9
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத எந்த அன்னியரும் இஸ்ரயேலரிடையே வாழும் அன்னியரும்கூட என் தூயகத்தில் நுழையக்கூடாது.
10
இஸ்ரயேலர் என்னைவிட்டு விலகிச்சென்று அவர்கள் தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரிந்தபோது, அவர்களுடன் என்னைவிட்டு விலகிவிட்ட லேவியரும்கூடத் தங்கள் குற்றப்பழியைச் சுமக்க வேண்டும்.
11
அவர்கள் கோவிலின் வாயில்களைக் காக்கும் பொறுப்பேற்று என் தூயகத்தில் பணிபுரியலாம்: எரிபலிகள் மற்றும் மக்கள் பலிகளுக்கான விலங்குகளை வெட்டலாம்: மக்கள் முன்னிலையில் நின்று அவர்களுக்கெனத் திருப்பணி புரியலாம்.