உபாகமம் 9:22-24 - WCV
22
தாபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத்து அத்தாவாவிலும் ஆண்டவருக்குக் கடும் சினம் வரச் செய்தீர்கள்.
23
ஆண்டவர் உங்களைக் காதேசு பர்னேயாவிலிருந்து அனுப்பி, “நான் உங்களுக்குக் கொடுத்துள்ள நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள்” என்றார்.நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்.அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் இல்லை: அவர் குரலுக்குச் செவி கொடுக்கவும் இல்லை.
24
நான் உங்களை அறிந்த நாளிலிருந்து நீங்கள் ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.