உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: A.W. பிங்க் 1886-1952
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 11 நிமிடங்கள்

 

The cross and the self

"அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." (மத்தேயு 16:24)

அப்போது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: "என்னைப் பின்பற்ற விரும்பினால்" என்ற வார்த்தை தீர்மானம் & திட்டம் என்பதற்கு அடையாளம். "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை (தனது சிலுவையை) எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

மேலும், கிறிஸ்து லூக்கா 14:27 –ம் வசனத்தில், "தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." எனவே இது நம்முடைய விருப்பத்திற்கு விடப்பட்ட காரியமில்லை. கிறிஸ்துவின் சீஷத்துவத்திற்கு இது அவசியம். கிறிஸ்தவம் என்பது ஒரு சத்தியத்தை ஏற்றுக்கொள்வதும், சில விதிகளுக்குக் கீழ்ப்படிவதும், அல்லது ஒரு மதத்தைப் பின்பற்றுவது ஆகியவற்றை விட அதிகமானது. முதலாவதாக, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவுக்கு கீழ்படிவது. எனவே நீங்கள் கிறிஸ்துவுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் அளவிற்கு மட்டுமே நீங்கள் கிறிஸ்தவநாக இருக்க முடியும்!

இயேசுவைப் பின்பற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கை. "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." நாம் கிறிஸ்துவோடு நடபதில் வளருவோம். ஆட்டுக்குட்டி எங்கு செல்லுமோ அங்கெல்லாம் அவரை பின்தொரும் என்று வேத வசனம் சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 14:4) என்று வேதவசனங்களை விவரிக்கும் சிலர் உள்ளனர், ஆனால் மிகவும் வருத்தப் படவேண்டிய விஷயம் என்னவென்றால், அங்கும் இங்கும் தற்செயலாக அவ்வப்போது தேவனை . நிறைவற்ற இதயத்துடன் பின்பற்றுபவர்கள் உள்ளனர். அவர்கள் தேவனைப் பின்பற்றுவது போல் தோன்றுவார்கள், ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சுயத்திற்கும் உலகத்திற்கும் அதிக இடத்தையும் கிறிஸ்துவுக்கு குறைந்த இடத்தையும் கொடுக்கிறார்கள். ஆனால், காலேபைப் போல், "முழு இருதயத்தோடும்" கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் (எண்ணாகாமம் 14:24) முழுமையான மகிழ்ச்சியைக் காண்பார்கள்.

எனவே அன்பர்களே! கிறிஸ்துவைப் பின்பற்றுவதே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால் அவரை பின்பற்ற வேண்டிய இந்த பாதையில் துன்பங்கள் உள்ளன, இந்த பாதையில் தடைகள் உள்ளன. ஆரம்பத்தில் நாம் வாசித்த வசனத்தின் முதல் பகுதி இந்தக் கருத்தைத் தான் தெரிவிக்கிறது. அந்த வசனத்தின் முடிவில் "என்னைப் பின்தொடரவும்" என்ற வார்த்தை இருப்பதைக் கவனியுங்கள். அவரைப் பின்தொடர்வதற்கு 'சுயம்' தடையாக நிற்கிறது. எண்ணற்ற உலக ஈர்ப்புகளாலும், தடைகளாலும் உலகம் திணறுகிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்து கூறுகிறார்; "ஒருவன் எனக்குப் பின் வர விரும்பினால் - (முதலில்) அவன் தன்னை வெறுத்து & மறுத்து, (இரண்டாவது) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, (மூன்றாவது) என்னைப் பின்பற்ற வேண்டும்". கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒரு சிலர் மட்டும் ஏன் அவரை நெருக்கமாகவும், தெளிவாகவும், ஒரே எண்ணமாகவும் பின்பற்றினார்கள் என்பதை இங்கே நாம் கற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான முதல் படி, ஒவ்வொரு நாளும் சுயத்தை & சுயநலத்தை மறுப்பதாகும்.

‘சுயத்தை வெறுப்பது’ மற்றும் 'சுயத்தை புறக்கணிப்பு' இந்த இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. 'சுயத்தை வெறுப்பது’ என்பது 'ஒருவர் தன்னை விரும்புவதை விட்டுவிடுவது' என்று பொதுவாக உலகிலும் கிறிஸ்தவர்களிடையேயும் கருதப்படுகிறது. ஆனால் எதை விட்டு விட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் இந்த 'விட்டு விடுவதை' உலக ரீதியான காரியங்களை சொல்லுகிறார்கள், திரைப்படங்கள், வன்முறை விளையாட்டுகள், சூதாட்டம் போன்ற உலக காரியங்களை சொல்லுவார்கள். மற்றவர்கள், வருடத்தில் சில குறிப்பிட்ட நேரங்களில் எடுத்துக்காட்டாக துக்க நாட்கள், சில சடங்குமுறை, கட்டுப்பாடுகள் போன்றவை மனிதனுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதான என்ற மனோபாவத்தை இவை உருவாக்குகின்றன இருப்பினும், இயேசு கிறிஸ்து அவரைப் பின்பற்றுவதற்கு வகுத்த முதல் விதி எதுவென்றால்,

தனக்குப் பிரியமானதை மட்டும் விட்டுவிடாமல், தன்னைத்தானே வெருப்பது, அதாவது தன் ஆசைகளை மட்டும் கைவிடாமல், தன்னைத்தானே கைவிடுவதாகும். "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து," என்று சொல்வதன் அர்த்தம் என்ன? முதலில் ஒரு நபர் தனது சுயமரியாதையை கைவிடுகிறார் என்று அர்த்தம். ஆனால் இந்த வார்த்தைகள் இந்த அர்த்தத்துடன் பொறுத்தப் படுத்தப்படவில்லை. இதில் ஆழமான அர்த்தம் உள்ளது. இது அதன் அடிப்படை நோக்கம். என் சுய ஞானத்தை நம்ப மறுப்பது என்று அர்த்தம். என் சுய உரிமைகளை விட்டுக் கொடுப்பதைக் குறிக்கிறது. சுயத்தை துறத்தல் என்று பொருள். நமது வசதிகள், நமக்கு பிரியமானது, நமது விருப்பங்கள், நமது நிலை, நமது சுயநலம் போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துவதே இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால் சுயத்தை முழுமையாகத் துறத்தல் & விட்டுவிடுதல் என்று பொருள்.

அன்பு நண்பர்களே! "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்." (பிலிப்பியர் 1:21) என்று அப்போஸ்தலருடன் கூறுவோம். "கிறிஸ்து எனக்கு ஜீவன்" என்றால் கீழ்ப்படிதல், கிறிஸ்துவை பின்பற்றுதல், கிறிஸ்துவை மகிமைப்படுத்துதல், கிறிஸ்துவுக்கு நம்மையே அர்ப்பணித்தல் என்பதாகும். மேலும், "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து," என்று தேவன் கூறுகிறார். சுயத்தை கைவிட்டு அதை முற்றிலும் கைவிடுங்கள். இதையே ரோமர் 12:1 –ல் மற்றொரு விதத்தில் கூறப்பட்டுள்ளது: "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று," இந்த வசனத்தில் வாசிக்கிறோம்.

இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் "சிலுவையைச் சுமப்பது" மிக முக்கியமானது. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பொறுப்பற்ற ஆடம்பர வாழ்க்கை அல்ல. அது மிகவும் கம்பீரமான முடிவு. இது ஒழுக்கம் மற்றும் தியாக வாழ்க்கை. சீஷத்துவ வாழ்க்கை சுயத்தை துறப்பதில் தொடங்கி சுயநலத்தின் முடிவை நோக்கி செல்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், இந்த வசனத்தில் சொல்லப்பட்ட சிலுவையை ஒரு சிலையாக அல்ல, ஆனால் வாழ்க்கையின் ஆதாரமாகவும், சீஷர்களின் சின்னமாகவும், ஆத்மீக அனுபவமாகவும் சித்தரிக்கிறது. கவனிக்கவும், கிறிஸ்து சிலுவையின் மூலம் பிதாவின் சிம்மாசனத்திற்கு ஏறினார் என்பது போலவே, கிறிஸ்தவன் தேவனுடன் ஐக்கியம் கொள்வதற்கும், இறுதியில் கிரீடத்தைப் பெறுவதற்கும் சிலுவை மட்டுமே ஒரு பாதையாக இருக்கிறது. நம்முடைய பாவம் மன்னிக்கப்படும் போது கிறிஸ்துவின் பலியின் நன்மைகள் நமக்குக் கிடைக்கும், சிலுவை நம் அன்றாட வாழ்வில் ஒரு அனுபவமாக மாறும்போது மட்டுமே பாவ இயல்புகளின் மீது வெற்றிக் கொள்ளும்.

இந்த வசனத்தின் சந்தர்ப்பத்தை புரிந்துக் கொள்வதற்கு இந்த வசனப் பகுதியை வாசிப்போம் (மத்தேயு 16: 21,22) "அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.” இந்த வசனத்தில் பேதுரு பேசியதின் பொருள், ஆண்டவரே! உம்மீது உமக்கு அக்கறை இல்லையா? ஆனால் அது உலக சிந்தனை. இந்த உலக தத்துவத்தின் சாராம்சம் சுய பாதுகாப்பு மற்றும் சுய திருப்தி ஆகும், ஆனால் சுய தியாகம், கிறிஸ்துவின் செய்தி சாராம்சம். பேதுரு கொடுத்த இந்த அறிவுரையில் சாத்தானின் சோதனையை கிறிஸ்து தெளிவாகக் கண்டாதால் பேதுருவை கடிந்துக் கொண்டார். பின்னர் அவர் தம் சீஷர்களிடம் திரும்பி, "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்" என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்: நான் சிலுவையில் அறையப்படுவதற்காக எருசலேம் செல்கிறேன். என்னை பின்தொடருகிரவனுக்கு கூட ஒரு சிலுவை உண்டு. எனவே, (லூக்கா 14:27) -ல் கூறப்பட்டுள்ளபடி, "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." என்று கிறிஸ்து எருசலேமுக்குச் சென்று மரிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அவரைப் பின்தொடர விரும்புபவர்கள் கூட சிலுவையை சுமக்க வேண்டியது அவ்வளவு அவசியமாக இருக்கிறது.

இந்த அவசியம் முதல் விசயத்தில் அவசியமோ? பிந்தைய அவசியம். சிலுவையை மத்தியஸ்தர் செய்கிறவர் கிறிஸ்து மட்டுமே என்றாலும், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் அனுபவரீதியாக அதில் பங்கு பெற்றவர்கள். எனவே சிலுவை இப்போது எதைக் குறிக்கிறது? "தன் சிலுவையைச் சுமப்பவன்" என்று இயேசு கிறிஸ்து சொன்னதன் அர்த்தம் என்ன? அன்பானவர்களே! இன்று இந்தக் கேள்வியைக் கேட்பதும், தேவனுடைய பிள்ளைகளுக்கு "சிலுவை" எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய வேதப்பூர்வமான புரிதல் இல்லாமல் இருப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது! ஒரு பொதுவான கிறிஸ்தவன் இந்த வசனத்தில் உள்ள "சிலுவை" என்பது அவன் எதிர்கொள்ளும் அனைத்து வகையான சோதனைகளையும் இன்னல்களையும் குறிக்கிறது என்று நினைக்கிறான். அமைதியைக் கெடுக்கும், உடல் விரும்பாத, மனதைக் கெடுக்கும் அனைத்தையும் சிலுவையாகக் கருதுகிறோம். சிலர் இது என் சிலுவை என்றும், சிலர் அது எனது சிலுவை என்றும், வேறு சிலர் இது அவர்களின் சிலுவை என்றும் கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அன்பான நண்பர்களே, இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் அப்படி ஒரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "சிலுவைகள்" என்று பொருள்படும் பன்மை வடிவத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தப்படவில்லை. "ஒரே சிலுவை" என்று பயன்படுத்தியிருப்பதை நாம் எங்கும் காணவில்லை; மேலும், "crucify" என்ற வினைச்சொல் Active Voice உடன் தொடர்புடையது ஆனால் Passive Voice அல்ல. அதாவது சிலுவை நம் மீது சுமத்தவில்லை & போடப்படவில்லை, ஆனால் அதை நாமே சுமக்க வேண்டும் & எடுத்துக் கொள்ள வேண்டும். சிலுவை என்பது கிறிஸ்துவின் துன்பங்களை விவரிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் சரியான சத்தியத்தின் சின்னமாகும்.

மற்றவர்கள் சிலுவை என்பது தாங்கள் செய்ய விரும்பாத சில ஏற்றுக்கொள்ள முடியாத கடமைகளை அல்லது சில உடல் ரீதியான ஆசைகளை அவர்கள் புறக்கணிக்க மிகவும் கடினமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அத்தகையவர்கள் மற்றவர்களைத் தாக்குவதற்கு சிலுவையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, அவர்கள் தங்கள் தியாகங்களை பறைசாற்றுகிறார்கள் மற்றும் மற்றவர்களைப் பின்பற்றும்படி வற்புறுத்துகிறார்கள். சிலுவையைப் பற்றிய இத்தகைய முன்முடிவுகள் பரிசேயர்கள் ஆர்வமாக இருந்ததைப் போலவே பாசாங்குத்தனமான மற்றும் தீங்கு விளைவிக்கும்.

இப்போது தேவனின் துணையுடன் சிலுவையை அடையாளப்படுத்தும் மூன்று விஷயங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, சிலுவை இந்த உலகம் வெளிப்படுத்தும் வெறுப்பைக் காண்பிக்கிறது & குறிக்கிறது. உலகம் தேவனையும் கிறிஸ்துவையும் வெறுத்தது, அந்த வெறுப்பை கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து வெளிப்படுத்தியது. யோவான் 15 –ம் அதிகாரத்தில், கிறிஸ்துவானவர் குறைந்தது ஏழு முறையாவது தன்னையும் அவரது மக்களையும் உலகம் வெறுத்ததாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, அவர் வாழ்ந்ததைப் போல நாம் எவ்வளவு அதிகமாக வாழ்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் உலகத்திலிருந்து நம்மைப் பிரித்து கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டு வாழ்கிறோமோ, அவ்வளவு அதிகமாக இந்த உலகம் நம்மை வெறுக்கிறது.

கிறிஸ்துவிடம் சீஷனாக வந்த ஒரு மனிதனைப் பற்றி சுவிசேஷ பகுதிகளில் வாசிக்கிறோம். அவன், “அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.” என்று அவர் கேட்டுக் கொண்டதைப் பார்க்கிறோம். இந்த விண்ணப்பம் நியாயமானது அல்லவா? மிகவும் பாராட்டத்தக்கதும் கூட! ஆனால் இதற்கு நமது ஆண்டவரின் பதில் வியக்க வைக்கிறது. அவர் அவனிடம், “அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்." என்று அவர் கூறினார். அந்த இளைஞன் அந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவர் செய்தாரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அவ்வாறு செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? அவரது உறவினர்களும் அண்டை வீட்டாரும் அவரைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ஒரு மகனின் கடமையை உலகம் கருதுவதைப் புறக்கணித்து, கிறிஸ்துவைப் பின்பற்றும் அவரது நல்ல நோக்கத்தையும் பக்தியையும் நீங்கள் பாராட்டியிருப்பீர்களா? ஆ! நண்பரே, நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றினால், இந்த உலகம் உங்களை பைத்தியக்காரராகப் பார்க்கும். சில ஆளுமைகள் மற்றும் மனநிலைகள் இதன் ஞானத்தை புரிந்து கொள்ளவில்லை. இவ்வுலகின் தீமைகளை எதிர்கொள்வது சிலருக்கு பெரும் சலனமாக இருக்கிறது.

இன்னொரு இளைஞன் கிறிஸ்துவிடம் சீடனாக வந்து, “பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.” என்று கேட்டதை நாம் காண்கிறோம். இந்த விண்ணப்பமும் நியாயமானது அல்லவா? ஆனால் இங்கேயும், கர்த்தர் அவரைப் பின்தொடரச் சுமக்க வேண்டிய சிலுவையை அவருக்கு நினைவூட்டினார், மேலும் அவரிடம், "அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்." (லூக்கா 9:62). அன்பான குணம் கொண்டவர்களுக்கு உறவுகளைத் துண்டிப்பது & நிராகரிப்பது மிகவும் கடினமான விஷயம். உறவினர்கள் எண்ணிப்பார்க்கவில்லை என்பது இன்னும் வேதனை அளிக்கிறது. ஆம், நாம் கிறிஸ்துவை மிக நெருக்கமாகப் பின்பற்றும் போது, ​​இந்த உலகத்தின் வெறுப்பு எவ்வளவு உண்மையானது என்பதை நாம் பார்க்கலாம். ஒருவரால் உலகத்தை வெறுக்காமல் அவருடன் நெருக்கமாக இருக்க முடியாது.

மற்றொரு இளைஞன் கிறிஸ்துவிடம் வந்து அவருடைய பாதங்களில் பணிந்து, "அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்." என்று கேட்டதை நாம் பார்க்கிறோம். கிறிஸ்துவும் அவருக்கு சிலுவையை நினைவுபடுத்தினார். “நீ போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்." ஆனால் அந்த இளைஞனுக்கு அதிக சொத்து இருந்ததால், அதைக் கேட்டு அவன் போய்விட்டேன்." இப்போதும் கிறிஸ்து உன்னிடமும் என்னிடமும் பேசுகிறார். தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் என் சீஷனாக இருக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறார். சிலுவை உலகம் வெளிப்படுத்தும் வெறுப்பையும் நிந்தனையையும் குறிக்கிறது. ஆனால் கிறிஸ்துவைப் போலவே, அவருடைய சீஷர்களும் இந்த சிலுவையை தானாக முன்வந்து சுமக்க வேண்டும். மற்றும் நீ என்ன செய்கிறாய்? இந்த சிலுவையை புறக்கனிக்கிறாயா? அல்லது ஏற்றுக் கொள்வாயா? அல்லது அந்த சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுவாயா?

இரண்டாவதாக, தேவனின் சித்தத்திற்கு தானாக முன்வந்து அடிபணிந்த வாழ்க்கை சிலுவையை குறிக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மரணம் இதைத் தெளிவாக்குகிறது. யோவான் 10:17 –ல், "நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துக் கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்." கிறிஸ்து ஏன் தனது ஜீவனை கொடுக்கிறார்? இதற்கு பதில் 18 –வது வசனத்தில் உள்ளது. "இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்." தனது குமாரனுடைய கீழ்ப்படிதலின் இறுதி கட்டளை சிலுவையாகும். அதனால் தான், பிலிப்பியர் 2 -ம் அதிகாரத்தில், “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:6-8) கிறிஸ்துவின் கீழ்ப்படிதள் பாதையில் இதுவே இறுதிப் படியாகும்.

அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கு கிறிஸ்து நமக்கு ஒரு முன்மாதிரியை வைத்தார். ஒரு கிறிஸ்தவனின் கீழ்ப்படிதல், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலைப் போலவே, தன்னார்வமாகவும், கட்டாயப் படுத்தப்படாமலும், இடைவிடாமல், மரணம் வரையிலும் தவறாமல் உண்மையாக இருக்க வேண்டும். எனவே சிலுவையானது கீழ்ப்படிதல், அந்த கீழ்ப்படிதல், தேவனுக்கு அர்ப்பணிப்பு மற்றும் அவருடைய சித்தத்தின்படி கையாளப்படுவதற்கான விருப்பத்தின் வாழ்க்கைக்கு ஒப்பானது. "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” மற்றொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் சிஷத்துவதிற்கு மாதிரி எதுவென்றால், கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது தம்மைப் பிரியப்படுத்தவில்லை. எனவே அதை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. அவர் தன்னை வெறுமையாக்கியதுப் போல நாமும் நம்மை வெறுமையாக்க வேண்டும். அவர் நன்மை செய்த்துப் போல நானும் நன்மையை செய்கிறவனாக இருக்கவேண்டும். கிறிஸ்து ஊழியம் செய்ததுப்போல நானும் ஊழியம் செய்ய வேண்டும். கிறிஸ்து சிலுவை மரணம் வரை கீழ்ப்படிந்தார். இதைத்தான் சிலுவையை அடையாளப்படுத்துகிறது.

நாம் முன்பு பார்த்தது போல், இந்த உலகம் நம்மை வெறுப்பது சிலுவையை அடையாளப் படுத்துக்கிறது. நாம் உலகத்திலிருந்து நம்மைப் பிரிந்து, அதன் வழிகளைக் கைவிட்டு, அது செயல்படும் சட்டத்தைத் தவிர வேறு ஒரு சட்டத்தால் ஆளப்படுவதால், உலகம் எதிர்ப்பாலும் கோபத்தாலும் நம்மை நிந்திக்கிறது. இரண்டாவதாக, சிலுவை தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் சிலுவை சின்னமாகும்.

மூன்றாவதாக, சிலுவை மற்றவர்களுக்காக தியாகம் செய்வதற்காகவும், அவர்களுக்கு துன்பம் அனுபவிப்பதற்கான அடையாளமாகும். (1 யோவான் 3:16) -ஐ காண்க. "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்." இதுவே கல்வாரியின் தர்க்கம். நாம் கிறிஸ்துவுடன் ஐக்கியமாக இருக்கவும், அவருடைய வாழ்க்கை நியாயபிரமானத்தின் படி வாழவும், அதாவது தேவனுக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்களுக்காக தியாக உணர்வை கொண்ட வாழ்வை வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் வாழ்வதற்காக அவர் மாரித்தார். எனவே நண்பர்களே, நாம் வாழ்வதற்கு நாம் இறக்க வேண்டும். மத்தேயு 16:25 –ம் வசனத்தில் உள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள், "தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்" கர்த்தர் இந்த வார்த்தைகளை தம் சீஷர்களிடம் சொன்னதால், அவை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பொருந்தும். தன் சுயம் சார்ந்த இன்பம், தன் மன அமைதி, தன் நலன், தன் சுயநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுயநலமாக வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் வாழ்க்கையை என்றென்றும் இழப்பான். நித்தியத்தைப் பொறுத்த வரையில் மேல் சொல்லப்பட்ட அனைத்தும் பயனற்றது; ஆனால், "என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்." என்பது, தன் நலன், தன் வளர்ச்சி, ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கிறிஸ்துவுக்காக தன்னலமின்றி பிறருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்யும் கிறிஸ்தவன் என்று பொருள். எதை இழப்பானோ அதையே பெற்றுக்கொள்வான். அதாவது, கிறிஸ்துவுக்காக எந்த வாழ்க்கை தியாகம் செய்யப்படுகிறதோ, அதே வாழ்க்கையே அழியாமையையும், நெருப்பின் பரீட்சைக்கு நிற்கும் விஷயங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது, அது நித்தியமாக இருக்க வேண்டும். அவர் அவன் பெறுவான். நாம் நித்தியத்தில் வாழ்வதற்காக அவர் மரித்தார். மேலும் நாம் வாழ்வதற்கு மரிக்க வேண்டும்.

''....என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.” யோவான் 20:21 -ன் வார்த்தைகளையும் கவனியுங்கள். அவர் அவர்களிடம், "பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.

எதை செய்வதற்கு கிறிஸ்து இங்கு அனுப்பப்பட்டார்? பிதாவை மகிமைப்படுத்தவும், தேவனின் அன்பைக் காட்டவும், தேவனின் மகிமையை அறிவிக்கவும், ஜெருசலேமுக்காக அழவும், “பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள். அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி," (மாற்கு 3:21). இப்போது கிறிஸ்து கூறுகிறார், "பிதா என்னை அனுப்பியது போல், நான் உங்களை அனுப்புகிறேன், நான் உங்களை இரட்சித்த உலகத்திற்கு உங்களை மீண்டும் அனுப்புகிறேன்" சிலுவையின் முத்திரை தரிப்பதே நம் வாழ்வின் அர்த்தம்!

அன்பான சகோதரனே! சகோதரியே! கிறிஸ்துவின் மரணத்தின் அனுபவம் (2கொரிந்தியர் 4:10, 11) கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.” இந்த வசனத்தை பார்த்தால் நம்முடைய வாழ்க்கை எவ்வளவு குறைவு உள்ளதாக இருக்கிறது. குறைந்த பட்சம் சிலுவையைச் சுமக்க ஆரம்பித்து விட்டோமா? நாம் அவரைப் பின்பற்றாததில் ஆச்சரியமில்லை. பாவத்தை வெல்லும் காரியத்தில் நமது தோல்வியில் விசித்திரமான ஒன்றும் இல்லை. இதற்குக் காரணம் உண்டு. கிறிஸ்துவின் சிலுவை மத்தியஸ்தத்தில் தனித்து நின்றாலும், அவருடைய சீஷர்கள் அனைவரும் அனுபவபூர்வமாக அதில் பங்கு கொள்ள வேண்டும். கல்வாரி சிலுவை பாவத்தின் தண்டனையிலிருந்து முழுமையான விடுதலையை வழங்கியது. ஆயினும்கூட, பாவத்தின் சக்தியிலிருந்து விடுபடுவதற்கும், பழைய மனிதனின் மீது வெற்றி பெறுவதற்கும் ஒரே வழி, சிலுவையை நம் வாழ்வில் அனுபவபூர்வமாக இணைத்துக்கொள்வதுதான். நியாயபிரமாணம் ரீதியாகவும் நீதியாகவும் பாவம் சிலுவையில் நிறுத்தப்பட்டது. ஆயினும் அனுபவ ரீதியாக, ஒரு சீஷன் அந்த சிலுவையைச் சுமக்கத் தொடங்கினால் மட்டுமே பாவத்தின் கறை மற்றும் அசுத்தம் அகற்றப்படும்.

"ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், அவன் தன்னையே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" (மத்தேயு 16:24).

இந்த வார்த்தைகளின் அடிப்படையில் தன்னைத்தானே ஆராய்ந்து தன் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் பொறுப்பாகும்.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.