1நாளாகமம் 17:11-14 - WCV
11
உன் வாழ்நாள் முடிந்து உன் மூதாதையரோடு நீ சேர்ந்து கொள்ளும்பொழுது, உன் வழித்தோன்றல்களுள்-உன் புதல்வர்களுள்-ஒருவனை எழுப்பி அவனது அரசை நிலை நாட்டுவேன்.
12
அவன் எனக்குக் கோவில் கட்டுவான்: அவன் அரியணையை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்.
13
நான் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்: அவன் எனக்கு மகனாய் இருப்பான். உனக்கு முன்னிருந்தவனிடமிருந்து என் பேரன்பை நான் விலக்கிக் கொண்டதுபோல அவனைவிட்டு விலக்கிக்கொள்ள மாட்டேன்.
14
மாறாக அவனை என் கோவிலின் மேலும், அரசின் மேலும் தலைவனாக என்றென்றும் நியமிப்பேன். அவன் அரியணை என்றென்றும் நிலைக்கும். ;