| 1 | காவல்கூடத்தில் எரேமியா இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்பட்டது: | எரே 32:2 எரே 32:3 எரே 32:8 எரே 37:21 எரே 38:28 2தீமோ 2:9 |
| 2 | உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் - “ஆண்டவர்” என்பது அவர் பெயராகும் - இவ்வாறு கூறுகிறார். | சங் 87:5 சங் 102:16 ஏசா 14:32 ஏசா 37:26 ஏசா 43:1 ஏசா 43:21 ஏசா 62:7 எபிரெ 11:10 எபிரெ 11:16 வெளிப் 21:2 வெளிப் 21:10 |
| 3 | என்னிடம் மன்றாடு: உனக்கு நான் செவிசாய்ப்பேன்: நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன். | எரே 29:12 உபா 4:7 உபா 4:29 1இரா 8:47-50 சங் 50:15 சங் 91:15 சங் 145:18 ஏசா 55:6 ஏசா 55:7 ஏசா 65:24 யோவே 2:32 லூக் 11:9 லூக் 11:10 அப் 2:21 ரோம 10:12 ரோம 10:13 1கொரி 1:2 |
| 4 | முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால் தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின் வீடுகளைக் குறித்தும், யூதா அரசர்களின் அரண்மனைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: | எரே 32:24 எசே 4:2 எசே 21:22 எசே 26:8 ஆபகூ 1:10 |
| 5 | எதிர்த்துப் போரிடவும், சினம்கொண்டு, சீற்றமுற்று நான் வெட்டி வீழத்திய மனிதர்களின் பிணங்களால் வீடுகளை நிரப்பவும், இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். | எரே 21:4-7 எரே 32:5 எரே 37:9 எரே 37:10 |
| 6 | ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்: அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன். | எரே 17:14 எரே 30:12-17 உபா 32:39 சங் 67:2 ஏசா 30:26 ஏசா 58:8 ஓசி 6:1 ஓசி 7:1 |
| 7 | யூதாவை அதன் அடிமைத்தனத்தினின்றும் இஸ்ரயேலை அதன் அடிமைத்தனத்தினின்றும் நான் அழைத்துவருவேன்: முன்பு இருந்தது போன்று அவற்றைக் கட்டி எழுப்புவேன். | எரே 33:11 எரே 33:26 எரே 23:3 எரே 29:14 எரே 30:3 எரே 32:44 சங் 14:7 சங் 85:1 சங் 126:1 சங் 126:4 ஏசா 11:12-16 செப் 3:20 |
| 8 | எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் தூய்மைப்படுத்துவேன்: அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன். | எரே 31:34 எரே 50:20 சங் 51:2 சங் 65:3 சங் 85:2 சங் 85:3 ஏசா 4:2 ஏசா 44:22 ஏசா 56:7 எசே 36:25 எசே 36:33 யோவே 3:21 மீகா 7:18 மீகா 7:19 சகரி 13:1 எபிரெ 9:11-14 1யோவா 1:7-9 வெளிப் 1:5 |
| 9 | நான் எருசலேமுக்குச் செய்துவரும் எல்லா நன்மைகளையும் பற்றிக் கேள்வியுறும் உலகின் மக்களினத்தார் அனைவரின் முன்னிலையில் அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி, மாட்சி தரும் நகராய் விளங்கும். நான் அதற்கு வழங்கும் அனைத்து நலத்தையும் வளத்தையும் அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள். | எரே 13:11 எரே 31:4 சங் 126:2 சங் 126:3 ஏசா 62:2 ஏசா 62:3 ஏசா 62:7 ஏசா 62:12 செப் 3:17-20 சகரி 8:20-23 |
| 10 | ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “ஆளரவமற்ற பாழ்நிலம்” என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் - மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும்- | எரே 32:36 எசே 37:11 |
| 11 | மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். 'படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர்: அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது' எனப் பாடியவாறு ஆண்டவர் இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்: ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர். | எரே 7:34 எரே 16:9 எரே 25:10 யோவா 3:29 வெளிப் 18:23 |
| 12 | படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மனிதனோ விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும், இதை அடுத்த எல்லா நகர்களிலும் இடையர் தம் மந்தைகளை இளைப்பாற்றும் குடியிருப்புகள் மீண்டும் தோன்றும். | எரே 32:43 எரே 36:29 எரே 51:62 |
| 13 | மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும், பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும் ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில் அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர். | லேவி 27:32 லூக் 15:4 யோவா 10:3 யோவா 10:4 |
| 14 | இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். | எரே 23:5 எரே 29:10 எரே 31:27 எரே 31:31-34 எரே 32:38-41 ஆதி 22:18 ஆதி 49:10 1நாளா 17:13 1நாளா 17:14 ஏசா 7:14 ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 32:1 ஏசா 32:2 எசே 34:23-25 தானி 2:44 தானி 7:13 தானி 7:14 தானி 9:25 ஆமோ 9:11 மீகா 5:2 செப் 3:15-17 ஆகா 2:6-9 சகரி 9:9 சகரி 9:10 மல்கி 3:1 லூக் 1:69 லூக் 1:70 லூக் 2:10 லூக் 2:11 லூக் 10:24 அப் 13:32 அப் 13:33 2கொரி 1:20 எபிரெ 11:40 1பேது 1:10 வெளிப் 19:10 |
| 15 | அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். | எரே 23:5 எரே 23:6 ஏசா 4:2 ஏசா 11:1-5 ஏசா 53:2 எசே 17:22 எசே 17:23 சகரி 3:8 சகரி 6:12 சகரி 6:13 |
| 16 | அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்: எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். | எரே 23:6 ஏசா 45:17 ஏசா 45:22 ரோம 11:26 |
| 17 | ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார். | எரே 35:19 2சாமு 3:29 2சாமு 7:14-16 1இரா 2:4 1இரா 8:25 1நாளா 17:11-14 1நாளா 17:27-14 சங் 89:29-37 ஏசா 9:7 லூக் 1:32 லூக் 1:33 |
| 18 | என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும், தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும், என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும் தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே இராமல் போகார். | ஏசா 56:7 ஏசா 61:6 எசே 43:19-27 எசே 44:9-11 எசே 45:5 ரோம 1:21 ரோம 15:16 எபிரெ 13:15 எபிரெ 13:16 1பேது 2:5 1பேது 2:9 வெளிப் 1:6 வெளிப் 5:10 |
| 19 | ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: |
| 20 | ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின், | எரே 33:25 எரே 33:26 எரே 31:35 எரே 31:36 ஆதி 8:22 சங் 89:37 சங் 104:19-23 ஏசா 54:9 ஏசா 54:10 |
| 21 | என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும், தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன் அவனுக்கு இருக்கமாட்டான்: என் பணியாளர்களான லேவி குலத்துக் குருக்களுக்கும் இவ்வாறே நிகழும். | 2சாமு 23:5 2நாளா 7:18 2நாளா 21:7 சங் 89:34 சங் 132:11 சங் 132:12 சங் 132:17 ஏசா 55:3 மத் 24:35 லூக் 1:69 லூக் 1:70 |
| 22 | எண்ணமுடியாத விண்மீன்களையும் அளக்க முடியாத கடல் மணலையும் போல, என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும் என் பணியாளரான லேவியரையும் நான் பெருகச் செய்வேன். | எரே 31:37 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 22:17 ஆதி 28:14 ஓசி 1:10 எபிரெ 11:12 வெளிப் 7:9 வெளிப் 7:10 |
| 23 | ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: |
| 24 | ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வரை நீ கவனித்ததில்லையா? என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்: அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை. | எரே 33:21 எரே 33:22 சங் 94:14 ரோம 11:1-6 |
| 25 | ஆண்டவர் கூறுவது இதுவே: நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில், | எரே 33:20 ஆதி 8:22 ஆதி 9:9-17 |
| 26 | யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்: அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன். | எரே 31:37 ஆதி 49:10 |