மீகா 3:1-5 - WCV
1
அப்பொழுது நான் கூறியது: “யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ!
2
நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்: என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்:
3
என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்: அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்:அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள்.
4
அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்: ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்: ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன.”
5
இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் 'அமைதி உண்டாகுக!' என உரக்கச் செல்கின்றார்கள்: வாய்க்குத் தீனி போடாதவரிடம் 'புனிதப் போர் வரும்' எனக் கூறுகின்றார்கள்.”