ஏனெனில், அக்கருவூல அறைகளில்தான் இஸ்ரயேல் மக்களும், லேவியரும் கொடையாகக் கொடுத்த தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்தனர். அங்கேதான் கோவில் திருப்பணிக்குரிய பாத்திரங்களும் இருந்தன. குருக்களும், பாடகர்களும், வாயிற்காவலரும், திருப்பணியாளர்களும் அங்கு இருந்து வந்தனர். 'எங்கள் கடவுளின் கோவிலைப் புறக்கணிக்க மாட்டோம்' என்று வாக்குறுதி அளித்தனர்.