27
அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்: காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.
28
அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்: அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை.
29
அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்: அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.
30
அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன: மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன.
31
அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும் ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.
32
அவர் நீருக்குப் பதிலாகக் கல்லை மழையாகப் பொழிந்தார்: அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார்.
33
அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்: அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார்.
34
அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும் எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின.
35
அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன: அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன.
36
அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்: அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார்.