எசேக்கியேல் 43:19-27 - WCV
19
என்னை அணுகி வந்து என் முன்னிலையில் திருப்பணிபுரியம் சாதோக்கின் வழிவந்த லேவியராகிய குருக்களுக்கு ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாய்த் தர வேண்டும். இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.
20
நீங்கள் அதன் இரத்ததில் கொஞ்சம் எடுத்துப் பீடத்தின் நான்கு கொம்புகளிலும் மேல்விளிம்பின் நான்கு முனைகளிலும் சுற்றுமுள்ள சதுரங்கள் முழுவதிலும் தடவ வேண்டும். இவ்வாறு பீடத்தையும் புனிதப்படுத்தி அதற்குக் கறைநீக்கம் செய்ய வேண்டும்.
21
பாவம் போக்கும் பலிக்கான இளங்காளையைக் கோவில் பகுதியில் தூயகத்துக்கு வெளியே குறிப்பிட்ட பகுதியில் எரிக்க வேண்டும்.
22
இரண்டாம் நாள் ஒரு மாசு மறுவற்ற ஆட்டுக்கிடாயை எடுத்து பாவம் போக்கும் பலியாய்ச் செலுத்த வேண்டும். இவ்வாறு இளங்காளையினால் புனிதப்படுத்துவது போல் பீடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.
23
அதைப் புனிதப்படுத்தி முடிந்தபின் நீங்கள் மந்தையிலிருந்து, மாசு மறுவற்ற ஒர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் பலியிட வேண்டும்.
24
அவற்றை ஆண்டவரின் முன்னிலையில் படைக்க வேண்டும். குருக்கள் அதன்மேல் உப்புத் தூவி அவற்றை ஆண்டவருக்கு எரிபலியாய் அளிக்க வேண்டும்.
25
ஏழு நாள்களுக்குத் தினமும் பாவம் போக்கும் பலியாய் நீங்கள் ஆட்டுக்கிடாயைக் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் மந்தையிலிருந்து மாசு மறுவற்ற ஓர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும்.
26
ஏழு நாள்களுக்கு அவைகள் பீடத்திற்காய்ப் பாவக்கழுவாய் செய்து அதைப் புனிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதை அர்ப்பணிப்பார்கள்.
27
இந்நாள்கள் முடிந்தபின் எட்டாம் நாளிலிருந்து குருக்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்த வேண்டும். நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.