எரேமியா 30:12-17 - WCV
12
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது: உனது புண் புரையோடிப்போனது.
13
உனக்காக வாதிட எவனும் இல்லை: உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை: உன்னைக் குணப்படுத்தவே முடியாது.
14
உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்: உன்னை அவர்கள் தேடுவதே இல்லை: மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்: கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்: ஏனெனில் உனது குற்றம் பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை.
15
நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்கமுடியாது: ஏனெனில் உனது குற்றமோ பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை: எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.
16
ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்: உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்: உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்: உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.
17
நான் உனக்கு நலம் அளிப்பேன்: உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று உன்னை அழைத்தார்கள்: “இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர்”, என்றார்கள்.