15
நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடமெல்லாம் வேசித்தனம் செய்தாய்.
16
உன் ஆடைகளில் சில எடுத்து தொழுகை மேடுகளை அழகுபடுத்தி அங்கு வேசித்தனம் செய்தாய். ஒருக்காலும் அதுபோல் நடந்ததில்லை: இனிமேல் நடக்கப் போவதுமில்லை.
17
நான் உனக்குத் தந்த பொன், வெள்ளி அணிகலன்களைக் கொண்டு நீ ஆண் உருவங்களைச் செய்து, அவற்றுடன் வேசித்தனம் செய்தாய்.
18
உன் பூப்பின்னல் ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் போர்த்தி, எனக்குரிய எண்ணெயையும் தூபத்தையும் அவற்றின் முன் எரித்தாய்.
19
நான் உனக்கு அளித்த மாவு, எண்ணெய், தேன் ஆகிய அதே உணவுப் பொருள்களை, நீ அவற்றின்முன் நறுமணப் பலியெனப் படைத்தாய் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
20
நீ எனக்குப் பெற்ற உன் புதல்வர் புதல்வியரை அவற்றுக்குப் பலியிட்டாயே! நீ வேசித்தனம் செய்தது போதாதென்றோ?
21
என் புதல்வரையும் அவற்றிற்குப் பலியிட்டாய்.
22
இத்துணை அருவருப்பான செயல்களிலும் நீ வேசித்தனத்திலும் ஈடுபட்டபோது உன் இளமையில் ஆடையின்றித் திறந்த மேனியாய் உன் இரத்தத்தில் புரண்டு கொண்டு இருந்த நாள்களை நீ நினைத்துப் பார்க்கவில்லை.