12
நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப் பெருந்தீமைகள் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்: என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை.
13
ஆகையால் இந்த நாட்டிலிருந்து, உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு, உங்களைத் தூக்கி எறிவேன். அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்: அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது.
14
ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது “எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
15
மாறாக, “வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று கூறுவார்கள். ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்திருந்த நாட்டிற்கே அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.