முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது" (மத்தேயு 5:3).

இந்த மலைப்பிரசங்கம் எவ்வாறு தொடங்குகிறது என்பதை நாம் கவனிப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும். துன்மார்க்கர் மீது சாபங்களை உச்சரிப்பதன் மூலம் அல்ல, மாறாகத் தமது ஜனங்கள் மீது ஆசீர்வாதங்களை உச்சரிப்பதன் மூலமாகவே கிறிஸ்து இதனைத் தொடங்கினார். நியாயத்தீர்ப்புத் தீர்ப்பதை ஒரு அந்நிய காரியமாகக் கொண்டிருக்கும் அவருக்கு இது எவ்வளவு நேர்த்தியாய் பொருந்துகிறது! (ஏசாயா 28:21,22; ஒப்பிடுக: யோவான் 1:17). ஆனால் அடுத்த வார்த்தை எவ்வளவு விசித்திரமானது: "பாக்கியவான்கள்" அல்லது "மகிழ்ச்சியுள்ளவர்கள்" என்பவர்கள் எளிமையானவர்கள் "ஆவியில் எளிமையுள்ளவர்கள்". இதற்கு முன்பு, இவர்களைப் பூமியில் பாக்கியவான்களாகக் கருதியவர்கள் எவரேனும் உண்டோ? விசுவாசிகளைத் தவிர்த்து, இன்று அப்படி நினைப்பவர் யார்? இந்த ஆரம்ப வார்த்தைகள், தொடர்ந்து வரும் கிறிஸ்துவின் உபதேசங்களுக்கெல்லாம் எவ்வாறு ஒரு முக்கிய சுருதியாக (ஆரம்ப வார்த்தையாக) அமைகின்றன என்பதைப் பாருங்கள்: ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதல்ல, அவன் எப்படி இருக்கிறான் என்பதே மிகவும் முக்கியமானது.

"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்." ஆவியின் எளிமை என்றால் என்ன? உலகம் வெகுவாய்ப் புகழ்ந்து பாராட்டுகிற மேட்டிமை, தற்பெருமை, மற்றும் தன்னிறைவு கொண்ட மனப்பான்மைக்கு இது நேர்மாறானதாகும். தேவனுக்கு முன்பாகத் தலைவணங்க மறுத்து, எதையும் துணிகரமாய் எதிர்கொள்ளத் தீர்மானித்து, "நான் அவர் வார்த்தையைக் கேட்க... கர்த்தர் யார்?" (யாத்திராகமம் 5:2) என்று பார்வோனோடு சேர்ந்து சொல்லும் தன்னிச்சையான மற்றும் எதிர்ப்பான மனப்பான்மைக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.

ஆவியில் எளிமையாய் இருப்பது என்பது, என்னிடம் ஒன்றுமில்லை, நான் ஒன்றுமில்லை, என்னால் எதுவும் இயலாது, அதே வேளையில் எனக்கு எல்லாமே தேவைப்படுகிறது என்பதை உணருவதாகும். ஒரு மனிதன் தன் முழுமையான உதவியற்ற நிலைமையை அறிக்கையிட்டு, தேவனுடைய சந்நிதியில் புழுதிமட்டும் தன்னைத் தாழ்த்தும் நிலைக்கு வரும்போது அவனில் ஆவியின் எளிமை தெளிவாக விளங்கும். ஒரு ஆத்துமாவிற்குள் நடைபெறும் கிருபையின் தெய்வீகக் கிரியைக்கான முதலாவது அனுபவ அடையாளம் இதுவே ஆகும்; தூர தேசத்தில் கெட்ட குமாரன் "குறைவுபடத் தொடங்கினபோது" அவனில் ஏற்பட்ட ஆரம்ப விழிப்புணர்வுக்கு இது ஒப்பாயிருக்கிறது (லூக்கா 15:14).

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
செப்டம்பர் 17, 2026
இன்றைய கிறிஸ்தவத்தில் நடக்கும் சம்பவங்களைக் கவனிக்கும்போது மனம் மிகவும் வேதனையடைகிறது. முதலாம்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
செப்டம்பர் 16, 2026
உங்கள் மனசாட்சி சமாதானமாக இருக்கிறதா? குற்றவுணர்வும், பாவத்தால் தீட்டுப்பட்டதுமான நம்முடைய...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
செப்டம்பர் 16, 2026
இந்தப் பத்துக் கட்டளைகள் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. அதற்காக, மற்ற வார்த்தைகள்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஆகஸ்ட் 27, 2026
பரிசுத்த வேதாகமம், தேவனாகிய யெகோவாவை சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது....

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
வியாதி என்ற முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் இப்போது சிந்திக்கப்போகிறோம். இதிலிருந்து யாராலும்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்படும் சர்தை சபையானது, வெளியில் உயிரோடிருப்பதாகப் பெயர்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.