சங்கீதம் 96:1-3 - WCV
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்:
2
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்: அவர் பெயரை வாழ்த்துங்கள்: அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.