2சாமுவேல் 7:18-25 - WCV
18
பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்:”என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கும், நான் யார்? என் குடும்பம் யாது?
19
இருப்பினும் என் தலைவராம், ஆண்டவரே உம் திருமுன் இது சிறிது, உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே மனித வழக்கம் இது வல்லவே!
20
தாவீது மேலும் உன்னிடம் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.
21
உம் ஊழியன் அறிந்து கொள்ளட்டும் என்று உம் வார்த்தையை முன்னிட்டும் உம் இதயத்திற்கு ஏற்பவும் மாபெரும்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளீர்.
22
ஆகவே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர் உம்மைப் போன்று வேறு எவரும் இலர்: உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.
23
உம் மக்கள் இஸ்ரயேலைப் போல் வேறு யார் உளர்? அவர்கள் உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்று இனங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்!
24
என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலை நீர் உமக்கு உரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!
25
ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் உமது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!