43
அந்நாளில் எகிப்தில் அவர் அருஞ்செயல்கள் செய்தார்: சோவான் சமவெளியில் வியத்தகு செயல்கள் புரிந்தார்.
44
அவர்களின் ஆறுகளைக் குருதியாக மாற்றினார்: எனவே, தங்கள் ஓடைகளினின்று அவர்களால் நீர் பருக இயலவில்லை.
45
அவர்களை விழுங்கு5மாறு அவர்கள்மீது ஈக்களையும், அவர்களது நாட்டை அழிக்குமாறு தவளைகளையும் அவர் அனுப்பினார்.
46
அவர்களது விளைச்சலைப் பச்சைப் புழுக்களுக்கும் அவர்களது உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார்.
47
கல்மழையினால் அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும் உறைபனியால் அவர்களுடைய அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.
48
அவர்களுடைய கால்நடைகளைக் கல்மழையிடமும் அவர்களுடைய ஆடுமாடுகளை இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார்.
49
தம் சினத்தையும், சீற்றத்தையும் வெஞ்சினத்தையும் இன்னலையும்-அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை அவர் ஏவினார்.
50
அவர் தமது சினத்திற்கு வழியைத் திறந்துவிட்டார்: அவர்களைச் சாவினின்று தப்புவிக்கவில்லை: அவர்களின் உயிரைக் கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.
51
எகிப்தின் அனைத்துத் தலைப்பேறுகளையும்”காம்” கூடாரங்களில் ஆண் தலைப்பேறுகளையும் அவர் சாகடித்தார்.