29
அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்: அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன்.
30
அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ,
31
என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடிலோ,
32
அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்: அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன்:
33
ஆயினும், என் பேரன்பை தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்: என் வாக்குப்பிறாழாமையினின்று வழுவமாட்டேன்.
34
என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன்.
35
ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்: ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன்.
36
அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: அவனது அரியணை கதிரவன் உள்ளளவும் என்முன் நிலைக்கும்.
37
அது விண்ணின் உண்மையான சான்றென உறுதியாயிருக்கும்: நிலாவென என்றென்றும் நிலைத்திருக்கும்.”(சேலா)