின் இதயக் கடினத்தன்மையாலும், அவர்கள் செய்து கொண்டிருந்த கொடூரமான செயல்களாலும் தேவன் மிகவும் வேதனைப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. (மாற்கு 3:5), “அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு,” (லூக்கா 19:41) “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது,”

(கலாத்தியர் 3:27) “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.”

(1 யோவான் 2:6) “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.” நாம் அவரில் இருக்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவோம்.

தேவனுக்குப் பயந்த உத்தமன் என்று அழைக்கப்பட்ட யோபுவைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், அவருடைய வார்த்தைகளைப் பாருங்கள்.

யோபு 31:1,2 “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?”

இந்த சந்தர்ப்பத்தில், யோபு தனது கண்களுடன் செய்தகொண்ட உடன்படிக்கையின் காரணமாக, தேவ கட்டளையை மீறி ஒரு கன்னிப் பெண்ணை மோகப் பார்வையோடு பார்க்க முடியாது என்று கூறுகிறார். ஆனால், நாம் மட்டும் தேவன் பாவமாக சொல்லும் கட்டளையை மீறி நம்முடைய கண்களை உடன்படிக்கை செய்துக்கொள்ளாமல், தேவன் வெறுப்பதை நாம் இன்பத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பார்க்கிறோம். அவருடைய கட்டளையைப் பார்க்காமல் எங்கள் கண்களால் உடன்படிக்கை செய்ய முடியாது. இருப்பினும், நாம் தேவன் மீது பயபக்தியோடும், உண்மையோடும் இருப்பதாக எண்ணி அந்த மாயையில் வாழ்கிறோம்.

(நீதிமொழிகள் 8:13) “தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

3, (எபேசியர் 5:15-17) “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்”.

இந்த வசனத்தில், விசுவாசிகள் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தேவனின் சித்தத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் தேவன் நமக்கு ஒப்புக் கொடுத்த குடும்பப் பொறுப்புகளில், வாழ்வாதாரப் பணிகளில், திருச்சபை ஊழியத்தில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதே. திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் வேறு சில மற்ற நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் அனைவரும் நேரத்தை போக்குவதற்காக அவற்றைப் பார்க்கிறார்கள். அந்த பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி, அதிலே அவர்கள் கவனம் செல்வதால் அதை பார்ப்பதை நிறுத்த முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். விசுவாசிகளாகிய நாம் தேவனின் கட்டளையை மீறி எவ்வாறு செய்ய முடியும்? அவருடைய ஊழியர்களாகிய நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எவ்வாறு புறக்கணிக்க முடியும்?

எபிரெயர் 10:37 “வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்”.

லூக்கா 12:47 “தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.”

இன்று பல விசுவாசிகள் நங்கள் தேவனை நேசிக்கிறோம் என்று பலருக்கு அவர்களுடைய சாட்சியை பகிர்கிறார்கள், அவ்வாறு அவர்கள் சொல்லுவதால் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். தேவனை நேசிப்பது என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றி இயேசுகிறிஸ்து என்ன சொன்னார் என்று அவருடைய வார்த்தைகளில் பாருங்கள்.

யோவான் 14:21 “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.”

இந்த வசனத்தின் படி, நாம் இதுவரை படித்த தேவனின் கட்டளைகளுக்கு (வாக்கியங்களுக்கு) முரணான திரைப்படங்களையும், தொடர் கதைகளையும் மற்றும் பிற சித்தரிப்புகளையும் பார்ப்பவர்கள் உண்மையில் தேவனை நேசிப்பவர்கள் அல்ல, எனவே அவர்கள் தங்கள் நிலையை ஒருமுறை மீழாய்வு (பரிசோதிக்க) வேண்டும்.

1யோவான் 2:4,5 “அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

4, மத்தேயு 5:27,28 “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று”.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பெண்ணை மோகப் பார்வையால் பார்ப்பது விபச்சாரம் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். எனவே, அவ்வாறு ஒரு பெண் ஒருவரைப் பார்த்தாலோ அல்லது மற்றொருவனை பார்க்க ஊக்குவித்தாலோ அதுவும் விபச்சாரமாகும். தற்போதுள்ள பல திரைப்படங்களில் கதாநாயகன் கதாநாயகியை எங்கு பார்ப்பது போல் காட்சி அமைக்கபடுகிறது. அதுப்போன்ற காட்சிகளில் கதாநாயகி நடை உடை பாவனையை எவ்விதம் பார்க்க செய்கிறாள் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள். அதினால் நமக்கு என்ன நன்மையைக் கிடைக்கிறது? நம்முடன் பார்க்கிற பிள்ளைகளுக்கு அது எந்தவிதமான நன்மையை கற்று தருகிறது.

ஏசாயா 3:16,17 “பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள். ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்”.

5, பிலிப்பியர் 4:4 “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்”.

இந்த வசனத்தில், விசுவாசிகள் எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது, நாம் அவருடைய சித்தத்தின் படி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், என்பது மகிழ்ச்சிக்கு தேவையான அனைத்தையும் அவர் நமக்குத் தருகிறார். உதரணாமாக குடும்பம், ஊழியம் மற்றும் வாழ்வாதாரம் போன்றவை. குறிப்பாக தேவனை உண்மையாக நேசிக்கும் ஒரு விசுவாசி, அவருடைய வார்த்தையை (சிந்திக்கும் போது) தியானித்து, அவரிடம் ஜெபிக்கும்போது, ​​அந்த விசுவாசி விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அனுபவிப்பான். இக்கட்டான துன்ப வேளையிலும் அந்த விசுவாசி மனதை தளர்தில்லை. அதனால்தான் ஆண்டவரைச் சார்ந்திருந்த பேதுரு, ஏரோது காலையில் தன்னைக் கொன்றுவிடுவானோ என்ற பயமில்லாமல் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினான்.

அப்போஸ்தலர் 12:6 “ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்”.

பல அடிகளைப் பெற்று, உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அப். பவுலும், சீலாவும் சிறையில் இருந்தபோது மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாட முடிந்தது.

அப்போஸ்தலர் 16:23-25 “அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலை க்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”

எப்பொழுதும் கர்த்தருக்குள் களிகூருவது (மகிழ்ச்சியாய்) இருப்பது என்பது இதுதான், இன்று வேதத்திற்கு முரணான திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பவர்கள், உல்லாசப்படுபவர்கள் கர்த்தருக்குள் சந்தோஷப்பட வேண்டும் என்று பேதுருவினால் கட்டளையிட்ட விசுவாசிகள் அல்ல. அந்தகாரமான செயல்களில் மகிழும் சாத்தானை சார்ந்தவர்கள்.

நீதிமொழிகள் 2:13 “நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,”

6, இப்போது படமாக்கப்பட்டு வெளிவருகிற எல்லாப் திரைப்படங்களில் ஏதோ ஒரு காதல் கதையைக் கொண்டவை. ஏனெனில் இளைஞர்கள் அவைகளின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனர். காதலிப்பது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் அந்த காதலில் நான் மேலே குறிப்பிட்ட போக்கிரித்தனம், காம பார்வைகள், மோகம், எதுவும் இருக்கக்கூடாது. திருமணம் ஆகும் வரை இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டும். திரைப்படங்களில் நாம் பார்க்கும் காதல் கதைகள் அப்படிப்பட்டவையா? கடந்த காலத் திரைப்படங்களில், கதாநாயகனுக்கும் கதாநாயகியுக்கும் இடையிலான மற்ற காட்சிகள் எப்படியிருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு பாலியல் காட்சிகள் விலக்கப்பட்டது. தற்போதைய திரைப்படத்தில் அதுவும் சேர்க்கப்பட்டது, மேலும் சிலவற்றில் அவற்றையே குறிப்பிட்டு காட்டப்படுகிறது. பார்வையில் பார்த்தாலே விபச்சாரம் என்று தேவன் கட்டளையிடப்பட்ட விசுவாசிகளுக்கு இதில் என்ன நன்மை காணப்படும்?

இன்று 7 & 8 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட நான் காதலிக்கிறேன் என்று சொல்லுகிறார்கள், காதலன் & காதலி இல்லாதது பெரிய இழப்பாக உணர்கிறார்கள். காதலுக்காக செத்தாலும், வாழ்க்கையை சீரழித்தாலும், பெற்றோரை விட்டு பிரிந்தாலும், தேவையென்றால் யாரையாவது கொன்றாலும், பரவாயில்லை என்ற போதையில் அவர்களை அமிழ்த்துகிறது அல்லவா? தேவ மனிதரும், போதகருமான “ஜெ.சி.” ரைல். பிள்ளைகள் தங்கள் காதுகளால் கேட்பதை விட, தங்கள் கண்களால் பார்ப்பதில் இருந்து மிக நன்றாக கற்றுக்கொள்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

எனக்கு மிகவும் ஆச்சிரியாமாக தோன்றுகிற காரியம் என்னவென்றால் மிகவும் கேவலமான காட்சிகள் கொண்ட திரைப்படங்களைக் கூட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் அமர்ந்து பார்ப்பது தான். சமீபத்தில், என் பக்கத்து விட்டில் உள்ளவர்கள் தன் குழந்தைகளை சினிமா, சீரியல் பார்க்க விடாமல் கார்ட்டூன் சேனலை பார்க்க வைத்தவர், இப்போது அனைவரும் சேர்ந்து குழந்தைகளுடன் சினிமா, சீரியல் பார்க்கிறார்கள்.

ஆபிரகாம் தேவனின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, தான் குடியிருந்ததும், தனது உறவினர்களின் தேசத்தையும் விட்டு கானானுக்கு புறப்பட்டார். ஆனால் ​​​​அவர் இறக்கும் வரை தான் விட்டு வந்த தேசத்திற்கு மீண்டும் செல்லாமல், தேவனுடைய கட்டளையை மீறவில்லை. ஆபிராகம் மட்டுமல்ல, தனது மகன் ஈசாக்கிடமும் அதே கவனத்தை எடுத்துக் கொண்டார், மேலும் ஈசாக்கின் திருமணத்திற்காக ஆபிராகம் விட்டுச் சென்ற தனது உறவினர்களின் வீட்டிற்கு எலியேசரை அனுப்பும் போது,​ “அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.” (ஆதியாகமம் 24:5, 6) என்று பதிலளித்தார். ஏனென்றால், ஈசாக்கு அங்கு சென்று தன் மனைவியால் ஈர்க்கப்பட்டு ஒருவேளை இங்கே இருந்துவிடாலாம் என்று நினைத்தால், கானானில் வாழ வேண்டும் என்ற தேவனின் அழைப்பை ஈசாக்கு மீறுகிறவானாக இருப்பான் என்று ஆபிரகாம் பயந்தார்.

தற்போது, ​​விசுவாசத்தால் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று கூறிக்கொள்ளும் பல விசுவாசிகள், தங்கள் குழந்தைகளை எந்தவித இடையூறும் செய்யாமல், கீழ்ப்படியாமைக்கு அவர்களை நடத்தாமல் சில திரைப்படங்கள், தொடர் கதைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க வைக்கிறார்கள்.

நான் விசுவாசி அல்லாதவர்களையும் கேள்வி கேட்கவேண்டும் என்று விரும்புகிறேன், நீங்கள் எந்த திரைப்படங்களை அதிகமாகப் பார்த்து மற்ற தொடர்கதைகளை பார்க்கிறீர்களோ, அவற்றைப் பார்த்து ரசிக்கிறீர்களோ, அவைகளில் உங்கள் குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் அந்தக் கதாபாத்திரங்களைப் போல நடந்து கொண்டால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நீங்கள் பார்க்கும் திரைப்படங்களின் வில்லன்களைப் பற்றி நான் பேசவில்லை, ஆனால் உங்கள் குழந்தைகள் கதாநாயகன் & கதாநாயகி போல் நடந்து கொண்டால் அதை வரவேற்பீர்களா?

7, மாற்கு 4:18,19 “வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.”

இந்த வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகத் தெளிவாகப் போதிக்கிறார், உலக துக்கங்களும் பிற ஆசைகளும் நமக்குள் நுழைந்தால், நாம் கேட்கும் அல்லது படிக்கும் வார்த்தைகள் நெருக்கப்படும். பொதுவாக நமது உலகக் கவலைகளும், மற்றும் நம் வாழ்வில் ஏற்படும் பிற ஆசைகளும் நம்மை மிகவும் இடையுறுக்கு ஆளாக்க வைத்து நாம் மனதில் உள்ள தேவனுடைய வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதுமட்டுமின்றி, நாம் பார்த்த திரைப்படங்களிம், மற்ற நிகழ்ச்சிகளில் வரும் மோசமான காட்சிகளும் அதிகமாக நம்மை பாதிக்கின்றன. கடந்த காலத்தில் இவற்றைக்கு நானும் பலியாகியிருக்கிறேன். அதனால்தான் இந்தத் தலைப்பின் மிகவும் பாரத்தோடு இதை எழுதுகிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த திரைப்படங்கள் & தொடர்கதைகள் மற்றும் பல இவைகளை பார்ப்பது ஒரு மணிநேரமோ அல்லது அரை மணிநேரமோ பார்ப்பதினால் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். நம்மை அறியாமலே நம்முடைய சிந்தனையை மிகவும் தொந்தரவு செய்கிறது. யாரோ ஒருவர் உருவாக்கிய காட்சிகள் நம் மனதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாக நாம் படித்த & கேட்ட வசனத்தில் நாம் கவனம் செலுத்தாமல் வேறு சில தனிப்பட்ட கடமைகள் மீதும் கூட கவனம் செலுத்த முடியாத நிலை. ஆனால் வேதம் நம்மை எதை தியானிக்க அல்லது சிந்திக்க சொல்கிறது என்று பார்ப்போம்.

பிலிப்பியர் 4:8,9 “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்”.

நாம் பார்க்கும் திரைப்படங்கள் மற்றும் பிற சித்தரிப்புகளின் காரணமாக, அப். பவுல் மேலே கூறியவற்றின் மீது நமது கவனம் இருக்குமா அல்லது நான் இதுவரை விவரித்த மோசமான விஷயங்களைப் பற்றியதாக இருக்குமா? நிங்களே யோசித்துப் பாருங்கள்.

(1 தெசலோனிக்கேயர் 5:21,22) “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

நாம் அதை வார்த்தையாகப் பார்த்தால், தற்போதைய திரைப்படங்கள் மற்றும் பிற சித்தரிப்புகளில் இதுவரை நாம் பார்த்ததை விட (ஆண் & பெண்) பாலின சார்பு போன்ற பல முக்கியமான சிக்கல்கள் உள்ளன.

இன்றைய சமூகத்தில் சினிமா கதாநாயகர்களை தம்முடைய குடும்பத்தை விட அதிகமாக ரசிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு சினிமா கதாநாயகனின் ரசிகன் இவ்விதமாக சொன்னான் எனது ஹீரோ எனக்கு கடவள். விசுவாசிகள் தங்கள் குழந்தைகளுக்கு திரைப்படங்களை குறித்து எந்தவித எதிர்ப்பு தெரிவிக்காதாதல், அவர்களும் ஒரு ஒரு நடிகன் மீது பைத்தியமாய் இருப்பார்கள். கிறிஸ்துவுக்கு அடிமைகளாக (உட்பட்டு) இருக்க வேண்டிய வாலிபர்கள் ஒரு ஏமாற்றுக்காரனுக்கு அடிமைகளாக வாழ்கிறார்கள்.

அப்படியென்றால் நான் இதுவரை விவரித்த வாதத்தின் உரை பகுதிகளுக்கும் மற்ற வேத வசனங்களுக்கும் முரண்படாத கதையுடன் கூடிய திரைப்படம் & தொடர்கதை மற்ற நிகழ்ச்சிகள் குறும்படங்கள் ஏதேனும் இருந்தால், இது போன்ற மோசமான காட்சிகள் மற்றும் வார்த்தைகள் இல்லாமல், அது என் வாழ்க்கைக்கு ஏதாவது நல்லதை கற்பிப்பதாக இருந்தால், பிறகு நான் அதை என் ஓய்வு நேரத்தில் பார்க்க தயாராக இருக்கிறேன். அவ்வாறு செய்வது நேரத்தை வீணடிப்பது கூட இல்லை, ஏனென்றால் இது என் வாழ்க்கைக்கு அவசியமானதாக இருப்பதால், நான் அதை நேரத்தை ஒதிக்கி பார்ப்பேன்.

அப்படி இல்லை, அவற்றில் இருக்கும் எல்லாமே 50% நல்லது, 50% கெட்டது, உள்ளது அதில் நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டுவிடலாம்? என்று சொல்கிறிர்களா? தேவனுக்கு முன்பாக நேர்மையாக சொல்லுங்கள், பாவச் சுபாவமுள்ள நீங்களும் நானும் நம்மிடம் இருக்கும் தீமைக்கு அதிகமாகச் ஈர்க்கபடுவோமா? இது நல்லவகளுக்கு ஈர்க்கபடுவோமா? கொஞ்சம் சிந்தியுங்கள். அவர்களிடமிருந்து நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு கெட்ட காட்சிகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்க நம்மால் முடியுமா? சேற்றில் மிதக்கும் தெளிந்த நீரை நாம் குடிக்க வேண்டுமா? மேற்பரப்பில் தெளிவாகத் தெரிந்தாலும், அதன் அடியில் உள்ள அழுக்கு தண்ணீரால் அது பாதிக்கப்புக்கொல்லாகும்.

எனவே சங்கீதக்காரனின் வார்த்தைகளைப் பாருங்கள் (சங்கீதம் 139:23,24) “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.

சங்கீதப் புத்தகத்தின் முதல் அதிகராத்திலேயே, "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். இரவும் பகலும் வேதத்தில் தியானமாய் இருப்பதென்றால், இரவும் பகலும் படிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. அதை யாராலும் செய்ய முடியாது. சொல்லப்போனால் அந்த வார்த்தைகளை எழுதும் தாவீதாலும் முடியாது. ஆனால் எல்லா நேரங்களிலும் நம் எண்ணங்களும் செயல்களும் தேவனுடைய வார்த்தை நமக்குக் கற்பிப்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அந்த சந்தர்ப்பம் நமக்குக் கற்பிக்கிறது. ஏனென்றால் தேவன் மனித செயல்களை மட்டுமல்ல, அவனுடைய சிந்தனையின் எண்ணங்களையும் அவர் நியாயந்தீர்க்கிறார்.

(1 கொரிந்தியர் 4:5) “ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

ஒரு விசுவாசி தன் மனதில் தேவபக்தியற்ற எண்ணங்களைக் கூட அவருக்கு கவலையாக இருக்கிறது என்று சங்கீதக்காரன் அதைப்பற்றி கவலைப்பட்டு, சொல்லுகிறார். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். என்று சொல்லுகிறார். அதனால்தான் நோவாவின் வெள்ளத்தின் போது அவரின் மனஸ்தாபம் மற்றும் அவர்களின் செயல்களால் மட்டுமல்ல, அவர்களின் எண்ணங்களாலும் அவர்களை அழித்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

ஆதியாகமம் 6:5,6 “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது”.

இனி இந்த தலைப்பின் மீது எழுப்பப்படும் சில கேள்விகளை பார்ப்போம்.

1, கடந்த காலத்தில் ஒரு சகோதரி என்னிடம் இவ்வாறு விவாதித்தார். சினிமா பார்ப்பது தவறென்றால் கிறிஸ்துவ திரைப்படங்களான இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையின் வரலாறு மற்றும் வேதாகம திரைப்படங்களும், சினிமா தானே அவைகளையும் பார்க்க கூடாதா? என்று கேட்டார்.

நான் சொல்லவருவது சினிமா என்ற பெயரில் உள்ள அனைத்தையும் அல்ல, அவர்கள் சொல்லுவதுப்போல வேதத்தை ஆதராமாக கொண்டு எடுத்த திரைப்படங்களில் தவறு என்று சொல்லுவதற்கு ஒன்றுமே இருக்காது ஏனென்றால் அவைகள் வேதத்தை ஆதராமாக கொண்டு எடுத்தவை ஆகையால், அவைகளில் பொழுதுபோக்கு அம்சங்களும் மேற்குறிப்பிட்ட வேதத்திற்கு விரோதமான காரியங்கள் இருக்க வாய்ப்பில்லை. மேலும் வரலாற்று ரீதியாகவும், வேதத்தின் அடிப்படையிலும் இருப்பதால் அதில் தவறுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், கற்பனை கலந்த திரைப்படங்களில் தவறு இருக்கிறது என் அறிந்தும் ஏன் பார்க்கிறோம். பொழுதுபோக்கிற்கு தானே!

2, ஒரு சில நபர்கள் என்னிடம் இவ்விதமாக சொன்னது உண்டு, அவ்வப்போது பார்ப்பதை அவ்வப்போதே மனதிலிருந்து விட்டுவிட வேண்டும்.

அவர் சொன்னதுப்போல பார்ப்பதை விட்டுவிட்டால் சினிமா பார்த்தவர்கள் அந்த சினிமாவில் வரும் வசனத்தை மனப்பாடமாக சொல்லுகிறார்கள். இந்த பட்டியலில் சில போதகர்களும், உள்ளனர். சினிமா கதாநாயகர்களை போல உடை அணிவதிலும், வசனங்களை சொல்லுவதிலும், நடனம் ஆடுவதிலும் சினிமாவையே பின்பற்றுகிறார்கள்.

  1. திரைப்படம் பார்க்கும் போது மட்டுமல்ல, சில அறிவியல் பாடங்களைப் படிக்கும் & பார்க்கும் போதும், வேதத்திலேயே உன்னதப்பாட்டு, எசேக்கியேல் புத்தகத்தில் வரும் அதிகாரம் 23 போன்ற பகுதிகளைப் படிக்கும்போது சில கெட்ட எண்ணங்கள் நமக்கு வரும், எனவே அவற்றைப் படிக்கக் கூடாதா என்றும் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
  2. அறிவியல் பாடம் நம் வாழ்க்கைகும், பிறர் வாழ்க்கைக்கும் அவசியம், எனவே அதைக் குறித்து படித்து தெரிந்து கொள்கிறோம், ஆனால் அதில் உள்ள சில இரகசிய உடல் உறுப்புகளை பார்த்து மகிழ்வதற்காக அல்லதானே? சினிமா பார்ப்பது அறிவியல் பாடங்களைக் கற்றுக்கொள்வது போல் நம் வாழ்வில் முக்கியமா? அவைகள் பார்ப்பது உண்மையை அறிவதற்கா? அல்லது இன்பத்தையும் பொழுது போக்கையும் அனுபவிப்பதற்கா? எனவே நம் வாழ்க்கைக்கு பயன்படும் விஷயங்களை திரைப்படங்கள் மற்றும் பிற சித்தரிப்புகளுடன் இணைப்பது சரியான வழி அல்ல.

B, வேதத்தில் எழுதப்பட்ட சில வார்த்தைகளைப் படிக்கும்போது கூட, நம் எண்ணங்கள் வேறுவிதமாக மாறலாம். ஆனால் தேவன் அவற்றை ஒரு பரிசுத்த நோக்கத்துடன் எழுதினார், யாரையும் தவறாக வழிநடத்தவோ! அல்லது அவர்கள் மூலம் லாபம் ஈட்டவோ அல்ல.

(சங்கீதம் 12:6) கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. (மீகா 2:7) “செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? தேவன் தனது வேதத்தில் எழுதிய அனைத்தும் தனது பிள்ளைகளின் நன்மைக்காக தான் எழுதியுள்ளார், அவற்றைப் படிக்கும்போது என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்யக்கூடாதோ என்பதை நம்மால் புரிந்துக் கொள்ளமுடியும்.

தற்போது ஆபாச காட்சிகள், வன்கொடுமை, வன்முறையுடன் கூடிய கதைகளை எழுதி எடுக்கப்படும். திரைப்படம், சீரியல் என படமாக்கும் இயக்குனர்கள், மனதில் ஏதேனும் புனிதமான எண்ணத்துடன் செய்கிறார்களா? அல்லது அப்படி ஏதாவது பரிசுத்தமான எண்ணம் இருக்கும் போது வீழ்ச்சியடைந்த  மனிதன் அவைகளில் என்ன கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் தங்கள் சித்தரிப்புகளால் இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் திரைப்படங்களில் நான் மேலே குறிப்பிட்ட தீமையை இவ்வளவு விரிவாகக் காட்ட வேண்டிய அவசியமிருக்காது.

இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு நிகழ்வை புத்தகத்தில் எழுதுவதற்கும் ஒரு இயக்குனர் கதையை விறுவிறுப்பாகச் சித்தரிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேதத்தில் எழுதப்பட்ட சில சூழ்நிலைகளை படமாக்கும்போது இயக்குனர்களும் மிகுந்த ஆய்வும், எச்சரிக்கையும் அவசியமாக இருக்கிறது. எனவே வேதத்தில் எழுதப்பட்ட நிகழ்வுகளை பரிசுத்த நோக்கத்துடன் ஒப்பிடுவதும், மக்களை கவரும் வகையில் இயக்குனர்கள் வேண்டுமென்றே செய்த மோசமான சித்தரிப்புகளையும் ஒப்பிடுவது சரியான முறையல்ல. ஒருவேளை வேதத்தில் சில வேதப்பகுதிகளை வாசிக்கும் போது முன்பு குறிப்பிட்ட கேள்வியை போல வீழ்ச்சியடைந்த மனிதனாகிய என்னில் பாவ சுபாவத்தால் என் மனம் எப்போதாவது தவறாக நினைக்கும் பட்சத்தில், அந்தத் தீய எண்னத்திலிருந்து என்னை விடுவித்து, நீர் எந்த புனிதமான நோக்கத்தில் எழுத வைத்தீரோ அதை மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் என் மனதை நிலைநிறுத்தும்படி தேவனிடம் ஜெபம் செய்வேன். தீமை இருக்கிறது என்று தெரிந்தும் திரைப்படம் அல்லது பிற படங்களைப் பார்ப்பவர்கள், அந்த தீய விளைவைத் தவிர்க்க முடியுமா?

இந்த கட்டுரையை வாசித்த பிறகு, நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள் மற்றும் பிற சித்தரிப்புகளில் எது நல்லது என்று சிந்தித்து, வேத வசனத்திற்கு முரணானவற்றைப் பாருங்கள். நேரத்தை வீணாக போக்காமலும், தவறாகப் பயன்படுத்தாமல், அந்த பழக்கத்தை ஒரு போதையாக மாற்றிகொள்ளாமல், மனதில் விழிப்புடன் இருங்கள். இறுதியாக, இந்தத் தலைப்புடன் தொடர்புடைய மேலும் இரண்டு வேத வசனத்தை உங்களுக்கு மேற்கொல்க்காட்டி முடிக்கிறேன்.

(சங்கீதம் 119:37) “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.”

(மத்தேயு 6:22,23) “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!”

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.