| 1 | யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது. | எரே 39:1 எரே 39:2 எரே 52:4 எரே 52:5 2இரா 25:1 2இரா 25:2 2நாளா 36:11 |
| 2 | அப்பொழுது பாபிலோனிய மன்னனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினர் எரேமியாவோ யூதா அரசனது அரண்மனையில் இருந்த காவல்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். | எரே 32:3 எரே 32:8 எரே 33:1 எரே 36:5 எரே 37:21 எரே 38:6 எரே 39:13-15 மத் 5:12 |
| 3 | யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான். | எரே 2:30 எரே 5:3 2இரா 6:31 2இரா 6:32 2நாளா 28:22 |
| 4 | யூதாவின் அரசன் செதேக்கியா கல்தேயரின் கைக்குத் தப்பமாட்டான்: மாறாக, அவன் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்படுவது உறுதி. செதேக்கியா அவனோடு நேருக்கு நேர் பேசுவான்: அவனை முகத்துக்கு முகம் பார்ப்பான். | எரே 37:17 எரே 38:18 எரே 38:23 எரே 39:4-7 எரே 52:8-11 2இரா 25:4-7 எசே 12:12 எசே 12:13 எசே 17:13-21 எசே 21:25 எசே 21:26 |
| 5 | அவன் செதேக்கியாவைப் பாபிலோனுக்கு இழுத்துச் செல்வான். நான் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்,” என்கிறார் ஆண்டவர். மேலும், கல்தேயருக்கு எதிராக நீங்கள் போரிட்டாலும் வெற்றி பெறமாட்டீர்கள் என்று நீ இறைவாக்கு உரைத்தது ஏன்? என்று சொல்லி, அவரைச் சிறைப்படுத்தினான். | எரே 27:22 எரே 34:4 எரே 34:5 |
| 6 | அப்பொழுது எரேமியா கூறியது: ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
| 7 | இதோ, உன் உறவினன் சல்லூமின் மகன் அனமேல் உன்னிடம் வந்து, “அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை நீ விலைக்கு வாங்கிக் கொள். எனெனில் அதை வாங்கி மீட்பது உனது உரிமை ஆகும்” என உன்னை வேண்டுவான். | 1இரா 14:5 மாற் 11:2-6 மாற் 14:13-16 |
| 8 | ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, “தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்: ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை: நீரே அதை வாங்கிக்கொள்ளும்” என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன். | எரே 32:2 எரே 33:1 |
| 9 | அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து நான் வாங்கினேன்: அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன். | ஆதி 23:15 ஆதி 23:16 1இரா 20:39 எஸ்தர் 3:9 ஏசா 55:2 |
| 10 | பத்திரத்தில் கையெழுத்திட்டு, அதில் முத்திரையிட்டேன்: சாட்சிகள் முன்னிலையில் வெள்ளியைத் தராசில் வைத்து நிறுத்துக் கொடுத்தேன். | எரே 32:12 எரே 32:44 ஏசா 44:5 |
| 11 | பின்னர் விதி முறைகளும் நிபந்தனைகளும் அடங்கிய முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அதன் முத்திரையிடப்படாத நகலையும் நான் பெற்றுக் கொண்டேன். | லூக் 2:27 அப் 26:3 1கொரி 11:16 |
| 12 | ஒப்பந்தப் பத்திரத்தை மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான பாரூக்கிடம் நான் கொடுத்தேன். என் உறவினரின் மகன் அனமேல் முன்னிலையிலும் பத்திரத்தில் கையொப்பமிட்டிருந்த சாட்சிகள் முன்னிலையிலும் காவல்கூடத்தில் உட்கார்ந்திருந்த யூதர் அனைவருடைய முன்னிலையிலும் நான் அதைக் கொடுத்தேன். | எரே 32:16 எரே 36:4 எரே 36:5 எரே 36:16-19 எரே 36:26-19 எரே 43:3-6 எரே 45:1-5 |
| 13 | அவர்கள் முன்னிலையில் நான் பாரூக்கிற்குக் கொடுத்த கட்டளையாவது: |
| 14 | இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்த ஒப்பந்தப் பத்திரங்களை-அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும்-எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை. |
| 15 | ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மீண்டும் விலைக்கு வாங்கப்படும். | எரே 32:37 எரே 32:43 எரே 32:44 எரே 30:18 எரே 31:5 எரே 31:12 எரே 31:24 எரே 33:12 எரே 33:13 ஆமோ 9:14 ஆமோ 9:15 சகரி 3:10 |
| 16 | ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது: | எரே 12:1 ஆதி 32:9-12 2சாமு 7:18-25 எசே 36:35-37 பிலிப் 4:6 பிலிப் 4:7 |
| 17 | “என் தலைவராகிய ஆண்டவரே! உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! உமக்குக் கடினமானது எதுவும் இல்லை. | எரே 1:6 எரே 4:10 எரே 14:13 எசே 9:8 எசே 11:13 |
| 18 | ஆயிரமாயிரம் பேருக்கு நீர் அருளன்பு காட்டி வருகிறீர். ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர். மாபெரும் ஆற்றல் மிகு இறைவா! படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும். | யாத் 20:5 யாத் 20:6 யாத் 34:7 எண் 14:18 உபா 5:9 உபா 5:10 உபா 7:9 உபா 7:10 |
| 19 | நீர் திட்டமிடுவதில் பெரியவர்: செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர். | ஏசா 9:6 ஏசா 28:29 ஏசா 40:13 ஏசா 46:10 ஏசா 46:11 ரோம 11:33 ரோம 11:34 எபே 1:11 |
| 20 | நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும் இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர். இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர். | யாத் 7:3 யாத் 10:2 உபா 4:34 உபா 6:22 உபா 7:19 நெகே 9:10 சங் 78:43-51 சங் 105:27-36 சங் 135:9 அப் 7:36 |
| 21 | அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால் பேரச்சம் உண்டாக, வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும் உம் மக்கள் இஸ்ரயேலை எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர். | யாத் 6:6 யாத் 13:14 சங் 105:37 சங் 105:43 சங் 106:8-11 |
| 22 | அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக நீர் வாக்களித்திருந்த நாட்டை-பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை-அவர்களுக்குக் கொடுத்தீர். | ஆதி 13:15 ஆதி 15:18-21 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 24:7 ஆதி 28:13-15 ஆதி 35:11 ஆதி 35:12 ஆதி 50:24 யாத் 13:5 எண் 14:16 எண் 14:30 உபா 1:8 உபா 1:35 உபா 6:10 உபா 6:18 உபா 6:23 உபா 7:13 உபா 8:1 யோசு 1:6 யோசு 21:43 நெகே 9:15 சங் 105:9-11 |
| 23 | அவர்கள் வந்து அதைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் உம் குரலக்குச் செவிகொடுக்கவில்லை: உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை: நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை. ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்தீர். | நெகே 9:15 நெகே 9:22-25 சங் 44:2 சங் 44:3 சங் 78:54 சங் 78:55 சங் 105:44 சங் 105:45 |
| 24 | இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன! வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்! | எரே 33:4 எசே 21:22 |
| 25 | ஓ! தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, 'வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்: அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்' என்று சொல்கிறீரே! ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே!” | எரே 32:24 சங் 77:19 சங் 97:2 யோவா 13:7 ரோம 11:33 ரோம 11:34 |
| 26 | பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: |
| 27 | நானே ஆண்டவர்: எல்லா மக்களுக்கும் கடவுள் நானே: அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ? | எண் 16:22 எண் 27:16 சங் 65:2 ஏசா 64:8 லூக் 3:6 யோவா 17:2 ரோம 3:29 ரோம 3:30 |
| 28 | ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான். | எரே 32:3 எரே 32:24 எரே 32:36 எரே 19:7-12 எரே 20:5 |
| 29 | இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்: அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்: ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்: வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்: இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள். | எரே 17:27 எரே 21:10 எரே 27:8-10 எரே 37:7-10 எரே 39:8 எரே 52:13 2இரா 25:9 2நாளா 36:19 ஏசா 64:10 ஏசா 64:11 புலம் 4:11 மத் 22:7 |
| 30 | இஸ்ரயேல் மக்களும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்: ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர். | எரே 2:7 எரே 3:25 எரே 7:22-26 உபா 9:7-12 உபா 9:22-24 2இரா 17:9-20 நெகே 9:16-37 சங் 106:6 சங் 106:7 ஏசா 63:10 எசே 16:15-22 எசே 20:8 எசே 20:28 எசே 23:43 எசே 23:44 அப் 7:51-53 |
| 31 | இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை, என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன். | எரே 5:9-11 எரே 6:6 எரே 6:7 எரே 23:14 எரே 23:15 1இரா 11:7 1இரா 11:8 2இரா 21:4-7 2இரா 21:16-7 2இரா 22:16 2இரா 22:17 2இரா 23:15 எசே 22:2-22 மத் 23:37 லூக் 13:33 லூக் 13:34 |
| 32 | ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டினார்கள்: அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள். | எரே 2:26 எஸ்றா 9:7 நெகே 9:32-34 ஏசா 1:4-6 ஏசா 1:23-6 ஏசா 9:14 ஏசா 9:15 எசே 22:6 எசே 22:25-29 தானி 9:6 தானி 9:8 மீகா 3:1-5 மீகா 3:9-12 செப் 3:1-4 |
| 33 | அவர்கள் தங்களது முகத்தை அல்ல, முதுகையே எனக்குக் காட்டினார்கள். திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை, அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. | எரே 2:27 எரே 7:24 எரே 18:17 எசே 8:16 ஓசி 11:2 சகரி 7:11 |
| 34 | எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர். | எரே 7:30 எரே 23:11 2இரா 21:4-7 2இரா 23:6 2நாளா 33:4-7 2நாளா 33:15-7 எசே 8:5-16 |
| 35 | மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்தவன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை: இது என் எண்ணத்தில் கூட எழவில்லை. | எரே 7:31 எரே 19:5 எரே 19:6 2இரா 23:10 2நாளா 28:2 2நாளா 28:3 2நாளா 33:6 சங் 106:37 சங் 106:38 ஏசா 57:5 எசே 16:20 எசே 16:21 எசே 23:37 |
| 36 | இப்பொழுதோ வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக இந்நகர் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதைக் குறித்துக் கூறுவது இதுவே: | எரே 16:12-15 ஏசா 43:24 ஏசா 43:25 ஏசா 57:17 ஏசா 57:18 எசே 36:31 எசே 36:32 ஓசி 2:14 ரோம 5:20 எபே 2:3-5 |
| 37 | “இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்: அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன். | எரே 23:3 எரே 23:8 எரே 29:14 எரே 30:18 எரே 31:10 எரே 33:7 உபா 30:3-6 சங் 106:47 ஏசா 11:11-16 எசே 11:17 எசே 34:12-14 எசே 36:24 எசே 37:21-25 எசே 39:25-29 ஓசி 1:11 ஓசி 3:5 ஆமோ 9:14 ஆமோ 9:15 ஒபதி 1:17-21 செப் 3:20 |
| 38 | அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். | எரே 24:7 எரே 30:22 எரே 31:1 எரே 31:33 ஆதி 17:7 உபா 26:17-19 சங் 144:15 எசே 11:19 எசே 11:20 எசே 36:28 எசே 37:27 எசே 39:22 எசே 39:28 சகரி 13:9 எபிரெ 8:10 எபிரெ 11:16 வெளிப் 21:7 |
| 39 | ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். இதனால் அவர்கள் தங்கள் நலனையும், தங்களுக்குப்பின் தங்கள் பிள்ளைகளின் நலனையும் கருதி, எந்நாளும் எனக்கு அஞ்சி நடப்பார்கள். | 2நாளா 30:12 ஏசா 52:8 எசே 11:19 எசே 11:20 எசே 36:26 எசே 37:22 யோவா 17:21 அப் 4:32 2கொரி 13:11 பிலிப் 2:1 பிலிப் 2:2 |
| 40 | நான் அவர்களோடு என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன். எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன். என்னைப் பற்றிய அச்சத்தை அவர்களது இதயத்தில் பதியவைப்பேன். இதனால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமாட்டார்கள். | எரே 31:31-33 எரே 50:5 ஆதி 17:7-13 2சாமு 23:4 ஏசா 24:5 ஏசா 55:3 ஏசா 61:8 லூக் 1:72-75 கலா 3:14-17 எபிரெ 6:13-18 எபிரெ 7:24 எபிரெ 13:20 |
| 41 | அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்: என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன் | உபா 30:9 ஏசா 62:5 ஏசா 65:19 செப் 3:17 |
| 42 | ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும் இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே, நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும் எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன். | எரே 31:28 யோசு 23:14 யோசு 23:15 சகரி 8:14 சகரி 8:15 மத் 24:35 |
| 43 | “இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு: இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள். | எரே 32:36 எசே 37:11-14 |
| 44 | வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்: அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்: இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன், என்கிறார் ஆண்டவர். | எரே 17:26 |