ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்: அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்: அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்: அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.