images/new_theme/Promotion banner-4-2-min.jpg

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் ஆர்தர் வால்கிங்டன் பிங்க் (Arthur Walkington Pink) அவர்களின் பத்திரிகை ஊழியம் ஆற்றிய முக்கியப் பங்கு மிகக் குறைந்த அளவே அறியப்பட்டது. 1921-ஆம் ஆண்டில் அவர் ‘வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில், முழுக்க முழுக்க அவராலேயே எழுதப்பட்ட ஒரு மாதாந்திரப் பத்திரிகையைத் தொடங்கி, முப்பது ஆண்டுகள் அதனை நடத்தினார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய ஒட்டுமொத்த வாசகர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியதில்லை. இது ஆர்தர் பிங்க் அவர்களைச் சோர்வுறச் செய்யவே இல்லை. பரவலாகக் காணப்பட்ட ஆவிக்குரிய பெலவீனங்களைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்ததால், தமது பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்த உலகமெங்கிலும் இருந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு ஊழியம் செய்யும்படித் தன்னையே எந்தத் தயக்கமுமின்றி அர்ப்பணித்தார். கிறிஸ்தவர்களிடையே சிறந்த அறிவையும், பரிசுத்த வாழ்க்கையையும், ஜெபத்தையும், தேவபக்தியையும் ஏற்படுத்தும் விதத்தில் வேத விளக்கம் அளிக்க வேண்டுமென்பதே அவருடைய குறிக்கோளாக இருந்தது.

1952-இல் அவருடைய மரணத்திற்குப் பிறகு, அவர் உண்மையுடன் காத்துக்கொண்ட சத்தியத்தை அறிய வேண்டுமென்ற ஆர்வம் தட்டியெழுப்பப்பட்ட போது, அவருடைய படைப்புகள் பரவலாக மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்து, பெரிதும் மதிக்கப்பட்டன. அவருடைய பத்திரிகையில் வெளிவந்த பல வேத விளக்கங்கள் சமீபத்தில் உலகம் முழுவதும் மறுபடியும் அச்சிடப்பட்டுள்ளன.

அவருடைய படைப்புகள் வேத விளக்கப் போதனையில் ஓர் எழுப்புதல் தீப்பொறியாக இருந்து, அவருடைய வாசகர்களைப் பரிசுத்த ஜீவியத்திற்கு நேராய் வழிநடத்தின. இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் முதலாவதாக அவருடைய ‘வேதவாக்கியங்களில் ஆராய்ச்சி’ என்ற மாதப் பத்திரிகையிலேயே பிரசுரமானவை. இது ஆர்தர் பிங்க் அவர்கள் எழுதிய 'Profiting from the Word' என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமாகும்.

இந்தப் புத்தகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சு வடிவிலான புத்தகம் எங்களிடம் உள்ளது. இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள "8072805394" தொடர்புக் கொண்டு நீங்கள் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 13, 2026
பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்"...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
எங்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் "சிந்தியுங்கள்" என்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
லூக்கா சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மூன்று உவமைகளைக் குறித்து...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.