“அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்தி சொல். (தீத்து 2:6).
கிறிஸ்துவின் ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தீத்துவுக்கு. அப்போஸ்தலனாகிய பவுல் நிருபத்தை எழுதி அனுப்புகையிலே, இளைஞர்களை ஒரு சிறப்பனவர்களாகக் கருதி அவர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதைக் குறிப்பிடுகின்றார். முதிர்வயதுள்ள ஆண்களையும், முதிர்வயதுள்ள பெண்களையும், வாலிபப் பெண்களையும் பற்றிக் குறிப்பிட்ட பிறகு அவர், இந்த அர்த்தமுடைய புத்திமதியைக் கூறுகிறார். 'அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்தி சொல் (தீத்து 2:6). அப்போஸ்தலனாகிய பவுலினுடைய இந்த அறிவுரையையே நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வாலிப வயதிலுள்ளவர்களுக்கு கரிசனையோடு நான் ஒருசில புத்திமதிகளைக் கூறப் போகிறேன். இப்பொழுது நான் வயது முதிர்ந்தவன். ஆனால், எனது வாலிப நாட்களின் சில காரியங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. சந்தோஷங்களும். கவலைகளும், எதிர்பார்ப்புகளும், பயங்களும். சோதனைகளும், துன்பங்களும். தவறான புரிதல்களும், தவறாக செலுத்திய அன்புகளும். அறியாமல் செய்த தவறுகளும், ஆசைகளும் எப்படி ஒரு வாலிபனை வாலிபநாட்களில் சூழ்ந்து இருந்திருக்கிறது என்பதற்கு நான் என் வாழ்கையிலே நிறைய உதாரணங்களை வைத்திருக்கிறேன். ஆகவே என்னுடைய அனுபவத்தின் வாயிலாக நான் சொல்லுகிற ஏதாவது ஒருசில காரியங்கள். சில வாலிபர்களையாவது சரியான பாதைக்குத் திருப்பி, அவர்களைப் பாவத்திலிருந்து காத்துக் கொண்டு, நித்தியவாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தி கொண்டுசெல்லுமானால் நான் மிகவும் நன்றியுடையவனாய் இருப்பேன்.
இந்த புத்தகத்தில் நான் குறிப்பிட விரும்பும் நான்கு காரியங்களை பார்ப்போம்.
இந்த நான்கு காரியங்களிலும் நான் கூறுகிற விஷயங்கள் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருந்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென நான் தேவனிடம் ஜெபிக்கிறேன்.
இளைஞர்களுக்கென ஏன் விசேஷமாக புத்திமதிகளை சொல்ல வேண்டும்? அதற்கு சில காரணங்களை நான் வரிசைப்படுத்திக் கூறப்போகிறேன்.
அ. சமயபற்று கொண்டிருத்தல்
வெகு சிலரே இளைஞர்களே அவர்கள் மட்டுமே தேவ பக்தி உணர்வு உடையவர்களாய் இருக்கிறார்கள் என்கிறதான துயரமூட்டும் உண்மையை நாம் மறுப்பதற்கு இல்லை. யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாகவே இதைச் சொல்லுகிறேன். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன். அழகுள்ளவன், அழகில்லாதவன். கிரமத்தான். நகர்புறத்தான் இப்படியாக யாரை எடுத்துக் கொண்டாலும் அதில் வித்தியாசமில்லை. ஒருசில வாலிபரே ஆவியினால் நடத்தப்படுகிறார்கள் என்பதை நான் கவனிக்கும்போது அதிர்ந்து போகிறேன். ஜீவனுக்குப் போகிற குறுகிய பாதையில் நடக்கிற இளைஞர்கள் வெகு சிலர் மட்டுமே! பரலோக காரியங்களில் ஒருசில வாலிபருக்கே நாட்டமிருக்கிறது. ஒருசில வாலிபரே தங்கள் சிலுவையை எடுத்துக் கொண்டு அனுதினமும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவைகளை நான் மிகவும் துக்கத்தோடு கூறுகிறேன். ஆனால், தேவனின் பார்வையில் உண்மை நிலவரம் இப்படியாகத்தான் இருக்கிறது. இளைஞர்களே, இந்த உலகத்திலே நீங்கள்தான் பெருவாரியான எண்ணிக்கையில் நிறைந்து காணப்படுகிறீர்கள், நீங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால் அதை அறியாதவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் ஆத்துமா எங்கே இருக்கிறது? அது என்ன நிலமையில் காணப்படுகிறது? இதற்குரிய விடையை நாம் யாரிடம் கேட்டுப் பார்த்தாலும் ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது. இது மிகவும் பரிதாபம்!
ஒரு உண்மையான சுவிசேஷ ஊழியனை அணுகி நாம் சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவர் என்ன பதில் சொல்லுகிறார் எனப் பார்ப்போம். திச்சபையில், கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்ள ஆவலுடன் வருகிற. திருமணமாகாத வாலிபர்கள் எத்தனை பேர்? கிருபைக்குரிய காரியங்களில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யார்? ஞாயிறு ஆராதனைக்கு ஒழுங்காக வராதவர்கள் யார்? வாரந்திர ஜெபக்கூட்டங்களுக்கும். வேதபாட வகுப்புகளுக்கும் அவர்களை வர வைப்பது மிகவும் கடினமானது? வேதபாடங்கள் நடக்கையில் சரியாக கவனிக்காதவர்கள் யார்? தனது சபையில் யாரை குறித்து போதகர் மிகவும் கவலையாயிருக்கிறார்? யாருடைய இருதயத்தை அவர் மிகவும் ஆராய்ந்து அறிய வேண்டியதாயிருக்கிறது? தனது மந்தையில் எந்த ஆடுகளை அவர் சிரமப்பட்டு நடத்த வேண்டியதாயிருக்கிறது? யார் அடிக்கடி எச்சரித்து கடிந்து கொள்ளப்பட வேண்டிய நிலமையில் இருக்கிறார்கள்? மேய்ப்பனுக்கு மிகுந்த துயரத்தையும், மனசோர்வையும் அளிப்பது யார்? யாருடைய ஆத்துமாவைக் குறித்து பயமும். நம்பிக்கையற்ற நிலையும் ஏற்படுகிறது? இவ்வளவு கேள்விகளுக்கும் அந்த உண்மையான ஊழியன் தரும் பதில் 'வாலிபர்களைக் குறித்துதான்' என்று பதில் சொல்லுவார்.
திருச்சபைக்கு வந்து கொண்டிருக்கிற பெற்றோரிடமும் சில கேள்விகளைக் கேட்கலாம் உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு மிகுந்த துக்கத்தையும் துயரத்தையும் தருவது யார்? யாரை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டியதாயிருக்கிறது? யார் உங்களை மனச்சோர்வடையச் செய்வது? சரியான பாதையிலிருந்து யார் முதலில் வழிவிலகிச் செல்வது? எச்சரிப்புகளையும், புத்திமதிகளையும் கேட்பதில் கடைசியாக இருப்பது யார்? ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்குள்ளாக யாரைக் கொண்டு வருவது கடினமானது? துணிகரமான பாவங்களுக்கு உடன்படுவது யார்? தங்களுக்குக் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வது யார்? நல்ல நண்பர்களைத் துயரப்படுத்துவது யார்? வயதானவர்களுக்கு வெறுப்புண்டாக்குவது யார்? நரை மயிரை துயரத்தோடு குழியில் இறங்கப் பண்ணுவது யார்? இந்த எல்லாவித கேள்விக்கும் அவர்கள் தரும் பதில் ‘இளைஞர்கள்’ என்கிற பதிலே கிடைக்கும்.
காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் போன்றோரிடம் சில கேள்விகள் கேட்போம் குடிப்பழக்கம் பெரும்பாலும் எந்த வகுப்பினரிடையே காணப்படுகின்றது? சட்டத்தை மீறுபவர்கள் எந்த வயதில் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? கூட்டங்களைத் தூண்டிவிட்டு கலகம் விளைவிப்பதில் முன்னோடியாய் இருப்பவர்கள் எந்த வயதினர்? குடிபோதை சட்டத்தை மீறுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், அத்துமீறுதல், திருட்டுத்தனம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு சிறைச்சாலைக்குப் போகிறவர்களில் எந்த வயதினர் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? எந்த வயதினரை மிகவும் விழிப்போடு கவனிக்க வேண்டியதாயிருக்கிறது? இதற்கும் அவர்கள் தரும் பதில் ‘வாலிபர்கள்’ என்கிற பதிலாகதான் இருக்கும்.
சற்று வசதியான குடும்பங்களிலே என்ள நிலமை காணப்படுகிறது என்று பார்ப்போம். ஒரு பணக்காரக் குடும்பத்திலே உள்ள பிள்ளைகள் தங்கள் நேரத்தையும் பணத்தையும். சரீர பெலனையும் சிற்றின்பங்களிலே ஈடுபட்டு வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே உள்ள மகன்கள் தங்களுடைய வருங்காலத்தைக் குறித்து எண்ணாமல், தங்களுக்கென ஒரு தொழில் திறமையை வளர்த்துக் கொள்ளாமல், தங்கள் வாழ்வில் பொன்னான காலத்தை சோம்பேறித்தனமாகப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே சொந்தமாகத் தொழில் இருந்தாலும், அதை விருத்தி செய்ய முயற்சிக்காமல் ஒரு பொழுதுபோக்கு போல ஏனோதானோவென அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்திலே பிள்ளைகள் தவறான நண்பர்களோடு சேர்ந்துகொண்டு சூதாட்டங்களில் ஈடுபட்டு கடனாளியாகி நல்ல நண்பர்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்போ, பணமோ, பதவியோ இவர்களை கட்டுப்படுத்த முடியாமற் போவது என்ன பரிதாபம்! கவலை குடிகொண்டுள்ள பெற்றோர். மனம் உடைந்து போன தாய்மார் துயரத்தில் ஆழ்ந்துள்ள சகோதரிமார் எத்தனை பேர் அவர்கள் கூறும் சோகக்கதைகள்தான் எத்தனை ஆயிரம் பெரும்பாலான குடும்பங்களில் ஒரு மகனோ அல்லது சகோதரனோ மாமா பிள்ளையோ. அத்தை பிள்ளையோ தங்களைக் கெடுத்துக் கொண்டு அனைவருக்கும் துயரத்தை உருவாக்கிய வாலிபனைக் குறித்துக் சொல்லும் நிலை காணப்படுகிறது.
பணக்காரக் குடும்பங்களில் முள்ளாகக் காணப்படும் வாலிபர்கள் இருப்பது மிகவும் சகஜமாயிருக்கிறது. குடும்ப சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாக இதுமாதிரி வாலிபர்கள் இருக்கிறார்கள். பணமிருந்தாலும் எப்போதும் அவர்களைக் குறித்த கவலையும் துயரமும் உடையவர்களாக குடும்பத்தார் வாழ வேண்டியதாயிருக்கிறது. வாலிபப் பருவத்திலே பெரும்பாலும் இதுமாதிரியான பிரச்சனைகள் உண்டாகின்றன?
இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவது? இவையெல்லாம் உண்மைதானே? நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்ப்பவைதானே? உண்மையை மறைக்க முடியுமா? நிதரிசனமான காரியங்களாகிய இவை எல்லா திசைகளிலிருந்தும் நம் கண் முன்னாலே வந்து நிற்கிறதே இல்லையென மறுக்க முடியுமா? எவ்வளவு பயங்கரமான நிலை இது ஒவ்வொரு இளைஞனையும் நான் பார்க்கும்போது. இவன் தேவனுக்கு விரோதமாக இருப்பானோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை. அகலமான பாதையில் போய்க் கொண்டிருக்கிறானே, அழிவுக்குப் போகும் பாதையில் இருக்கிறானே. பரலோகத்திற்குள் பிரவேசிக்க பாத்திரவானாக இல்லையே என்கிற இவ்வளவு உண்மைகள் எனக்கு முன்பாக நிற்கும்போது, என்னால் இளைஞர்களுக்கு புத்தி சொல்லாமல் இருக்க முடியுமா? ஆகவே நான் ஏன் இவர்களுக்கு புத்தி சொல்கிறேன் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவும் வேண்டுமா?
ஆ. நியாயதீர்ப்பை மறத்தல்
மரணமும் நியாயத்தீர்ப்பும் மற்றவர்களுக்கு மாத்திரமல்ல, இளைஞர்களுக்கு முன்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதை மறந்து போனது போல எல்லோருமே நடந்து கொள்ளுகிறார்கள். இளைஞளே, ஒரே தரம் மரிப்பதற்காக நீயும் நியமிக்கப்பட்டு இருக்கிறாய். ஒருவேளை நீ இன்று பலசாலியாகவும் ஆரோக்கியமானவனாகவும் காணப்படலாம். ஆனால், உனது மரணநாளும் மிகவும் அருகிலேயே இருக்கலாம். வயதானவர்களைப் போலவே இளைஞர்களும் நோயில் விழுவதை நான் கண்டிருக்கிறேன். வயதானவர்களுக்கு மாத்திரமல்ல. இளைஞர்களுக்கும் நான் அடக்க ஆராதனை நடத்தியிருக்கிறேன். கல்லறைகளில் உன்னைக் காட்டிலும் வயது குறைந்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். குழந்தைப் பருவத்திலும் வயது முதிர்ந்து இறப்பவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலும் 13 முதல் 23 வரையுள்ள வயதில்தான் அதிகமான மரணம் நிகழ்கிறதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நீயோ. நான் இப்போது ஒன்றும் சாக மாட்டேன் என்கிற நிச்சயமுடையவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
ஆவிக்குரிய காரியங்களை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சாலமோன் கூறுவதை நினைவில் கொள்க 'நாளைய தினத்தைக் குறித்து பெருமை பாராட்டாதே. ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே (நீதிமொழிகள் 27:1), கடினமானவைகளை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய கிரேக்க தளபதி ஒருவன், தனக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிப்பதை தள்ளிப் போட்டான். அடுத்தநாளில் அவன் கொலை செய்யப்படப் போவதைக் குறித்து எச்சரித்து எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவன் உரிய நேரத்தில் படிக்காமல் போனதால், அடுத்த நாளைப் பார்க்காமலே இறந்து போனான் நாளைய தினம் சாத்தானுடையது. ஆனால், இன்றைய தினமோ கர்த்தருடையது. நாளைக்கு செய்யலாம் என திட்டமிட்டிருக்கும் ஆவிக்குரிய காரியங்கள், தீர்மானங்கள் ஆகியவை எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் சாத்தான் அதைக் குறித்து கவலைப்படுவதில்லை. 'நாளைக்கு' 'பிறகு' போன்ற எண்ணங்கள் தோன்றிவிட்டாலே, சாத்தானுக்கு எண்ணற்ற மகிழ்ச்சிதான் ஆகவே இந்த காரியங்களில் சாத்தானுக்கு இடங்கொடாதிருங்கள். சாத்தானே! நான் நினைத்ததை இன்றைக்கே இப்போதிருந்தே செயல்படுத்த ஆரம்பிப்பேன் என்று உறுதியாக சொல்லுங்கள். எல்லா மனிதர்களும் முற்பிதாக்களைப் போல வாழ்வதில்லை. ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபைப் போன்ற வாழ்க்கை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அநேகம் பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு முன்பாகவே மரிக்க நேரிடுகிறது. தாவீதின் இரண்டு அருமையான குமாரர்கள், தாவீதுக்கு முன்பாக மரித்துப் போக நேர்ந்தது. யோபு தனது பத்துப் பிள்ளைகளையும் ஒரே நாளில் பறி கொடுக்கும்படியாக ஆனது. தேவன் உங்களுக்கு என்ன குறித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. சீக்கிரமாக மரணம் நேரிடுவதாக இருக்குமானால், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போடுவதால் பலன் ஒன்றுமில்லை. செய்வதை. சிந்திப்பதை உடனடியாக செய்ய வேண்டும்.
சரியான நேரம் வரும்போது இவைகளைப் பற்றி சிந்தித்துக் கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அத்தேனே பட்டணத்தாரும், பேலிக்ஸ் என்பவரும் அப்போஸ்தலனாகிய பவுலின் பிரசங்கத்தைக் கேட்டபோது இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் (அப்போஸ்தலர் 24: 10-25, 17:32). இன்னொரு சமயம் கேட்கிறோம் என்றார்கள். ஆனால் அப்படியொரு காலம் அவர்களுக்கு வராமலேயே போய்விட்டது. நாளைக்கு நேரம் கிடைக்கும் என்பது போன்ற தோற்றத்தை நரகம் ஏற்படுத்துகிறது. சமயம் இருக்கும்போதே காலத்தைப் பயன்ப்படுத்திக் கொள்ளுங்கள் நித்தியத்துக்குரிய எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடாதிருங்கள் ஆத்துமா ஆபத்திலிருக்கும்போது அலட்சியமாக இருக்காதீர்கள் ஒரு ஆத்துமா இரட்சிப்பை அடைவதென்பது சாதாரணமான காரியமல்ல. வாலிபராக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் எல்லோருக்கும் அந்தப் பெரிதான இரட்சிப்பு அவசியமானதாக இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் பிறக்க வேண்டியதாக இருக்கிறது. எல்லோரும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியது மிகவும் அவசியம். எல்லோரும் பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமடைய வேண்டியது அவசியம். இவைகளைக் குறித்து சிந்தித்து. இவைகளை அடைந்து கொண்டவனே மிகவும் சந்தோஷமான மனிதன் தேவனின் பிள்ளையாகிவிட்டோம் என்கிற நிச்சயத்தை பரிசுத்த ஆவியினால் தன் உள்ளத்தில் பெறும்வரைக்கும் அவன் சும்மா இருக்க மாட்டான்.
இளைஞர்களே, உங்கள் காலம் குறுகியது. உங்கள் வாழ்நாள் ஒரு நிழலைப் போல மறைந்து போய்விடும். புகையைப் போலக் காணாமல் போகும். உங்கள் வாழ்க்கை நடந்து முடிந்த சரித்திரமாக மாறிவிடும். உங்கள் சரீரம் வெண்கலத்தினால் ஆனதல்ல. "இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள். வாலிபரும் இடறி விழுவார்கள்' என்று ஏசாயா 40:30 -ல் சொல்லுகிறார். உங்கள் பெலனெல்லாம் ஒரு நொடியிலே உங்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்படலாம். அதற்கு பெரிய பிரயத்தனம் தேவையில்லை. ஒரு சின்ன தடுக்கி விழுதல். ஒரு காய்ச்சல், கட்டி அல்லது காயம் இவை போதும், பிறகு கல்லறையிலே புழு உங்களைத் தின்கிற நிலமை வெகு விரைவில் வந்துவிடும் மரணத்திற்கும் உங்களுக்கும் இடையே ஒருபடி இருக்கிறது. உங்கள் ஆத்துமா தன்னை உருவாக்கியவரிடம் மறுபடியும் போகும். இன்று இரவிலே உன் ஆத்துமா உன்னிடமிருந்து எடுக்கப்படும். (லூக்கா 12:20) உலகத்தார் போகிற வழியிலே நீங்கள் விரைந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒருநாளிலே நீங்கள் இந்த உலகத்திலே இல்லாமலே போய்விடுவீர்கள். உங்கள் உலகவாழ்வு நிச்சயமானதல்ல. உங்களுடைய மரணமும், நியாயத்தீர்ப்பும் நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் பிரதான தூதனுடைய எக்காள சத்தத்தைக் கேட்பீர்கள். வெள்ளை சிங்காசனத்தின் முன்பாக நியாயத்தீர்ப்படைவதற்கு நிற்பீர்கள் (வெளிப்படுத்தல் 20:11) மரித்தோர்களே, எழுந்திருங்கள் நியாயத்தீர்ப்படைய வாருங்கள் என்கிற சத்தம் தன் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருப்பதாக ஜெரோம் (கி.பி. 345-420) என்கிறவர் கூறியது போல அந்த அழைப்புக்கு நீங்களும் கீழ்ப்படிய வேண்டிய காலம் வரும் இதோ. சிக்கிரமாய் வருகிறேன் (வெளிப்படுத்தல் 22:7) என்று நியாயாதிபதியே கூறுகிறார். இப்படியிருக்கையில், வாலிபர்களே என்னால் எப்படி உங்களுக்கு புத்திமதி கூறாமல் இருக்க முடியும்? எனவே நான் உங்களை விட்டுவிடத் துணிய மாட்டேன்.
ஓ! இளைஞர்களே, நீங்கள் எல்லோரும் பிரசங்கியின் வாக்கியங்களை மனதினுள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வையுங்கள், “வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களில் உள் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உள் கண்ணின் காட்சிகளிலும் நட ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி” (பிரசங்கி 11:9). காரியம் இப்படியிருக்கையில் எந்த மனிதனாவது அலட்சியமாகவோ, கவலையற்றோ இருக்க முடியுமா? உலக வாழ்க்கையே போதுமானது என நினைத்து, மரிப்பதற்கு ஆயத்தமில்லாமல் இருப்பவர்களைப் போன்ற முட்டாள்கள் யாகும் கிடையாது. வருங்காலத்தைக் குறித்த, மனிதனுடைய விசுவாசமற்ற தன்மை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏசாயா மிகவும் தெளிவாக இதை தீர்க்கதரிசனமாக முன்னுரைத்திருக்கிறார்: "எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? (ஏசாயா 53,1). இயேசுக்கிறிஸ்துவும் அதையே குறிப்பிடுகிறார். 'மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ? (லூக்கா 18:8). தேவனுடைய நியாயாசனத்திலே உங்களில் அநேகரைக் குறித்து கர்த்தர் 'அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள்" என்று கூறுவாரோ என நாள் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் வெகுசீக்கிரமாய் இந்த உலகத்தைவிட்டு கடந்து போய், விழித்தெழும்போது மரணமும் நியாயத்தீர்ப்பும் உண்மையாகவே இருக்கிறதே என்பதைக் காலம் கடந்து உணர்ந்து கொள்வீர்களோ என அஞ்சுகிறேன். இவைகளினிமித்தமாகவும் உங்களைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்.
இ. எதிர்காலத்தைத் தீர்மானித்தல்
இப்பொழுது இளைஞர்கள் வாழுகின்றதான வாழ்க்கை முறையே அவர்களுடைய எதிர்காலத்தை எல்லா வகையிலும் நிர்ணயிப்பதாயிருக்கிறது. ஆனால், அவர்கள் அதை மறந்து போனது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவனுடைய முழுவாழ்க்கையையும் விதைக்கும் காலம் வாலிப் வயது. அவனுடைய சொற்ப ஜீவிய காலத்தை ஒழுங்குபடுத்துவது வாலிய வயது அவனுடைய வாழ்க்கையை திசை திருப்புவதும் வாலிப வயதே! விதையைக் கொண்டு மரத்தின் தரத்தை நாம் நிர்ணயிக்கலாம். பூக்கும் நிலையிலேயே பழங்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதைக் கணிக்கலாம். வசந்தத்தைப் பார்த்து அறுப்பு எப்படியிருக்கும் எனக் கூறலாம். காலைப்பொழுதின் மேகமூட்டத்தைக் கொண்டு அந்த நாளின் வானிலையைக் கூறலாம். ஒருவனுடைய வாலிபவயதின் குணாதிசயங்களைக் கொண்டு. பெரும்பாலும் அவன் முதிர்ச்சியடைந்த நிலையில் இப்படித்தான் இருப்பான் என்பதைத் தீர்மானிக்கலாம்.
இளைஞர்களே, ஏமாந்து போகாதீர்கள். வாலிபநாட்களை சிற்றின்பங்களிலும், கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு சற்று வயது வந்த பிற்பாடு தேவனிடம் வந்து அவருக்குப் பிரியமாக நடந்து கொள்ளலாம் என நினைக்காதிருங்கள். வாழ்வின் ஆரம்பகாலத்தை ஏசாவைப் போலக் களியாட்டுகளில் கழித்துவிட்டு, மரிக்கும் தறுவாயில் யாக்கோபைப் போல பக்தனாக மாறிக் கொள்ளலாம் என ஒருபோதும் கனவு காணாதீர்கள், அப்படி நீங்கள் நினைப்பது தேவனையும் உங்கள் ஆத்துமாவையும் கேலி செய்வது போலாகும். வாலிபநாட்களின் பெலனையும் சக்தியையும் உலகத்துக்கும் சாத்தானுக்கும் கொடுத்துவிட்டு, பெலனற்றுப் போகும் முதிர்வயதில் எஞ்சியிருக்கும் மீதிகளை ராஜாதிராஜனுக்குக் கொடுக்கலாம் என நீங்கள் நினைப்பது எவ்வளவு அறிவீனம்? அப்படி ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நீங்கள் முடிவில்தான் உணருவீர்கள்.
கடைசியில் மனந்திரும்பிக் கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறீர்கள். தேவனின் உதவியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். மனந்திரும்புதலும் விசுவாசமும் தேவன் அருளும் ஈவுகள், வெகுநாட்களாக அவர் அதை உங்களுக்குக் கொடுப்பதற்காக வைத்துக் கொண்டிருந்தபோதும், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாதபடியினால் அவர் அதை இனி கொடுக்க மாட்டார். நீ என்னிடம் வந்தால் உடனடியாக உனக்கு மனந்திரும்புதலை அளிக்க இருக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் நீ காலதாமதம் செய்துகொண்டே இருப்பாயானால் அதை அடையாமலே போவாய் என தேவன் எச்சரிக்கிறார். தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிற பாவியை, கடைசி தருணமாயிருந்தாலும், அவன் நம்பிக்கை இழந்து போகாதபடிக்கு, மன்னித்து இரட்சிக்கிற சிலாக்கியத்தைத் தான் கொண்டிருப்பதை காண்பிப்பதற்காக, சிலுவை மரத்திலே மனந்திரும்பிய கள்ளனை உதாரணத்திற்கு மன்னித்துக் காண்பித்தார். ஆனால் அப்படி மன்னிக்கப்பட்டது ஒரே ஒருவன் மாத்திரந்தான் என்பதை எல்லாருக்கும் எச்சரிப்பாகவும் வைத்திருக்கிறார். கடைசித் தருணத்தில் மன்னிக்கிற உரிமையைக் தேவன் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி மன்னிக்கப்படும் பாக்கியத்தை நீ அடைவாய் என்பது என்ன நிச்சயம்? “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை அவர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார்” (எபிரேயர் 7:25). இப்படியாக எழுதிய அதே பரிசுத்த ஆவியானவர்தான் இந்த எச்சரிப்பையும் கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள்: "நான் கூப்பிட்டும் நீங்கள் கேட்க மாட்டோம் என்கிறீர்கள். நான் என் கையை தீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி. என் கடிந்து கொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால் நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்” (நீதிமொழிகள் 1: 24-26).
இஷ்டமான சமயத்தில் தேவனிடம் வந்துவிடலாம் என்பது சுலபமல்ல. தேவபக்தனாகிய ஒரு பேராயர் கூறினார். பாவத்திற்குப் போகிற வழி என்பது மலையிலிருந்து இறங்குவது போன்றது. ஒருவன் நிறுத்த வேண்டுமென விரும்பினாலும் அது கட்டுப்படாமல் அவனை வெகுகலபமாக இறக்கத்திற்குக் கொண்டு வந்துவிடும். பரிசுத்த காரியங்களில் ஆர்வமும் திட உறுதியும் அவ்வளவு இலகுவாக வந்துவிடுவதில்லை. அவை அந்த நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரரைப் போன்றதல்ல. போ என்றால் போய்விடுவதும், வா என்றால் வந்துவிடுவதும் அல்ல. அது (யோபு 39:9) -ல் காணப்படுகின்ற காண்டாமிருகத்தைப் போன்றது. உன்னிடத்தில் பணிந்து வர சம்மதிக்காது. அவைகள் உன் சத்தத்துக்குக் கீழ்ப்படியாது. உன் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளாது. நித்தியத்துக்குரிய காரியங்களில் இப்படிப்பட்டவை உனக்கு சம்பவித்து விடாதபடிக்கு வாலிபனே நீ எச்சரிக்கையாயிரு.
நான் எதற்காக இவைகளையெல்லாம் சொல்லுகிறேன்? பழக்கவழக்கங்கள் நம்மை அடிமைப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதால் சொல்லுகிறேன். இளமையில் நல்ல பழக்கவழக்கங்களைப் பழகிக் கொள்ளாதவர்களை பிறகு மாற்றுவது கடினம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். முதுமையில் மாற்றிக் கொள்வது மிகவும் அரிதாகும். பழக்கவழக்கங்கள் நம்மில் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. இருதயத்திலே பாவம் தனது கூட்டைக் கட்டிக்கொள்ள நீ அனுமதித்தாயானால், அதை எவ்வளவு விரட்டினாலும் அது உன்னை விட்டுப் போகாது. பழக்கங்கள் இயற்கை சுபாவமாகவே மாறிப்போய்விடுகின்றன. அவை முப்புரி நூலைப் போன்றவை. எளிதில் அறாது. எரேமியா தீர்க்கதரிசி அழகாகச் சொல்லுகிறார்: 'எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும் (எரேமியா 13:23). தீய பழக்கவழக்கங்கள். மலையின் அடிவாரத்தை நோக்கி ஓடுகின்ற பாறையைப் போன்றது. எவ்வளவு தூரத்திற்கு அது ஓடுகின்றதோ அவ்வளவுக்கு அதன் வேகம் அதிகரிக்கிறது. கட்டுப்படுத்த முடியாதபடிக்கு தறிகெட்டு ஓடுகிறது. மேலும் அவை மரங்களைப் போன்றவை. வெகுநாட்களாக இருக்கும் பழக்கவழக்கங்கள். நல்ல வைரம் பாய்ந்த மரத்தைப் போன்று உறுதியோடு இருக்கும். தேக்கு மரம் சிறிய செடியாக இருக்கும்போது ஒரு சிறுவன்கூட அதை எளிதில் பிடுங்கிவிட முடியும் ஆனால் அதுவே நாள்பட வளர்ந்து பெரிய மாமாகும்போது நூறு பலசாலிகள் சேர்ந்தால்கூட அதை அசைக்க முடியாது. அதுபோலத்தான் பழக்கவழக்கங்களும் இருக்கிறது. எவ்வளவு நாள்பட அவை ஒருவனிடத்தில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அது அசைக்கப்பட முடியாமல் உறுதியோடு விளங்கும். அவைகளை நீக்கிப் போடுவது சுலபமல்ல தீய பழக்கவழக்கங்கள் பாவத்திற்குத் தீனி போட்டு வளர்க்கின்றன. பாவத்தை முதலில் செய்யும்போது, அது பயத்தை மெதுவாக நீக்கி விடுகிறது. இருதயத்தைக் கடினப்படச் செய்கிறது மனசாட்சியின் எச்சரிப்பின் குரலை மழுங்கச் செய்கிறது. பாவத்தை மேலும் செய்யும்படிக்கு நம்மைத் தூண்டிவிடுகிறது.
இளைஞர்களே, நான் உங்களை மிகவும் அதிகமாக பயப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம். நான் பார்த்தது போன்ற முதியவர்களை நீங்கள் சந்தித்தால் அப்படி நினைக்க மாட்டீர்கள் செத்தவர்களைப் போன்று உணர்ச்சியற்றவர்களாக, வறண்டு போனவர்களாக இரக்கமற்றவர்களாக, மரித்தவர்களாக, கடினப்பட்டுப் போனவர்களாக வாழ்வின் விளிம்பிலே அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஆத்தும காரியங்களைக் குறித்து நீங்கள் ஏனோதானோவென இருக்க முடியாது. நல்ல பழக்கமோ. தீயபழக்கமோ அது நாள்தோறும் உங்கள் ஆத்துமாவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒன்று தேவனுக்கு அருகாமையிலே கிட்டிச் சேர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அல்லது அவரைவிட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள், மனந்திரும்பாமல கடந்து போகின்ற ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கும் பரலோகத்திற்கும் இடையிலுள்ள சுவர் உயரத்திலும் அகலத்திலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆழமானதும் அகலமானதுமான மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுக் கொண்டே போகிறது பாவத்திலேயே தொடர்ந்து தரித்திருப்பது எவ்வளவு கடினமான பாதையை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் குறித்து பயந்து நடுங்குங்கள். இப்போதே தகுந்த வேளை கொடிய நாட்கள் வந்து உங்களை எதுவும் செய்யவிடாதபடிக்கு இன்றே செயல்படுங்கள். வாலிபநாட்களிலே நீங்கள் கர்த்தரைத் தேடிக் கண்டடையாவிட்டால். நீங்கள் ஒருபோதும் அவரைக் கண்டுபிடிக்காதபடிக்கு உங்கள் பழக்கவழக்கங்களே மிகவும் வலிமை பெற்று உங்கள் ஆத்துமாவை மேற்கொண்டுவிடும். இவைகளைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்.
ஈ) சாத்தானை சமாளித்தல்
வாலிபர்களின் ஆத்துமாக்களை அழித்துப்போட சாத்தான் விசேஷித்த தீவிரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களோ இதை உணராமல் இருக்கிறார்கள். உங்களை விட்டு வைத்தால், நீங்கள் அடுத்த சந்ததியையாவது தேவனுக்குள் கொண்டுவர வேண்டுமென முயற்சிப்பீர்கள் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆகவே, அவன் அந்தந்த காலத்துக்கு ஏற்ப புதிய உத்திகளைத் தயாரித்து உங்களை தன் வசப்படுத்திக் கொள்ளுகிறான். அவனுடைய சூழ்ச்சிகளைக் குறித்து நீங்கள் அறியாமலிருக்கக் கூடாது.
தனது அதிபுத்திசாலித்தனமான தந்திரங்களை சாத்தான் வாலிபப் பருவத்தினர் மீது பிரயோகிக்கவே முயற்சிப்பான். உங்கள் இருதயத்தை தன்வசமாக்கிக் கொள்ளும்படிக்கு அவன் தன்னுடைய தந்திரமான வலைகளை மிகவும் கவனத்தோடு பின்னுகிறான். அதற்குள் தன்னுடைய மாயமான வலைகளைப் போட்டு உங்களைக் கவர்ந்திழுக்க வகை செய்கிறான். மிகுந்த ஞானத்தோடு தனது சோதனைகளாகிய விஷங்களை கவர்ச்சிகரமான காரியங்களுக்குள் மறைத்து வைத்து, தனது கடையை கவர்ச்சிகரமாக உங்கள் முன்னாலே விரிக்கிறான். சாத்தானுக்கு மிகவும் விருப்பமான ஆத்துமாக்கள் வாலிப ஆத்துமாக்கள்தான் கர்த்தர்தாமே சாத்தானைக் கடிந்து கொண்டு உங்களை அவன் வலையில் சிக்காமல் விடுவிப்பாராக,
இளைஞர்களே, சாத்தானின் கண்ணிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் கண்களில் எதையாவது தூவி விட்டு, நீங்கள் உண்மையைப் பாராதபடிக்கு உங்கள் மனதைக் குருடாக்குவதில் அவன் வல்லவன். நல்லவைகளைக் கெட்டதென்றும் தீயவைகளை நல்லதென்றும் உங்களை நம்பப் பண்ணுவான். (ஏசாயா 5:20), பாவத்திற்கு நல்ல வண்ணசாயம் பூசி, அதைக் கவர்ச்சிகரமானதாகத் தோன்றப் பண்ணி. பாவத்தையே நீங்கள் நேசிக்கும்படியாக மாற்றிவிடுவான் (2 கொரிந்தியர் 11- 15) உண்மையான பக்தியை மாற்றிப் போட்டு, பக்திக்குத் தவறுதலான விளக்கங்களைக் கொடுத்து அதைக் கேலிச்சித்திரமாக்கி, நீங்கள் தேவபக்தியை வெறுக்கும்படியாக செய்துவிடுவான். பொல்லாதவைகளில்தான் அதிக இன்பம் இருப்பது போலக் காண்பிப்பான். ஆனால், அதிலுள்ள விஷத்தன்மையை நீங்கள் காணாதபடிக்கு மறைத்துவிடுவான். சிலுவையின் பாதையை மிகவும் கடினமானதாக உங்கள் கண்களுக்கு முன்பாகக் காண்பித்து, அதினால் அடையக்கூடிய நித்திய கிரீடங்களை மறைத்துவிடுவான். தனக்கு சேவை செய்தால், சகல இன்பத்தையும் தருவதாக கிறிஸ்துவிடம் சொன்னது போலவே உங்களிடமும் கூறுவான். (மத்தேயு 4:8) ஒருவிதமான தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக கொள்ளச் செய்து (2 தீமோத்தேயு 3:5). பக்தியின் உண்மையான வல்லமையை மறந்துவிடுவதற்கு சாத்தான் உங்களுக்கு உதவியும் செய்வான். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நீங்கள் இருக்கும் இத்தருணத்தில், 'இப்போதே தேவனுக்கு சேவை செய்ய என்ன அவசரம் வாழ்க்கையை இப்போது அனுபவித்துக் கொள். சற்று வயதான பிறகு தேவனுக்கு சேவை செய்யலாம் என உங்களுக்கு யோசனை கூறுவான் ஆனால் வாழ்வின் இறுதிகட்டம் வந்த பிறகோ. "இனி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. காலதாமதம் ஆகிவிட்டது' எனக்கூறி உங்களைப் பார்த்து நகைப்பான் வாலிபர்களே, ஏமாந்து போகாதிருங்கள்.
இந்த பயங்கரமான எதிரியிடமிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாதிருக்கிறது. உங்களுடைய அறியாமையை எண்ணிதான் நான் மிகவும் கலக்கமடிகிறேன். உங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கிற ஆபத்தான பள்ளங்களையும். வழுக்கிவிழக்கூடிய சறுக்கலான இடங்களையும், கண்ணிகளையும் அறியாதவர்களாக குருடரைப் போல வாழ்க்கைப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். (லூக்கா 6:39)
உங்களுடைய எதிரி மிகவும் வல்லவன் அவன் உலகத்தின் அதிபதி என அழைக்கப்படுகிறான் (யோவான் 14:30) இயேசுக்கிறிஸ்துவின் ஊழியக்காலம் முழுவதும் அவரை எதிர்த்துக் கொண்டேயிருந்தான் ஆதாம் ஏவாளை ஏமாற்றி அவர்களை விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும்படியாகச் செய்து, அதன் மூலமாக உலகத்துக்குள் பாவத்தை வரவழைத்துவிட்டான். (ஆதியாகமம் 3). தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாகிய தாவீதைக்கூட சோதனைக்குட்படுத்தி தாவீது தனது வாழ்நாளின் இறுதிப்பகுதி முழுவதையும் சஞ்சலத்தோடு கழிக்கும்படியாக செய்துவிட்டான். (2சாமுவேல் 11:20 கர்த்தராலே தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவையும் சோதனைக்கு உட்படுத்தி, கர்த்தரை மறுதலிக்கும்படியாகத் தூண்டிவிட்டான். (மத்தேயு 20:9). இளைனர்களே! இந்த விரோதியை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்.
உங்கள் எதிரி ஓயாதவன். அவன் தூங்குவதே இல்லை, எவனை விழுங்கலாமோ என ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிற காஜிக்கிற சிங்கத்தைப் போல வகை தேடி சுற்றித் திரிகிறான் (1 பேதுரு 5:8). எப்போதும் பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித் திரிந்து கொண்டே இருக்கிறான். (யோபு 1:7), உங்களுடைய ஆத்துமாவைக் குறித்து, நீங்கள் வேண்டுமானால் அலட்சியமாக இருக்கலாம். ஆனால், சாத்தான் அப்படியில்லை. உங்கள் ஆத்துமாவைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள ஓயாமல் பாடுபடுகிறான். தன்னைப் போலவே நீங்கள் ஒவ்வொருவரும் அதிகக் கேடான நிலையை அடைய வேண்டுமென விரும்பி. உங்களை அவனுடையவளாக்கிக் கொள்ள முயற்சி செய்துகொண்டேயிருக்கிறான். இந்த சத்துருவைக் குறித்து குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.
உங்களுடைய எதிரி தந்திரமானவன். ஏறக்குறைய ஆறாயிரம் வருஷங்களாக அவன் மனிதர்களுடைய இருதயத்தை ஆராய்ந்து கொண்டேயிருக்கிறான். ஆகவே இந்த விஷயத்தில் அவன் மிகவும் அனுபவசாலி என்பதை மறந்துவிடாதீர்கள். மனித இருதயங்களை இவை யாவும் அவன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான் இருதயத்தின் பலவீனங்கள் தந்திரமான எண்ணங்கள், முட்டாள்தனங்கள் சாத்தானுக்குத் தெளிவாகவே தெரியும். மனித இருதயங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய விதவிதமான சோதனைகளை அவள் ஏராளமாக உண்டுபண்ணுகிறான். அவனுக்கு மறைவாக எந்த இடத்திலும் நீங்கள் போய் ஒளிந்துகொள்ள முடியாது. பெரிய பட்டணங்களுக்குப் போங்கள், அவன் அங்கேயும் இருப்பான். அல்லது பாலைவனத்திற்கே போங்கள், அவன் அங்கேயும் இருப்பான். குடிகாரர்கள் மத்தியிலும், பரியாசம் பண்ணுகிறவர்களின் மத்தியிலும் நீ போய் உட்கார்ந்திருந்தால் அவன் அங்கேயிருந்து உனக்கு உதவிகள்கூட செய்வான். திருச்சபைக்கு சென்று பிரசங்கம் கேட்க நீ உட்கார்ந்திருக்கும்போது உனது கவனத்தைத் திசை திருப்பும்படியாக அங்கேயும் வருவான். இந்த விரோதியைக் குறித்து தாழ்வாக எண்ணிவிட முடியுமா?
இளைஞர்களே, இந்த விரோதியை நீங்கள் சற்றும் நினைத்துப் பார்க்காவிட்டால்கூட அவள் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறான். உங்களை அழித்துப் போடுவதையே அவன் குறியாகக் கொண்டு, மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய போராட்டத்திற்கு வெகுமதியாக உங்களைப் போன்ற வாலிபர்களின் ஆத்துமாவையே எதிர்பார்த்து உழைக்கிறான். ஒன்று நீங்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் அல்லது அவருடைய சாபத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிந்திருக்கும் அவன். உங்களைத் தன்னுடைய ராஜ்ஜியத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக பலவிதமான உபாய தந்திரங்களை உங்கள் வாழ்வின் ஆரம்பகால முதலே செய்ய ஆரம்பித்துவிடுகிறான். விளையும் பயிரை முளையிலேயே கிள்ளிவிட்டால் தனக்கு வேலை மிகவும் சுலபமாக முடிந்துவிடும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பவன் சாத்தான். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனுடைய கண்கள் திறக்கப்பட்டதுபோல உங்களுடைய கண்களும் திறக்கப்படுமானால் எவ்வளவு நன்மையாயிருக்கும் (2 ராஜாக்கள் 6:13-17). உங்களுடைய சமாதானத்தைக் குலைத்துப் போடுவதற்கு சாத்தான் என்னென்ன திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கக் கூடுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! நீங்கள் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, என்னால் உங்களை எச்சரிக்காமல் இருக்க முடியாது. உங்களை எச்சரிக்காமல் இருக்கத் துணியமாட்டேன். உங்களை சாத்தானின் பிடியிலும், அவனுடைய வஞ்சக வலையிலும் விழுவதற்கு விடமாட்டேன். எனவே நான் உங்களை எச்சரிக்கத்தான் வேண்டும். நான் உங்களுக்கு புத்தி சொல்லத்தான் வேண்டும்.
உ. துன்பத்திலிருந்து காப்பாற்றுதல்
நீங்கள் அடையப்போகிற துயரத்திலிருந்து உங்களைக் காப்பாற்றி, தேவனுக்குரியவர்களாக்க வேண்டுமானால் உங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டியது அவசியம். பாவமானது அனைத்து துயரங்களையும் பிறப்பிக்கிறது. வாலிபவயதில் செய்கிற பாவந்தான் ஒருவனுக்கு அளவிடமுடியாத துயரங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வாலிபப்பிராயத்தில் முட்டாள்தனமாகச் செய்த காரியங்கள், வீணாகக் கழித்த காலங்கள் செய்த தவறுகள், அவன் கொண்டிருந்த தவறான நட்புகள். ஆத்துமாவிலும் சரீரத்திலும் தனக்குத்தானே அவன் வருவித்துக் கொண்ட கேடுகள் சந்தோஷமாக இருப்பதற்குக் கொடுக்கப்பட்ட தருணங்களைத் தூக்கியெறிந்தது. உபயோககரமான வாய்ப்புகளை அலட்சியப்படுத்தியது இவையெல்லாம் ஒரு மனிதனுடைய வாழ்நாளின் இறுதிப்பகுதிகளில் அவன் உள்ளத்தை மிகவும் குத்துகிறது. அதனால் அவன் உள்ளத்தில் நிறைந்த சுசப்புகள் காணப்படுகிறான். கடந்துபோன தனது வாலிப வாழ்க்கையை எண்ணி அவமானத்தினாலும் வெட்கத்தினாலும் தன்னைத்தானே கடிந்து கொள்ளுகிறவனாக வாழ்நாளின் எஞ்சிய பகுதிகளைக் கழித்துப் போடுகிறான்.
வாலிபநாட்களில் செய்த தவறுகளினாலே பலவித நோய்களுக்கு ஆளாகி உடல்நலக் குறைவு ஏற்பட்டதைக் குறித்து சில மனிதர்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும். எலும்புகள் வரைக்கும் வியாதியின் கொடூரம் தாக்கி, வாழவே வெறுத்துப் போனவர்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். வாலிபவயதில் சரீர பலத்தையெல்லாம் வீணாக்கியதால் இப்போது பலமிழந்து, வெட்டுக்கிளியைக்கூடத் தூக்கியெறிய முடியாத பலவீன நிலையில் அவர்கள் காணப்படுவார்கள். வயதாவதற்கு முன்னாலேயே அவர்களுடைய கண்களின் பார்வை குன்றிவிடுகிறது. அவர்களுடைய பெலனெல்லாம் அற்றுப்போகிறது. வயதாவதற்கு முன்னாலேயே பலம் இழந்துபோய் தங்கள் சரீரம் அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு கலக்கமடைவார்கள். இப்படியான கசப்பான பாத்திரத்திலே பானம் பண்ணும்படியான நிலமையை அவர்களே வருவித்துக் கொண்டார்கள்.
சோம்பேறித்தனத்தினால் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்து சிலபேர் உங்களுக்குச் சொல்லக்கூடும். படிப்பதற்குக் கிடைத்த பொன்னான காலத்தை அவர்கள் அலட்சியப்படுத்திவிட்டார்கள். தங்களுடைய மனதும் இருதயமும், அறிவையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்ள பக்குவமாயிருந்த காலத்திலே அதை அடைந்து கொள்ளாமல் வாலிபநாட்களை வீணாகக் கழித்துப் போட்டார்கள். இப்போது காலம் கடந்துவிட்டது. உட்கார்ந்து படித்துக் கற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. நேரம் கிடைத்தாலும் கற்கின்ற வலிமை போய்விட்டது. இழந்துபோன காலங்களை என்ன கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது இதுவும் கசப்பானதாக இருக்கிறது.
சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தவறியதால் ஏற்பட்ட துயரங்களைக் குறித்து இன்னும் சிலபேர் சொல்லக்கூடும். அதன்காரணமாக அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமாகத் துயரப்பட நேர்ந்ததைக் காணலாம், அவர்கள் தங்கள் சுய இஷ்டத்தின் பிரகாரம் தங்கள் பாதையை வகுத்துக் கொண்டார்கள். யாருடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்கவில்லை. தவறானவர்களோடு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கவழக்கங்கள் அவர்களுடைய சந்தோஷத்தையே அழித்துவிட்டது. தங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு தொழிலை அல்லது வாழ்க்கையை சிலர் தேர்ந்தெடுத்திருக்கலாம். அதை இப்போதுதான் உணருகிறார்கள். காலம் கடந்த பிறகுதான் அவர்கள் தெளிவாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இப்போது தெரிந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியாத சிக்கலான நிலமை உருவாகிவிட்டதே. இதுவும் ஒரு கசப்பான பானமாக இருக்கிறது.
இளைஞர்களே! நீங்கள் வாலிபவயதின் இச்சையினால் பாரமடையாமல் சமாதானமுள்ள மனசாட்சியை உடையவர்களாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவைகள் உங்கள் இருதயத்தை மிகவும் ஆழமாகக் காயப்படுத்திவிடுமே. மனிதனின் உற்சாகத்தையே கொன்றுவிடக்கூடிய கொடிய விஷமுள்ள அம்புகளல்லவா அவை! ஆத்துமாவை ஊடுருவக்கூடிய இரும்பு அவை! உங்களைக் குறித்து நீங்களே இரக்கம் பாராட்ட வேண்டியதாயிருக்கிறது. கர்த்தரை வாலிபநாட்களிலே தேடுங்கள். அப்போதுதான் அநேகம் கசப்பான கண்ணீர்களைத் தவிர்க்கலாம்.
இந்த உண்மையை யோபு அறிந்திருந்தார். “மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர். என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப் பண்ணுகிறீர்” (யோபு 13:26) என்று அவர் சொல்லுகிறார். அதைப் போலவே அவருடைய நண்பன் சோப்பாரும், “அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக் கொள்ளும்” (யோபு 20:11) என்று கூறுகிறார். தாவீதுங்கூட இதை உணர்ந்திருந்தார். கர்த்தரிடம் அவர் வேண்டுகிறார். 'என் இளவயதின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினையாதிரும்' (சங்கீதம் 25:7).
இதை நன்கு உனார்ந்திருந்த ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பெஷா என்கிற சீர்திருத்தவாதி தமது உயிலில் இவ்வாறு எழுதி வைத்திருந்தார். ‘தேவனின் பெரிதான கிருபையால் 16 வயதிலேயே. உலகத்திலிருந்து தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டதையே நான் மிகப் பெரும் சொத்தாகக் கருதுகிறேன்"
நீங்கள் போய் எந்த விசுவாசியிடமும் கேளுங்கள். அவர்களும் இதைப் போலத்தான் கூறுவார்கள். 'ஓ' நான் என்னுடைய இளமை நாட்களை மீண்டுமொரு முறைகூட வாழுவேன்'. 'நல்லவேளையாக நான் என் இளமைக் காலத்தை ஒழுக்கத்தோடு செலவிட்டேன் நான் என்னுடைய வாழ்நாளின் ஆரம்பத்திலேயே தீய பழக்கவழக்கங்கள் என்னை அணுகிவிடாதபடி பாதுகாத்துக் கொண்டேன்' இப்படியெல்லாம் கூறுவார்கள். ஆரம்பத்தை அவர்கள் சரியாகத் தொடங்கினபடியால்தான் விசுவாச வீரர்களாக அவர்களால் வாழ முடிந்தது என்பதை அனைவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்.
இளைஞர்களே, வாழ்நாளின் முடிவில் வருத்தம் அடையாதபடிக்கு நான் உங்களைக் காப்பாற்ற விரும்புகிறேன். வாழ்நாள் முடிந்தபின்தான் நரகம் எவ்வளவு கொடியது என்கிற உண்மை தெரியவரும். தக்க நேரத்திலே புத்தியடைந்து கொள்ளுங்கள். இளமையில் விதைப்பதை முதுமை அறுவடை செய்யும். உங்கள் வாழ்க்கையிலேயே அருமையான பருவத்தை தீயவைகளுக்குக் கொடுத்துவிட்டு. அதன்காரணமாக முதுமையில் அவதிப்படாதிருக்க நாடுங்கள். நீதியின் விதைகளை விதையுங்கள். உங்கள் இருதயமாகிய நிலத்தை உழுது பண்படுத்துங்கள். முட்களுக்கிடையே உங்கள் விதை வளராது. ஆகையால் முட்களை அகற்றிப் போடுங்கள்.
பாவம் இப்போது உங்களுக்கு மிகவும் சிறியதாகத் தோன்றலாம். உங்கள் வாயிலிருந்து சுலபமாக வரும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் நாட்கள் போகப் போக நீங்கள் அதைத் திரும்பத் திரும்ப சந்திக்க நேரிடும். அதன் வல்லமை அதிகமதிகமாக கிரியை செய்யத் தொடங்கும். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அது உங்களை வந்து தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருக்கும். நாள்பட்ட காயங்கள் ஆறாத ஆழமான வடுக்களை ஏற்படுத்திவிடும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ஈரமான இடத்திலே பதிந்த மிருகங்களின் காலடித் தடங்கள் அழியாத தடயங்களை ஏற்படுத்தியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வியக்கிறார்கள் அல்லவா? அதுபோல, காலங்கள் பல மறைந்து போனாலும் இளமையில் செய்த பாவத்தின் அடிச்சுவடு நினைவில் மறையாது நின்று மிகுந்த துயரத்தைக் கொடுக்கும். அதிலிருந்து தப்புவதற்காக உங்கள் வாலிபநாட்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
அனுபவங்கள் பாடம் கற்பிக்கிறது என்பது ஒரு வழக்கச் சொல். தீமையான அனுபவங்களின் மூலமாக நீங்கள் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்ளாதபடிக்குத் தப்ப வேண்டுமென்றிருக்கிறேன் தொடர்ந்து பிடிக்கின்ற இளவயதின் பாவங்களுக்கு விலகியோடித் தப்பித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு புத்தி சொல்லுவதற்கு இதுதான் கடைசி காரணம்.
இளைஞர்களுக்கேயென சில விசேஷித்த ஆபத்துக்கள் உள்ளன. அவைகளைக் குறித்து எச்சரிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. எல்லா ஆத்துமாக்களுமே பயங்கர ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். வயது ஒரு காரணமல்ல. எல்லோருமே ஒரு பந்தயத்தை ஓடி முடிக்க வேண்டியதாயிருக்கிறது. எல்லோருக்குமே போராட வேண்டிய ஒரு போராட்டம் இருக்கிறது. இருதயத்தை தாழ்த்த வேண்டியதாயிருக்கிறது. சரீரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. சாத்தானை எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது இதையெல்லாம் யாரால் செய்யக்கூடும் என்று நாம் அனைவருமே அங்கலாய்ப்போம். இருந்தாலும் ஒவ்வொரு வயதுக்கும். சூழ்நிலைக்கும் ஏற்றபிரகாரமான விசேஷித்த பிரச்சனைகளும், சோதனைகளும், கண்ணிகளும் உண்டு. அவைகளை நாம் அறிந்து வைத்திருப்பது நல்லது. முன்னெச்சரிக்கை செய்யப்படுபவனே, தற்காத்துக் கொள்வதற்காக தன்னை பலப்படுத்திக் கொள்ளுவான். நான் சொல்லப் போகிற இந்த ஆபத்துக்களுக்கு எச்சரிப்பாயிருக்க வேண்டியதின் அவசியத்தை நான் உங்களுக்கு உணர்த்தி விட்டேனென்றால் உங்கள் ஆத்துமாக்களுக்கு நன்மை செய்தவனாவேன்.
அ) பெருமை
இளைஞர்கள் சந்திக்கிற ஒரு ஆபத்து பெருமை இது உலகின் மிகப் பழமையான பாவம். உலகம் உருவாவதற்கு முன்னாலேயே இது இருந்தது என்றுகூட சொல்லலாம். சாத்தானும் அதன் தூதர்களும் விழக் காரணமாயிருந்தது பெருமையே தேவன் தங்களுக்கு அளித்திருந்த நிலை போதாது என்கிற அகங்காரத்தினால் வீழ்ந்து போனார்கள். பெருமையிளாவே அவர்கள் நரகத்தின் முதல் குடிமக்களானார்கள்.
ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி விட்டதும் பெருமையே. தேவன் தங்களுக்குக் கொடுத்திருந்த இடத்தைவிட உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டியவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டதால் வந்த விளைவு அது ஆதாமும் ஏவாளும் தங்களை உயர்த்த முயற்சித்ததால் விழ நேரிட்டது. உலகத்திலே பாலமும் துன்பமும், மரணமும் பிரவேசிக்க பெருமை காரணமாயிற்று.
நம் இருதயங்களில் பெருமை சுபாவத்திலேயே குடிகொண்டிருக்கிறது. நாம் பெருமையிலேயே பிறந்தவர்கள். நம்மைக் குறித்தே சுயதிருப்தி உடையவர்கள், நமக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். அறிவுரைகளுக்கு செவிகளை அடைத்துக் கொள்ளுதல்! கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுத்தல்! அவனவன் தன்தன் வழியிலே செல்ல விரும்புதல்! பெருமையின் அவதாரங்களாகிய இப்பேர்பட்ட குணங்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் இளைஞர்களின் உள்ளத்தையே அதிகமாக ஆளுகை செய்கிறது.
புத்திமதிகள் வழங்கும்போது இளைஞர்கள் அடங்காத தன்மையாகவும், அகந்தையோடும். பொறுமையிழந்தவர்களாகவும் காணப்படுவது சர்வ சாதாரணமாயிருக்கிறது தங்களை பிறர் மதிக்காமலும், தங்கள் அருமையை உணராமலும் இருப்பதாக எண்ணங்கொண்டு அவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பேசி மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதைக் காண்கிறோம். பெரியோர்கள் சொல்லும் புத்திமதியை அவர்கள் நின்று கேட்பதில்லை எனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள். தங்களுடைய சுயஞானத்தினாலே வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதியவராயும் தங்கள் உறவினரையும் முட்டாள்களாகவும், சிந்திக்கத் தெரியாதவர்களாகவும். விரைவான முடிவெடுக்கத் தெரியாதவர்களாகவும் எண்ணிக் கொள்ளுகிறார்கள். தங்களுக்குப் போதனையோ, அறிவுரையோ எதுவுமே தேவையில்லை என்பதாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் தாங்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். எதையாவது குறித்து அவர்களுக்குச் சொல்லப் போனால் சீற்றம் கொள்கிறார்கள். இளங்குதிரைக் கடிவாளத்தை வெறுப்பது போல. கட்டுப்பாடுகளை வெறுக்கிறார்கள். எங்களை எங்களுடைய வழியிலே சுதந்திரமாக விடுங்கள் என்கிறார்கள். யோபு சொல்வதைப் போல தாங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள்: ஆம் நீங்களே ஞானமுள்ள ஜனம் உங்களுடனே ஞானம் சாகும்' (யோபு 12:21
இதைப் போன்றவன்தான் சாலமோனுடைய குமாரன் ரெகோபெயாம் என்பவன் அவன் தனது தகப்பனுக்கு ஆலோசனை கூறிவந்த முதியோர்களுடைய யோசனையின்படி நடவாமல். அனுபவமற்ற தன் வயதை சேர்ந்த இளைஞர்களுடைய ஆலோசனைக்கு செவி கொடுத்தபடியினால், அதனால் விளைந்த விழைவுகளை அவன் அனுபவிக்க வேண்டியதாயிற்று. இந்த மாதிரியான முட்டாள்தளமான இளைஞர்கள் இன்று அநேகர் காணப்படுகிறார்கள்.
அவர்களில் ஒருவன்தான் கெட்டகுமாரன் உவமையில் வருகின்ற இரண்டாவது குமாரன் தனக்கு வரவேண்டிய உடனடியாகப் பிரித்துத் தரும்படி சொத்துக்களை கேட்டவன் தகப்பனுடைய பாதுகாப்பின் கீழே அடங்கி வாழ மனதில்லாமல், தன் இஷ்டப்படி வாழ்வதற்காக தூரத்தில் இருந்த நாட்டிற்குப் போக விரும்பினவன்: சிறிய குழந்தை தாயின் கையை விட்டுவிட்டுத் தனியே நடக்கப் பார்ப்பது போல நடந்து கீழே விழுந்தான் பன்றிகளின் தவிட்டைத் தின்றபோதுதான் அவனுக்கு அறிவு வந்தது அப்படிப்பட்ட இளைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
வாலிபர்களே பெருமையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இந்த உலகத்திலே இரண்டு யங்களைக் காண்பது மிகவும் அரிதானது என்று சொல்லப்பட்டிருக்கிறது ஒன்று தாழ்மையுள்ள இளைஞன் இரண்டாவது திருப்தியுள்ள முதியவன் இது மிகவும் அப்பட்டமான உண்மையாயிருக்கிறதை நான் காண்கிறேன்.
உன்னுடைய திறமையைக் குறித்தும், உன்னுடைய பலத்தைக் குறித்தும், அறிவைக் குறித்தும், தோற்றத்தைக் குறித்தும், சாமர்த்தியத்தைக் குறித்தும் பெருமை கொள்ளாதே உன்னைக் குறித்தும், உன் ஆஸ்தியைக் குறித்தும் பெருமைப்படாதே. உன்னையும் உலகத்தையும் குறித்து நீ சரியாக விளங்கிக் கொள்ளாததால்தான் இவ்வித பெருமைகள் ஏற்படுகின்றன. உனக்கு வயது ஏறும்போதுதான் நீ இவைகளை சரியானவிதத்தில் பார்க்கத் தொடங்குவாய். பெருமை கொள்ள அவசியமேயில்லை என்பதை உணர்ந்து கொள்ளுவாய். அறியாமையும். அனுபவமின்மையும்தான் பெருமைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது. அந்த அஸ்திபாரம் அகன்றுவிட்டால் பெருமை குணம் போய்விடும்.
தாழ்மையுள்ள ஆவியின் விசேஷத்தைக் குறித்து நமக்கு வேதாகமம் எத்தனையோ முறை கூறுகிறது. 'எவனாகிலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் (ரோமர் 12:3) இருக்கும்படியாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. 'ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவன் என்று எண்னிக் கொள்வாளானால் ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை, (1 கொரிந்தியர் 8:2) என்று வேதாகமம் எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறது. 'மனத்தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள் (கொலோசியர் 3:12) என்று பவுல் கட்டளையிடுகிறார். 'மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்’ (1 பேதுரு 5:5) என்று பேதுருவும் குறிப்பிடுகிறார். அநேகருக்கு இது ஒரு கந்தையான ஆடையைப் போலத் தோற்றமளிப்பது என்ன பரிதாபம்!
இந்தக் காரியத்தில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விட்டுச் சென்றிருக்கும் மாபெரும் உதாரணத்தை கவனியுங்கள். அவர் தமது சீஷர்களின் கால்களைக் கழுவினார். 'நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்' (யோவான் 13.15) மேலும் (2 கொரிந்தியர் 8:9) -ல் 'அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே' என்று அவரது தாழ்மையைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் அவர் மனுஷருபமாகக் காணப்பட்டு, மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலிப்பியர் 28:8) என்றும் கூறப்பட்டுள்ளது. பெருமையாயிருப்பதென்பது சாத்தானைப் போலவும் பாலத்தில் விழுந்துபோன ஆதாமைப் போலவும் இருப்பதாகும். அது, கிறிஸ்துவைப் போல இருக்கமுடியாது. கர்வமுள்ள இருதயம் இயேசுவுக்கு ஏற்றதாக இருக்க முடியாது.
ஞானிகளிலேயே பிரதான ஞானியான சாலமோனை நினைத்துப் பாருங்கள். அவர் தன்னைக் குறித்து எப்படிப்பட்ட அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள் நாளோவென்றால் போக்குவரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்’ (1 ராஜாக்கள் 3:7) தன்னை சிறு பிள்ளையாகவே நினைக்கிறார் ஆனால், அவரது சகோதரனாகிய அப்சலோமுக்கோ வேறுவிதமான ஆவி இருந்தது. தனக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வமிருந்தது. வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எவ்வாரும் என்னிடத்தில் வந்து. நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு. என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் (2 சாமுவேல் 15:4), இவனுடைய ஆவி. அவன் சகோதரனாகிய சாலமோனின் ஆவிக்கு முற்றிலும் வேறுபட்டதாய் இருப்பதைக் கவனியுங்கள், அவனுடைய இன்னொரு சகோதரனாகிய அதோனியாவும்: 'நான் ராஜா ஆவேன் என்று சொல்லித் தன்னைத்தான் உயர்த்தினான். (1 ராஜாக்கள் 1:5) தாழ்மையே சாலமோனுடைய ஞானத்திற்கு ஆரம்பமாயிருந்தது. தனது அனுபவத்தை அவர் எழுதுகிறார். 'தன் பார்வைக்கு ஞானியாய் இருப்பவளைக் கண்டாயானால், அவனைப் பார்க்கிலும் மூடனைக் குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம் (நீதிமொழிகள் 20:12),
வாலிபர்களே இங்கே குறிப்பிட்ட வசனங்கள் யாவையும் உங்கள் இருதயத்திலே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய சொந்தக் கருத்துக்களைக் குறித்து அதிக நம்பிக்கையாய் இராதேயுங்கள். மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு, நான் நினைப்பது மாத்திரம்தான் சரி என்கிற எண்ணத்தை அகற்றிப் போடுங்கள் பெரியவர்களோ. முக்கியமாக உங்கள் பெற்றோரோ கூறும் கருத்து உங்களுடைய கருத்துக்கு எதிராக இருக்குமானால் உங்கள் கருத்தை நம்புவதை விட்டுவிடுங்கள் வயது அனுபவங்களைக் கொடுக்கிறது ஆகவே அது மரியாதைக்குரியதாகும் யோபுவின் புத்தகத்திலே காணப்படுகின்ற எலிகூட என்பவனின் ஞானம் இவ்விஷயத்திலே காணப்பட்டது. 'அவர்கள் தன்னைப் பார்க்கிலும் வயது சென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்' (யோபு 32: 4). அதன் பிறகு சொல்கிறான். 'நான் இளவயதுள்ளவன். நீங்களோ விருத்தாப்பியர் ஆகையால் நாள் அஞ்சி, என் அபிப்ராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன் முதியோர் பேசட்டும் வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்' (யோபு 32) 6,7). அடக்கமும் அமைதலும் இளைஞர்களுக்கு நல்ல ஆபரணங்களாக இருக்கிறது. கற்றுக் கொள்வதற்கு ஒருபோதும் வெட்கப்படாதிருங்கள் இயேசுக்கிறிஸ்து தமது 12ஆம் வயதிலே அப்படிப்பட்டவராய் இருந்தார் அவரை தேவாலயத்தில் கண்டார்கள் போதகர்கள். ஞானிகளின் நடுவிலே அவர் உட்கார்ந்திருந்தார். 'அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்களை வினாவவும் கண்டார்கள்" (லூக் 2:46). உண்மையான புத்திசாலிகள் எப்போதும் கற்றுக் கொள்ளவே விரும்புவார்கள். தாங்கள் அறிந்திருப்பது மிகவும் குறைவானது என்றே அவர்கள் கூறுவார்கள். ஐசக் நியூட்டன் என்கிற மாபெரும் ஞானி. 'அறிவாகிய மாபெரும் கடலின் கரையிலே ஒருசில விலையேறப்பெற்ற கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் சிறுவன் நான்' எனக் கூறுவார்.
இளைஞர்கள், நீங்கள் புத்திசாலிகளாகவும், சந்தோஷமாகவும் இருக்க விரும்பினால், இந்த பெருமை குணத்தைக் குறித்து எச்சரிப்பாயிருங்கள்.
ஆ) சிற்றின்பங்களில் பிரியப்படுதல்
இளைஞர்கள் சந்திக்கும் அடுத்த ஆபத்து என்னவென்றால் சிற்றின்பங்கள். இளவயதில்தான் ஆசை இச்சைகள் அதிகமாக செயல்படும். அது, கட்டுக்கடங்காமல் அழுகிற சிறு குழந்தையைப் போலப் பிடிவாதமாக சிற்றின்பங்களை நாடிப் போகின்ற வயது. வாலிபவயதில்தான் நமக்குப் பெரும்பாலும் நல்ல சுகமும் தேகபெலனும் இருக்கும். மரணம் வெகு தொலைவில் இருப்பது போலிருக்கும். இந்த உலக வாழ்க்கையை அனுபவிப்பதுதான் எல்லாமே என்பது போலத் தோன்றும். வாலிபவயதுதான் பெரும்பாலானோருக்கு கவலையற்றதும், பொறுப்புகள் இல்லாததுமான காலமாக இருக்கும். ஆகவே சந்தோஷத்தை நாடிப் போவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்கிற உணர்வை வாலிபருக்குக் கொடுக்க இந்த காரணங்களெல்லாம் உதவியாயிருக்கின்றன. நீ யாருக்கு அடிமை என்று வாலிபர்களிடம் இன்று கேட்டால், சிற்றின்பங்களுக்கே நான் அடிமை என்பதையே பலரும் சொல்லுவார்கள். அதுதான் அவர்களுடைய உண்மையான பதிலாக இருக்கும்.
வாலிபரே! இந்த சிற்றின்பங்களும் மோகமும் என்னவிதமான கனிகளைக் கொண்டுவரும் என்பதையும். அது உங்களுக்கு எப்படியெல்லாம் தீமை செய்யும் என்பதையும் நாள் பட்டியலிட்டால் நேரமே போதாது. கேளிக்கைகள் விருந்துகள். குடி, சூதாட்டங்கள். சினிமாக்கள். நடனங்கள் இவை போன்றவற்றைக் குறித்து நான் சொல்லவும் வேண்டுமா? இவைகளில் சிக்கிக் கொண்டு கசப்பான அனுபவங்களைப் பெற்றவர்கள் கொஞ்சநஞ்சமில்லை. இவைகளெல்லாம் ஒருசில உதாரணங்களே. சிற்றின்பங்களின் அடிப்படையான நோக்கம்
நேரம் போவதே தெரியாமல் உணர்ச்சிவசப்பட வைப்பது மன்தை சிந்திக்க விடாமல் குழம்பச் செய்வது மாம்சத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் தீனி போடுவது இவை போன்ற காரியங்கள் உங்களுடைய வாலிப் வயதை மிகவும் வலுவாகத் தாக்கக் கூடியவை சிற்றின்பங்களுக்கு இவை தமது அதிகாரத்தை வழங்கியிருக்கிறது எச்சரிப்போடிருங்கள் தேவப்பிரியராய் இருங்கள் சுக்போகப் பிரியராய் இராதேயுங்கள் (தீமோத்தேயு 3:40) என அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிற எச்சரிப்புக்கு செவி கொடுங்கள்.
நான் கூறுவதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் உலகத்தின் இச்சைகளோடு நீங்கள் இணைந்திருப்பீர்களானால் அவை உங்களுடைய ஆத்துமாவைக் கொன்றுவிடும். மாம்சத்துக்கும். மனதின் இச்சைகளுக்கும் செவி கொடுத்தீர்களானால் அது நிச்சயமாக உங்கள் மனசாட்சியை கருகச் செய்து, இருதயத்தையும் கடினப்படுத்திவிடும். ஆரம்பத்தில் ஒன்றுமே ஆகாதது போலத்தான் தோன்றும் ஆனால் நாளடைவில் அதன் கொடூரங்களைக் காண்பீர்கள்.
பேதுருவும் இதே புத்திமதியைக் கூறுகிறார்: ‘ஆத்துமாவுக்கு விரோதமாகப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்’ (பேதுரு 2:11) சிற்றின்பங்கள் ஆத்துமாவின் சமாதானத்தைக் குலைத்துப் போடும் ஆத்துமாவை பெலன் இழக்கச் செய்து அதைத் தனக்கு அடமையாகச் சிறைப்பிடித்துக் கொள்ளும் பவுல் அப்போஸ்தலன் சொல்லுவதை கவனித்துக் கேளுங்கள் 'விபச்சாரம், அகத்தம் மோகம் தூர்இச்சை விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை இவைகளை பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள். (கொலோசியர் 3:5) கிறிஸ்துவிலுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்" (கலாத்தியர் 5:24), 'நான் என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1 கொரிந்தியர் 9:27) என்று பவுல் சொல்லுகிறார். பாவம் ஏற்படுவதற்கு முன்னால் ஆத்துமா மகிழ்ச்சியோடு சரீரமாகிய மாளிகையில் குடிகொண்டிருந்தது. ஆனால் பாவத்திற்குப் பின்னால் சரீரமானது கெட்டுப் போய், ஒழுக்கம் குலைந்துவிட்ட நிலையில் இருக்கிறது. அதைக் கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டியதாயிருக்கிறது. இப்போது சரீரம் ஆத்துமாவுக்கு உதவியாக இராமல், அது ஆத்துமாவுக்கு தொந்தரவாயிருக்கிறது. ஆத்துமாவை முன்னேறவிடாமல் தடை செய்து கொண்டேயிருக்கிறது. நாம் மாம்சத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி வைத்திருந்தோமானால் அது நமக்கு சேவை செய்யக்கூடிய நல்ல வேலையாளாக இருக்கும். ஆனால் அதை ஆளும்படி விட்டுவிட்டோமானால் அது மிகவும் மோசமான எஜமானாக செயல்படும்.
மறுபடியுமாக அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதைக் கருத்தில் கொள்ளுங்கள் 'தூர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்" (ரோமர் 13:14). இந்த வார்த்தைகள்தான் அகஸ்டின் என்கிற மனிதரை அவரது அடங்காத நிலையிலிருந்து மாபெரும் தேவபக்தனாக மாற்றியது. வாலிபர்களே! இந்த வார்த்தைகள் உங்கள் இருதயத்திலும் கிரியை நடப்பிக்க நான் வாஞ்சிக்கிறேன்.
உலகத்தின் ஆசை இச்சைகளின் மீது நாட்டம் வைத்தீர்களானால் அவை எதுவுமே நிறைவைத் தருவதில்லை என்பதையும், அவை மாயையாக இருக்கிறதென்பதையும் ஞாபகத்தில் வையுங்கள். இவை. வெளிப்படுத்தின தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் வெட்டுக்கிளியைப் போன்றவை. அவைகளுக்குக் கிரீடம் போன்றவை கொடுக்கப்பட்டிருந்தாலும் தங்கள் வால்களில் அவைகள் கொடுக்குகளை உடையவைகளாயிருந்தன. வெளித் தோற்றத்தில் பிரமாதமாகத் தோன்றினாலும் உள்ளே கொடிய விஷத்தைக் கொண்டவை. அப்படியே மாயையான காரியங்களும் இன்பம் அளிப்பது போலத் தோன்றினாலும் அவை மனிதர்களின் ஆத்துமாக்களை சேதப்படுத்துகிறது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல அல்லவா? சுவையாக இருப்பவை எல்லாம் நல்லவை என்று கூறிவிட முடியாது தற்காலிகமாகப் பெறும் இன்பங்கள் மெய்யான சந்தோஷத்தைத் தராது.
நீங்கள் போய் உங்களால் ஆன மட்டும் உலக சந்தோஷங்களை அனுபவித்துப் பாருங்கள். ஆனால் அதினால் உங்கள் இருதயத்துக்குள் திருப்தி ஏற்படாது. (நீதிமொழிகள் 30:16) -ல் காண்கின்ற அட்டையைப் போல் இன்னும் தா தா என்று திருபதி இல்லாமல் உள்மனது கத்திக் கொண்டேயிருக்கும் மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது அதை எனதத் கொண்டும் நிரப்ப முடியாது. தேவன் ஒருவர்தான் அதை நிரப்ப கூடியவர் சாலமோன் அதை அனுபவித்து உணர்ந்து கொண்டார். உலக இன்பங்கள் யாவும் மாயையே என்பதை அறிந்து கொண்டார், அது மனதுக்கு சஞ்சலத்தையே உண்டு பண்ணுகிறது. வெளிப்பார்வைக்கு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போல அழகாக இன்பமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் உள்ளேயோ சகலவித அசுத்தங்களும் நிறைந்ததாய். வருத்தத்தையே விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. காலம் கடந்து போவதற்குள் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் உங்கள் கண்களுக்கு இன்பமாகத் தோன்றுகிற காரியங்கள் மீதும் "கொடிய விஷம்' என்று எழுதி வையுங்கள். மிகவும் நியாயமான இன்பங்களைக்கூட அளவு மீறாமல் மிதமாகவே அனுபவிக்க வேண்டும். அவைகளில் உங்கள் இருதயத்தைப் பறிகொடுத்து விட்டீர்களானால், உங்கள் ஆத்துமா அழிக்கப்பட்டுவிடும் எந்த இன்பமும், அதில் பாவம் இல்லை என்பது உறுதியாக்கப்பட்டதினால், அளவோடு உபயோகிக்கப்படலாம்.
இளைஞர்களே, ஏழாம் கற்பனையைக் கொண்டு நான் உங்களை எச்சரிக்காமல் விடமாட்டேன். (யாத்திராகமம் 20:14) -யை ஞாபகத்தில் வையுங்கள் விபச்சாரம் செய்யாதிருப்பாயாக விபசாரம் வேசித்தனம் மற்ற எந்த அசுத்தமும் உங்கள் வாழ்வில் பிரவேசிக்க விடாதிருங்கள். இந்தக் கற்பனையைக் குறித்து மிகவும் தெளிவாக விவரமாக இளைஞர்களுக்கு சொல்லப்பட வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது என நான் எப்போதுமே நினைப்பேன். தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் இந்தப் பாவத்தைக் குறித்துப் பேசியிருப்பதைப் பார்க்கிறேன் நமது
சீர்திருந்த சபைகளில் இந்த விஷயத்தை எவ்வளவாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறேன். அநேக இளைஞர்கள் ரூபனைப் போலும் ஒப்னி, பினகாஸைப் போலும், அம்னோளைப் போலும் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது எனது மனசாட்சியின் பிரகாரம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இந்தக் கற்பனையிலுள்ள பாவத்தைக் குறித்து உலகமானது பேசாமல் ஏன் மெளனத்தைக் கடைப்பிடிக்கிறது என நான் வியந்து போகிறேன். "இளைஞர்களின் பாவம்' எனக் கருதப்படும் இந்த பாவத்தைக் குறித்து எச்சரிக்காமல் இருந்தால் அது தவறும், வேதத்திற்கு விரோதமான செயலுமாக நான் நினைக்கிறேன்.
ஏழாம் கற்பனையை மீறுவது மற்ற எல்லா பாவங்களைக் காட்டிலும் கொடிய விளைவுகளைக் கொண்டுவரும் (ஓசியா 4:11) சொல்வது போல, வேசித்தனமும், திராட்சைரசமும், மதுபானமும் இருதயத்தை மயக்கும் ஒரு மனிதன் செய்த எந்தப் பாவங்களைக் காட்டிலும் இந்த பாவம்தான் ஆழமான என்றும் மறையாத தழும்பை அவனில் ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆயிரக்கணக்கானவர்களை இந்தப் பாவம் விழத் தள்ளுகிறது. தேவனுடைய பக்தர்களைக்கூட இந்தப் பாவம் பதம் பார்த்துவிடுகிறது. லோத்து, சிம்சோன் தாவீது போன்றவர்களையும் இது தீண்டியது. நமக்கு பயத்தை வருவிப்பதாக இருக்கிறது. இந்த பாவத்தை மனிதன் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. இந்த பாவத்தைக் குறித்து சாத்தானுக்கு விசேஷித்த சந்தோஷம் உண்டு. ஏனெனில் சாத்தான் அசுத்த ஆவியாக இருப்பதால் அசுத்த காரியங்களில் சாத்தானுக்கு ஏக சந்தோஷம்
இளைஞர்களே, நீங்கள் நல்ல வாழ்க்கையை அடைய வேண்டுமானால், 'வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" (1 கொரிந்தியர் 6:18) 'இப்படிப்பட்டவைகளின் நிமித்தமாக கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வருவதால் ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளினால் மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுக்கு பங்காளிகளாக ஆகாதிருங்கள்" (எபேசியர் 5: 6-7), அந்தவிதமான சந்தர்ப்பங்களுக்கு விலகியோடுங்கள். அக்காரியங்களில் உங்களை சிக்க வைக்கும் நண்பர்களை விட்டு விலகுங்கள். உங்களை சோதனைகளில் விழப்பண்ணுகிற இடங்களுக்குப் போகாமல் தவிர்த்து விடுங்கள் நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து இது சம்பந்தமாகக் கூறும் புத்திமதிகளை கவனித்து மனதில் வையுங்கள் "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு உள் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும் உன் வலது கை உளக்கு இடறலுண்டாக்கினால் அதைத் தறித்து எறிந்து போடு உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உள் அவயவங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும் (மத்தேயு 5:28-30) பரிசுத்த யோபைப் போல 'கண்களோடே உடன்படிக்கை பண்ணுங்கள்' (யோபு 31:1), அக்காரியங்களைக் குறித்துப் பேசுவதற்கும் இடங்கொடாதீர்கள் அவைகளின் பேர்முதலாய் சொல்லக்கூடாத காரியங்களில் இதுவும் அடங்கும் தாரைத் தொட்டால் அது ஒட்டிக் கொள்ளத்தான் செய்யும் அவ்வித பாவத்தைக் குறித்த சிந்தனையை மனதில் வளர்க்கக் கூடாது அவைகளை எதிர்த்து நில்லுங்கள் அவைகளை அழித்துப் போடுங்கள் அந்தப் பாவம் உங்களைத் தீண்டி விடாதபடிக்கு ஜெபம் செய்யுங்கள் அதற்கு இடங்கொடாமலிருப்பதற்காக எதையும் இழப்பதற்கு தயாராயிருங்கள் மனதிலே கற்பளைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் பாவம் வளர்ந்து பெருகும். ஆகலே உங்கள் சிந்தைகளையும் காத்துக் கொள்ளுங்கள். சிந்தையைக் காத்துக் கொண்டீர்களானால், செயல்களையும் காத்துக் கொண்டவர்களாவீர்கள்.
நான் கூறிய இந்த எச்சரிப்புகளையெல்லாம். கவனமாகக் கேளுங்கள் மற்றவைகளை மறந்தாலும், இந்த ஆபத்தைக் குறித்து மறந்து போகாதீர்கள்.
இ) சிந்தனையின்மை
யோசனையற்றவர்களாய் இளைஞர்கள் இருப்பதுதான் இன்னுமொரு ஆபத்து. சிந்திக்காமல் இருப்பதுதான் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் நித்தியாமாக அழிந்து போகக் காரணம் மனிதர்கள் விளைவை யோசிப்பதில்லை தங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவளிப்பதில்லை. தற்போது தாங்கள் இருக்கிற நிலமை பிற்காலத்தில் உள்ள விலைவுகளைக் கொண்டுவரும் என்பதைக் குறித்து ஒருபோதும் சிந்தித்துப் பாரிக்க மாட்டார்கள் முடிவில்தான் விழித்துக் கொள்வார்கள். தாங்கள் கெட்டுப் போனதற்கு காரணம் முன்கூட்டியே சிந்திக்காததுதான் என்பதை மிகவும் தாமதமாகவே உணருவார்கள்.
மற்றுவர்களைக் காட்டிலும் இளவயதுள்ளவர்களுக்குத்தான் இது ஆபத்தாக முடிகிறது. உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஆபத்துகளை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறபடியால் உங்கள் நடக்கையைக் குறித்து நீங்கள் கவனம் செலுத்துவதில்லை. தெளிந்த பத்தியையும் நல் ஆலோசனையையும் அடைய பொறுமையற்றவர்களாப், விரைந்து முடியெடுக்க விரும்பி. தவறான முடிவுகளை எடுத்துவிடுவதால் பிற்பாடு மிகுந்த துயரத்துக்குள்ளாகிறீர்கள் அவசரப்பட்ட ஏசா ஒருவேளை உணவுக்காக தன்னுடைய முதற்பிறப்பின் சுதந்திரத்தை சற்றும் யோசிக்காமல் விற்றுப் போட்டான். பிற்காலத்தில் தனக்கு அது எவ்வளவு அவசியமாயிருக்கும் என்பதைக் கொஞ்சம்கூட சிந்தித்துப் பார்க்காமல் செயல்பட்டதால் பின்னாளில் அழுது புலம்பி தேடியும் அதை அடையாமற் போனான். இளைஞர்களாயிருந்த சிமியோனும் லேவியும் தங்களுடைய சகோதரி தீனாளுக்காக பழி வாங்குவதாக நினைத்து சீகேமியரைக் கொன்று போட்டார்கள் அது தங்கள் தகப்பனுக்கு எவ்வளவு கஷ்டத்தையும் கலக்கத்தையும் கொண்டுவரும் என்பதை கொஞ்சமும் நினைக்காதவர்களாக நடந்து கொண்டார்கள். பக்தனாகிய போட தனது பிள்ளைகள் இவ்விதமாகத்தான் சிந்திக்காதவர்களாக நடந்து கொள்வார்களோ என மிகவும் பயந்தார். ஆகவே, அவர்கள் விருந்து செய்கிற நாளெல்லாம் யோபு இப்படியாக செய்வார் விருந்து செய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்வி அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி அதிகாலமே எழுந்து அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான் இந்தப் பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான்" (யோபு 15)
இந்த உலகத்திலே சற்றும் சிந்திக்காமல் செயலாற்றினால் எதையுமே சரியாக செய்ய முடியாது. அதிலும் சிந்திக்காமல் செயல்படுவதால் நமது ஆத்துமாவுக்கு எந்த நன்மையும் இல்லை. யோசிக்காதே' என சாத்தான் நமது காதுகளில் ஓதிக் கொண்டேயிருப்பான். மனம் மாறாத இருதயம் கள்ள வியாபாரி எழுதும் கணக்குப் புத்தகத்தைப் போன்றது. அது எந்த சரிபார்த்தலுக்கும் உட்படாதது இதை சாத்தான் நன்றாக அறிந்திருக்கிறபடியால். எங்கே ஒருவன் சிந்திக்கத் தொடங்கினால் தனது ஆத்துமா இருக்கின்ற ஆபத்தான நிலையை சரிபார்த்து விடுவானோ என்பதால் அவனிடம் யோசிக்காதே என சொல்லிக் கொண்டேயிருப்பான். ஆனால் கடவுன் என்ன சொல்கிறார் உன் வழிகளை சிந்தித்துப் பார் என்கிறார். நில், கவனி, சிந்தித்துப் பார், ஞானம் அடை 'அவசர புத்தி சாத்தானிடமிருந்து வருகிறது என்று ஸ்பெயினில் ஒரு பழமொழி உண்டு சில மனிதர்கள் சிந்தித்துப் பார்க்காமல் அவசரப்பட்டு திருமணம் செய்துவிட்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல, சிந்திக்காமல் செயல்படுபவர்கள் ஒரு நொடியில் தங்கள் ஆத்துமாக்களுக்கு கேடுண்டாக்கிவிட்டு வருடக்கணக்காக அதை சரிப்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாவார்கள். மோசமான வேலையாட்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் தப்பும் தவறுமாக வேலைகளை செய்துவிட்டு, ஐயோ யோசிக்காமல் செய்துவிட்டேனே என்பார்கள் அதுபோல சில இளைஞர்கள் அவசர புத்தியினால் பாவம் செய்துவிடுவார்கள் 'ஓ அதைக் குறித்து நான் பார்க்கவேயில்லையே. அது பாலம் நினைத்துப் போல எனக்குத் தோன்றவில்லையே என்று பிற்பாடு கூறுவார்கள். பாவம் போலத் தோன்றவில்லையாம்! பாவம் எப்படித் தோற்றமளிக்கும்? அது உன்னிடம் வந்து நண்பனே, நான்தான் பாவம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுமா? அப்படி சொல்லிவிட்டு வந்ததானால் அதால் கொஞ்சமாகத்தான் தீங்கு செய்ய முடியும்? பாவமானது பயங்கரமாகத் தோற்றமளிக்காது. பாவமானது எப்போதுமே நல்லது போலவும், ரசிக்கத்தக்கதாகவும். இச்சிக்கபடத்தக்கதாகவும் அதைச் செய்கிறபோது இருக்கும். இளைஞர்களே, அறிவடையுங்கள்! ஜாக்கிரதையாயிருங்கள்! சாலமோனுடைய வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள். 'உன் கால்நடையை சீர்தூக்கிப் பார். உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக (நீதிமொழிகள் 4:26) எதையும் அவசரப்பட்டு செய்யாமல் சற்று நிதானமாகப் பகுத்தறிந்து செய். இல்லையென்றால், முடிவு துரிதமாக ஏற்பட்டுவிடும் என ஞானி ஒருவர் கூறினார்.
இளைஞர்களிடம் இப்படியாக எதிர்பார்ப்பது சரியல்ல என சிலர் வாதிடக்கூடும். ஆழமாக சிந்திப்பதற்கு இளைஞர்களுக்கு வயதும் அனுபவமும் போதாது என சிலர் கூறுவர் நான் என் சொல்கிறேனென்றால் காலம் இருக்கிற விதத்தைப் பார்த்தால் அவர்களுக்கு இருக்கும் ஆபத்துகள் கொஞ்சநஞ்சமல்ல. முட்டாள்தனமான பேச்சுகளும், கேலிப் பேச்சுகளும், கிண்டல்களும், அளவுக்கதிகமான கேளிக்கைகளும், உல்லாசங்களும் நிரம்பியிருக்கிற வேளை இது வாலிபர்கள் சற்று நேரம் சந்தோஷமாயிருப்பது அவசியமதான் ஆனால் எந்நேரமும் உல்லாச காரியங்களிலேயே பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு புத்திசாலித்தனத்தை ஏற்படுத்துமா? ஞானிகளிலேயே சிறந்த ஞானி கூறுவது என்ன? 'விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம் இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும். உயிரோடிருக்கிறவள் இதைத் தன் மனதிலே சிந்திப்பாள் நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம், முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்க வீட்டிலே இருக்கும்' (பிரசங்கி 7:2-4) வேத விளக்கவுரையை எழுதிய மத்யூ ஹென்றி என்பவர் எலிசபெத் ராணியினுடைய செயலாளராக வால்ஷிங்காம் என்கிறவரைக் குறித்த ஒரு செய்தியை கூறுகிறார். இந்தக் செயலாளர் தனது பணிக்காலம் முடிந்து பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெற்று வீட்டிலே இருந்தார். அப்போது அதிக ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார், அவரை சந்திப்பதற்கு அவருடைய நண்பர்கள் வருவார்கள். அவர்கள் அவரைப் பணித்துவிட்டு தண்பரே, நீங்கள் முன்பு போல கலகலவென்று இல்லையே முகத்தின் சந்தோஷம் இல்லாமல ஏதோ பாரமுடையவராக இருப்பது போல இருக்கிறீர்களே என்ன விஷயம் எனக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். ஆம், நான் உல்லாசமாக இல்லைதான் என்னை சுற்றிலும் இருக்கிறவர்கள் அதிக பாரத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும்போது நான் மாத்திரம் எப்படி உல்லாசமாக இருப்பது? தேவன் அதிக பாரத்தோடு நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்து நமக்காக பாரத்தோடு பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். பரிசுத்தாவியானவர் பாரத்தோடு தம்மோடு போராடிக் கொண்டிருக்கிறார். வேதசத்தியங்கள் யாவும் அதிக ஆழமானவை நமது ஆவிக்குரிய விரோதிகளும் நம்மை அழித்துப் போட அதிக பாரத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவிகள் நரகத்தில் பாரமான சூழலில் இருக்கிறார்கள். இப்படியாக நம்மைச் சுற்றிலும் உள்ள காரியங்கள் பாரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கையில் நீங்களும் நானும் பாரமற்றவர்களாக, உல்லாசமாக இருப்பது எப்படி முடியும்?
இளைஞர்களே, சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும், எங்கே போகிறீர்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள், அமைதலாகத் தனிமையில் உட்கார்ந்து சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தோடு நீங்களே பேசிக் கொண்டு அமர்ந்திருங்கள். என்னுடைய எச்சரிப்பை நினைவில் வையுங்கள். சிந்திக்காத காரணத்தினால் பாழாகிவிடாதீர்கள்.
ஈ) சமய அவமதிப்பு
சமயத்தை (கிறிஸ்தவத்தை) அவமதிப்பது இளைஞர்கள் சந்திக்கும் மற்றொரு ஆபத்து இதுவும் இளைஞர்களுக்கே உரியதான ஆபத்து அவர்களில் அதிக அளவில் தேவபக்தி அற்றவர்களாகக் காணப்படுவதை நான் காண்கிறேன். கிருபையின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்வதில் இளைஞர்களே மிகக் குறைவானவர்கள் ஆராதனைகளில் பங்கு பெறுவதிலும் வேதாகமத்தை எடுத்து வருவதிலும், ஜெபப் புத்தகங்களை உபயோகிப்பதிலும், பாடல்கள் பாடுவதிலும், பிரசங்கங்களைக் கேட்பதிலும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஜெபக்கூட்டங்களுக்கும் வேதபாட வகுப்புகளுக்கும் வராமல் இருப்பதும். ஆத்துமாவுக்கு உதவியாயிருக்கிற எந்த நிகழ்ச்சிகளுக்கும் வர மனமில்லாமல் இருப்பதும் இளைஞர்களே, இவையெல்லாம் தங்களுக்கு அவசியமில்லை என வாலிபர்கள் நினைக்கிறார்கள் இதெல்லாம் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் உரியவை. தங்களுக்குரியவை அல்ல என எண்ணுகிறார்கள் தங்கள் ஆத்துமாவைக் குறித்து கவலைப்படுவது அவர்களுக்கு வெட்ககரமாக இருக்கிறது. மோட்சத்தைக் குறித்து எண்ணுவதுகூட அவர்களுக்கு அவமதிப்பாக இருக்கும் போலிருக்கிறது. இதுதான் தேவபக்தியை அலட்சியம் செய்யும் போக்காகும். இதே மாதிரியான ஆவியை உடையவர்களாகத்தான் பெத்தேலில் இருந்த சிறுவர்கள் எலியா தீர்க்கதரிசியை கேலி செய்தார்கள். இந்தவிதமான ஆவியைக் குறித்து இளைஞர்களே எச்சரிக்கையாயிருங்கள். தேவபக்தியானது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது அதை நாடிக் கண்டடைவதும் ஆகும்.
பரிசுத்தமான காரியங்களை அவமதிப்பதும் அலட்சியம் செய்வதும் அவிசுவாசத்தை வளர்க்கும் கிறிஸ்தவத்துக்கடுத்த எந்தக் காரியத்தைக் குறித்தும் ஒரு இளைஞன் கேலி பேசி பரியாசம் பண்ணினானென்றால், அவன் வருங்காலத்தில் மிக மோசமான அவிசுவாசியாக மாறிவிடுவான் என்பதில் சந்தேகமில்லை.
இளைஞனே, நீ உன் மனதைக் கடினப்படுத்துகிறாயா? பக்தியை அலட்சியம் செய்தால் உனக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பெருங்குழியில் விழுந்து துயரத்துக்குள்ளாவாய் என்பதை உணருகிறாயா? தாவீது கூறுவதை சிந்தித்துப்பார். “தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்” (சங்கீதம் 14:1) மதிகெட்டவன் முட்டாள் என தாவீது அவனைக் குறிப்பிடுகிறார். அவனால் தேவன் இல்லையென சொல்லத்தான் முடிகிறதே தவிர, தான் சொல்லுவதை அவனால் நிரூபிக்க முடியாது. ஒரு புத்தகமானது ஆரம்பம் தொடங்கி முடிவு வரைக்கும் பிழையே இல்லாமல் இருக்கக் கூடுமானால் அது வேதாகமம் ஒன்றுதான். வேதாகமம் தனது பிழையற்ற தன்மையை காலங்காலமாக பலவிதங்களில் நிரூபித்து வந்திருக்கிறது. எப்பேர்பட்ட விரோதி வந்து அதற்கு விரோதமான காரியங்களைக் கூறினாலும், பிழைகளைக் கண்டுபிடிக்க முயன்றாலும் அது தனது உண்மைத் தன்மையை நிருபித்திருக்கிறது. 'கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது" (சங்கீதம் 18:30) என்று தாவீது கூறுகிறார். வேதாகமம் எத்தனையோ முறை, எத்தனையோ விதங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவுக்கு அதை சோதித்துப் பார்த்தார்களோ அவ்வளவுக்கு அது தேவனின் கரம் உருவாக்கியதுதான் என்பதும் அதன் உண்மைத் தன்மையும் தெளிவாக விளங்கிற்று. நீங்கள் வேதாகமத்தை நம்பவில்லையானால் வேறு எதை நம்புவீர்கள்? இல்லையென்றால் அபத்தமான ஏதாவது கட்டுக்கதைகளைத்தான் நம்ப வேண்டியதாயிருக்கும். வேதாகமத்தைக் கடவுளின் வார்த்தையாக ஏற்றுக் கொள்ளாதவன். இந்த மாதிரியான அபத்தங்களை சுலபமாக ஏற்றுக் கொள்ளுவாள் நீ வேதாகமத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலுங்கூட அது தேவனின் வார்த்தையாக இருப்பதால் அதை அவமதிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
வேதாகமத்தில் விளங்கிக் கொள்ள முடியாத கடினமான பகுதிகள் இருக்கிறதே என சிலபேர் சொல்லுவார்கள். அப்படி இல்லாவிட்டால் அது தேவனின் புத்தகமாக இருக்க முடியாதே. அப்படி இருப்பதால் உளக்கெள்ள பிரச்சனை? நீ சாப்பிடும் மருந்துகள் உனது உடலில் என்னென்ன காரியங்களை செய்கிறது என்பது உனக்கு புரியவில்லை என்பதற்காக மருந்து சாப்பிடாமல் இருக்கிறாயா? மனிதர்கள் என்ன கூறினாலும் சரி, இரட்சிப்புக்கடுத்த காரியங்கள் வேதத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. வேதம் விளங்கவில்லை என்பதற்காக யாரும் ஒருபோதும் வேதத்தை நிராகரிக்க மாட்டார்கள். இதை நினைவில் கொள். மாறாக, வேதத்தை நிராகரிப்பவர்களுக்கு அது நன்றாகவே விளங்கியிருக்கிறது. அது அவர்களுடைய குணங்களைக் கண்டிக்கிறதை அவர்கள் உணருகிறார்கள். அவர்களுடைய பாவநிலையை உணர்த்தி. அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு உரியவர்கள் என்பதை வேதம் சுட்டிக் காண்பிக்கிறது. அதைப் பொறுக்க மனமில்லாமல், வேதத்தை தவறு என்றும். உபயோகமற்றது என்றும் நம்பும்படியாக தங்கள் மனதை செலுத்துகிறார்கள். 'தவறுதலான வாழ்க்கைதான் வேதத்தை எதிர்ப்பதற்கு ஒரே காரணம் என்று ரோச்சஸ்டர் என்பவர் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ சத்தியங்களைத் தங்களுடைய வாழ்க்கையிலே செயல்படுத்த விரும்பாததால்தான் மனிதர்கள் கிறிஸ்தவத்தின் உண்மைத் தன்மையைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்' என்று ராபர்ட் சௌத் என்பவர் கூறுகிறார்.
இளைஞர்களே, தேவன் என்றாவது தாம் கூறியவைகளை நிறைவேற்றாமல் விட்டிருக்கிறாரா? இல்லவே இல்லை. அவர் சொல்லியதை செய்கிறவர். அவருடைய வாயின் வார்த்தைகள் நன்மையையே கொண்டு வந்திருக்கின்றன. வெள்ளம் வரும் என அவர் எச்சரிப்பு விடுத்ததை நிறைவேற்றாமல் போனாரா? இல்லை சோதோம் கொமாராவின் அழிவைக் குறித்ததான தமது வார்த்தைகளை நிறைவேற்றவில்லையா? அவருடைய வார்த்தைகளை நம்பாத எருசலேமைக் குறித்த வார்த்தைகளை நிறைவேற்றத் தவறினாரா? யூதர்களைக் குறித்து சொல்லப்பட்டவை இதுவரை நிறைவேறவில்லையா? அவர் ஒருபோதும் தமது வார்த்தைகளை நிறைவேற்றத் தவறவே மாட்டார். ஜாக்கிரதையாயிருங்கள். அவருடைய வார்த்தைகளை அவமதிப்பவர்களின் மத்தியிலே நீங்களும் காணப்படாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
தேவபக்தியைக் குறித்து ஒருபோதும் அவமதித்து சிரிக்காதீர்கள். பரிசுத்த காரியங்களை அவமதிப்பு செய்யாதீர்கள். தங்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து கவலையுடையவர்களாய் அதற்காக பாரத்தோடு இருக்கிறவர்களை ஏளனம் செய்யாதீர்கள். யாரை வருத்தம் நிறைந்தவர்களாய் இப்போது நீங்கள் காண்கிறீர்களோ அவர்கள் மிகுந்த சந்தோஷ வெள்ளத்தில் திளைத்திருப்பதைக் காணும் காலம் வரும். அந்த நேரத்திலே நீங்கள் இப்போது சிரித்த சிரிப்புகளெல்லாம் மாறிப்போய் வருத்தத்தை ஏற்படுத்துவதை உணருவீர்கள். உங்களுடைய அவமதிப்பு, ஏளனம் கும்மாளம் யாவும் இருதயத்தில் மிகுந்த பாரமாக அழுத்துவதை உணருவீர்கள்.
ஈ) மனித கருத்தைப் பற்றிய பயம்
மனிதர்களின் கருத்துக்களுக்கு ஒத்துப்போவது இளைஞர்கள் சந்திக்கும் மற்றொரு ஆபத்து “மனிதர்களுக்கு பயப்படுதல் கண்ணியை வருவிக்கிறது.” (நீதிமொழிகள் 29:25) இது பெரும்பாலான மக்களுடைய மனதை ஆளுகின்ற வல்லமையைக் கொண்டிருப்பதைக் காண்கையில் பயங்கரமாயிருக்கிறது. அதிலும் முக்கியமாக இளைஞர்களின் மனதை அது ஆளுகை செய்கிறது. தங்களுடைய சொந்தக் கருத்துக்களை உடையவர்கள் சொற்பமாகத்தான் இருக்கிறார்கள். தாங்களாக சுயமாக சிந்திப்பதும் சிலபேர்தான் செத்த மீன்களைப் போல ஆற்றின் போக்கிலேயே அடித்துச் செல்வப்படுபவர்கள் போலத்தான் பலரும் இருக்கிறார்கள். பொதுவாக எல்லோரும் எதை சரியென்று சொல்லுகிறார்களோ அது இவர்களுக்கும் சரியாகப்படும் மற்றவர்கள் தவறு எனக் கூறுவதை இவர்களும் தவறுதான் என சாதித்துவிடுவார்கள். இந்த உலகத்தில் தாங்களாக சிந்திக்கக் கூடிய சிந்தனாவாதிகள் அதிகம் இல்லை. மனிதர்கள் யாவரும் ஆடுகளைப் போல இருக்கிறார்கள். ஒரு ஆடு போகிற பாதையிலே எல்லா ஆடுகளும் போவது போல, ஒரு தலைவனின் பிறகே கூட்டம் கூட்டமாக செல்லவே விரும்புகிறார்கள். ரோமரின் நாகரீகம் ஓங்கி இருந்தால் எல்லாரும் அதைப் பின்பற்றுவார்கள். அல்லது முகமதியர் நாகரீகம் பிரபலமானால் உடனே அனைவரும் அதற்குத் திரும்பிவிடுவார்கள். உலகத்தார் போகிற போக்கிற்கு சிந்திக்கவோ எதிராக செயல்படவோ மிகவும் பயப்படுவார்கள். உலகம் என்ன நினைக்கிறதோ அதுதான் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தை அதுதான் அவர்களுடைய சட்டம் அதுவே வேதப்புத்தகம், அதுவே அவர்களின் தேவன்.
“என்னுடைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள்” என்கிற சித்தனையே அநேக நல்ல செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கூடியதாக இருக்கிறது. மற்றவர்கள் பார்ப்பார்களே, சிரிப்பார்களே ஏளனம் செய்வார்களே என்கிற எண்ணம் பலரை நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ளவிடாமல் தடை செய்கிறது மற்றவர்களுக்கு பயப்படுவதால், அநேக வேதபுத்தகங்கள் இன்றைக்கு அதனுடைய சொந்தக்காரர்களால் படிக்கப்படாமலேயே இருக்கிறது அதைப் படிப்பது அவசியம் என்பது அவர்களுக்குத் தெரியும் ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ?' என்கிற பயம் அதைத் தடை செய்கிறது. அநேக முழங்கால்கள் இன்று இரவிலே ஜெபிப்பதற்கு முடங்காமல் இருக்கிறது. "நான் ஜெபிப்பதை என் மனைவியோ சகோதரனோ, நண்பனோ பார்த்தால் என்ன சொல்லுவார்கள்?" என்கிற பயம் தேவனிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறது. என்ன பரிதாபம்! என்ன மோசமான அடிமைத்தனம்! இந்த குணம் எல்லாரிடமும் பரவி நிறைந்திருக்கிறது 'நான் ஜனங்களுக்கு பயந்து அவர்கள் சொல்லைக் கேட்டேன்" (சாமுவேல் 15:24) என்று ராஜாவாகிய சவுல், சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கூறுகிறான் ஜனங்களுக்கு பயந்ததினால் அவன் தேவனுடைய கட்டளையை மீறி நடந்தான். இன்னொரு ராஜா, அவன் யூதாவின் ராஜா இவனும் யூதர்களுக்கு பயந்ததினால் தனக்கு எரேமியா தீர்க்கதரிசி கொடுத்த ஆலோசனையின்படி நடக்காமல் போனான் சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: யூதரின் கையிலே என்னை ஒப்புக்கொடுப்பார்களோ என ஐயப்படுகிறேன் என்றான் (எரேமியா 38-19), ஏரோது விருந்து பண்ணினபோது நடந்தது என்ன? அவன் தனது விருந்தினர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என பயந்ததினால் தான் செய்கிற காரியம் சரியல்ல என்பது தெரிந்திருந்துங்கூட யோவான் ஸ்நான்கனின் தலையை தட்டிலே எடுத்து வரக் கட்டளையிட்டான். அது பிற்காலத்திலே அவனுக்கு மிகுந்த விசனத்தைக் கொடுத்தது யூதர்களைப் பகைத்துக் கொள்வதை விரும்பாத பிலாத்து, தான் அநியாயமாகத் தீர்ப்பளிக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும், குற்றமேயில்லாத இயேசுக்கிறிஸ்துவை கொலை செய்யப்பட யூதர்களின் கையிலே ஒப்புக் கொடுத்தான். மனிதனுடைய கருத்துக்களுக்கு பயப்படுகிற இந்த தன்மையை அடிமைத்தனம் எனக் குறிப்பிடாமல் வேறு எப்படி கூறுவது?
இளைஞர்களே, நீங்கள் எல்லாரும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமன நான் விரும்புகிறேன். உங்களுடைய கடமை என்னவென்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்போது, மனிதர்களுடைய கருத்துகளுக்கு இடம் கொடாதிருங்கள். ‘முடியாது’ என்று சொல்பவன்தான் மிகுந்த துணிச்சல்காரன் யூதாவின் ராஜாவாகிய யோசபாத் என்பவன் நல்லவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் பலவீனனாய் இருந்தான். முடியாது என்றும் மாட்டேன் என்றும் சொல்வதற்கு பயந்தபடியினால் அவன் இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபின் சொற்படியெல்லாம் கேட்டு பலவிதமான ஆபத்துகளில் சிக்கிக் கொண்டான். (1 இராஜாக்கள் 22:4), இளைஞர்களே, தீமையான காரியங்களுக்கு 'முடியாது. ‘மாட்டேன்’ என்று தைரியமாக சொல்லக்கூடிய துணிச்சல்காரர்களாக இருங்கள். மற்றவர்கள் மாதிரி செய்யாவிட்டால் நன்றாக இருக்காதே என்கிற பயம். உங்களை சரியானதை செய்யவிடாமல் ஆக்குவதை அனுமதிக்காதீர்கள், பாவிகள் உங்களைத் தீமையான காரியங்களில் ஈடுபட வலியுறுத்தும்போது. மிகுந்த உறுதியோடு அதற்கு சற்றும் இடங்கொடாதிருக்கப் பழகுங்கள் (நீதிமொழிகள் 1:10)
இப்படியாக மனிதருக்குப் பயப்படுதல் எவ்வளவு அநியாயமாயிருக்கிறது! அப்படியே அவர்கள் எவ்வளவு உங்களை விரோதித்துவிட்டாலும் எவ்வளவு காலத்துக்கு அந்த விரோதம் நிலைநிற்கும்? மற்றவர்கள் கூறியபடி நீங்கள் செய்யாமற் போவதால் அவர்களால் உங்களுக்கு என்ன தீங்கு விளைவித்துவிட முடியும்? 'நான். நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். சாகப்போகிற மனுஷனுக்கும். புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும். வானங்களை விரித்து. பூமியை அஸ்திபாரப்படுத்தி. உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது. நீ அவனுடைய உக்கிரத்திற்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? (ஏசாயா 51:12.,13). இப்படி மனிதருக்குப் பயப்படுகிற பயம் என்ன பலன்களை அளித்துவிடப் போகிறது? நீ அவர்கள் கூறியபடி நடந்துவிட்டதால் யாரும் உன்னைப் போற்றிக் கொண்டாடப் போவதில்லை. தேவனுக்கென்று தைரியமாக வாழ்பவர்களுக்குத்தான் மரியாதை கிடைக்கும். ஆகவே இந்த அடிமைத்தன சங்கிலிகளைக் கழற்றி வீசி எறியுங்கள். நீ பரலோகத்திற்குப் போவதில் விருப்பம் கொண்டிருப்பவன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியாக வாழ்வதைக் குறித்து ஒருபோதும் வெட்கம் அடையாதே. உங்களை தேவனின் அடிமையாகக் காண்பிப்பது இழிவானது என எண்ணாதீர்கள். சரியானதைச் செய்வதற்கு ஒருபோதும் பயம் அடையாதீர்கள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை ஞாபகத்தில் வையுங்கள். 'ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்' (மத்தேயு 10:28). தேவனை மட்டுமே பிரியப்படுத்தப் பாருங்கள். அப்போது அவர். மற்றவர்களும் உங்களோடு சமாதானமாயிருக்கும்படி செய்வார். “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானம் ஆகும்படி செய்வார்” (நீதிமொழிகள் 16:7).
இளைஞர்களே, நல்ல துணிவுள்ளவர்களாயிருங்கள். உலகம் என்ன சொல்லுகிறது. என்ன நினைக்கிறது என்பதைக் குறித்து கவலைப்படாமல் இருங்கள் நீங்கள் எப்போதும் இந்த உலகத்திலேயே இருக்கப் போவதில்லை மனிதர் உங்கள் ஆத்துமாலைக் காப்பாற்றக் கூடுமா? இல்லையே கணக்கொப்புவிக்க வேண்டிய அந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பின் நாளிலே மனிதனா உங்களை நியாயந்தீர்க்கப் போகிறான்? வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல மனசாட்சியையும் மரணத்தில் ஒரு நல்ல நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் காலையிலே சரியான பலன்களையும் தரக்கூடியது மனிதர் கையிலா இருக்கிறது? இல்லவே இல்லை மனிதனால் இவை எதையுமே செய்ய முடியாது ஆகவே நீதியை அறிந்தவர்களே என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே எனக்கு செவி கொடுங்கள். மனிதரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள் பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தை போல அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப் போலத் தின்னும்' (ஏசாயா 51:7,8) ஜேம்ஸ் கார்டினர் என்பவர் கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். 'நான் தேவனுக்குப் பயப்படுகிறபடியால் வேறு யாருக்கும் நான் பயப்பட அவசியமில்லை' நீங்களும் அவரைப் போலவே இருங்கள்.
இந்த எச்சரிப்புகளையே நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவைகளை மனதில் வையுங்கள் அவைகளை மீண்டும் மீண்டுமாக சிந்தித்துப் பார்ப்பது நன்மையைத் தரும். இவைகள் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் இவைகளை நான் வீணிலே கொடுத்திராதபடிக்கு தேவன்தாமே அதை பயன்படச் செய்வாராக.
மூன்றாவதாக, இளைஞர்களுக்கு சில பொதுவான ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.
அ) பாவத்தின் தீமையைப் பாருங்கள்
பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இளைஞனே! பாவம் என்பது என்ன என்பதையும். அது என்னவெல்லாம் செய்யும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தாயானால், நான் எதற்காக இப்படி புத்தி சொல்லுகிறேன் என்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட மாட்டாய். பாவத்தின் உண்மையான தோற்றம் என்னவென்பதை நீ அறியாமல் இருக்கிறாய், அதன் பயங்கரத்துக்கு உனது கண்கள் அடைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் ஏன் உன்னைக் குறித்து இவ்வளவு கவலைப்படுகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய், அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று கூறி சாத்தான் உன்னை மேற்கொண்டுவிடாதபடி காக்கப்படுவாயாக.
பாவத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை சற்று ஆராய்வோம்:
உயிரோடிருக்கிற ஒவ்வொரு ஆனும் பெண்ணும் சுபாவத்திலேயே
பாவமுடையவர்களாய் இருக்கிறார்கள் ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலே இல்லை (பிரசங்கி 7:20) எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகி (ரோமர் 3:23)
பாவமானது நமது எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும் விடாமல் தொடர்ந்து கெடுத்துக் கொண்டேயிருக்கிறது. மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே (ஆதியாகமம் 6:5) இருதயத்திலிருந்து கொலைபாதகங்களும், பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும். களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும். (மத்தேயு 15:19)
பாவமானது பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்மைச் குற்றமுள்ளவர்களாகவும் அறுவெறுக்கத் தக்கவர்களாகவும் நிறுத்தியிருக்கிறது. நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல் இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையைப் போல் இருக்கிறது. (ஏசாயா 64:6) தீமையைப் பார்க்க மாட்டாத சுத்த கண்ணணே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே (ஆப்கூக் 1:13)
நம்மை நாமே நோக்கிப் பார்க்கும்போது, இரட்சிப்படையும் நம்பிக்கை அற்றவர்களாக பாவம் நம்மை ஆக்கியிருக்கிறது. ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே. அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும் (சங்கீதம் 143.2) எந்த மனுஷலும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை (ரோமர் 3:20)
பாவமானது, இந்த உலக வாழ்க்கையிலே அவமானத்தையும் மறுஉலக வாழ்க்கையிலே மரணத்தையும் கொடுப்பதாக இருக்கிறது. இப்பொழுது வெட்கமாகத் உங்களுக்கு தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்திலே உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:21,23)
இவைகளைக் குறித்து நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். அறியாமையினாலே அழிந்துபோன மனிதர்களைக் காட்டிலும், உயிரோடே இருந்து இன்னமும் அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்.
சிந்தித்துப் பாருங்கள். தேவன் பூமியின் மண்ணிலிருந்து எடுத்து உருவாக்கிய முதலாம் மனிதனைப் போல இன்று யாருமே இல்லை. அவன் பாவமே கடவுளின் கரத்திலிருந்து உருவாக்கப்பட்டிருந்தான் தேவன் 'இதோ, இல்லாதவனாக மனுஷனை செம்மையானவனாக உண்டாக்கினார். அவர்களோ அநேக உபாய் தந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள் (பிர 7:29) அவன் படைக்கப்பட்ட நாளிலே. மற்ற எல்லா சிருஷ்டிகளையும் போலவே. அவனையும் தேவன் 'மிகவும் நல்லது' என்று கண்டார் (ஆதியாகமம் 1:31) ஆனால் மனிதனின் நிலமை இப்போது எப்படியிருக்கிறது?
விழுந்துபோன ஒரு சிருஷ்டிப்பாக, அழிக்கப்பட்டவனாக, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சீர்கேடுகளையே காண்பிக்கிறவனாக அவன் மாறிப்போனான்.
அவனுடைய இருதயம் நேபுகாத் நேச்சாரைப் போல மகிமையிழந்ததாகவும், மண்ணுக்குரியதாகவும், மேலே பார்க்கக் கூடாமல் கீழானவைகளையே நோக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
அவனுடைய மனநிலை, எஜமான் இல்லாததால் ஒரே குழப்பமும் கட்டுப்பாடற்ற தன்மையுமாக இருக்கின்ற ஒழுங்கற்ற வீட்டைப் போல ஆகிவிட்டது.
அவனுடைய அறிவு மங்கி எரிகிற விளக்கைப் போல முழுவதும் அணைந்துவிடுகிறதான நிலையில் இருக்கிறது. அந்த வெளிச்சம் அவளை வழிநடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. நன்மை எது. தீமை எது என்பதை பகுத்தறியக் கூடாதவனாக அவன் இருக்கிறான். அவனுடைய விருப்பங்கள். சுக்கான் இல்லாத கப்பலைப் போல அலைக்கழிக்கப்படுவதால் பலவிதமான ஆசைகளின் நடுவே அவன் போராடிக் கொண்டிருக்கிறான். தேவனின் வழிவகைகளைத் தவிர்த்து. தனது சுயசித்தத்தின்படியான சகலவிதமான ஆசை இச்சைகளை நோக்கியே அவனது முழு கவனமும் இருக்கிறது.
அந்த பரிதாபம் எப்படி இருந்திருக்க வேண்டிய மனிதன் இன்று எப்படி இருக்கிறான்? மனிதனின் நிலையை ஆவியானவர் இன்று பல வார்த்தைகளால் விளக்க வேண்டியதாயிருக்கிறது. குருடன். செவிடன் நோயுற்றவன், நித்திரையடைந்தவன், மரித்துப் போனவன் இப்படியாக அவளது நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நிலையை அவனில் ஏற்படுத்தியது பாவம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பாவிகளான இவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு என்னவிதமான பரிகார பலி தேவைப்பட்டது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய சர்வ மகிமை பொருந்திய குமாரன் இந்த உலகத்திலே வர வேண்டியதாயிருந்தது. அவர் நம்மைப் போன்ற பாவமனுஷ சாயலைத் தரித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. நம்மை சாபங்களிலிருந்து மீட்க, நமது மீட்புக்கான ஒரு விலையை செலுத்துவதற்காக குமாரன் இவ்வுலகிலே மனிதனாக அவதரிக்க நேர்ந்தது. அவர் ஆதிமுதலாய் பிதாவோடு இருந்தவர். அவர் மூலமாகவே சகலமும் உருவாக்கப்பட்டதான மகிமையுள்ள நிலையில் இருந்தவர். பாவத்தினிமித்தமாக பாடுபடவும், அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ள அவர் துயரப்படவும். பரலோகத்திற்கான பாதை திறக்கப்படுவதற்காக குற்றமில்லாத அவர் குற்றவாளியைப் போல மரிக்கவும் வேண்டியதாயிற்று. தேவனுடைய குமாரனாகிய இந்த இயேசுவை, பாவிகளாகிய மனிதர்கள் அசட்டை பண்ணினார்கள் அவரைப் புறக்கணித்தார்கள் வாரினால் அடித்தார்கள். பரிகாசம் பண்ணினார்கள் அவமதித்தார்கள் அவர் கல்வாரி சிலுவையிலே இரத்தம் வடியத் தொங்கினதை நினைத்துப் பாருங்கள் வேதனையோடு. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்று சத்தமிட்டதை சற்று யோசித்துப் பாருங்கள். அந்தக் காட்சியைக் காண சகிக்காமல் சூரியன் இருளடைந்ததையும், பூமி அதிர்ந்ததையும் பாருங்கள். அப்படியானால் பாவத்தின் அகோரம் எவ்வளவு கடுமையானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஏற்கனவே பாவம் பூமியில் எதை நடப்பித்திருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள் ஆதாமையும் ஏவாளையும் கடவுளின் பிரசன்னத்திலிருந்து துரத்தி விட்டிருந்தது. பழைய உலகத்தை வெள்ளத்தினால் அழித்துப் போட்டது. சோதோம் கொமாராவின் மேல் அக்கினியையும் கந்தகத்தையும் வருவித்து அழித்துப் போட்டது. பார்வோனையும் அவனுடைய சேனையையும் செங்கடலிலே அமிழ்த்திப் போட்டது. கானானில் இருந்த ஏழு பொல்லாத தேசங்களை அழித்துப் போட்டது. இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினது. இதற்கெல்லாம் மூலகாரணம் பாலம் மாத்திரமே.
மேலும் பாவம் ஏற்படுத்தின. ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் துன்பங்களையும் துயரங்களையும் யோசித்துப் பாருங்கள் வலி வியாதி. மரணம், விரோதம், சண்டை, பிரிவுகள், பகை, பொறாமை வெறுப்பு. குது ஏமாற்று வஞ்சகம், கொடூரம். அடக்குமுறை, திருட்டு. சுயநலம். அன்பில்லாமை, நன்றியற்ற தன்மை இவை யாவும் பாவம் பிறப்பித்திருக்கும் களிகள். இவைகளைப் பெற்றெடுத்தது பாவமே. தேவனின் உன்னத சிருஷ்டிப்பைக் கெடுத்து அந்த சிருஷ்டிப்பின் முகத்தில் கரியைப் பூசியிருப்பது இந்த பாவமே
வாலிபரே, இவைகளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். பிறகு நாங்கள் ஏன் பிரசங்கிக்க வருகிறோம் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். நீங்கள் மாத்திரம் இவைகளை நன்றாக சிந்தித்து அறிந்து கொண்டுவிட்டீர்களானால், பாவத்தை ஒருபோதும் உங்கள் அருகில் வருவதற்கு விடவே மாட்டீர்கள். விஷத்தோடு விளையாடுவீர்களா? நரகத்தோடு விளையாட முடியுமா? உங்கள் கரங்களில் நெருபபை எடுத்துக் கொண்டு செல்வீர்களா? உங்களுடைய மிகப்பெரும் விரோதியை உங்கள் மார்போடு கொள்வீர்களா? உங்களுடைய பாலம் அணைத்துக் மன்னிக்கப்பட்டால் என்ன. மள்ளிக்கப்படாவிட்டால் என்ன என்கிற அலட்சியப் போக்கோடு தொடர்ந்து வாழுவீர்களா? பாலம் உங்களை மேற்கொள்ளுவதேர் அல்லது நீங்கள் பாலத்தை மேற்கொள்ளுவதோ உங்களுக்குப் பெரிய காரியமில்லையா? ஓ! பாலத்தின் அகோரத்தையும் பயங்கரத்தையும் குறித்ததான உணர்ச்சியை அடையும்படிக்கு விழித்துக் கொள்ளுங்கள். சாலமோனின் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்: 'மூடர் பாவத்தைக் குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள் (நீதிமொழிகள் 149).
இன்றைக்கு நான் உங்களை வேண்டிக் கொள்வதை கவனியுங்கள்: பாவத்தின் உண்மையான அகோரத்தைக் காண்பிக்கும்படியாக தேவனிடம் ஜெபியுங்கள். உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்பட்ட பிள்னால் எழும்பி அதற்காக நன்றி செலுத்தி ஜெபியுங்கள்.
ஆ) கிறிஸ்துவின் மகத்துவத்தை அறிய நாடுங்கள்
இளைஞர்கள் இயேசு கிறிஸ்துவோடு உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
தேவபக்தியின் முக்கிய கொள்கையே இதுதான். கிறிஸ்தவத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது இயேசுவோடுள்ள தொடர்பு இதை நீங்கள் உணர்ந்து கொள்ளாவிட்டால் என்னுடைய எச்சரிப்புகளும் அறிவுரைகளும் பிரயோஜனமற்றது நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணானது. ஒரு கடிகாரத்தில் முக்கியமான பாகம் இல்லாவிட்டால்கூட அதை சரிசெய்து விடலாம் ஆனால் இயேசுக்கிறிஸ்து இல்லாத தேவபக்தியை சரிசெய்யவே முடியாது.
நான் கூறுவதை தவறாக விளங்கிக் கொள்ளவேண்டாம். இயேசுக்கிறிஸ்து என்கிற ஒருவரை பெயரளவில் தெரிந்து வைத்திருப்பதை நான் குறிப்பிடவில்லை. அவருடைய இரக்கத்தையும், கிருபையையும், வல்லமையையும் அறிந்து கொள்ளுதலைக் குறிப்பிடுகிறேன். மேலும் வெறுமனே காதுகளால் கேட்பது மாத்திரமல்ல, இருதயத்திலும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம் அவரை நீங்கள் விசுவாசத்தினாலே அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். பவுல் கூறுவதுபோல அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும். அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகும்படி' என்கிற விதத்தில் அவரை அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். அவரே என்னுடைய சந்தோஷம் என் பெலன், என் ஜீவன் என் ஆறுதல், அவரே என்னை குணமாக்குபவர். என மேய்ப்பர். எனது இரட்சகர் எனது தேவன் என்று நீங்கள் சொல்லத்தக்கவர்களாக வேண்டுமென விரும்புகிறேன்.
நான் ஏன் இதை முக்கியமாகக் கூறுகிறேன் தெரியுமா? ஏனென்றால் கிறிஸ்துவில்தான் 'சகல பரிபூரணமும் வாசமாயிருக்கிறது (கொலோசியர் 1:19) நமது ஆத்துமாவுக்குத் தேவையான சகல காரியங்களும் அவரில்தான் நிறைந்து இருக்கிறது. நாமோ ஒன்றுமில்லாத பூஜ்யங்கள். ஏதுமற்ற ஜந்துக்கள் நீதியோ சமாதானமோ சற்றும் இல்லாதவர்கள், பெலனோ, ஆறுதலோ அற்றவர்கள். தைரியமில்லாதவர்கள் பொறுமை இல்லாதவர்கள். இந்த பாவ உலகில் நிற்பதற்கோ தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கோ திடனற்றவர்கள் கிறிஸ்துவில் மாத்திரமே மேற்கூறிய அனைத்து காரியங்களும் நிறைந்து காணப்படுகிறது. கிருபை சமாதானம் ஞானம், நீதி பரிசுத்தம், மீட்பு ஆகிய எல்லாம் கிறிஸ்துவில் உண்டு அவரை நாம் எவ்வளவுக்கு சார்ந்து வாழுகிறோமோ அவ்வளவுக்கு உறுதியான கிறிஸ்தவர்களாக இருப்போம் நாம் ஒன்றுமேயில்லை. கிறிஸ்துதாள் என் நம்பிக்கை என நாம் வாழும்போதுதான் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும் அப்போதுதான் வாழ்க்கில் போராட்டத்திற்குரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகத் காணப்பட்டு அதை மேற்கொள்ளுவோம். அதுதான் நமது வாழ்க்கை பயணத்தில் முன்னேறிச் செல்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும் ஆவிக்குரிய முன்னேற்றத்தின் இரகசியத்தை நான் கூறவா? கிறிஸ்துவில் வாழுங்கள். கிறிஸ்துவிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக கொள்ளுங்கள் அவருடைய பெலத்தினாலே எல்லாவற்றையும் செய்யுங்கள். எப்போதும் கிறிஸ்துவையே மாதிரியாகக் கண்ணோக்கியவர்களாக இருங்கள் என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு (பிலிப்பியர் 4:13) என்று பவுல் சொல்லுகிறார்.
இளைஞர்களே, உங்களுடைய ஆத்துமாவின் பொக்கிஷமாக இன்று நாள் உங்களுக்கு முன்பாகக் கிறிஸ்துவையே வைக்கிறேன். அவரிடம் செல்லும்படியாக நாள் உங்களை அழைக்கிறேன். கூடுமானால் விரைந்து ஓடி அவரிடமிருந்து தன்மையானவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் கிறிஸ்துவிடம் செல்ல வேண்டுமென்பதே உங்களுடைய முதல் படியாக இருக்கட்டும் ஆலோசனை கேட்கத் தக்க நல்ல நண்பன் வேண்டுமா? இயேசுவே மிகவும் நல்ல நண்பர் 'சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவனும் உண்டு (நீதிமொழிகள் 18:24)
உன்னுடைய பாவங்களினிமித்தமாக நீ அவரிடம் வரத் தகுதியற்றவன் என நினைக்கிறாயா? பயப்படாதே. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கிறது. உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும் (ஏசாயா 1:10) என அவர் கூறியிருக்கிறார்.
நீங்கள் மிகவும் பலவீனமாகவும் அவரைப் பின்பற்ற முடியாதவர்களாகவும் இருப்பதாக நினைக்கிறீர்களா? அஞ்ச வேண்டாம். நீங்கள் அவருடைய பிள்ளைகளாக ஆவதற்கு அவர் பெலனைக் கொடுப்பார். உங்களிடத்தில் வாசமாயிருப்பதற்குத் தமது பரிசுத்த ஆவியைத் தந்து, தம்முடையவர்களாக முத்திரையிடுவார். உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களில் ஒரு புதிய ஆவியையும் வைப்பார்.
தளர்ந்து போன ஆவியை உடையவர்களாக இருப்பதாக எண்ணிக் கலங்குகிறீர்களா? பயம் வேண்டாம். இயேசுக்கிறிஸ்துவால் தூத்திவிட முடியாத எந்தக் கெட்ட ஆவியும் இல்லை. அவரால் குணப்படுத்த முடியாத எந்த ஆத்தும வியாதியும் இல்லை.
உங்களுக்கு சந்தேகங்களும் பயங்களும் ஏற்படுகிறதா? அவைகளைத் தள்ளிப் போட்டுவிட்டு இயேசுவிடம் வாருங்கள். என்னிடம் வருபவனை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை என்று அவர் கூறுகிறார். இளைஞர்களின் இருதயத்தை அவர் நன்றாகவே அறிவார். உங்களுக்கு இருக்கும் சோதனைகளையும் உங்கள் கஷ்டங்களையும் அவர் அறிவார். உங்களுடைய எதிரிகளையும் துயரங்களையும் அவர் நன்கு அறிவார் அவர் மாம்சத்தில் இவ்வுலகில் இருந்த நாட்களில் உங்களைப் போலவே வாலிபனாக நாசரேத்து என்னும் ஊரிலே வாழ்ந்தார். இளைஞர்களின் மனது எப்படியிருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். உங்களுடைய பலவீனங்களைக் குறித்து அவர் பரிதபிக்கிறவராய் இருக்கிறார். ஏனென்றால் அவரும் சகலவிதமான சோதனைகளாலும் சோதிக்கப்பட்டு பாடுபட்டார். “அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்” (எபிரேயர் 2:18) தம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எவ்விதத்திலும் நம்மைப் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராய் இருக்கிற பிரதான ஆசாரியரே தமக்கு இருக்கிறார்(எபிரேயர் 4:15) இப்படிப்பட்டதான இரட்சகரையும் நண்பனையும் விட்டு விலகிப் போவாயானால் நீ எந்த சாக்குப் போக்கும் சொல்ல முடியாது.
வாலிபனே என்னுடைய அறிவுரையைக் கேள்: நீ ஜீவனை விரும்பினாயானால், இயேசு கிறிஸ்துவோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்.
இ) ஆத்துமாவைக் காட்டிலும் முக்கியமானது வேறொன்றுமில்லை
இளைஞர்களே ஆத்துமாதான் மிகவும் முக்கியமானது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உங்கள் ஆத்துமா நித்தியமானது அது என்றைக்கும் அழியாமல் நிவைத்திருக்கும் இந்த உலகமும் அதிலுள்ளவைகள் யாவும் அழிந்து போகும். உலகமும் அதிலுள்ளவைகளும் எவ்வளவுதான் உறுதியாகவும் அழகாகவும், திடமாகவும் இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்து போகும்' (2 பேதுரு 3:10) நாட்டை நிர்வகிக்கிறவர்களின் திறமைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், நல்ல ஓவியங்கள், சிறந்த கட்டிடங்கள் யாவுமே கொஞ்ச காலத்திற்குத்தான் இருக்கும். ஆனால் உங்கள் ஆத்துமாவோ அதைக் காட்டிலும் அதிக காலம் வாழக்கூடியது. 'இனி காலம் செல்லாது' (வெளிப்படுத்தல் 10:6) என்று தேவதூதனுடைய சத்தம் ஒருநாள் அறிவிக்கும். அதாவது காலத்துக்கு ஒரு முடிவு உண்டு ஆனால் உங்கள் ஆத்துமாவைக் குறித்து அப்படி சொல்லப்படவில்லை.
உங்கள் ஆத்துமாவுக்காகவே நீங்கள் வாழவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளும்படியாக வேண்டிக் கொள்கிறேன். அது உங்களில் இருக்கிறது. நீங்கள் அதற்கே முதலாவது இடத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம் உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்துகிறதான எந்த இடமோ வேலையோ உங்களுக்கு நல்லதல்ல உங்கள் ஆத்துமாவை அவட்சியப்படுத்துகிற எந்த நண்பனோ, உறவோ நம்பத் தகுந்தவர்களல்ல. உங்களையும் உங்கள் சொத்துக்களையும், உங்கள் மனதையும் புண்படுத்துகிறவர்கள் தற்காலிகமான தீங்கைதான் உங்களுக்கு விளைவிக்க முடியும். ஆனால் உங்கள் ஆத்துமாவைக் கெடுக்கிறவனே உண்மையான எதிரியாவான்.
நீங்கள் இந்த உலகத்திற்குள் எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் சாப்பிடுவதற்கும். குடிப்பதற்கும். மாசத்துக்கு சந்தோஷம் அளிக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்காகவும் அல்ல, மாம்சம் எப்படியெல்லாம் உல்லாசமாக செயல்பட நினைக்கிறதோ அதன் வழிகளில் சென்று கேளிக்கைகளில் மூழ்கியிருப்பதற்குமல்ல. அல்லது வேலை பார்ப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், கதைபேசி சிரித்து சந்தோஷமாக நேரத்தை செலவிட்டு. எதைக் குறித்தும் சிந்திக்காமல் வாழ்ந்து முடிப்பதற்கும் அல்ல இவைகளைக் காட்டிலும் மேலான, சிறந்த ஒரு நோக்கத்திற்காக நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். நித்திய வாழ்க்கைக்குப் பயிற்சி பெறுவதற்காக நீங்கள் இவ்வுலகில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். அழியாத ஆவிக்கு இவ்வுலகில் ஒரு இருப்பிடம் தேவை என்பதற்காக மாத்திரமே உங்களுக்கு ஒரு சரீரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சரீரத்தை ஒடுக்கி அதை ஆத்துமாவுக்கு அடிமையாக்குவது உங்கள் வேலை. சரீரமானது ஆத்துமாவை ஆளும்படியாக விடக்கூடாது சரீரத்திலிருந்து உங்கள் ஆத்துமா தேவனைத் துதிக்க வேண்டும். நமது வினாவிடைப் புத்தகத்தில் காணப்படும் முதலாவது வினாவிடை மிகவும் போற்றக்கூடியதாக இருக்கிறது. மனிதனின் பிரதான நோக்கம் என்ன? என்கிற கேள்விக்கு கடவுளை மகிமைப்படுத்துவதும், அவரில் எப்போதும் சந்தோஷமாயிருப்பதுவுமே என்கிற விடை அளிக்கப்பட்டிருக்கிறது.
வாலிபரே தேவன் மனிதர்களின் முகத்தைப் பார்த்து அவர்களை மதிக்கிறவரல்ல. ஒருவனுடைய விலையேறப்பெற்ற அலங்காரமான உடையோ அவனுடைய பணமோ, அவனுடைய பதவியோ, தகுதியோ அவருக்கு ஒரு பொருட்டல்ல, மனிதர் பார்க்கும் விதமாக அவர் பார்ப்பதில்லை. மிகவும் பணக்காரனாகிய ஒரு பாவி தனது மாளிகையில் மரிப்பதைக் காட்டிலும், ஏழையான ஒரு பரிசுத்தவான் தனது குடிசையிலே மரிப்பது அவர் கண்களில் உயர்வாகக் காணப்படும் கடவுள் ஒருபோதும் ஐசுவரியத்தையோ, பட்டங்களையோ, உலகக் கல்வியையோ. அழகையோ, இதுபோன்ற எந்தக் காரியங்களையோ பார்ப்பவரல்ல. கடவுள் நம்மிடம் பார்க்கிறதான ஒரே காரியம் என்றும் அழியாததான ஆத்துமாவையே எல்லா மனிதரையும் அவர் ஒரேவிதமான அளவுகோலினாலே ஒரே தராசினால், ஒரேவிதமான பரீட்சையினாலே. ஒரே நிபந்தனையினாலேதான் அளவிடுகிறார். அவனுடைய ஆத்துமாவின் நிலை என்ன என்பதையே அவர் நோக்குகிறார்.
இதை மறக்காதீர்கள் காலையிலும், மதியத்திலும், இரவிலும் உங்கள் ஆத்துமாவைக் குறித்ததான சிந்தனையே உங்களில் இருக்கட்டும் ஒவ்வொரு நாளின் காலையிலும் எழும்போது, இன்றைக்கு இன்னும் முன்னேற வேண்டுமென வாஞ்சியுங்கள் அன்று இரவிலே படுக்கும் முன்பாக இன்று முன்னேறியிருக்கிறேனா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் Zeuxis என்கிறவர் மிகவும் பிரபலமான கிரேக்க ஓவியர். இவர் தமது ஒவ்வொரு ஓவியத்தையும் மிகவும் சிரமம் எடுத்து வரைவார். ஏன் இவ்வளவு சிரமம் எடுத்து வரைகிறீர்கள் என்று கேட்பவர்களிடம் எனது ஓவியங்கள் நித்தியத்துக்கும் அழியாமல் இருக்க வேண்டுமென்பதற்காக' என்று பதில் சொல்லுவார். அவரைப் போலிருப்பதற்கு வெட்கப்படாதீர்கள் அழியாத உங்கள் ஆத்துமாவை எப்போதும் உங்கள் மனக்கண்களின் முன்னால் நிறுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இவ்விதமாக வாழுகிறீர்கள் என்று கேட்டால். "நான் என்னுடைய ஆத்துமாவுக்காக அப்படி வாழுகிறேன்' என்று சொல்லுங்கள், தங்கள் ஆத்துமாவைக் குறித்து மனிதன் கவலைப்படும் நாள் விரைத்து வருகிறது. அன்றைக்கு அவன் கேட்கப் போகும் ஒரே கேள்வி, என்னுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அழிந்துவிட்டதா?' என்பதே
ஈ) தேவனுக்கு சேவை செய்தல்
இளைஞர்களே நீங்களும் தேவனுக்கு ஊழியம் செய்யலாம் என்பதை மறந்துவிடாதீர்கள் இந்தக் கருத்துக்கு விரோதமாக சாத்தான் அநேக தடைகளைக் கொண்டுவருவான் என்பதில் சந்தேகமில்லை. வாலிப வயதில் உண்மையான கிறிஸ்தவளாக இருக்க முடியாது என்கிற வீணான சிந்தனைகளை உங்கள் மனதில் நிரப்புவான். இந்த வஞ்சனையில் சிக்கிக் கொண்டவர்கள் அநேகர் என்பதை அறிவேன் உலகத்தார் என்ன சொல்லுவார்கள்: வாலிபப் பிராயத்தினரிடம் பக்தியை எதிர்பார்ப்பது அளவுக்கதிகமன்றோ? வாலிப வயதில் பக்தி வழிகளில் தீவிரமாக இறங்கக் கூடுமோ? எங்களுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிகவும் உறுதியானவை. நீங்கள் எதிர்பார்ப்பது போல அவைகளையெல்லாம் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம். தேவன் எங்களை சந்தோஷமாக இருக்கும்படிக்கே படைத்திருக்கிறார். வயதாகும்போது நாங்களும் பக்தி வழிகளில் சிறிது சிறிதாக ஈடுபடுவோம் இதுமாதிரியான பேச்சுகளை உலகத்தார் மிகவும் ஆதரிக்கிறார்கள் உலகம் வாலிப வயதினரின் பாவங்களைக் கண்டுகொள்வதேயில்லை. 'இதெல்லாம் வயசுக்கோளாறுகள். வயது ஏறினபின் சரியாகிவிடும். இதிலெல்லாம் அடிபட்டுத்தான் இளைஞர்கள் வரவேண்டும்' என்று கூறி உலகத்தார் அவர்களுடைய பாவநிலையை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். இளைஞர்கள் பக்தியாக இருக்க வேண்டியதில்லை. அவர்களால் கிறிஸ்துவை இப்போது பின்பற்ற முடியாது என்கிற ரீதியில் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லிவிடுகிறார்கள்.
இளைஞர்களே, நான் உங்களை ஒரு எளிமையாள கேள்வி கேட்கிறேன். கர்த்தருடைய வேதத்தில் எங்காவது இந்த மாதிரியான கருத்துத் தென்படுகிறதா? உலகம் சொல்லுகிற காரணங்களை விதமாக வேதாகமத்தில் எந்தப் புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கூறுங்களேன். வேதாகமம், இளைஞர் - முதியோர் என்கிற வித்தியாசமில்லாமல் பேசுகிறது? பாவத்தை இருபது வயதில் செய்தாலும், ஐம்பது வயதில் செய்தாலும் பாவம் பாவந்தானே? நியாயத்தீர்ப்பின் நாளிலே, ஆம் கர்த்தாவே நான் பாவம் செய்தேன் என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதை எனது இளவயதில் அல்லவா செய்தேன்' என்று கூறி தண்டனைக்குத் தப்ப வழி இருக்கிறதா? உங்கள் அறிவை உபயோகித்து இந்தவிதமான வீண் கருத்துக்களையெல்லாம் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எது சரி எது தவறு என்பதை நீங்கள் அறியத் தொடங்கிய நாளிலிருந்து, தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
இளைஞர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறதென்பதையும் நான் அறிவேன் ஆனால் சரியான பாதையில் போவதென்பது சுலபமானதல்ல என்பதை வேதாகமம் சுட்டிக் காண்பிக்கிறது. பரலோகத்திற்குப் போகிற பாதை எப்போதும் குறுகலானது இளைஞருக்கும் முதியோருக்கும் அது குறுகலானதே பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும், அவைகளை மேற்கொள்ள தேவன் தமது கிருபைகளை அளிக்கிறார். தேவன் ஒரு கொடூரமான எஜமானன் அல்ல. பார்வோனைப் போல, வைக்கோலைத் தராமல் செங்கலை அறுக்கும்படி சொல்ல மாட்டார் (யாத்திராகமம் 5:16) நீங்கள் நடக்கின்ற பாதை அளவுக்கதிகமாக கடினமானதாக இருக்கும்படி விடமாட்டார். மனிதனால் நிறைவேற்ற முடியாத கட்டளைகளை ஒருபோதும் கொடுக்க மாட்டார் அவனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வார், 'மனுஷனுக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத் தக்கதாக, சோதனையோடேகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரிந்தியர் 10:13)
பிரச்சனைதான்! ஆனால் இதுவரைக்கும் எத்தனையோ இளைஞர்கள் அவைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆகவே உங்களாலும் முடியும், மோசே உங்களைப் போலவே ஆசைகள் நிறைந்த வாலிய வயதில் இருந்திருக்கிறார். அவரைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதைப் பாருங்கள்: 'விசுவாசத்தினாலே. மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடையம் குமாரத்தியின் மகள் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு. இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினாள்' (எபி 11:24-26). பாபிலோன் தேசத்தில் தானியேல் கடவுளுக்கு சேவை செய்ய ஆரம்பித்த போது இளைஞனாகத்தான் இருந்தார். அவரைச் சுற்றிலும் பலவிதமான சோதனைகள் இருந்தன. அவர் பட்சத்தில் இருந்தவர்களைக் காட்டிலும், விரோதிகள்தான் அதிகமாக இருந்தனர். இருந்தாலும் தானியேலின் வாழ்க்கையானது குற்றமற்றதாகவே தொடர்ந்து காணப்பட்டது. விரோதிகளால்கூட ஒரு தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 'இந்த தானியேலை அவனுடைய தேவனைப் பற்றிய வேதவிஷயத்தில் குற்றப்படுத்தும் முகாந்திரத்தைக் கண்டுபிடித்தாலொழிய வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது' (தானி 6:5) என்று கூறினார்கள். இப்படிப்பட்டவர்கள் ஏதோ அங்கொருவரும் இங்கொருவருமாக இல்லை மேகம் போன்ற திரளான மக்கள் இவர்களைப் போல இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் விவரமாக சொல்லப்போனால் நேரம் போதாது. நீங்களே படித்துப் பாருங்கள். வாலிபனாகிய ஈசாக்கு (ஆதி 22), வாலிபனாகிய யோசேப்பு (ஆதி 39), வாலிபனாகிய யோசுவா (யாத் 17:9-14), இளம் சாமுவேல் (1சாமு 2:18-3:21), இளைஞனாகிய தாவீது (1சாமு 16,17) வாலிபனாகிய சாலமோன் (1ராஜா 3:4-9), இளைஞன் அபியா (2 நாளா 13) இளைஞனாகிய ஒபதியா (1 ராஜா 18:3), இளைஞன் யோசியா (2 நாளா 34. 35). வாலிபனாகிய தீமோத்தேயு (அப் 16:1-3)
இவர்களெல்லாம் தேவதூதர்கள் அல்ல உங்களைப் போலவே சரீரத்தையும் இருதயத்தையும் கொண்டிருந்தவர்கள் அவர்களும் தடைகளை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது இச்சைகளை அழிக்க வேண்டியதாயிருந்தது. சோதனைகளை சகிக்க வேண்டியதாயிருந்தது. உங்களைப் போலவே கடினமானவைகளை நிறைவேற்ற வேண்டியதாக இருந்தது தாங்கள் இளைஞராக இருந்தாலும் கர்த்தருக்கு சேவை செய்ய முடியும் என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அது முடியாத காரியம் என்று நீங்கள் கூறுவீர்களானால், அவர்கள் அனைவரும் நியாயத்தீர்ப்பின் நாளிலே எழும்பி உங்களைக் குற்றம் சொல்ல மாட்டார்களா?
இளைஞர்களே காத்தருக்கு சேவை செய்ய முயற்சியுங்கள். அதெல்லாம் நடக்காது என உங்கள் காதுகளில் ஓதுகிற சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். முயற்சி செய்யுங்கள். வாக்குத்தத்தங்களின் தேவன் உங்கள் முயற்சியைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய பெலனைக் கொடுப்பார். அவரிடம் வருவதற்கு பிரயாசம் எடுக்கிறவர்களை சந்திக்க அவர் ஆவலுள்ளவர் முயற்சி எடுக்கிற உங்களை சந்தித்து. உங்களுக்குத் தேவையான பெலனை அவர் தருவார்.
ஜான்பனியன் எழுதின மோட்சபிரயாணம் வாசித்திருக்கிறீர்களா? மோட்சப்பிரயாணியாகிய கிறிஸ்தியான், விளக்கம் கூறுபவரின் வீட்டில் சில காட்சிகளைக் காண்பான். அதில் ஒரு மகிமையான அரண்மனையின் உள்ளே நுழைய ஆசைப்படுபவர்களின் பெயர்கள் இருப்போனால் எழுதப்படும். ஆனால் வாசலில் அப்படி நுழைய முற்படுபவர்களை அடித்து விரட்ட ஆயுதந்தரித்த பலவான்கள் அநேகர் அங்கு காணப்படுவதால் பலரும் பயந்து போய் தயங்கி நிற்பார்கள். அப்போது ஒரு மனிதன் துணிந்து போய் என் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்" என்று கூறியவுடனே அவனுக்கு ஒரு பட்டயம் கொடுக்கப்படும். அதைக் கொண்டு அவன் அந்த அரண்மனையில் பிரவேசிப்பாள் அவனைப் போல நீங்களும் தைரியமுள்ளவர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்
தேடுங்கள். அப்போது கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் (மத் 7:7) என்கிற நம்முடைய கர்த்தரின் வார்த்தை உண்மையுள்ளது. பலரும் இந்த வார்த்தையை அர்த்தமற்று உபயோகிப்பதை நான் கேட்டிருந்தாலும், இது உண்மையுள்ள வாக்குத்தத்தம் மலை போன்ற பிரச்சனைகள் யாவும், வாலிபரே. பனி போல உருகிப் போய்விடும் தூரத்திலே கொடிதான அரக்கனைப் போலக் காட்சியளிக்கும் தடைகளெல்லாம். நீங்கள் துணிந்து முன்னேறும்போது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் வழியில் எதிர்பட்ட சிங்கத்தைப் பார்த்து பயந்தது. தொடர்ந்து முன்னேறும்போதுதான் தெரிகிறது. அவை சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறது என்று கடவுளின் வாக்குத்தத்தங்களை மனிதர்கள் அதிகமாக நம்ப ஆரம்பித்தார்களானால், தங்களுடைய கடமைகளைக் குறித்து பயப்பட மாட்டார்கள். நான் உங்களுக்கு சொல்லித் தரும் ஒரு சிறிய வாக்கியத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சாத்தான் உங்களிடம் வந்து, இளம் வயதிலுள்ள உன்னால் கிறிஸ்தவனாக வாழ முடியாது என்று கூறினால், நீங்கள், எனக்குப் பின்னாகப் போ சாத்தானே. கடவுளின் உதவியோடு நான் முயற்சி செய்வேன்' என்று சொல்லுங்கள்.
உ) வேதாகமமே உன் வழிகாட்டியாக வையுங்கள்
இளைஞர்களே வாழ்நாள் முழுவதும் வேதமே உங்களுக்கு வழிகாட்டட்டும் பாவக்கறை படிந்த மனிதனின் ஆத்துமாவுக்கு தேவன் கொடுத்திருக்கும் நல்லதொரு சாதனம் வேதாகமம் ஆகும். அவன் நித்தியஜீவனை அடைந்துகொள்ள வேண்டுமானால், வேதாகமத்தை வழிகாட்டியாகக் கொண்டு தனது வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். மெய்யான சமாதானத்தையும், பரிசுத்தத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கு வேண்டிய வழிவகைகள் யாவும் வேதாகமத்தில் நிறைந்து காணப்படுகிறது. தனது வாழ்க்கையை எப்படி சரியானவிதத்தில் ஆரம்பிப்பது என இளைஞர்கள் அறிய விரும்பினால் தாவீது சொல்லதைக் கேளுங்கள். 'வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே?" (சங்கீதம் 119:9).
இளைஞர்களே வேதத்தை தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒருநாள் கூட அந்தப் பழக்கத்தை தவறவிடாதிருங்கள். நண்பர்கள் கேலி செய்கிறார்களே என்பதற்காகவோ, நீங்கள் வாழுகின்ற குடும்ப சூழ்நிலை சரியாக இல்லை என்பதாலோ வேதம் வாசிக்கும் பழக்கத்தை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கென தனியாக ஒரு வேதபுத்தகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதை வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள் வேதாகமம், ஞாயிறு பாடசாலை பிள்ளைகளுக்கும். வயதான பெண்களுக்கும்தான் உரியது என யாரும் உங்களை நம்பப் பண்ணுவதற்கு சற்றும் இடங்கொடாதீர்கள். அந்தப் புத்தகத்திலிருந்துதான் தாவீது ராஜா ஞானமும் அறிவும் பெற்றுக் கொண்டார். அந்தப் புத்தகத்தை தீமோத்தேயு தமது இளம்பிராயம் முதல் அறிந்து வைத்திருந்தார். அதைப் படிப்பதற்கு ஒருபோதும் வெட்கப்படாதிருங்கள், 'திருவசனத்தை ஒருபோதும் அவமதிக்காதீர்கள்' (நீதிமொழிகள் 13:13),
ஆவியானவர்தாமே கிருபையாக அதிலுள்ளவைகளை விளங்கப் பண்ண வேண்டுமென்கிற ஜெபத்தோடு வாசியுங்கள். ஆவியின் கிருபையைப் பெறாதவர்களாக வேதாகமத்தைப் படிப்பது. குருடர் வாசிக்க முயற்சிப்பது போல்தான் இருக்கும்.
வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல. அது தேவனுடைய வார்த்தை என்கிற பயபக்தியோடு வாசியுங்கள் வேதாகமம் சரியென்று சொல்லுகிறவைகள் யாவும் சரிதான் என்றும். அது தவறு என்று கண்டிக்கிறவைகள் தவறுதான் என்கிற முழுநிச்சயத்தை உடையவர்களாக அதை வாசியுங்கள். வேதாகமம் ஒப்புக் கொள்ளாத எந்தக் கொள்கையும் தவறுதான் என்கிற நிச்சயமுடையவர்களாயிருங்கள். இக்காலங்களில் பலவிதமான கொள்கைக் கோளாறுகள் பெருகி வருகின்ற நேரத்திலே வேதாகமம் ஒப்புக் கொள்கிற கொள்கைகளை மாத்திரம் நீங்கள் நன்றாக அறிந்து வைத்துக் கொண்டால், நீங்களும் அந்தக் கோளாறுகளில் அலைபட்டு குழப்பமடையாமல் இருப்பீர்கள். வேதாகமத்துக்கு விரோதமான எந்த செய்கையும் உங்களிடத்தில் காணப்படுமானால் அது பாவமாகும். அதை உடனடியாக விட்டு விலகுவது மிகவும் அவசியம். அப்போதுதான், மனசாட்சி எழுப்பும் பலவிதமான கேள்விகளுக்கு பதில் கூறவும். பலவித சந்தேகங்களை அவிழ்க்கவும் முடியும். கர்த்தருடைய வார்த்தையை வித்தியாசமான கோணங்களில் பார்த்த இரண்டு ராஜாக்களைக் குறித்து அறிவீர்களா? யூதரின் ராஜாவாகிய “யோயாக்கீம்” என்பவன் கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து, அதை உடனடியாகக் கிழித்து எரிகிற நெருப்பிலே போட்டான் (எரேமியா 36:23). அவனுடைய இருதயமானது அந்த வசனங்களுக்கு விரோதமாக இருந்தபடியால் அவைகளுக்கு கீழ்ப்படியக்கூடாது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான். மற்றொரு ராஜாவாகிய “யோசியா” என்பவனும் தேவனுடைய வார்த்தைகளை வாசித்தான். அவன் உடனடியாகத் தனது வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, கர்த்தரிடத்தில் அழுது புலம்புகிறான் (2 நாளாகாமம் 34:19). ஏனென்றால் அவனுடைய இருதயம் நொறுங்குண்டதாக இருந்தபடியால் கீழ்ப்படிதல் உடையவனாகக் காணப்படுகிறான். வேதாகமம் கட்டளையிடுகிற எந்தக் காரியத்தையும் செய்வதற்கு அவன் தயாராக இருந்தான். நீங்களும் யோசியாவைப் போல கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அதைப் பின்பற்ற வாஞ்சையுள்ள இருதயத்தை உடையவர்களாயிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்!
வேதாகமத்தைத் தொடர்ந்து வாசியுங்கள் வசனங்களில் வல்லமை பெறுவதற்கு இது ஒன்றே வழி (அப்போஸ்தலர் 18:24). வேதாகமத்தை எப்போதாவது அங்கும் இங்குமாகப் புரட்டி வாசிப்பது நல்ல பலனைத் தராது அப்படிப் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் அந்தப் பொக்கிஷத்தின் மகிமையை உணர மாட்டீர்கள். உங்களுக்கு பிரச்சனை வரும் நேரங்களில் ஆவியின் பட்டயம் உங்கள் கையில் இல்லாததால் திகைத்து நிற்பீர்கள் தீவிரமாக வேதவசனங்களைப் படித்து அவைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள் அப்போது அதன் வல்லமையையும் மதிப்பையும் உணர்ந்து கொள்ளுவீர்கள் சோதனை ஏற்படும் நேரத்தில் தகுந்த வசனங்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். சந்தேகம் ஏற்படும் சமயங்களில் வேதவசனம் நினைவில் நின்று சரியானதைச் செய்ய உங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கும். மனசோர்வுகளுக்கு ஆளாகும்போது வாக்குத்தத்தங்கள் நினைவில் வந்து உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அப்போது தாவீது கூறிய வார்த்தையில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அனுபவிப்பீர்கள், 'நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்கீதம் 119:11), சாலமோனும் 'நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும் நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும், நீ விழிக்கும்போது அது உள்ளோடே சம்பாஷிக்கும்' (நீதிமொழிகள் 6:22) என்று சொல்லுகிறார்.
நான் இதை மறுபடியுமாக வலியுறுத்திக் கூறுகிறேன் ஏனென்றால், இக்காலங்களில் வாசிப்பதற்கு பலவிதமான புத்தகங்கள் காணப்படுவதால் வேதத்தை வாசிப்பதின் அவசியத்தைக் கூறுகிறேன். புத்தகங்களை உண்டுபண்ணுவதற்கு ஒரு முடிவே இல்லை. அவைகளில் சிலவே நல்ல புத்தகங்களாக இருக்கின்றன. கண்டகாரியங்களையும் பிரசுரிப்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. உலகில் பலவிதமான பத்திரிகைகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளில் அசுத்த காரியங்கள் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் அவை அளவில்லாமல் பிரசுரிக்கப்படுவதைக் காண்கையில் ஜனங்களின் ரசனையும் மனநிலையும் இக்காலங்களில் எந்த அளவில் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆபத்தான புத்தகங்கள் வெள்ளம் போலப் பெருகிக் கொண்டிருக்கிற இவ்வேளையிலே. என்னுடைய எஜமானனின் புத்தகத்தைப் வாசிக்கும்படியாக நான் உங்களைக் கெஞ்சுகிறேன். அதுதாள் உங்கள் ஆத்துமாவுக்குரிய புத்தகம் என்பதை மறந்துவிடாதீர்கள். தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் எழுதியவைகளைத் தள்ளி வைத்துவிட்டு, தினசரி பத்திரிகைகளையும் கதைப் புத்தகங்களையும் படிப்பதில் நேரத்தை செலவிடாதீர்கள். உணர்ச்சிகளைத் தூண்டுகிற விரசமான புத்தகங்கள் உங்கள் கவனத்தைக் கவருவதாயிருக்க வேண்டாம். ஏனென்றால், பக்தியையும் பரிசுத்தத்தையும் ஏற்படுத்துகிற புத்தகத்திற்கு உங்கள் மனதில் இடமில்லாமல் போய்விடும்.
இளைஞனே நீ வாழ்கிற ஒவ்வொரு நாளும் வேதாகமத்துக்குரிய மரியாதையை அதற்குக் கொடு நீ வேதாகமத்தை முதலாவது படி தீய புத்தகங்களைக் குறித்து எச்சரிக்கையாயிரு அம்மாதிரியான புத்தகங்கள் இன்று ஏராளமாகக் காணப்படுகின்றன. நீ எதை வாசிக்கிறாய் என்பதைக் குறித்து கவனமாயிரு மக்கள் அனைவரும் ஒவ்வொரு அபிப்ராயம் வைத்திருக்கலாம். அபிப்பிராயங்களைவிட வாய்வழியாக வெளிப்படுத்தும் எழுத்து மூலமாகக் கொடுக்கப்படும் விஷயங்களே ஆத்துமாவுக்கு அதிக ஆபத்துகளை கொண்டுவருகிறது என நான் நம்புகிறேன். எந்தப் புத்தகத்தையும் வேதவசனங்களின் கோணத்திலே ஒப்பிட்டுப் பார் வசனத்திற்கு ஒத்ததான கருத்துக்கள் அந்தப் புத்தகத்தில் காணப்படுமானால் நல்லது. வசனத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்தப் புத்தகத்தில் காணப்படவில்லை என்றால் அது மிகவும் மோசமான புத்தகமாகும்.
ஊ) தேவனை ஏற்காதவனோடு நெருங்கிய தோழமை கொள்ளாதே
இளைஞனே, தேவனின் விரோதி உனக்கும் விரோதியே சாதாரணமான நட்பைக் குறித்து நான் சொல்லவில்லை. உங்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, அப்படி நாம் ஒரு வரையறை வகுத்துக் கொள்வது இவ்வுலகத்தில் நடக்க முடியாத காரியம் அப்படி இருப்பதும் விரும்பத்தகுந்ததல்ல அப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது கிறிஸ்தவத்துக்குப் புறம்பானது.
ஆனால் உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து கவனமாயிருங்கள் என்று புத்தி சொல்லுகிறேன். ஒருவன் புத்திசாலியாகவும், ஒத்துப் போகிறவனாகவும், நல்ல சுபாவமுடையவனாகவும், சந்தோஷம் நிறைந்தவனாகவும், அன்பாகவும் இருக்கிறான் என்பதற்காக அவனிடம் மனதிலுள்ள எல்லா காரியங்களையும் ஒளிவு மறைவில்லாமல் சொல்லிவிடாதீர்கள், அந்த மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பது நல்லதுதான் ஆனால் அதுவே பரிபூரணமானது அல்ல உங்களுடைய ஆத்துமாவுக்கு உதவாத எந்தவிதமான நட்பிலும் திருப்தியடைந்து விடாதீர்கள்.
இந்த புத்திமதியைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். பக்தியற்ற நண்பர்களால் விளையக்கூடிய தீங்குகளை உங்களுக்கு சொல்லுவதால் தவறொன்றுமில்லை மனிதனுடைய ஆத்துமாவைக் கெடுத்துப் போடுவதற்கு சாத்தான் உபயோகிக்கும் சிறந்த சாதனங்களில் இதுவும் ஒன்று. இந்த சாதனத்தை மாத்திரம் அவனுக்குக் கொடுத்துவிட்டால் போதும், அவனுக்கெதிராக உங்களிடம் வேறு எந்த நல்ல ஆயுதம் இருந்தாலும் அவன் கவலைப்படுவதேயில்லை. சிறந்த கல்வி சிறுவயதிலிருந்தே பழகிக் கொண்ட நல்ல பழக்கவழக்கங்கள், பிரசங்கங்கள், புத்தகங்கள், நல்ல குடும்பச் சூழ்நிலை, பெற்றோர் அனுப்பும் கடிதங்கள் இவை எதுவாக இருந்தாலும் அவைகளெல்லாம். உங்கள் மீது மிகக் குறைந்த ஆதிக்கமே செலுத்தும் என்பதை அவன் நன்கு அறிவான். ஏனென்றால் நீங்கள் பக்தியற்ற நண்பர்களின் சகவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பதால், உங்களுக்கு இருக்கும் அநேக நல்ல சாதனங்களைக் காட்டிலும், இவர்களின் கருத்துதான் உங்களை அதிகமாக ஆக்ரமிக்கும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் பகிரங்கமாக வருகின்ற பல சோதனைகளை நீங்கள் மேற்கொண்டுவிடலாம். வெளிப்படையாகத் தெரிகிற கண்ணிகளுக்குத் தப்பிவிடலாம்.
ஆனால் நீங்கள் தவறான ஒருவனோடு நட்பு கொண்டுவிட்டீர்களானால், அது போதும் சாத்தானுக்கு அம்னோன் என்கிறவன் தாமரிடம் பொல்லாப்பாக நடந்து கொண்டதை விவரிக்கிற கர்த்தருடைய வார்த்தைகள் இப்படி ஆரம்பிக்கிறது: 'அம்னோனுக்கு யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான் அந்த யோனதாப் “மகா தந்திரவாதி” (2 சாமுவேல் 13:3), பிறர் செய்வதைப் பார்த்தே செய்யும் பழக்கமுடையவர்கள் நாம் என்று நான் முன்னர் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அநேக கட்டளைகள் நமக்கு நல்ல பாடம் கற்பிக்கலாம். ஆனால், வாழ்வில் காண்கிற உதாரணங்கள்தான் நம்மை அதிகமாகக் கவர்ந்திழுக்கும். நாம் யாருடன் வசிக்கிறோமோ அவர்களுடைய வழிமுறைகளில் விருப்பம் கொள்வது அநேகமாக எல்லோரிடமும் இருக்கிறது. அதுவும் நமக்கு அவர்களைப் பிடித்துப்போனதென்றால் இன்னும் அதிகமான ஈடுபாடு அவர்கள் மேல் ஏற்படுகிறது. நம்மை அறியாமலேயே நாம் அவர்களுடைய விருப்பங்களுக்கும் கருத்துக்களுக்கும் ஒத்துப் போகிறவர்களாக ஆகிவிடுகிறோம். மெதுவாக நாமும் அவர்களுக்கு விருப்பமில்லாததை விட்டுவிடுகிறோம். அவர்கள் விரும்புவதையே நாமும் பற்றிக் கொள்கிறோம். அவர்களிடமுள்ள நட்பை மேலும் அதிகப்படுத்திக் கொள்வதற்காக அப்படி ஆகிறோம். இதில் மிகவும் மோசமான காரியம் என்னவென்றால், நாம் அவர்களிடமுள்ள நல்லவைகளைக் கற்றுக் கோள்வதைவிட தீயவைகளை வெகு விரைவாகக் கற்றுக் கொண்டுவிடுகிறோம். யோசித்துப் பாருங்கள். ஆரோக்கியமானது மற்றவரைத் தொற்றிக் கொள்வதில்லை. ஆனால் வியாதியோ சுலபமாகத் தொற்றிக் கொள்கிறது அல்லவா! அனலை மூட்டுவதைவிட குளிரப் பண்ணுதல் சுலபம். ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியை ஏற்படுத்திக் கொண்டு வளர்வதைக் காட்டிலும் இருக்கிற பக்தியையும் தேய்ந்து போகச் செய்வதே எளிதான காரியமாக இருக்கிறது.
இளைஞர்களே, இந்தக் காரியங்களை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நிரந்தரமான நட்பை உருவாக்கிக் கொள்ளும் முன்னதாக, உங்கள் காரியங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ளும் முன்னதாக, கஷ்ட நேரங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் நாடிச்செல்ல ஆரம்பிக்கும் மேற்கூறியல்களையெல்லா சிந்தித்துப் பாருங்கள். ஒரு கேள்வியை உங்கள் மனிதிலே கேட்டுக் கொள்ளுங்கள்! 'இந்த நட்பு எனக்கு உப்யோகமாக இருக்குமா? இருக்காதா?" 'மோசம் போகாதிருங்கள். ஆகதே சம்பாஷணை நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். (1 கொரிந்தியர் 15:33) இந்த வார்த்தைகள் ஒவ்வொருவரது இருதயத்திலும் எழுதப்பட்டிருத்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என நான் நினைப்பேன் நமக்குக் கிடைக்கும் நல்ல ஆசீர்வாதங்களில் நல்ல நண்பர்கள் கிடைப்பதும் ஒன்றாகும். பாவங்களில் ஈடுபடாதபடிக்கு அவர்கள் நம்மைத் தடுப்பார்கள். நம்மை ஊக்கப்படுத்துவார்கள். தக்க நேரத்தில் தேவையான ஆலோசனை கூறுவார்கள். தொடர்ந்து நாம் முன்னேறும்படியாகச் செய்வார்கள் ஆனால் தீய நண்பர்களோ துரதிருஷ்டத்தான் அவர்கள் நம்மைக் கீழானவைகளை நோக்கி இழுக்கிறவர்களாகவும், இந்த உலகத்தோடு கட்டிப் போடுகின்ற பாரமான சங்கிலியாகவும் இருப்பார்கள். பக்தியற்றவனோடு சிநேகம் கொண்டால் முடிவில் அவன் உங்களையும் பக்தியற்றவனாக மாற்றிவிடுவான். அந்த மாதிரியான நட்புகள் பொதுவாக அவ்வித விளைவுகளையே ஏற்படுத்தும். நல்லவன்தான் தீயவனாக மாறுவானே தவிர, தீயவன் நல்லவனாக மாற மாட்டான் அடிமேல் அடி வைத்தால் அம்மியும் தகரும் என்பது போல தீயவனோடு சகவாசம் வைத்திருக்கிற நல்லவள் எவ்வளவுதான் உறுதியோடு இருந்தாலும், கடைசியில் தன் உறுதியை இழந்து தீயவனைப் போலவே ஆகிவிடுவான் உலகத்துப் பழமொழிகள் இதை நன்றாகக் கூறுகின்றன. 'உனது ஆடையும், உனது நட்பும் உனது குணத்தைக் காண்பித்துக் கொடுக்கும்'. 'ஒருவனின் நண்பர்கள் யாரென்று சொல், நான் அவன் எப்படிப்பட்டவன் என்பதை சொல்லிவிடுவேன்.
நான் இந்த விஷயத்தைப் பற்றி அதிகமாகக் கூறுகிறேன். ஏனென்றால் பொதுவாகப் பார்க்கும்போது இது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதில்லை என்பது போலத் தோன்றினாலும், உனது வாழ்க்கையின் வெற்றிக்கு இவைகளை அறிவது மிகவும் அவசியம். ஏனென்றால், நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கும்போது, உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலிருந்துதான் பொதுவாக உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பீர்கள்: யோசபாத்தின் மகனாகிய யோராம். ஆகாபின் குடும்பத்தோடு சகவாசம் வைக்காமல் இருந்திருந்தால் அவன் ஆகாபிள் மகளை விவாகம் செய்திருக்க மாட்டான் (2 நாளாகாமம் 18:1, 21:6) சரியான துணையை விவாகத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொண்டிருப்பவன் யார்? பழங்காலத்தில் கூறுவார்கள் 'திருமணம் ஒன்று அவனை வாழ வைக்கும். அவனைக் அல்லது கொல்லும். உங்களுடைய உலகவாழ்க்கையும் மறுஉலக வாழ்க்கையும் சந்தோஷமாக அமைவது திருமணத்தைப் பொறுத்தும் இருக்கிறது. உங்கள் ஆத்துமா பாதுகாக்கப்பட உங்கள் மனைவி உங்களுக்கு உதவியாயிருக்கலாம். அல்லது அவன் அதை அழியப் பண்ணலாம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை ஏதுமில்லை. உங்கள் இருதயத்தில் பக்திவிருத்தி ஏற்படுவதற்கு அவள் உதவியாயிருப்பாள். அல்லது. இருக்கிற அனலிலும் நீரைத் தெளித்து அதைக் குளிரைப் பண்ணிவிடுவாள். அவள் பறக்க உதவும் சிறகாகவும் அமையலாம். அல்லது தடுக்கின்ற சங்கிலியாகவும் இருக்கலாம். உனது பக்திக்குத் தூண்டுகோலாகவும் இருக்கலாம். அல்லது அதை அடக்கி ஆளவும் செய்யலாம் இவைகள் அவளுடைய குணத்தைப் பொறுத்து நடைபெறும். 'நல்ல மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்" (நீதிமொழிகள் 18:22). இந்த மாதிரியான மனைவியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிற விருப்பம் சிறிதளவாவது உனக்கு இருந்தால். உனது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இரு.
என்ன மாதிரியான நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது என நீ என்னைக் கேட்பாயானால் நான் பின்வரும் காரியங்களைக் கூறுவேன். உன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்கிற நண்பர்கள்! நீ உண்மையாகவே மரியாதை செலுத்தக் கூடிய நபர்கள்! உன் மரணப்படுக்கையில் அருகில் இருக்க வேண்டுமென நீ விரும்புகின்ற நண்பர்கள்! வேதத்தின்படி வாழுகின்ற நண்பர்கள்! வேதத்தைக் குறித்துப் பேசுவதற்கு ஒருபோதும் தயங்காத நண்பர்கள்! இயேசுக்கிறிஸ்துவின் வருகையின் போதும், நியாயத்தீர்ப்பிலும் எந்தவிதமான ஆட்களைக் குறித்து நீ வெட்கப்பட மாட்டாயோ அந்தவிதமான நண்பர்கள் இம்மாதிரியான ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்து நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் தாவீது உங்களுக்கு வைத்திருக்கிற முன்மாதிரியை கவனித்துக் கொள்ளுங்கள். 'உமக்கு பயந்து உமது கட்டளைகளை கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்" (சங்கீதம் 119:63) சாலமோன் சொல்வதையும் கருத்தில் கொள்ளுங்கள்: 'ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான். மூடருக்குத் தோழனோ நாசமடைவான்" (நீதிமொழிகள் 13:20) இப்போதுள்ள கெட்ட நண்பர்களைப் பொறுத்து, பிற்காலங்களில் மேலும் அதிகக் கேடான நண்பர்கள் வந்து சேருவார்கள்.
கடைசியாக நான் இளைஞர்களுக்கென சில சிறப்பான கட்டளைகளை உங்கள் முன் வைக்கிறேன். இவற்றை எல்லா இளைஞர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென புத்தி சொல்லுகிறேன்.
அ) பாவம் என்று உணருகிற எல்லாவற்றையும் விட்டு விலக முடிவு செய்துகொள்.
இளைஞர்கள் தேவனின் உதவியைக் கொண்டு, எவ்வளவு சிறிய பாவமாக இருந்தாலும், அதைவிட்டு விலக உடனடியாகத் தீர்மானம் எடுக்க வேண்டும். இளைஞர்களே, உங்கள் இருதயத்தை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். தேவனுடைய பார்வையில் தவறாகத் தெரிகின்ற ஏதாவதொரு பழக்கமோ, செயல்பாடோ உங்களிடத்தில் இருப்பது தெரிகிறதா? அப்படி இருப்பது தெரிந்த உடனே. அதைத் தகர்த்துப் போடுவதற்கு ஒரு நிமிடமும் தாமதம் செய்யாதிருங்கள். அதை விலக்கிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.
விட்டு வைக்கப்படும் பாவங்கள்தான் மனதைக் குருடாக்கிப் போடுகிறது. மனசாட்சியையும் செத்துப் போகச் செய்கிறது. அது எவ்வளவு சிறிய பாவமாக இருந்தாலும் ஆபத்தானதுதான். ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்க அதில் இருக்கும் ஒரு சிறிய துளையே போதுமானதாக இருக்கிறது. பெரிய நெருப்பை உண்டாக்குவதற்கு ஒரு சிறு பொறி போதும் அதுபோலவே விட்டு வைக்கப்பட்டிருக்கின்ற சிறிய பாவமாளது ஆத்துமாவையே ஆழிக்கக் கூடியதாயிருக்கிறது. ஆகவே பன்றடைய புத்திமதியைக் கேளுங்கள் சிறிய பாவமானாலும் அதை விட்டு வைக்காதீர்கள், கானானியரை பெரியோர் சிறியோர் ஒருவர் விடாமல் அழித்துப் போடும்படி கர்த்தர் கட்டளையிட்டார். அதே கொள்கையை பாவத்திலும் காண்பியுங்கள். சிறிய பாவந்தானே என இரக்கப்பட்டு விடாதீர்கள், உன்னதப்பாட்டிலே சாலமோன் அருமையாக சொல்லுகிறார்; 'திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறு நரிகளையும் பிடியுங்கள் (உன்னதப்பாட்டு 2:15).
எந்தவொரு பயங்கரமான பாவியும் ஆரம்பத்தில் அவ்வளவு பயங்கரமானவனாக இருந்திருக்க மாட்டான் ஆரம்பத்தில் கொஞ்சம்தான் மீறிப் போயிருப்பான். அது அவனை இன்னும் அதிகமாகக் கேடு செய்யும்படிக்குத் தூண்டியிருக்கும். இப்படியே காலம் செல்லச் செல்ல அவன் அதிக கொடுமையானவனாக மாறியிருப்பான் ஆசகேல் என்பவன் இப்படித்தான் மாறிப் போனான் என்பதை வேதத்தில் காண்கிறோம். இந்த ஆசகேல் எதிர்காலத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு என்னவிதமான பயங்கரத் தீங்கை செய்வான் என்பதை தேவனுடைய மனுஷனாகிய எலிசா. அவனிடம் சொன்னபோது அச்சமயத்தில் அவனால் அதை நம்பவே முடியவில்லை. 'இத்தனை பெரிய காரியத்தை செய்ய செத்த நாயாகிய உமது அடியாள் எம்மாத்திரம் என்றான்' (2 ராஜாக்கள் 8:13). ஆனால் அவன் பாவத்தைத் தன் இருதயத்திலே வளர விட்டபடியினாலே முடிவிலே அவன் எலிசா சொன்ன மாதிரியேதான் செய்தான்.
வாலிபரே, பாவத்தை அதன் ஆரம்பத்திலேயே எதிர்த்து நில்லுங்கள். அது சிறியதாகத் தோன்றலாம். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல நினைக்கதோன்றும் ஆனால் நான் சொல்லுவதைக் கேளுங்கள் அதற்கு எதிர்த்து நில்லுங்கள் அதற்கு ஒருபோதும் ஒத்துப் போகாதிருங்கள் எந்தப் பாவமும் நுழைவது தெரியாமல் உங்கள் இருதயத்துக்குள் புகுந்துவிட வாய்ப்பு அளிக்காதிருங்கள். ஒரு ஊசியின் முனை எவ்வளவு சிறியது ஆனால், அது ஏற்படுத்துகின்ற சிறிய துளையின் வழியாக மிக நீளமான நூலையே இழுத்து விடுகிறதல்லவா? “கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?" (1 கொரிந்தியர் 5:6) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கேட்கும் கேள்வியை மனதில் வையுங்கள்.
உலகில் முன்னேறாத மனிதர்களைக் கேட்டீர்களானால் அவர்களும் நான் கூறுவதைத்தான் கூறுவார்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது. பாவத்திற்கு ஆரம்பத்திலேயே இடம் கொடுத்தபடியினால்தான் தங்கள் வாழ்க்கையை தங்களே அழித்துக் கொண்டதான நிலை ஏற்பட்டது என்பதைக் கூறுவார்கள். அவர்கள் ஆரம்ப நாட்களில் சிறிய விஷயங்களில் பொய்யராயும், உண்மையற்றோராயும் இருந்தனர். அதிலேயே வளர்ந்தனர். படிப்படியாக மோசமான நிலைமையிலிருந்து மேலும் மோசமான நிலையை நோக்கி முன்னேறினர். தாங்கள் செய்வோம் எனக்கனவிலும் நினைத்திராத காரியங்களை செய்யத் துவங்கினார் முடிவில் அவர்கள் தங்கள் மானம் மரியாதையை இழந்தனர். குணத்தை இழத்தனர். மனசமாதானம் போயிற்று முடிவில் தங்கள் ஆத்துமாவையே இழந்து போயினர் சுவற்றிலே போடும் சிறிய துளையைப் போல தங்கள் மனசாட்சியில் பாவத்திற்கு இடங்கொடுத்தனர். சிறிய துளை பெரிய விரிசலாகி சுவரையே தகர்த்துப் போட்டதுபோல அவர்களது பாவமும் அவர்கள் மனசாட்சியை செத்துப் போகப் பண்ணிவிட்டது. அது ஆத்தும அழிவிற்குக் காரணமாகி விட்டது. உண்மையாக நடந்து கொள்வதிலும், நேர்மையாக நடந்து கொள்ளுவதிலும் இவைகளை நினைத்து கடைப்பிடியுங்கள் சிறிய விஷயமானாலும் மனசாட்சிக்கு விரோதமாக 'கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே நடக்காதிருங்கள். அநேகத்திலும் அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்" (லூக்கா 16:10) உலகம் என்ன கூறினாலும் சிறிய பாவம் என்று ஒன்றுமில்லை. பெரிய கட்டிடங்கள் யாவும் சிறிய செங்கல்கள் சேர்ந்து கட்டப்பட்டவைதானே. முதலாவது வைக்கிற கல்லும் மற்ற எல்லாக் கற்களைப் போலவும் முக்கியமானதே எல்லா பழக்கவழக்கங்களும் தொடர்ந்து செய்கின்ற சிறிய பழக்கவழக்கங்களால் உருவானவைகளே சிறு வயதில் ஒரு கதை படித்திருப்பீர்கள் ஒரு கோடாரியானது காட்டில் உள்ள எல்லா மரங்களிடமும், தனது கைப்பிடிக்காக ஒரு சிறிய மரத்துண்டை தரும்படி கெஞ்சிக் கேட்டது. அப்படி கொடுத்துவிட்டால், பிறகு அவர்களை தொந்தரவு செய்யாமலிருப்பதாக வாக்குறுதி அளித்தது. கடைசியில் ஏதோ ஒரு மரம் அதற்கு இணங்கி ஒரு மரத்துண்டைக் கொடுத்தது. அதன்பின் என்ள நடந்திருக்கும்? அந்தக் கோடாரியானது காட்டிலுள்ள அனைத்து மரங்களையும் வெட்டத் தொடங்கி, முடிவில் காட்டையே அழித்துப் போட்டது. சாத்தான் உங்கள் இருதயத்தில் ஒரு சிறிய பாவத்திற்கு மட்டுந்தான் இடம் கேட்பான். கொஞ்சம் இடம் கிடைத்தால் போதும் சிறிது சிறிதாக உங்கள் இருதயம் முழுவதையும் ஆக்ரமிப்பு செய்துவிடுவான் நமக்கும் கடவுளுக்கும் இடையே எந்த சிறிய பாவத்தையும் வரவிடக் கூடாது.
சறுக்கலான இடத்தின் உச்சியிலிருந்து இரண்டு விதங்களில் கீழே வரலாம் ஒரேயடியாக சறுக்கிக் கொண்டும் வந்துவிடலாம். அல்லது. படிப்படியாக சறுக்கியும் வரலாம். அதுபோல. தெரிந்தே நரகத்தின் வழியில் சிலபேர் துணிந்து போவார்கள், ஆனால் அநேகர் தங்கள் பாவங்களை உணராதவர்களாக படிப்படியாக நரகவழியிலே போவார்கள் அது மிகவும் பரிதாபகரமானது. சிறிய பாவங்களை அனுமதித்தீர்களானால், அது மற்ற பெரிய பாவங்களையும் விரும்பச் செய்யும். ஒரு புறமதஸ்தானாகிய ரோமக் கவிஞனே. 'யாரால் ஒரு பாவத்தோடு நிறுத்த முடியும்?" என்கிற கேள்வியைக் கேட்கிறான். ஆண்டுகள் செல்லச் செல்ல பாவமானது அதிகரித்துக் கொண்டே போகும் ஜெரமி டெய்லர் (Jeremy Tailor) என்பவர், பாவம் எப்படிப் படிப்படியாக முன்னேறுகிறது என்பதைக் கூறுகிறார் 'முதலில் அது அவனைத் திடுக்கிடச் செய்கிறது. பிறகு அது அவனுக்கு இன்பமாக இருக்கிறது. பிறகு சுலபமாக செய்ய முடிகிறது. அது அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது அடிக்கடி செய்யத் தூண்டுகிறது. பிறகு அது பழக்கமாகவே ஆகிவிடுகிறது அவனில் அது உறுதிப்பட்டுவிடுகிறது பின்பு அவன் கல்நெஞ்சனாகி விடுகிறான். பிடிவாதமுள்ளவனாகிறான். மனந்திரும்பவே கூடாது எனத் தீர்மானித்துக் கொள்கிறான் அத்தோடு அவன் அழிந்து போகிறான்."
இளைஞனே, நீ இந்தவித நிலமைக்கு வராதபடிக்கு நான் கூறியிருக்கிற கட்டளையைக் கைக்கொள், அதாவது, எந்தப் பாவமாக இருந்தாலும் அதை விட்டுவைக்காமல் அடியோடு அழித்து விடுகிற உறுதி கொள்.
ஆ) பாவத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கிற யாவற்றையும் விட்டு ஓடி விலகத் தீர்மானித்துக் கொள்
இளைஞர்கள் தேவனின் உதவி பெற்று, பாவத்திற்கு சாதகமான சந்தர்ப்பங்களை விட்டு விலகியோட வேண்டும். ‘தீமையில் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது என விரும்புகிறவன் அதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்’ என்று தூய்மைவாதியாகிய பிஷப் ஹால் (Hall) என்பவர் கூறினார். ஒரு சிறிய கதையுண்டு, ஒரு பட்டாம்பூச்சி, ஆந்தையைப் பார்த்து நெருப்பில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படியென்று கேட்டதாம் அதற்கு ஆந்தை புகை வந்து கொண்டிருக்கிற இடத்தின் அருகேகூட போகாதே என்று கூறியதாம். பாவம் செய்யக்கூடாது என்று நாம் தீர்மானம் எடுத்துக் கொள்வதுகூட போதாது. அதற்கு வழி உண்டாக்குகிற சகல காரியங்களிலிருந்தும் வெகுதூரம் விலகி இருக்க வேண்டும். பின்வரும் விதங்களில் நம்மைத் தற்சோதனை செய்துகொண்டே இருக்க வேண்டும். நமது நேரத்தை எப்படியாக செலவிடுகிறோம்? நாம் என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கிறோம்? எந்தவித குடும்பங்களிடம் நாம் செல்லுகிறோம்? நாம் போகிறதான சமூக சூழ்நிலைகள் என்ன? நான் செய்கிற காரியங்களிலும், செல்லுகிற இடங்களிலும் தவறு எதுவும் காணப்படவில்லை என்று கூறிக் கொள்வது மாத்திரம் போதாது. நான் பாவத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் இவைகளின் மூலமாக ஏற்படுமோ என்பதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
சோம்பலாக இருப்பதுகூட மறைமுகமாக பாவத்திற்கு வழிவகுக்கிறது என்பதை மறக்கக் கூடாது. ஒன்றுமே செய்யாமல் இருப்பதை பாவம் எனக் கூறவில்லை. ஆனால் அது பொல்லாத சிந்தனைகளுக்கும் வீணான கற்பனைகளுக்கும் வழிவகுத்துக் கொடுக்கிறது. சாத்தாள் அசுத்தமான விதைகளைத் தூவுவதற்கு நமது சோம்பல்தனம் ஏதுவாகிவிடுகிறது. அதற்குத்தான் நாம் பயப்பட வேண்டும் எருசலேமில் தனது வீட்டின் மேயே தாவீது வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தது சாத்தானுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அப்படி தாவீது நேரத்தை வீணாகக் கழித்துப் போடாமலிருந்தால், பத்சேபாளைக் கண்டிருக்கவும் உரியாவைக் கொலை செய்திருக்கவும் மாட்டார் அல்லவா?
மறைமுகமாக பாவத்தை உண்டாக்குவதில் ஒன்றான உலக களியாட்டுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை. அப்படி சொல்வது கடினம்தான் வேதத்தின்பிரகாரமாக அவைகளைத் தவறென்று சில நேரங்களில் சொல்லக்கூடாமல் இருக்கலாம். ஆனால் அவைகளின் நோக்கமானது முடிவில் ஆத்துமாவைக் காயப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. உலகப்பிரகாரமானதும், உணர்ச்சிகளைத் தூண்டுவதுமான விதைகளை அவை விதைக்கின்றன. விசுவாச வாழ்க்கையோடு அவை மோதுகின்றன ஆரோக்கியமற்ற. இயற்கைக்கடுத்த உள்ளக்கிளர்ச்சியை விரும்பித் தேடச் செய்கின்றன. மாம்சத்தின் இச்சைக்கும். கண்களின் இச்சைக்கும். ஜீவனத்தின் பெருமைக்கும் அவை நம்மை அடிபணியச் செய்கின்றன (1 யோவான் 216) மோட்சத்தையும், நித்திய வாழ்வையும் தம் மனதில் மங்கிப் போகச் செய்து, இவ்வுலக வாழ்க்கையை பிரகாசமாகத் தோன்றச் செய்கின்றன. தனி ஜெபத்தையும். வசனங்களைத் தியானித்தலையும் தேவனோடு தொடர்பு கொள்ளுவதையும் இருதயத்திலிருந்து அகற்றிப் போட்டு அவைகளை வெறுக்கும்படி தூண்டுகின்றன. அவைகளில் ஈடுபடுகிற மனிதன் சாத்தானுக்கு இடங்கொடுக்கிறவனாயிருக்கிறான் அவன் போராட வேண்டிய . போராட்டத்தை விட்டுவிட்டு, தனது நடக்கைகளின் மூலமாக சாத்தானுக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்தித் தருகிறான். ஆகவே அவன் அடிக்கடி நோற்றுப் போவதைக் குறித்து ஆச்சரியப்படவும் வேண்டுமோ!
வாலிபரே! உங்கள் ஆத்துமாவைத் தாக்குகிற காரியமாக எது உங்களிடத்தில் இருந்தாலும் அதைக் களைந்து போடுவதற்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருங்கள். சாத்தான் உங்களுக்குள் வேலை செய்வதற்கு நீங்கள் உதவாதீர்கள். நீங்கள் ரொம்பவுந்தான். ஜாக்கிரதையாயிருக்க முயற்சிக்கிறீர்கள் என்று ஜனங்கள் சொல்லுவார்கள். எல்லாவற்றிலும் தேவைக்கு அதிகமாக கவனம் செலுத்துகிறீர்கள் என்பார்கள். அப்படி இருப்பதால் என்ன தீமை? அவர்கள் சொல்லுவதை பொருட்படுத்தாதீர்கள். கூர்மையான ஆயுதங்களோடு விளையாடுவது எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது ஆத்துமத்துக்கடுத்த காரியங்களில் கவனக்குறைவாக இருப்பது பாதுகாப்பாக இருக்க விரும்புகிறவன் ஆபத்துகளின் அருகில் செல்லக் கூடாது. வெடிமருந்துக் கிடங்கில் ஒரு சிறு பொறி கங்கு விழுந்தாலும் தீப்பற்றிக் கொள்வதைப் போன்ற ஆபத்தான நிலையில் தனது இருதயம் இருப்பதாகக் கருதி அதைப் பாதுகாக்க வேண்டும். ஒரு சிறு சோதனைகூட அவன் ஆத்துமாவுக்கு ஆபத்தைக் கொண்டுவந்துவிடும்.
எங்களை சோதனைக்குட் பிரவேசிக்கப் பண்ணாதிரும்' (மத்தேயு 6:13) என்று ஜெபிக்கிறீர்களே நீங்களே சோதனைக்குள் பிரவேசிக்கிறவர்களாக இருந்து கொண்டு அப்படி ஜெபிப்பதால் என்ன பிரயோஜனம்? 'தீமையிலிருந்து இரட்சித்துக் கொள்ளும் என்கிறீர்கள். தீமையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டியதான விருப்பம் உங்களுக்கு இருப்பதை செயலில் காண்பிக்கிறீர்களா? யோசேப்பின் முன்மாதிரியைப் பாருங்கள். அவனுடைய எஜமானனின் மனைவி அவனைப் பாவம் செய்யத் தூண்டினாள். அவன் அதற்கு மறுப்புத் தெரிவித்தது மாத்திரமல்ல அவள் இருக்கும் இடத்திலே செல்லுவதையே தவிர்த்தான் என்கிறதைக் காண்கிறோமல்லவா? அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை" (ஆதியாகமம் 39,10) சாலமோன் சொல்வது போல. துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியிலே நடவாதே அதுமாத்திரமல்ல, அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே அதை விட்டு விலகி, கடந்து போ (நீதிமொழிகள் 4: 14-15). குடிகாரனாக ஆகிவிடக்கூடாது என நினைப்பது மாத்திரமல்ல, மதுபானத்தை 'இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும் அதை நீ பாராதே (நீதிமொழிகள் 23:31) என்று எச்சரிக்கிறார். இஸ்ரவேலிலே நசரேய விரதம் இருப்பவர்கள் திராட்சை ரசத்தைப் பானம் பண்ணாமலிருப்பது மாத்திரமல்ல. திராட்சையினால் செய்யப்பட்ட எந்தப் பதார்த்தத்தையும் விலக்கிவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது. தீமையை செய்யாதீர்கள் என்று கூறாமல் பவுல் ஒரு படி மேலே போய் 'தீமையை வெறுத்துவிடுங்கள்' என்கிறார் (ரோமர் 129) பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடு என்று தீமோத்தேயுவுக்கு புத்தி சொல்லுகிறார். இந்த மாதிரியான எச்சரிப்புகள் எவ்வளவு தேவையாக இருக்கிறது! தீனாள். பக்தியற்ற சீகேமிய தேசத்தின் பெண்களைப் பார்த்து வரப் புறப்பட்டதினால் தனக்கு மிகுந்த பொல்லாப்பை வருவித்துக் கொண்டாள் லோத்து, பொல்லாதவர்களாகிய சோதோம் குடிகளின் அருகில் தனது கூடாரத்தைப் போட்டதால், தனது உயிரைத் தவிர யாவையும் இழந்து போனான்,
இளைஞர்களே, எச்சரிப்பாயிருங்கள். சாத்தானை உங்கள் ஆத்துமாவுக்கு மிக அருகில் வர விட்டுவிட்டு. பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணாதீர்கள், உங்களைத் தொட முடியாத தொலைவிலேயே அவன் நிற்கட்டும். சோதனைகளை தூரத்திலேயே கண்டு உணர்ந்து கொள்ளுங்கள். அது பாவம் உருவாவதை தவிர்க்கும்.
இ) தேவனுடைய கண்கள் நோக்கிக் கொண்டிருப்பதை மறவாதே
தேவனின் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை ஒருபோதும் மறக்காமலிருக்க. இளைஞர்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய கண்கள் அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லா இடத்திலும், எல்லா வீட்டிலும், எந்த மைதானத்திலும், எந்த அறையிலும். யாரோடு இருந்தாலும், தனியாக இருந்தாலும், கூட்டத்தில் இருந்தாலும் கடவுளின் கண்கள் எப்போதும் உன்னை நோக்கிக் கொண்டேயிருக்கின்றன. 'கர்த்தருடைய கண்கள் எவ்விடத்திலுமிருந்து. நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது (நீதிமொழிகள் 15:3) அந்தக் கண்கள் இருதயத்தையும் பார்க்கும். செயல்களையும் பார்க்கும்.
இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவனோடு நீங்கள் சம்பந்தமுடையவர்களாய் இருக்கிறீர்கள். அவர் ஒருபோதும் உறங்குகிறதுமில்லை. தூங்குகிறதுமில்லை (சங்கீதம் 12:14), அவர் உங்களுடைய நினைவுகளையும் தூரத்திலிருந்து அறிகிறவர் (சங்கீதம் 139.2). அவருக்கு முன்பாக இரவும் பகலைப் போல வெளிச்சமாக இருக்கும் (சங்கீதம் 139:12), கெட்ட குமாரனைப் போன்று நீங்கள் உங்கள் தகப்பன் வீட்டை விட்டு தூரதேசத்திற்குப் போய்விட்டால் யாரும் உங்கள் நடத்தையைக் கண்காணிக்க மாட்டார்கள் என எண்ணிக் கொள்ளலாம் (லூக்கா 15:13). ஆனால் தேவனுடைய காதுகளும். கண்களும் அங்கேயும் இருக்கின்றன. நீங்கள் உங்கள் பெற்றோரை ஏமாற்றலாம். உங்கள் மேலதிகாரியை ஏமாற்றலாம். அவர்களிடம் பொய்களைக் கூறலாம். அவர்களுக்கு முன்பாக ஒருவிதமாகவும், அவர்கள் அறியாமல் வேறுவிதமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் தேவனை உங்களால் ஒருபோதும் ஏமாற்றவே முடியாது. உங்களை அவர் முற்றிலுமாக அறிந்திருக்கிறார். நீங்கள் சொல்லுகிற வார்த்தையெல்லாம் அவருக்குக் கேட்கிறது. இந்த நிமிடத்திலே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார். நீங்கள் இரகசியமாக செய்த பாவங்களை அவர் தமது முகத்துக்கு முன்பாக வைத்திருக்கிறார். அவைகளை ஒரு நாளிலே உலகப் அறியத்தக்க விதமாக வெளிப்படுத்துவார். அப்போது உங்களுக்கு மிகுந்த அவமானம் உண்டாகும். “இருளிலே மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியாங்கமாக்கி, இருதயங்களின் போசனைகாளயும் வெளிப்படுத்துவார்" (2 கொரிந்தியர் 4:5) நீங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அதுதான் நடக்கும்.
இதை உணர்ந்திருப்பவர்கள் மிகவும் கொஞ்சமே தாங்கள் கண்கானிக்கப்படுகிறோம் என்பது தெரிந்தால் மனிதர்கள் தங்கள் பாவங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்களா? வெளிச்சத்திற்கு வராமல் கற்பனையிலேயே எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன ஆம் மனிதர்கள் தனிமையிலே பலவித இடமளிக்கிறார்கள்.தனிமையிலே கற்பனைகளுக்கு பலவித வார்த்தைகளைப் பெசுகிறார்கள். தனிமையில் பலவித செயல்களைப் புரிகிறார்கள். அவைகளையெல்லாம் உலகத்தாருக்கு முன்பாக வெளிப்படுத்திக் காண்பித்தால் வெட்கப்பட்டுப் போவார்கள், யாரோ வருகிற சந்தம் கேட்டு எத்தனையோ பேர் தங்கள் பொல்லாத நடவடிக்க நிறுத்தியிருக்கிறார்கள். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, தாங்கள் செய்ய நினைத்ததைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள், இது என்ன முட்டாள்தனம்! நாம் எங்கே போனாலும் என்ன செய்தாலும் கவளித்துக் கொண்டிருக்கிற ஒருவர் இருக்கிறார். கதவைப் பூட்டினாலும், திரைச்சீலைகளை இழுத்துவிட்டாலும் ஒன்னல்களை அடைத்துக் கொண்டாலும் விளக்கை அணைத்துவிட்டாலும் அவருக்கு அதெல்லாம் பெரிய விஷயமில்லை. இவைகளால் அவர் பார்ப்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். நீங்கள் அவரை வெளியே தள்ளி கதவை அடைக்க முடியாது. அவர் பார்ப்பதைத் தடுக்க முடியாது. 'அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது" (எபிரேயர் 412), யோசேப்பு இதை நன்றாக உணர்ந்திருந்தார். இதை நன்கு அறிந்திருந்தபடியால் எஜமானனின் மனைவி பாவம் செய்யத் தூண்டியபோது போசேப்பு அதற்கு உடன்படவில்லை. அன்றைக்கு அவர்களைக் காண அந்த வீட்டிலே ஒருவரும் இல்லை. மனிதர்கள் யாரும் கண்டுவிடாதபடியான சூழ்நிலைதான் அப்போது இருந்தது. கண்களுக்குப் புலப்படாத தேவன் அங்கும் இருக்கிறார் என்பதை உணர்ந்தவராக யோசேப்பு தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். ஆகவேதான் யோசேப்பால், தன் எஜமானனின் மனைவியிடம் 'நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி?" என்று சொல்ல முடிந்தது
இளைஞர்களே, நீங்கள் அனைவரும் 139 -ம் சங்கீதத்தை மனப்பாடமாகப் படித்து வைத்துக் கொள்ளும்படி புத்தி கூறுகிறேன். நீங்கள் உலகில் செய்கின்ற சகல காரியங்களிலும், 'தேவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது நினைவில் இருக்கிறதா?" என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டு, உங்களையே ஆராய்ந்து பாருங்கள்.
கடவுளின் பார்வையிலேயே வாழுங்கள். ஆபிரகாம் அப்படித்தான் வாழ்ந்தார். அவர் தேவனுக்கு முன்பாக உத்தமமாக நடந்தார். ஏனோக்கும் அப்படியே வாழ்ந்தார். அவர் தேவனோடே சஞ்சரித்தார். மோட்சமும் அப்படித்தான் இருக்கும். அவருடைய பிரசன்னம் மோட்சத்தில் நித்தியமாக நிறைந்திருக்கும். தேவன் பார்த்துவிடக் கூடாது என்று நீங்கள் நினைக்கிற எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள். தேவனுக்குக் கேட்டுவிடக்கூடாது என்று நினைக்கிற எந்த வார்த்தையையும் பேசாதீர்கள். தேவன் படித்துவிடக் கூடாது என நினைக்கின்ற எதையும் எழுதாதீர்கள். தேவன் உங்களைப் பார்க்கக்கூடாது என நினைக்கிற இடங்களுக்குப் போகாதீர்கள்.எங்கே. நீ என்ன புத்தகத்தைப் படிக்கிறாய். காண்பி" என்று தேவன் கேட்டுவிடக் கூடாது என நினைக்கிற புத்தகத்தைப் படிக்காதீர்கள், 'நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று தேவன் கேட்டுவிடுவாரோ என அஞ்சுகின்ற காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடாதீர்கள்.
ஈ) தேவனின் பொதுவான கிருபைகளை உபயோகித்துக் கொள்ளத் தீவிரமாயிரு
கிருபையின் சாதனங்கள்
இளைஞர்கள் கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஜெபத்திற்கும் பிரசங்கத்திற்குமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிற தேவனின் வீட்டிற்குத் தவறாமல் செல். அப்படி செல்வது உள் கையில்தான் இருக்கிறது. கர்த்தருடைய நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதைத் தவறாமல் கடைப்பிடி உனக்கு நாட்களை அருளிச் செய்திருப்பவர் தேவன். ஏழுநாளில் ஒரு நாளை அவருக்காக செல்விடுவதே சரியானதென்று தீர்மானித்துக் கொள்.
இதைக் குறித்து நீங்கள் தவறான அபிப்ராயம் கொண்டுவிடாதபடிக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சபைக்கு ஒழுங்காகச் சென்றுவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் போதுமானது என்று நான் கூறுவதாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நான் அப்படிக் கூறவில்லை. பாரம்பரியங்களைக் கைக்கொண்டு வந்த பரிசேயரைப் போல நீங்கள் ஆகவேண்டுமென நான் கூறவில்லை. வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளிலே. குறிப்பிட்ட நேரத்திலே. உங்கள் சரீரத்தை கர்த்தருடைய ஆலயத்திற்குக் கூட்டிச் சென்றுவிட்டால், நீங்கள் மெய்யான கிறிஸ்தவர்கள் என்றும், கர்த்தரை சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்றும் நான் கூறுவதாக நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் கூறுவேன். இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படாத எந்த ஆராதனையும் பிரயோஜனமற்ற வீணான காரியம் ஆகும். உண்மையான ஆராதனை எப்படி இருக்கும் தெரியுமா? "உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்' (யோவான் 4:23)
அதே சமயத்தில் கிருபையின் சாதனங்கள் ஒருவனுக்கு இரட்சிப்பை அளிக்காது என்பதால் அவைகளை அலட்சியப்படுத்திவிடவும் கூடாது. தங்கம் ஒரு சாப்பிடும் பொருள் அல்ல அதனால் அதை உபயோகமற்றது எனக்கூறி தூர எறிந்துவிட மாட்டீர்கள் அல்லவா! உங்களுடைய ஆத்துமா நித்தியமாக வாழ்வதற்கு அது கிருபையின் சாதனங்களை சார்ந்து இருக்கவில்லை என்பதற்காக அவைகளை அலட்சியப்படுத்திவிட முடியாது. உங்கள் ஆத்துமாவின் நன்மைகளுக்காகவே கிருபையின் சாதனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவைகளில்லாமல் உங்கள் ஆத்துமா நலன் பெற முடியாது எலியா தீர்க்கதரிசியை அக்கினிமயமான இரதங்களில் மோட்சத்திற்குக் கூட்டிச் சென்றது போல இரட்சிக்கப்பட்டிருக்கிற எல்லாரையும் தேவன் கூட்டிக்கொண்டு போக முடியும். ஆனால் அவர் அப்படி செய்வதில்லை. எல்லாரும் வேதத்தைப் படிப்பதற்கும். தங்களைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கும் அவசியம் இல்லாதபடி செய்து, ஒவ்வொருவரையும் தனித்தனியே கனவுகளின் மூலமாகவும், தீர்க்கதரிசனங்கள், அற்புதங்கள் மூலமாகவும் போதித்து வழிநடத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படியும் செய்ய சித்தங் கொள்ளவில்லை. ஏன் அவர் அப்படி செய்யவில்லை? ஏனென்றால் அவர் சில வழிமுறைகள். சாதனங்கள் மூலமாக செயல்படுகின்ற தேவன் அவரோடு தொடர்பு கொள்ளுகிற அனைவரும் கிருபையின் சாதனங்களின் வழியாகவே அவரை அணுக வேண்டுமென்பது அவருடைய சித்தமும் கட்டளையுமாயிருக்கிறது. ஏணி அல்லது சாரம் போன்றவைகள் இல்லாமல் ஒருவனும் உயரமான கட்டடங்களைக் கட்டுவதற்குத் துணிய மாட்டான் அவ்வித சாதனங்கள் இல்லாமல் கட்டிவிடலாம் என நினைப்பவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும். அதுபோல அறிவுள்ளவன் எவனும் இந்தக் கிருபையின் சாதனங்களை அலட்சியப்படுத்த மாட்டான்.
இவைகளைக் குறித்து நான் அதிகமாக சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், அவையொன்றும் அவசியமல்ல எனக்கூறி தனது வாதங்களால் உங்கள் இருதயத்தை நிரப்புவதற்கு சாத்தான் கடுமையாக உழைப்பான் என்பதை அறிந்திருக்கிறேன். பலவிதமான வாதங்களை உங்களுக்கு முன்பாக வைப்பாள் சபைக்கு ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தும் அதனால் பயனைப் பெறாத அநேக மக்களைக் காண்பித்து அங்கு போவதால் என்ன பயன் என்று கூறுவான். "பார். இந்த மக்களை! சபைக்குப் போகிறவர்களும் போகாதவர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே சபைக்குப் போவதில் ஒரு பயனும் இல்லை' என்று உங்கள் காதுகளில் இரகசியமாகக் கூறுவாள். இது ஒரு சரியான வாதமா? ஒரு நல்ல காரியத்தை சிலர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்காக அந்த காரியம் நல்லதல்ல என்று ஆகிவிடுமா? கிருபையின் சாதனங்களை பலர் உபயோகித்தும் பலன் பெறவில்லை என்பதற்காக அவை சரியல்ல என்பது அவைகளை விளங்கிக் கொள்ளாததால் வருகிற கோளாறு. இது. அநேகம் பேர் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குணமடையவில்லை என்பதற்காக மருத்துகளையே வேண்டாம் எனத் தள்ளுவது போல இருக்கிறது. அநேகம் பேர் சாப்பாடு சாப்பிட்டும் தங்களுடைய தவறுதலான உணவுப் பழக்கங்களினாலே பலவிதமான வியாதிகளை வருவித்துக் கொள்வதைக் காண்கிறோம். ஆகவே எல்லாரும் சாப்பாடே வேண்டாம் எனத் தவிர்த்துவிடுவார்களா? எதையும் சரியான விதத்தில் உபயோகித்தால் அதற்குரிய பலனைப் பெறலாம். அதுபோலவே கிருபையின் சாதனங்களை நாம் எப்படி, எந்த மனநிலையோடு உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்து அது மிகுந்த பலன்களைக் கொடுக்கும்.
சுவிசேஷப் பிரசங்கம்
இதிலும் நான் அநேக காரியங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இளைஞனும் தவறாமல் பிரசங்கங்களைக் கேட்க வேண்டுமென நான் உறுதியாக நம்புகிறேன். இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் கூறுவதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை தேவனின் ஆசீர்வாதமானது, இவ்வித பிரசங்கங்களின் மூலமாக உங்களை வந்து அடையும். அது உங்களுடைய ஆத்துமாவையே மாற்றலாம். கிறிஸ்துவை அறிகிறதான இரட்சிப்பின் விசுவாசத்திற்குள் உங்களை நடத்திச் செல்லலாம் வார்த்தையிலும் செயலிலும் தேவனின் பிள்ளைகளாக இருக்கும்படியாக உங்களை வழிநடத்தலாம். நித்தியமான நன்றியறிதல் ஏற்பட அது காரணமாயிருக்கலாம். பரலோகத்தின் தூதர்களும் சந்தோஷப்படும்படியான நிலையை ஏற்படுத்தலாம். இவை எதுவும் ஏற்படவில்லையென்றால்கூட இளைஞர்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்கக் வல்லமையானது இவ்வித பிரசங்கங்களின் மூலமாக ஏற்படுகிறது என்பதை நான் நம்புகிறேன். தேவனின் ஆதிக்கம் இருக்கின்றதான இவ்வித பிரசங்கங்களை இளைஞர்கள் தவறாமல் கேட்கும்படியாக நான் வலியுறுத்துகிறேன். பிரசங்கங்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைத் தவறான பாதையில் போகவிடாமல் தடுத்திருக்கிறது. தேவனிடம் அவர்கள் முற்றிலுமாக வரவில்லையென்றாலும், தீமைக்கு அவர்களை விலக்கிக் காக்க அவை உதவியிருக்கின்றன. அவர்கள் மெய்யான கிறிஸ்தவர்களாக இன்னும் ஆகாவிட்டாலுங்கூட இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக நடமாட உதவியிருக்கிறது. மக்கள். இருதயத்தின் ஆழத்தில் உணராவிட்டாலுங்கூட மெய்யாய் பிரசங்கிக்கப்படும் பிரசங்கத்திற்கு ஏதோவொரு ஆற்றல் இருக்கிறது. பாவமானது மேற்கொள்ளப்படுவதையும். உயர்த்தப்படுவதையும், கிறிஸ்துவை சாத்தானின் கிரியைகள் பரிசுத்தமானது மகிமைப்படுத்துவதையும் கண்டிக்கப்படுவதையும். பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்த காரியங்கள் கூறப்படுவதையும், அதன் ஆசீர்வாதங்கள் வெளிப்படுத்தப்படுவதையும் வாரம், கர்த்தருடைய நாட்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருவது ஆத்துமாவுக்கு நற்பலனை அளிக்காமல் போகாது. அதன்பிறகு கலகம் விளைவிப்பதோ. தீயநெறிகளில் ஈடுபடுவதோ அவர்களுக்கு கடினமாக இருக்கும் பிரசங்கங்கள் மனிதனுடைய இருதயத்தை முழுவதுமாக பரிசோதிக்கச் செய்கிறது. தேவனுடைய வாக்குத்தத்தம் நன்மையாக நிறைவேறும் விதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. 'அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்’ (ஏசாயா 55:11) ஒயிட் ஃபீல்ட் என்பவர் நன்றாகச் சொன்னார்: 'பிரசங்கங்கள் அநேகரை நரகத்திற்குத் தப்புவிக்காவிட்டாலும், ஜெயிலுக்கும் தூக்குதண்டனைக்கும் நிச்சயமாகத் தப்புவித்துவிடும்.
கர்த்தருடைய நாள்
இன்னொரு முக்கியமான காரியத்தையும் நான் விளக்கப் போகிறேன் கர்த்தருடைய நாளை அனுசரிக்காமல் இருக்கும்படி எந்த சோதனையும் உங்களுக்கு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய நாளை அலட்சியப்படுத்துகிறதான ஆவி எல்லாரிடமும் இக்காலங்களில் வெகுவேகமாகப் பரவி வருகிறது. அதற்கு இளைஞர்களும் விதிவிலக்கல்ல. கர்த்தருடைய நாளில் உல்லாசமாக ரயிலிலும், படகுகளிலும் போய்வர ஆர்வம். ஞாயிறன்று உறவினர்கள் நண்பர்கள் சந்திப்புகள், ஞாயிறு உல்லாச பொழுது போக்குகள் இவைகள் முன்பிருந்ததைவிட வெகு அதிகமாக யாவரிடமும் காணப்படுகிறது. வருடந்தோறும் அப்பழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஆத்துமாவிற்கு அளவிட முடியாத பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே போகிறது. இளைஞர்களே இந்த விஷயத்தில் உங்கள் உறுதியைக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெரிய பட்டணத்தில் இருந்தாலும், சிறிய ஊரில் இருந்தாலும் கர்த்தருடைய நாளை அவருக்கென செலவிடுவேன் என்கிற உறுதியை மீறாமல் நடந்து கொள்ளுங்கள். இதற்கு எதிராக அநேக சாக்குபோக்குகளும். வாதங்களும் எழும் வாரமுழுவதும் உழைத்த உடலுக்கு ஒரு மாறுதலும் ஓய்வும் தேவை என சொல்லப்படும் வாதம் உங்கள் உறுதியைக் குலைத்துப் போடாதிருப்பதாக உங்களை சுற்றிலும் இருக்கிறவர்கள் செய்வதும். நீங்கள் பழகுகின்ற வட்டாரங்களிலிருந்து வருகின்ற அழைப்புகளும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதை தடைசெய்யாதபடி கவனமாயிருங்கள் கர்த்தருடைய நாள் கர்த்தருக்குரியது. அதை அவருக்கென்றே செலவிடு.”
கர்த்தருடைய நாளை அலட்சியப்படுத்த ஆரம்பித்தீர்களானால் முடிவில் உங்கள் ஆத்துமாவையே அலட்சியப்படுத்துகிறவர்கள். ஆனீர்கள் இதற்கு வருகின்ற படிகள் மிகவும் கலபமானவைகள் அளவ ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக ஏற்பட்டுவிடும் கர்த்தருடைய தாளுக்குரிய மகிமையை செலுத்தாமல் போகும்போது நீங்கள் வெகு ரீயூகிரத்தில் அவருடைய சபையை அவமதிக்கிறவர்களாக ஆவீர்கள். அவருடைய சபையை மதிக்காமல் போகும்போது அவருடைய வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் போய்விடுவீர்கள். அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கே மரியாதை செலுத்தாதவர்களாக மாறிவிடுவீர்கள். கர்த்தருடைய நாளை அனுசரிக்காத மனிதன், பிற்பாடு உவுளே இல்லை என்று சொல்கிற நிலமைக்கு வந்துவிட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இங்கிலாந்திலே நீதிபதியாக இருந்த ஹேல் (Hale) என்கிறவர் ஒரு காரியத்தை நன்றாக சொன்னார்: 'தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளிடம் விசாரித்துப் பார்த்ததில், கர்த்தருடைய நாளைப் புறக்கணித்து பொல்லாத வழிகளில் ஈடுபட்டதுதான் தங்களுடைய இந்த பயங்கரமான நிலமைக்கு ஆரம்பம் என்று அநேக கைதிகள் ஒத்துக் கொண்டார்கள்.*
இளைஞர்களே, கர்த்தருடைய நாளை மதிக்க மறந்துபோன மக்களின் மத்தியிலே நீங்கள் இருக்க நேரிடலாம். ஆனால் கடவுளின் உதவியைப் பெற்றுக் கொண்டவர்களாக அந்நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டுமென்பதை மறவாமலிருக்கும்படி தீர்மானம் பண்ணிக் கொள்ளுங்கள். சுவிசேஷம் சரியாக சொல்லப்படுகிறதான ஒரு சபையிலே தவறாமல் பங்கெடுப்பதன் மூலமாக கர்த்தருடைய நாளுக்கு கனம் செலுத்துங்கள். உண்மையான ஊழியம் நடக்கிறதான அவ்விடத்திலே தரித்திருங்கள். வாரந்தவறாமல் கர்த்தருடைய நாளிலே அங்கு செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதனால் உங்களுக்குக் கர்த்தருடைய ஆசீர்வாதம் நிச்சயமாக வந்து சேரும்: 'என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதை செய்யாதபடி உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும் உளக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலும் இருந்து. ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும். மன கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல், அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மகிழ்ச்சியாயிருப்பாய் பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி உள்னை போஷிப்பேன்' (ஏசா 58: 13.14). ஒன்று நிச்சயம் நீங்கள் கர்த்தருடைய நாளைக் குறித்து எப்படி எண்ணுகிறீர்கள் என்பது மோட்சத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை பரீட்சிப்பதாக இருக்கிறது. மோட்சத்தின் முன்றுசியாகவும் வாசனையாகவும் கர்த்தருடைய நாள் இருக்கிறது. அதை ஒருவள் பாரமாகவும், முக்கியத்துவமற்றதாகவும் நினைத்தால், அவனுடைய இருதயம் மாற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
உ) எங்கிருந்தாலும் ஜெபிக்கத் தவறக் கூடாது என உறுதி கொள்
இளைஞர்கள் எவ்விடத்தில் இருந்தாலும் நாள்தோறும் ஜெபிக்க வேண்டும்.
ஜெபம் மனித ஆத்துமாவின் உயிர் மூச்சாக இருக்கிறது. அது இல்லாதவர்கள் கடவுளின் பார்வையில் மரித்தவர்களே நாம் உயிரோடிருப்பதாகவும், கிறிஸ்தவர்களாக இருப்பதாகவும் நமக்குத் தோன்றலாம். இரக்கத்தையும், சமாதானத்தையும் வேண்டி. கடவுளிடம் கதறி நிற்கிற உணர்வு கிருபையின் அடையாளமாகும். நம்முடைய ஆத்துமாவின் தேவைகளை அவருக்கு முன்பாக ஏறெடுக்கின்ற பழக்கம் புத்திரசுவீகார ஆவியை உடையவர்களாய் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.நமது ஆவிக்குரிய தேவைகளுக்கு நிவாரணம் அளிப்பதே ஜெபத்தின் நோக்கமாகும். அவர் தமது பொக்கிஷங்களைத் திறக்கிறார். அவரிடமிருந்து அளவில்லாத ஆசீர்வாதங்கள் பெருகி வருகிறது. ஆசீர்வாதங்களை நாம் பெறவில்லையென்றால் அதற்குக் காரணம் நாம் கேட்காமல் இருப்பதே.
நமது இருதயங்களில் பரிசுத்தஆவியானவர் ஊற்றப்படுவதற்கு ஜெபம் வழிவகுக்கிறது. தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியைத் தருவதாக இயேசுக்கிறிஸ்து வாக்குக் கொடுத்திருக்கிறார். தமது விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களோடு நம்மிடம் வருவதற்கு அவர் தயாராக இருக்கிறார் -நம்மை புதிதாக்க, பரிசுத்தப்படுத்த. சுத்தமாக்க, பெலனளிக்க, சந்தோஷிப்பிக்க, உற்சாகப்படுத்த, அறிவூட்ட, போதிக்க, வழிநடத்த, சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்த நம்மிடம் வருவதற்கு அவர் ஆயத்தமாக இருக்கிறார். ஆனால் நாம் மன்றாடிக் கேட்க வேண்டுமென்பதற்காக அவர் தாமதிக்கிறார்.
ஆனால் உண்மையாக ஜெபிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே என்பதை நான் துக்கத்துடனே குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் குறைவுள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள். அநேகர் முழங்காலில் நின்று சில குறிப்பிட்ட வார்த்தைகளை கடவுளிடம் தெரிவிக்கலாம். ஆனால் ஜெபிப்பவர்கள் மிகவும் குறைவு. கடவுளிடம் சென்று கதறுபவர்கள் கொஞ்சமே. அவரைத் தொழுது வேண்டிக் கொள்பவர்களும் சொற்பமே. கண்டடைய வேண்டும் என்கிற விருப்பத்தோடு தேடுபவர்கள் சிலரே. பசியோடும் தாகத்தோடும் இருப்பது போலத் தட்டுபவர்கள் அதிகமானவர்கள் அல்ல. வெகு சிலரே ஜெபத்தில் போராடுகிறவர்களாக இருக்கிறார்கள். ஒரு பதிலை கடவுளிடமிருந்து எதிர்பார்த்து தொடர்ந்து முயற்சிப்பவர்கள் சிலரே அவருக்கு ஓய்வு தராமல் கேட்பவர்கள் கொஞ்சம் பேர்தான். இடைவிடாமல் ஜெபிப்பவர்கள் வெகு சிலரே விழித்திருந்து ஜெபிப்பவர்கள் சிலர்தான். சோர்வுறாமலும். நிறுத்தாமலும் ஜெபிப்பவர்கள் சிலரே. ஆம். சரியானபடி ஜெபிப்பவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். கிறிஸ்தவத்தில் ஜெபிப்பதும் ஒரு பாகம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதை அனுசரிப்பவர்கள் சிலரே எல்லோரும் ஜெபிக்க வேண்டுமென்பது தெரியும். ஆனால் அதை செயல்படுத்துகிறவர்கள் எத்தனை பேர்?
இளைஞனே, உனது ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டுமானால் நீ ஜெபிக்க வேண்டும். கடவுளுக்கு ஊமையாள பிள்ளைகள் இல்லை. நீத உலகத்திற்கும், மாமிசத்திற்கும், சாத்தானுக்கும் எதிர்த்து நிற்க வேண்டுமானால் (1 யோவா 2:16) நீ ஜெபிக்கிறவனாய் இருக்க வேண்டும். முன்கூட்டியே பெலனைப் பெற்றுக் கொள்ளாமல், சோதனை வந்துவிட்ட பிறகு பெலனடைய நாடுவதால் பிரயோஜனமில்லை. ஒருபோதும் ஜெபித்திராதவர்களின் மத்தியிலே நீ இருக்க நேரிடலாம். கடவுளிடம் எப்போதும் எதையுமே கேட்டறியாதவர்கள் இருக்கின்ற அதே அறையிலே அவர்களுடனே நீ உறங்க நேரிடலாம். இருந்தாலும் நீ ஜெபிக்கத்தான் வேண்டும்.
உங்களுக்கு இதைக் குறித்து சில சிரமங்கள் இருக்கிறதென்று நம்புகிறேன். சந்தர்ப்பங்கள் நேரம். இடம் போன்ற சிரமங்கள் இருக்கலாம். இவைகளில் நான் எந்த கடினமான கட்டளையையும் விதிக்க மாட்டேன். நீங்கள் உங்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்படுங்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைக்கேற்ப சிந்தித்து செயல்படுங்கள். நமது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து தனித்து மலையின் மீது போய் ஜெபித்தார். ஈசாக்கு வயல்வெளிகளில் ஜெபிக்கச் சென்றார். எசேக்கியா ராஜா தனது வியாதிப் படுக்கையிலே கட்டிலின் மேல் படுத்து சுவர்ப்புறமாகத் திரும்பி ஜெபித்தார். தானியேல் ஆற்றங்கரையிலே ஜெபித்தார். பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் மேல்மாடியிலே ஜெபித்தனர். சில இளைஞர்கள் குதிரைகள் கட்டும் லாயத்திலும் வைக்கோற் பரண்களிலும் ஜெபித்திருக்கிறார்கள் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் உங்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது. "அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி" (மத் 6:6) என்பதன் அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் என்பதே. கடவுளோடு நீங்கள் முகமுகமாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள், தினசரி அவ்வேளையிலே கடவுளோடு பேசும்படி பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டாயம் ஜெபிக்க வேண்டும்.
இது இல்லாமல் எந்த புத்திமதியாலும், அறிவுரைகளாலும் பயன் ஒன்றுமில்லை. பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 6-ஆம் அதிகாரத்தில் பட்டியலிட்டுக் காண்பிக்கிற சர்வாயுத வர்க்கத்தின் கடைசி ஆயுதம் இந்த ஜெபமாகும். இதை உண்மையோடும். அதன் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்களாகவும் பிரயோகிக்க வேண்டும். வாழ்க்கையாகிய வனாந்தரத்திலே நீங்கள் பத்திரமாக பயணம் செய்ய வேண்டுமானால் அனுதினமும் உட்கொள்ள வேண்டிய ஆகாரமாக இது இருக்கிறது. கடவுள் இருக்கின்ற உயர்ந்த ஸ்தலத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு ஜெபத்தின் மூலமாக பலம் பெற வேண்டும். நாள் ஒரு காரியத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரும்பு பட்டறைகளில் வேலை செய்பவர்கள், காந்த சக்தியுள்ள ஒரு முகமூடியை அணிந்து கொள்வார்களாம். அங்கு பறக்கின்ற இரும்புத் துகள்கள் அவர்கள் உடலுக்குள் சென்றுவிடாமல் இந்த காந்த சக்தியுள்ள முகமூடி தடுத்துவிடும். அந்த துகள்கள் முகமூடியில் வந்து ஒட்டிக் கொள்ளும். அந்த ஜனங்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். அதுபோல ஜெபமாகிய முகமூடியை நீங்கள் எப்போதும் அணிந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவ்வுலகத்தின் அசுத்தங்கள் உங்கள் ஆத்துமாவைக் கறைப்படுத்திவிடாதபடிக்கு அது தடை செய்கிறதாயிருக்கிறது. ஆகவே ஜெபிக்கத் தவறாதீர்கள்.
ஒரு மனிதன் முழங்காலில் நின்ற நேரங்கள்தான் மிகவும் அருமையாக செலவிடப்பட்ட நேரங்களாகும். இதை மறவாதீர்கள். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதை நினைத்துப் பாருங்கள். அவர் என்ன சொல்லுகிறார்? 'அந்திசந்தி, மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேள் அவர் என் சத்தத்தைக் கேட்பார்* (சங் 55:17), தானியேலைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் அலுவல்கள் யாவும் தானியேலின் கைகளில் இருந்தது. என்றாலும் தானியேல் ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபிக்கத் தவறவில்லை. பொல்லாத பாபிலோனிலே தானியேல் பத்திரமாக இருந்ததன் இரகசியம் உங்களுக்குப் புரிகிறதா? சாலமோனை நினைத்துப் பாருங்கள். தனது ராஜ்யபாரத்தை நடத்துவதற்கு உதலியையும் ஞானத்தையும் ஜெபத்தின் மூலமாகக் கடவுளிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டதால் சாலமோனால் திறமையாக ஆட்சிபுரிய முடிந்தது. நெகேமியாவின் ஜெபவாழ்வு ஒரு உதாரணம், அர்த்தசஷ்டா ராஜாவின் சமூகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதும் பரலோகத்தின் தேவனிடத்தில் மன்றாட அவர் நேரம் வைத்திருந்தார். இந்த தேவமனுஷர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகளை சிந்தித்துப் பார்த்து நீங்களும் அவர்களைப் போல செயல்படுங்கள்.
ஓ! கர்த்தர்தாமே உங்களுக்கு கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் தருவாராக. நீ இதுமுதல் என்னை நோக்கி என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதி என்று சொல் (எரே 3:4), நாள் கூறிய மற்ற காரியங்களை நீங்கள் மறந்து போனாலும். ஜெபத்தின் அவசியத்தைக் குறித்ததான இந்த ஒரு கருத்தையாவது உங்கள் இருதயத்தில் பதித்துக் கொண்டீர்களானால் நலமாயிருக்கும்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.