| 1 | ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.” | எரே 30:24 |
| 2 | ஆண்டவர் கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்: இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர். | யாத் 1:16 யாத் 1:22 யாத் 2:23 யாத் 5:21 யாத் 12:37 யாத் 14:8-12 யாத் 15:9 யாத் 15:10 யாத் 17:8-13 |
| 3 | ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்: எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். | உபா 7:7-9 உபா 10:15 உபா 33:3 உபா 33:26 ஓசி 11:1 மல்கி 1:2 ரோம 9:13 1யோவா 4:19 |
| 4 | கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்: நீயும் கட்டி எழுப்பப்படுவாய்: மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்: மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக் கொண்டு நீ வெளியேறுவாய்: | எரே 1:10 எரே 30:18 எரே 33:7 சங் 51:18 சங் 69:35 ஆமோ 9:11 அப் 15:16 எபே 2:20-22 வெளிப் 21:10-27 |
| 5 | சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்: தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர். | உபா 28:30 ஏசா 62:8 ஏசா 62:9 ஏசா 65:21 ஏசா 65:22 ஆமோ 9:14 மீகா 4:4 சகரி 3:10 |
| 6 | ஏனெனில் ஒரு நாள் வரும்: அப்பொழுது எப்ராயிம் மலையில், 'எழுந்திருங்கள்: நான் சீயோனுக்குப் போவோம்: நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று காவலர் அழைப்பு விடுப்பர். | எரே 6:17 ஏசா 40:9 ஏசா 52:7 ஏசா 52:8 ஏசா 62:6 எசே 3:17 எசே 33:2 ஓசி 9:8 |
| 7 | ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்: மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்: முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்: 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள். | உபா 32:43 சங் 67:1 சங் 96:1-3 சங் 98:1-4 சங் 117:1 சங் 117:2 சங் 138:4 சங் 138:5 ஏசா 12:4-6 ஏசா 24:14-16 ஏசா 42:10-12 ஏசா 44:23 செப் 3:14-20 |
| 8 | இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்: பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். | எரே 3:12 எரே 23:8 எரே 29:14 சங் 107:3 சகரி 2:6 |
| 9 | அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்: ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்: நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்: இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை. | எரே 3:4 எரே 50:4 சங் 126:5 சங் 126:6 ஓசி 12:4 சகரி 12:10 தானி 9:17 தானி 9:18 மத் 5:4 லூக் 6:21 ரோம 8:26 2கொரி 7:9-11 எபிரெ 5:7 |
| 10 | மக்களினத்தாடரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்: 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். | ஆதி 10:5 சங் 72:10 ஏசா 24:14 ஏசா 41:1 ஏசா 42:4 ஏசா 42:10 ஏசா 60:9 ஏசா 66:19 செப் 2:11 |
| 11 | ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்: அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். | எரே 15:21 எரே 50:33 ஏசா 44:23 ஏசா 48:20 ஏசா 49:24 ஓசி 13:14 மத் 20:28 தீத் 2:14 எபிரெ 2:14 எபிரெ 2:15 |
| 12 | அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்: தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்: அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்: அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்கள். | எரே 31:4 எரே 33:9-11 ஏசா 12:1-6 ஏசா 35:10 ஏசா 51:11 |
| 13 | அப்பொழுது கன்னிப்பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்: அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்: அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்: அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்: துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். | எரே 31:4 நெகே 12:27 நெகே 12:43 சங் 30:11 சங் 149:3 சகரி 8:4 சகரி 8:5 சகரி 8:19 |
| 14 | குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்: என் மக்கள் எனது வள்ளன்மையால் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர். | உபா 33:8-11 2நாளா 6:41 நெகே 10:39 சங் 132:9 சங் 132:16 ஏசா 61:6 1பேது 2:9 வெளிப் 5:10 |
| 15 | ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது: ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்: ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்: ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை. | எரே 40:1 யோசு 18:25 1சாமு 7:17 மத் 2:18 |
| 16 | ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நீ அழுகையை நிறுத்து: கண்ணீர் வடிக்காதே: ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும், என்கிறார் ஆண்டவர். தங்கள் பகைவரின் நாட்டினின்று அவர்கள் திரும்பி வருவார்கள். | ஆதி 43:31 ஆதி 45:1 சங் 30:5 மாற் 5:38 மாற் 5:39 யோவா 20:13-15 1தெச 4:14 |
| 17 | உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை உண்டு, என்கிறார் ஆண்டவர். உன் பிள்ளைகள் தம் நாட்டுக்குத் திரும்புவர். | எரே 29:11-16 எரே 46:27 எரே 46:28 சங் 102:13 சங் 102:14 ஏசா 6:13 ஏசா 11:11-16 புலம் 3:18 புலம் 3:21 புலம் 3:26 எசே 37:11-14 எசே 37:25-14 எசே 39:28 ஓசி 2:15 ஓசி 3:5 ஆமோ 9:8 ஆமோ 9:9 மத் 24:22 ரோம 11:23-26 |
| 18 | எப்ராயிமின் புலம்பலை நான் உண்மையாகவே கேட்டேன்: “பணியாத இளம் காளையை அடித்துத் திருத்துவதுபோல நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்: நீர் என்னைத் திரும்ப அழைத்துச் செல்லும்: நானும் திரும்பி வரவேன்: ஏனெனில், என் கடவுளாகிய ஆண்டவர் நீரே. | யோபு 33:27 யோபு 33:28 சங் 102:19 சங் 102:20 ஏசா 57:15-18 ஓசி 5:15 ஓசி 6:1 ஓசி 6:2 லூக் 15:20 |
| 19 | உம்மை விட்டு விலகிச் சென்றபின் நான் மனம் வருந்தினேன்: பயிற்றுவிக்கப்பட்டபின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்: என் இளமையின் அவமானம் இன்னும் என்னிடம் காணப்பட்டது. நான் வெட்கித் தலை குனிந்தேன்.” | உபா 30:2 உபா 30:6-8 எசே 36:26 எசே 36:31 சகரி 12:10 லூக் 15:17-19 யோவா 6:44 யோவா 6:45 எபே 2:3-5 2தீமோ 2:25 தீத் 3:3-7 |
| 20 | “எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா? நீ என் அன்புக் குழந்தை அல்லவா? உனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும், உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்: உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது: திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்” என்கிறார் ஆண்டவர். | எரே 31:9 எரே 3:19 சங் 103:13 நீதி 3:12 லூக் 15:24 லூக் 15:32 |
| 21 | உனக்கெனச் சாலை அடையாளங்களை அமைத்துக்கொள்: உனக்கெனக்”கைகாட்டிகளை நாட்டிக்கொள்: நீ நடந்து சென்ற வழியாகிய நெடுஞ்சாலையை நினைவில் கொள். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே, திரும்பி வா: இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா. | ஏசா 57:14 ஏசா 62:10 |
| 22 | நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே! இன்னும் எத்துணைக் காலம் நீ அலைந்து திரிவாய்? ஆண்டவராகிய நான் விந்தையான ஒன்றை உலகில் படைத்துள்ளேன்: ஒரு பெண் தன் கணவனைப் பாதுகாக்கின்றாள்.” | எரே 2:18 எரே 2:23 எரே 2:36 எரே 4:14 எரே 13:27 ஓசி 8:5 |
| 23 | இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அடிமைத்தனத்தினின்று அவர்களை நான் திரும்பக் கொணரும் பொழுது, 'நீதியின் இருப்பிடமே தூய்மை மிகு மலையே! ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!' என்னும் வாழ்த்துரை யூதா நாட்டிலும் அதன் நகர்களிலும் மீண்டும் எதிரொலிக்கும். | எரே 23:5-8 எரே 33:15-26 ஏசா 1:26 ஏசா 60:21 சகரி 8:3 |
| 24 | யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும் மக்கள் குடியிருப்பர்: விவசாயிகளும், ஆடு மேய்க்கும் இடையர்களும் சேர்ந்து வாழ்வர். | எரே 33:11-13 எசே 36:10 சகரி 2:4 சகரி 8:4-8 |
| 25 | ஏனெனில் சோர்ந்த உள்ளங்களுக்கு நான் புத்துயிர் அளிப்பேன்: வாடிய நெஞ்சங்களுக்கு நான் நிறைவளிப்பேன். | எரே 31:14 சங் 107:9 ஏசா 32:2 ஏசா 50:4 மத் 5:6 மத் 11:28 லூக் 1:53 யோவா 4:14 2கொரி 7:6 |
| 26 | அப்பொழுது நான் விழித்தெழுந்து பார்த்தேன்: என் தூக்கம் எனக்கு இன்பமாய் இருந்தது. | சங் 127:2 சகரி 4:1 சகரி 4:2 |
| 27 | இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும் யூதா வீட்டையும் மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன், என்கிறார் ஆண்டவர். | எரே 30:19 எசே 36:9 ஓசி 2:23 சகரி 10:9 |
| 28 | பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், தீங்கிழைக்கவும் அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி விழிப்பாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நடவும் விழிப்பாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். | எரே 44:27 தானி 9:14 |
| 29 | அக்காலத்தில் அவர்கள், “தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்று சொல்ல மாட்டார்கள். | எரே 31:30 புலம் 5:7 எசே 18:2 எசே 18:3 |
| 30 | ஆனால், எல்லாரும் அவரவர் தம் தீச்செயலின் பொருட்டே சாவர். புளித்த திராட்சைப் பழம் தின்பவனுக்குத்தான் பல் கூசும். | உபா 24:16 ஏசா 3:11 எசே 3:18 எசே 3:19 எசே 3:24 எசே 18:4 எசே 18:20 எசே 33:8 எசே 33:13 எசே 33:18 கலா 6:5 கலா 6:7 கலா 6:8 யாக் 1:15 |
| 31 | இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். | எரே 31:27 எரே 23:5 எரே 30:3 எரே 33:14-16 ஆமோ 9:13 |
| 32 | அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். | எரே 31:1 எரே 34:14 யாத் 19:5 யாத் 24:6-8 உபா 5:3 உபா 29:1 1இரா 8:9 எசே 16:8 எசே 16:60-62 எபிரெ 9:18-22 |
| 33 | அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். | எரே 32:40 |
| 34 | இனிமேல் எவரும் “ஆண்டவரை அறிந்துகொள்ளும்” எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்: அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன். | 1தெச 4:9 எபிரெ 5:12 1யோவா 2:27 |
| 35 | ஆண்டவர் பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்: இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளார்: அலைகள் முழங்குமாறு கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்: “படைகளின் ஆண்டவர்” என்பது அவரது பெயராம். அவர் கூறுவது இதுவே: | ஆதி 1:14-18 உபா 4:19 யோபு 38:33 சங் 19:1-6 சங் 72:5 சங் 72:17 சங் 74:16 சங் 89:2 சங் 89:36 சங் 89:37 சங் 119:89 சங் 136:7-9 மத் 5:45 |
| 36 | மேற்கண்ட நியமங்கள் என் திருமுன்னின்று மறைந்துவிடுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினர் என் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமல் போய்விடுவர், என்கிறார் ஆண்டவர். | எரே 33:20-26 சங் 72:5 சங் 72:17 சங் 89:36 சங் 89:37 சங் 102:28 சங் 119:89 சங் 148:6 ஏசா 54:9 ஏசா 54:10 |
| 37 | ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மேலே வான்வெளி அளக்கப்படக் கூடுமாயின், கீழே பூவுலகின் அடித்தளங்களைக் கண்டுபிடிக்க இயலுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினரின் அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு அவர்கள் அனைவரையும் நான் தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர். | எரே 33:22 யோபு 11:7-9 சங் 89:2 நீதி 30:4 ஏசா 40:12 |
| 38 | இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர். | எரே 31:27 எரே 23:5 |
| 39 | அதன் எல்லை நேராகக் காரேபு மலைவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும். | எசே 40:8 சகரி 2:1 சகரி 2:2 |
| 40 | பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது: அழித்தொழிக்கப்படாது. | எரே 7:32 எரே 19:11-13 எரே 32:36 எசே 37:2 |