தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் பிரதான நோக்கம், இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பும், இரட்சிப்படைந்த அவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறந்த ஆவிக்குறிய கட்டுரைகள், புத்தகங்கள், வேதாகம வினா விடை செய்திகள் இவைகளினால் அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் பரிசுத்த வேதத்திற்கும், கிறிஸ்துவிற்கும் விரோதமாக பேசுப்படும் கள்ள உபதேசத்திற்கு வேதபூர்வமான பதில்கள் போன்றவையை கவனத்தில் கொண்டு இந்த இணையதளத்தின் மூலம் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சித்தும் கொண்டு வருகிறோம். அதோடு கூட நல்ல சீர்திருத்த ஆவிக்குரிய புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுகிறோம். வாசிக்க முடியாதவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஒலி விடிவி தான் புத்தகங்கள் (Audio Books) பதிவிடுகிறோம். உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் கிறிஸ்தவ உறவுகள் வேத பூர்வமான சத்தியத்தை அறிவதே எங்களுடைய நோக்கம்.
தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் பிரதான நோக்கம், இணையத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தியை அறியாத மக்களுக்கு பிரசங்கிப்பதும், இரட்சிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறந்த ஆவிக்குறிய புத்தகங்கள், செய்திகள் மற்றும் படைப்புகளை பகிர்ந்துகொள்ளுவதும் ஆகும். குறிப்பாக, தேவனுக்கு சித்தமானால், ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை, படைப்புகளை தமிழாக்கம் செய்து இணையத்திலும், புத்தக வடிவிலும் வெளியிடுவதும் எங்கள் நோக்கம்.
தமிழகத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் இன்று மலிந்து கிடக்கும் கள்ள உபதேசங்களை அடையாளம் காட்டி, அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளித்து, சரியான உபதேசத்திற்கு நேராக கிறிஸ்தவ மக்களை தேவனுடைய கிருபையினால் வழி நடத்திச் செல்ல முனைகிறது தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்...
Photos credits by Daniele Zedda, JohnONolan, Daniele Zedda, Daniele Zedda, AllansBrain, rolands.lakis
</div>
ஏசாயா 55:1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்;
கிறிஸ்தவர்களுக்கு ஓர் அரிய வாய்பு..! ஓர் நற்செய்தி..!
வேதபூர்வமான சத்தியங்களை தமிழில் இலவசமாக பெற விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்றே "தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்" இணையதளத்தை பார்வையிடுங்கள்.
தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இன்றைய (திருச்சபைக்கு) கிறிஸ்தவர்களுக்கு வேதப்பூர்வமான இறையியல் போதனைகளை கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும், பிரசங்கமாகவும் எமது இணையதளத்தின் மூலம் அளிக்குபடியான பாக்கியத்தை கொடுத்த தேவனை மகிமைபடுத்துகிறோம். திருச்சபை போதகர்களையும், சபை விசுவாசிகளையும் வேத சத்தியத்தில் உறுதிப்படுத்தி, திருச்சபையில் நிலவும் கள்ள உபதேசங்களை சுட்டிக்காட்டி வேதாகம கண்ணோட்டத்தில் சரியான புரிதலை ஏற்படுத்தி, ஆவிக்குரிய வளர்ச்சியை ஊக்குவித்து, வேதபூர்வமான கிறிஸ்தவர்களாய் மாற்றும் இலக்கியங்களை வழங்குவதே தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் நோக்கம்!
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.