உபாகமம் 33:8-11 - WCV
8
லேவியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம் என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு மெரிபாவின் நீரூற்றருகில் வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம் இருக்கட்டும்.
9
அவனிடமே அவற்றைக் கொடும்: ஏனெனில் அவன் தன் தந்தையையும் தாயையும் நோக்கி”நான் உங்களைப் பாரேன்” என்றவன்: தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொள்ளாதவன்: தன் சொந்தப் பிள்ளைகளையே அறியாதவன்: உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை நிறைவேற்றுபவன்:
10
யாக்கோபுக்கு உம் நீதிமுறைமைகளையும் இஸ்ரயேலுக்கு உம் திருச்சட்டத்தையும் கற்றுத்தருபவன்: உமது முன்னிலையில் தூபம் காட்டுபவன்: உமது பீடத்தில் எரிபலிகளைச் செலுத்துபவன்.
11
ஆண்டவரே, அவனது ஆற்றலை ஆசியால் நிரப்பும்: அவனுடைய கரங்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ளும்: அவனுக்கு எதிராக எழும்புவோரை அவர்களின் இடுப்பு ஒடிந்துவிழும் வண்ணம் வதையும்.அவனைப் பகைப்பவர் மீண்டும் எழாதவாறு செய்யும்.