முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

“அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்தி சொல். (தீத்து 2:6). 

கிறிஸ்துவின் ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தீத்துவுக்கு. அப்போஸ்தலனாகிய பவுல் நிருபத்தை எழுதி அனுப்புகையிலே, இளைஞர்களை ஒரு சிறப்பனவர்களாகக் கருதி அவர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதைக் குறிப்பிடுகின்றார். முதிர்வயதுள்ள ஆண்களையும், முதிர்வயதுள்ள பெண்களையும், வாலிபப் பெண்களையும் பற்றிக் குறிப்பிட்ட பிறகு அவர், இந்த அர்த்தமுடைய புத்திமதியைக் கூறுகிறார். 'அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்தி சொல் (தீத்து 2:6). அப்போஸ்தலனாகிய பவுலினுடைய இந்த அறிவுரையையே நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வாலிப வயதிலுள்ளவர்களுக்கு கரிசனையோடு நான் ஒருசில புத்திமதிகளைக் கூறப் போகிறேன். இப்பொழுது நான் வயது முதிர்ந்தவன். ஆனால், எனது வாலிப நாட்களின் சில காரியங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. சந்தோஷங்களும். கவலைகளும், எதிர்பார்ப்புகளும், பயங்களும். சோதனைகளும், துன்பங்களும். தவறான புரிதல்களும், தவறாக செலுத்திய அன்புகளும். அறியாமல் செய்த தவறுகளும், ஆசைகளும் எப்படி ஒரு வாலிபனை வாலிபநாட்களில் சூழ்ந்து இருந்திருக்கிறது என்பதற்கு நான் என் வாழ்கையிலே நிறைய உதாரணங்களை வைத்திருக்கிறேன். ஆகவே என்னுடைய அனுபவத்தின் வாயிலாக நான் சொல்லுகிற ஏதாவது ஒருசில காரியங்கள். சில வாலிபர்களையாவது சரியான பாதைக்குத் திருப்பி, அவர்களைப் பாவத்திலிருந்து காத்துக் கொண்டு, நித்தியவாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தி கொண்டுசெல்லுமானால் நான் மிகவும் நன்றியுடையவனாய் இருப்பேன்.

இந்த புத்தகத்தில் நான் குறிப்பிட விரும்பும் நான்கு காரியங்களை பார்ப்போம். 

  1. இளைஞர்களுக்கு புத்திமதிகளை சொல்வதற்கான பொதுவான காரணங்களை குறிப்பிடுகிறேன்.
  2. இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய சில ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கிறேன்.
  3. இளைஞர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய சில பொதுவான புத்திமதிகளைக் குறிப்பிடுகிறேன்
  4. 4. சில ஒழுங்கு நடவடிக்கைகளை கட்டளையாகவும் குறிப்பிடுகிறேன். அவைகளை இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென புத்தி சொல்லுகிறேன்.

இந்த நான்கு காரியங்களிலும் நான் கூறுகிற விஷயங்கள் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருந்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென நான் தேவனிடம் ஜெபிக்கிறேன்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
பிப்ரவரி 10, 2026
இது ஜெபிக்கும் முறையை நமக்கு போதிப்பது மட்டுமல்லாமல், தேவனுக்குப் பிரியமான ஜெபத்திற்கு அடிப்படையான சில முக்கியக் கொள்கைகளையும்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 10, 2026
ஆனால், விசுவாசிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய ஊழியங்களில் மிக முக்கியமான ஒன்று -...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
இரட்சிப்பிலே மனிதனுடைய செயல்பாட்டின் அவசியத்தை ‘ஹைப்பர் கால்வினிசம்’ (Hyper-Calvinism) ஒருபுறம்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
சோதோமின் பாவம் குறித்து வேதம் சொல்வது, சோதோமின் பாவத்தை ஆதரிக்கும் வசனங்களாகச் சித்தரிக்கப்பட்ட...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
இந்தக் கட்டுரையில், ஸ்டீபன் நாப் எழுதிய 'கிறிஸ்தவமும் வேதத்தில் உள்ள அதன் தாக்கமும்' (Christianity and the Vedic...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
“நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.