எரேமியா 29:11-16 - WCV
11
ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
12
நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.
13
நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்.
14
ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்: நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களிங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.
15
'ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்' என்று சொல்கிறீர்கள்.
16
ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே: