8
அவரோ பெயரின் பொருட்டு அவர்களை விடுவித்தார்: இவ்வாறு அவர் தமது வலிமையை வெளிப்படுத்தினார்.
9
அவர் செங்கடலை அதட்டினார்: அது உலர்ந்து போயிற்று: பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல் அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார்.
10
எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்: பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார்.
11
அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது: அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை.