13
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான், அரசவையோர் தலைவன் நெபுசஸ்பான் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் ஆளனுப்பி,
14
காவல் கூடத்தினின்று எரேமியாவைக் கூட்டி வந்தனர். வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்லும்படி சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் அவரை ஒப்படைத்தனர். எனவே அவர் மக்களிடையே வாழ்ந்துவந்தார்.
15
எரேமியா காவல்கூடத்தில் இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்வரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது: