நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார்.உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று, உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார்.உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார்.