ஆதியாகமம் 32:9-12 - WCV
9
மேலும் யாக்கோபு, “என் மூதாதை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமான ஆண்டவரே! நீர் என்னை நோக்கி, “உன் சொந்த நாட்டிற்கும் உன் உறவினரிடமும் திரும்பிப் போ: நான் உனக்கு நன்மையே புரிவேன்” என்று உரைத்தீர்.
10
அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன்.நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே.இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.
11
என் சகோதரர் ஏசாவுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.அவர் கையினின்று என்னை விடுவித்தருளும்.இல்லையேல் அவர் வந்து என்னையும் பிள்ளைகளையும், தாய்களையும் தாக்குவார்.
12
நீர் “நான் உனக்கு உறுதியாக நன்மை புரிவேன்: உன் வழிமரபை எண்ண முடியாத கடல் மணலைப் போலப் பெருகச் செய்வேன்” என்று வாக்களித்துள்ளீர்” என்றார்.