14
எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்: ஆண்டவரின் மாட்சி பற்றி மேற்கிலிருந்து ஆரவாரம் செய்கின்றார்கள்.
15
ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரைப் பெருமைப் படுத்துங்கள்: கடற்கரை நாடுகளில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்.
16
மண்ணுலகின் எல்லையிலிருந்து “நீதியுள்ளவருக்கு மாட்சி” என்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்: நானோ, “இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன், எனக்கு ஐயோ, கேடு: எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்: துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள்” என்றேன்.