சகரியா 8:4-8 - WCV
4
படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்: வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்:
5
நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்: அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.”
6
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
7
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்:
8
அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்: அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்: அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்: உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: “