முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

கர்த்தருடைய பந்தியில் உள்ள பொருட்களை எழுத்தர்த்தமாக எடுத்துக்கொண்டால், விடை தெரியாத பல கேள்விகளுக்கும், வேதத்திற்கு முரணான பல சிந்தனைகளுக்கும், புதிய தவறான உபதேசங்களுக்கும் இடமளித்தது போலாகும். அவை என்னவென்று சுருக்கமாகக் கவனியுங்கள்:

  1. கர்த்தர் தன்னைத் தான் பல ஒப்புமைகளால் விவரித்துக்கொண்டு, பல அலங்காரங்களால் (உவமைகளால்) ஒப்பிட்டுக்கொண்டார். வனாந்தரத்தில் மோசே உயர்த்திய வெண்கல சர்ப்பத்தோடு, வாசலோடு, மேய்ப்பனோடு, ஒளியோடு, வழியோடு, திராட்சைச் செடியோடு அவர் தன்னை ஒப்பிட்டுக்கொண்டார் (யோவான் 3:14, 10:9,11, 12:8, 14:6, 15:1-2). இந்த உவமைகளைப் பயன்படுத்தியபோது, "இது அலங்கார அர்த்தமுடையது மட்டுமே!" என்று எங்கும் விளக்கம் கொடுக்கவில்லை. ஆனாலும், அவர் எழுத்தர்த்தமாக அவைகளில் ஒன்றும் இல்லை என்பதால், அவை அலங்காரமே தவிர எழுத்தர்த்தமாக இருக்க வாய்ப்பில்லை என்று நாம் புரிந்துகொள்கிறோம் அல்லவா? அப்படியிருக்க, அதே விதியை கர்த்தருடைய இராபோஜனப் பொருட்களின் விஷயத்தில் ஏன் பயன்படுத்தக்கூடாது? எனவே அப்பம் மற்றும் திராட்சை ரசம் எழுத்தர்த்தமாக இயேசுவின் சரீரமும் இரத்தமுமே என்று நம்புபவர்களுக்கு முதல் கேள்வி: மற்ற சந்தர்ப்பங்களில் கர்த்தர் தன்னை ஒப்பிட்டுக்கொண்ட வர்ணனைகள் அனைத்தும் உவமையானபோது, அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைத் தனது சரீரம் மற்றும் இரத்தத்தோடு ஒப்பிட்ட கர்த்தருடைய இராபோஜன சந்தர்ப்பத்தை மட்டும் எழுத்தர்த்தமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தர்க்கத்திற்கு என்ன ஆதாரம்?
  2. நியாயப்பிரமாணத்தையாவது, தீர்க்கதரிசனங்களையாவது தான் அழிப்பதற்கு வரவில்லை என்று தெளிவுபடுத்தி, நியாயப்பிரமாணத்தில் உள்ள மிகச்சிறிய கட்டளையையாவது மீறுவது தவறு என்று போதிக்கிறவனே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பெரியவன் என்று கர்த்தரே சுயமாகச் சொன்னார் (மத்தேயு 5:17-19). ஆனால், இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது என்பது பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தில் மிக முக்கியமான கட்டளை (உபாகமம் 12:23-25). ஒருவேளை கர்த்தருடைய இராபோஜனத்தில் இயேசு தன் சீடர்களுக்குப் பருகக் கொடுத்தது எழுத்தர்த்தமாகத் தனது இரத்தமேயானால், இந்த நியாயப்பிரமாணக் கட்டளையை மீறும்படி அவரே அவர்களை ஊக்கப்படுத்தியது போலாகும் அல்லவா? எனவே அப்பம் மற்றும் திராட்சை ரசம் எழுத்தர்த்தமாக இயேசுவின் சரீரமும் இரத்தமும் என்று கருதுபவர்கள் எதிர்கொள்ள வேண்டிய இரண்டாவது கேள்வி: "இயேசு தன் இரத்தத்தைக் குடிக்கும்படி கட்டளையிட்டு, நியாயப்பிரமாணத்தை மீறும்படி தன் சீடர்களைக் கட்டாயப்படுத்தினார் என்பது இவர்களுடைய கருத்தா? அதாவது, இப்படி நியாயப்பிரமாணத்தை மீறும்படி சீடர்களைத் தூண்டிய கர்த்தர், தேவனுடைய ராஜ்ஜியத்தில் சிறியவர் என்றும் ஒப்புக்கொள்ள இவர்கள் தயாரா?"
  3. இரத்தத்தைப் பருகக்கூடாது என்ற தடை இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படவில்லை. அது புறஜாதிகளுக்கும் பொருந்தும் என்று புதிய ஏற்பாடு தெளிவுபடுத்துகிறது (அப்போஸ்தலர் 21:25). கர்த்தருடைய இராபோஜனத்தில் திராட்சை ரசம் உண்மையாகவே இரத்தமானால் எதிர்கொள்ள வேண்டிய மூன்றாவது கேள்வி: "பந்தியில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும், ஒரு விசுவாசி இரத்தப்பானத் தடையுத்தரவு விஷயத்தில் குற்றவாளியாக ஆக்கப்படுவதில்லையா? இந்தப் பாவத்திற்கு, இத்தகைய ஆச்சாரத்தைப் புகுத்திய கர்த்தரே பொறுப்பேற்க வேண்டுமா? கர்த்தர் மீது பழி சுமத்தும் இத்தகைய கோட்பாட்டைப் பிரசங்கிப்பது நியாயமா?"
  4. இயேசு கிறிஸ்து ஒரே முறை பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்பதை வேதாகமம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது (யோவான் 19:30, ரோமர் 6:10, எபிரெயர் 7:26-27, 9:11-12, 26, 28, 10:10, 12, 14, 1 பேதுரு 3:18). பந்தியில் பிட்கப்படுவது எழுத்தர்த்தமாக கர்த்தருடைய சரீரமேயானால், அதை அனுசரிக்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் பலி மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. எனவே நான்காவது கேள்வி என்னவென்றால்: "நமக்காக ஒரே முறை பலியிடப்பட்டார் என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்த இயேசுவை விசுவாசிக்க வேண்டுமா? அல்லது அப்பமும் திராட்சை ரசமுமாக மாறி ஒவ்வொரு ஆராதனையிலும் பலியிடப்படுவதாக அப்போஸ்தலப் போதனைக்கு மாறாகக் கற்பிக்கப்பட்ட இந்த 'வேறொரு இயேசுவை' (2 கொரிந்தியர் 11:4) விசுவாசிக்க வேண்டுமா?"
  5. தேவன் தனது பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டாதிருப்பார் (குழியைக் காணவொட்டீர்) என்று இயேசுவின் சரீரத்தைக் குறித்து வாக்குத்தத்தம் செய்தார் (சங்கீதம் 16:10, அப்போஸ்தலர் 2:24-31, 13:34-37). கர்த்தருடைய இராபோஜனம் அனுசரித்த பிறகு மீதமுள்ள அப்பமும் திராட்சை ரசமும் நீண்ட நாள் இருக்காது. அவை கெட்டுப்போவது உறுதி. எனவே அப்பம் மற்றும் திராட்சை ரசம் கர்த்தருடைய சரீரமாகவும் இரத்தமாகவும் மாறுவதாக வாதிடுபவர்களுக்கு ஐந்தாவது கேள்வி என்னவென்றால்: "தேவன் இயேசுவின் சரீரத்தை அழிவைக் காணவொட்டாதிருப்பேன் என்று செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு கர்த்தருடைய இராபோஜன சந்தர்ப்பத்திலும் தோல்வியடைவதில்லையா? தேவனுடைய வாக்குத்தத்தத்தையே அர்த்தமற்றதாக்கப் பார்க்கும் இந்தப் போதனைக்குத் துணைபோகும்படி இவர்களை ஏமாற்றியது யார்?"
  6. "இது என் சரீரம்", "இது என் இரத்தம்" என்று அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் குறித்து இயேசு தன் சீடர்களிடம் சொன்னபோது, அவர் சரீரத்தோடு அவர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களோடுகூட போஜனம் பண்ணிக்கொண்டிருந்தார். எனவே ஆறாவது கேள்வி என்னவென்றால்: "அவர் சரீரத்தோடு அவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த அதே நேரத்தில் அவர்கள் சாப்பிட்ட அப்பமாகவும் மாறினாரா? அவர் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்கள் சாப்பிட்ட அப்பம் மற்றும் திராட்சை ரசத்தின் அவதாரமாக மாறிவிட்டாரா? அல்லது அவர்கள் சாப்பிடும்போதும், சாப்பிட்ட பிறகும் அவர்கள் மத்தியிலேயே மனித அவதாரமாக அமர்ந்திருந்தாரா? இயேசு இந்த பூமியில் இருந்தபோது எத்தனை சரீரங்களைத் தரித்திருந்தார்?"
  7. ஆறாவது கேள்விக்குத் தொடர்ச்சியாக எழும் மற்றொரு கேள்வி, அதாவது ஏழாவது கேள்வி: "இயேசுவின் சரீரமும் இரத்தமும் அப்பம் மற்றும் திராட்சை ரச வடிவில் இவ்வளவு சுலபமாக பலியாக ஒப்புக்கொடுக்கப்படுவது சாத்தியமென்றால், அவர் மனித உருவில் பிறந்து, பாடுபட்டு, தன் உயிரைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படி சரீரமும் இரத்தமுமாக மாறிய பொருட்களை முறை தவறாமல் நாமே ஒவ்வொரு நாளும் பலியிட்டுக்கொண்டால் போதுமே?"
  8. சரீர பிரகாரமான உணவைக் குறித்துப் பேசும்போது, "...அது அவனுடைய இருதயத்தில் போகாமல், வயிற்றிலே போகிறது; பின்பு ஆசனவழியாய்க் கழியுமே..." (மாற்கு 7:19) என்று கர்த்தர் சொன்னார். இந்தப் பின்னணியில் எழும் எட்டாவது கேள்வி: "இயேசு நமக்காக ஒப்புக்கொடுத்த சரீரத்தையும் இரத்தத்தையும் எழுத்தர்த்தமாக வயிற்றுக்குள் போகும் உணவு என்று நினைப்பது, அவருடைய மேன்மையை இழிவுபடுத்தி அவருடைய விலையேறப்பெற்ற பலியை அவமானப்படுத்துவது ஆகுமல்லவா? இதை மறுப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? 'என் சரீரமும் இரத்தமுமாக மாறிய அப்பமும் திராட்சை ரசமும், வயிற்றுக்குள் போகாமல் நேரடியாக இருதயத்திற்குள் போகும்' என்று கர்த்தர் எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?"
  9. "அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்ததுபோல, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யலாகாது; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான காரியங்கள் யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்தார்கள்" (உபாகமம் 12:31) என்று தேவன் கண்டிப்பாக எச்சரித்தார். தங்கள் தேவர்களின் பெயரால் படைக்கிற உணவு, அந்தத் தெய்வங்களின் அம்சங்களாக மாறிவிடுமென்பதும், அதை உண்பவர்கள் தங்கள் தேவர்களையே புசிக்கிறார்கள் என்பதும் பண்டைய எகிப்திய மற்றும் பாபிலோனிய மத நம்பிக்கைகளில் தெளிவாகக் காணப்படுகின்றன. ஒருபுறம் புறஜாதிகளையும், மறுபுறம் கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ரோமன் கத்தோலிக்க மத குருக்கள், கிறிஸ்தவ வேத போதனைகளைத் திரித்து அந்நிய மத ஆச்சாரங்களுடன் அவற்றைக் கலந்த பல நிகழ்வுகளில் கர்த்தருடைய இராபோஜன திரவிய மாற்று வாதமும் ஒரு உதாரணம். இங்கே எழும் ஒன்பதாவது கேள்வி: "தெய்வ ஆராதனையில் அந்நிய தெய்வ வழிபாட்டு முறைகளைப் புகுத்தக்கூடாது என்ற உபாகம விதியை மீறியது ரோமன் கத்தோலிக்கர்களா? அல்லது கர்த்தரே அந்த விக்கிரக ஆராதனை முறைக்கும் மற்றும் தேவக் கட்டளையை மீறுவதற்கும் பொறுப்பேற்க வேண்டுமா?"
  1. கடைசியாக, மிகவும் தர்க்கரீதியான பத்தாவது கேள்வி: "அப்பம் மற்றும் திராட்சை ரசம் கர்த்தருடைய சரீரமும் இரத்தமுமாக மாறினால், நிறத்திலோ அல்லது சுவையிலோ அல்லது வாசனையிலோ அல்லது பொருளிலோ, அந்த மாற்றம் ஏன் தெரிவதில்லை? அப்பம் மற்றும் திராட்சை ரசத்திற்கு இயல்பாக உள்ள குணங்களில் எந்த மாற்றங்களும் ஏற்படாதபோது, அவை எழுத்தர்த்தமாக கர்த்தருடைய சரீரமும் இரத்தமுமாக மாறிவிட்டன என்று ஏன் நம்ப வேண்டும்? அப்படி மாறாவிட்டாலும், அவற்றைத் தனது சரீரம் மற்றும் இரத்தம் என்று வர்ணித்தார் என்றால், அது உவமை (அலங்காரம்) மட்டுமே என்று ஒப்புக்கொள்வதற்கு என்ன பிரச்சனை?"
கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 13, 2026
பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்"...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
எங்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் "சிந்தியுங்கள்" என்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
லூக்கா சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மூன்று உவமைகளைக் குறித்து...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.