ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, “தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்: ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை: நீரே அதை வாங்கிக்கொள்ளும்” என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன்.