ஜெபமில்லாத ஒரு கிறிஸ்தவன் முரண்பாடுகளுக்கு உட்பட்டவன். பிறந்த குழந்தை மூச்சுவிடாமல் இருந்தால் அது எப்படி உயிரற்றதாகக் கருதப்படுமோ, அதைப்போலவே ஜெபிக்காமல் தன்னை விசுவாசி என்று அழைத்துக் கொள்பவரும் ஆவிக்குரிய ஜீவன் இல்லாதவரே. பரிசுத்தவான்களுக்கு தேவனுடைய வார்த்தை ஆகாரமாய் இருப்பதுபோல், ஜெபமே அவர்களுக்கு சுவாசமாயிருக்கிறது. தர்சு பட்டணத்து சவுல் உண்மையாகவே மனந்திரும்பியிருக்கிறான் என்பதை தேவன் தமஸ்கு பட்டணத்து சீடனுக்கு உறுதிப்படுத்தியபொழுது, அவர் அவனிடம் ‘அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்’ (அப் 9:11) என்று சொன்னார். பல தருணங்களில் இந்த சுயநீதியுள்ள பரிசேயன் தேவனுக்கு முன்பாக முழங்கால்களை முடக்கி தன்னுடைய ‘தியானங்களை’ செய்திருக்கலாம், ஆனால் அவன் உள்ளபடியே ஜெபம் செய்வது இதுவே முதல் தடவை. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற (2 தீமோ 3:5) இந்நாட்களில், இந்த முக்கியமான வேறுபாடு மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாயிருக்கிறது. மிக நேர்த்தியான முறைகளில் தேவனைக்குறித்து திருப்தியடைந்திருப்பவர்கள் அவரை அறிந்திருக்கவில்லை என்றே சொல்லவேண்டும்; ‘கிருபையின் ஆவியும் விண்ணப்பங்களின் ஆவியும்’ (சக 12:10) ஒன்றையொன்று பிரிந்திருப்பதில்லை. மறுபடியும் பிறந்த தன்னுடைய குடும்பத்தில் தேவன் பேசமுடியாத பிள்ளைகளைக் கொண்டிருப்பதில்லை: ‘தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமல் இருப்பாரோ?’ (லூக் 18:7). ஆம், அவர்கள் அவரிடத்தில் ‘சத்தமிட்டுக் கூப்பிடுகிறார்களே’ தவிர, வெறுமனே ஜெபங்களைச் ‘சொல்வதில்லை’.
அநேகமாக, தேவனுடைய சொந்த ஜனங்கள் வேறெந்த காரியங்களையும் செய்வதை விட ஜெபம் செய்யும்பொழுது அதிகமாகப் பாவம் செய்கிறார்கள் என்று இதை எழுதியவர் அறிவிக்கும்பொழுது, வாசிப்பவர் ஆச்சரியப்படலாம். எங்கே உண்மை இருக்க வேண்டுமோ அங்கே மாய்மாலம் இருக்கிறது! பணிந்துபோக வேண்டிய இடத்தில் எத்தனை தைரியமான கோரிக்கைகள்! நொறுங்குண்ட இருதயம் இருக்க வேண்டிய இடத்திலே என்ன ஒரு சடங்காச்சாரம்! நம்முடைய பாவங்களை எந்த அளவுக்குக் குறைவாக மதிப்பிட்டு அறிக்கை செய்கிறோம், எந்த அளவுக்கு மேலோட்டமாக அவருடைய இரக்கங்களை நாம் நாடுகிறோம்! தேவன் பயங்கரமான பாவங்களிலிருந்து நம்மை விடுவித்திருந்தாலும், நாம் மிகவும் துக்கப்படும்படியாக எந்த அளவுக்குக் குளிர்ந்துபோன இருதயம், எந்த அளவுக்கு அவிசுவாசம், எந்த அளவுக்கு சுயசித்தம் கொண்ட சுகஜீவிகளாய் இருக்கிறோம்! இவற்றைக்குறித்து எந்த உணர்வும் இல்லாதவர்கள் பரிசுத்தத்திற்கு அந்நியர்களாகவே இருக்கிறார்கள்.
எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையே ஜெபத்திலே நம்மை நடத்துகிறதாயிருக்க வேண்டும். ஐயோ, எவ்வளவு முறை நம்முடைய மாம்சம் விரும்பினவற்றையே நாம் கேட்டிருக்கிறோம்! ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக’ (2 தீமோ 3:16) பரிசுத்த வேதவாக்கியங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் ‘பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ண’ (யூதா 1:20) வேண்டியவர்களானதால், நம்முடைய ஜெபங்கள் வேதவாக்கியங்களுக்கு ஏற்புடையதாகவும், அவரே அதன் முழு ஆக்கியோனாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்குக் கிறிஸ்துவின் வார்த்தை ‘பரிபூரணமாக’ (கொலோ 3:16) அல்லது குறைவாக நம்மில் வாசம் செய்கிறதோ, ‘இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுவதால்’ (மத் 12:34) அதற்கேற்றாற்போல், நம்முடைய விண்ணப்பங்களும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஆவியின் சிந்தையுடன் இணைந்திருக்கும். வார்த்தையை நம்முடைய இருதயத்தில் மறைத்துவைக்கும் விகிதாச்சாரத்திற்கேற்ப அது நம்மைச் சுத்தப்படுத்தி, வனைந்து, உள்ளான மனிதனைக் கட்டுப்படுத்துவதால் நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய பார்வையில் ஏற்புடையதாய் இருக்கும். தாவீது வேறு ஒரு சூழலில், ‘உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்’ (1 நாளா 29:14) என்று சொன்னானே, அப்படி நாமும் சொல்ல முடியும்.
நமது ஜெப வாழ்க்கையின் தூய்மையும் வல்லமையும், நாம் வேதவாசிப்பிலும் ஆராய்ச்சியிலும் எந்த அளவிற்கு ஆதாயம் பெறுகிறோம் என்பதை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகும். நம்முடைய வேத ஆராய்ச்சி பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதத்துடன் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது ஜெபமற்ற தன்மையின் பாவத்தை நமக்கு உணர்த்தாது. மேலும், அனுதின வாழ்க்கையில் ஜெபம் பெறவேண்டிய இடத்தை நமக்குக் காட்டி, உன்னதமானவரின் மறைவிடத்திலே அதிக நேரத்தைச் செலவிட நம்மை வழிநடத்தாது. அதுமட்டுமின்றி, தேவன் ஏற்றுக்கொள்ளும்படி எப்படி ஜெபிக்க வேண்டும், எப்படி அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு அவருக்கு முன்பாகக் கெஞ்ச வேண்டும், எப்படி அவற்றை நம்முடைய விண்ணப்பங்களாக மாற்ற வேண்டும் என்பதையும் நமக்குக் கற்றுத்தராது. இவ்வாறு வேதத்தின்மீது நாம் செலவிடும் நேரங்கள் நம்முடைய ஆத்தும வளர்ச்சிக்கு உதவாமல் போவது மட்டுமல்லாமல், நாம் பெற்றுக்கொண்ட அந்த வெறும் எழுத்து அறிவே வரும் நாட்களில் நம்மை ஆக்கினைக்குள்ளாக்கும். ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்’ (யாக் 1:22) என்பது ஜெபத்தின் எச்சரிப்புக்கும் அதிலுள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். இப்பொழுது நாம் ஏழு அம்சங்களைக் குறிப்பிடுவோம்.
-
ஜெபத்தின் ஆழமான தேவையை நாம் உணர்ந்துகொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். இன்றைய நாளில் பல வேத வாசிப்பாளர்கள் (வேதபாட மாணவர்களும் கூட), ஜெபவாழ்க்கையானது பாவச் சேற்றின் வல்லமையிலிருந்தும், உலகத்தின் மயக்கத்திலிருந்தும், சாத்தானின் தாக்குதலிலிருந்தும் விடுதலை பெறவும், அனுதின நடக்கைக்கு மற்றும் தேவனுடனான ஐக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது என்ற உணர்த்துதல் இல்லாமல் இருப்பது பயப்படத்தக்க ஒன்று. உண்மையாகவே அந்த உணர்த்துதல் அவர்கள் இருதயத்தைப் பிடித்திருக்குமென்றால், தேவனுக்கு முன்பாக அவர்கள் அதிகமான நேரம் செலவிடாமல் இருப்பார்களா? ‘என்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும், நான் செய்ய வேண்டிய அதிகமான வேலைகளுக்கிடையில் ஜெபிப்பதற்கு நேரமில்லை’ என்று சொல்வது சோம்பலாயிருப்பதைவிட மிகவும் மோசமானது. நாம் மிகவும் முக்கியமானது என்று நினைக்கும் செயல்களுக்கு நேரம் செலவிடுவது மட்டும் எப்பொழுதும் சாத்தியமாகிறது. நம்முடைய இரட்சகரைவிட மிகவும் அதிகமான வேலைப்பளுவுடன் வாழ்ந்தவர்கள் யார்? அப்படியிருந்தும் யார் அதிகமான நேரத்தை ஜெபத்திலே செலவிட்டது? நமக்கு இருக்கும் எல்லா நேரத்தையும் பயன்படுத்தி உண்மையாகவே நாம் தேவனுக்கு முன்பாக விண்ணப்பம் செய்யவும், வேண்டுதல் செய்யவும் வாஞ்சிப்போமென்றால், நாம் அதிகமான நேரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் காரியங்களை ஒழுங்குபடுத்துவார்.
ஜெபத்தின் ஆழமான தேவைக்கான நேர்மறையான உணர்த்துதல் இல்லாமல் இருப்பது கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களின் இயந்திரமான வாழ்க்கையிலிருந்து வெளிப்படையாகவே தெரிகிறது. ‘என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும்’ (மத் 21:13) என்று தேவன் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். ‘போதிக்கும் அல்லது பாடல் பாடும் வீடல்ல’, ஆனால் அது ஜெபவீடு என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இன்னும் முதல்நிலை திருச்சபைகள் என்று அழைக்கப்படும் சபைகளில்கூட ஜெபம் மிகச்சிறிய அளவிலேயே இருக்கிறது. சுவிசேஷக் கூட்டங்களும், வேதபோதனைக் கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன, ஆனால், இரண்டு வாரங்கள் சிறப்பு ஜெபம் நடைபெறும் என்ற செய்தியை எவ்வளவு அரிதாகக் கேள்விப்படுகிறோம்! மேலும் திருச்சபைகளின் ஜெபவாழ்க்கை பலப்படுத்தப்படாவிட்டால் இத்தகைய ‘வேதபோதனைக் கருத்தரங்குகள்’ எந்த அளவுக்குச் சாதனை படைக்க முடியும்? ‘நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்’ (மாற் 14:38), ‘எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ (பிலி 4:6), ‘இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்’ (கொலோ 4:2) போன்ற வார்த்தைகளை தேவ ஆவியானவர் வல்லமையுடன் நம்முடைய இருதயங்களில் வைக்கும்பொழுது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம்.
-
வேதவாக்கியங்களின் மூலம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது நாம் ஆதாயம் பெறுகிறோம்.
‘நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறோம்’ (ரோம 8:26). கிற ிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களில் வெகுச்சிலரே இதை நம்புகிறார்கள்! பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கருத்து என்னவெனில், எதற்காக ஜெபம் பண்ணவேண்டும் என்று அநேகருக்குத் தெரியும், ஆனால் அவர்களுடைய கவனக்குறைவாலும், துன்மார்க்கத்தினாலும் தங்களுக்கு கொடு க்கப்பட்டிருக்கிற ஜெபமாகிய கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்பதே. ஆனால் இந்தக் கொள்கையானது ரோமர் 8:26-ல் ஆவியானவரின் தூண்டுதலினாலே அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக உள்ளது. பொதுவாக, உறுதியான மாம்சத்தின் தாழ்மை மனிதனால் ஏற்படுத்தப்படுவதல்ல, குறிப்பாக தேவனுடைய பரிசுத்தவான்களாலும் ஏற்படுத்தப்படுவதல்ல, அவர்களில் பவுல் அப்போஸ்தலன் தன்னையும் சேர்த்துக்கொள்ளத் தயங்கவில்லை: ‘நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறோம்’ என்பதை கவனிக்க வேண்டும். மறுபடியும் பிறந்தவனுடைய நிலைமை இதுவாக இருக்குமென ்றால், மறுபிறப்படையாதவனுக்கு எத ்தனை அதிகம்! மேலும் தேவன் நம்மிடத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இருதயத்தில் உணர்த்தி, அவர் நம்மில், நம் மூலமாய் கிரியை செய்ய வேண்டுமாகையால், ஒருபுறம் இந்த வசனத்தை வாசித்து, அது சொல்வதை மனதளவிலே ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றொரு புறம் செயல்முறையான அனுபவத்தைக் கொள்ள வேண்டும்.
‘நான் பலமுறை என் ஜெபங்களை சொல்லுகிறேன், ஆனால் எப்பொழுதாவது நான் ஜெபிக்கிறேனா? மேலும் என்னுடைய இருதயத்தின் வாஞ்சைகள்
-
ஆவியானவரின் உதவி தேவையென்ற நினைவைப் பெற்றுக்கொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். முதலாவது, அவர் நமது உண்மையான தேவையை நமக்குத் தெரியப்படுத்துவார். உதாரணமாக, நம்முடைய உலகப்பிரகாரமான தேவையை எடுத்துக்கொள்வோம். எத்தனை முறை நாம் வெளிப்படையான பணத்தேவையில் இருக்கிறோம், வெளிப்பிரகாரமான காரியங்கள் நம்மை மிகவும் அழுத்துகிறது, நாம் இந்த உபத்திரவங்களிலிருந்தும் பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பட விரும்புகிறோம். இங்கே நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று ‘அறிந்திருக்கிறோம்’. ஆனால் அது உண்மையல்ல, உண்மை அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது! உண்மை என்னவென்றால், நாம
் நிவாரணம் பெற வேண்டுமென்பது இயற்கையான விருப்பமாயிருந்தாலும், தேவன் எதிர்பார்க்கும் அவருடைய விருப்பத்திற்கு கீழ்ப்படிதலை (நமக்கு அது என்ன என்பது தெரிந்திருக்கும்பொழுது கூட) அல்லது நம்முடைய உள்ளான நன்மைக்கு ஏற்றவிதமாய் அந்தப் பாடுகளை அவர் எப்படி பரிசுத்தமாக்குவார் என்பதை நாம் அறியாதபடிக்கு, நாம் மிகவும் அறியாமையிலிருக்கிறோம், நம்முடைய புத்தி மந்தமாயிருக்கிறது. உலகப்பிரகாரமான உபத்திரவங்களிலிருந்து நிவாரணம் கேட்பவர்களில், பலருடைய விண்ணப்பங்களை தேவன் ‘பெரும் அலறல்’ என்றழைக்கிறார், ‘தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை’ (ஓசி 7:14) என்கிறார். ‘மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?’ (பிர 6:12). தேவனுடைய சிந்தைக்கேற்ற விதமாக ஜெபம்பண்ணத்தக்கதாக நம்முடைய உலகப்பிரகாரமான ‘தேவையை’ நமக்குத் தெரிவிக்க பரலோக ஞானம் தேவைப்படுகிறது.
இப்பொழுது சொல்லப்பட்டிருக்கிறவைகளுடன் இன்னும் சில வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டியதா
-
ஆவியானவர் ஜெபத்தின் சரியான இலக்கைக் (முடிவைக்) கற்றுக்கொடுக்கும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெற்றுக்கொள்கிறோம்.
ஜெபத்திற்கான விதிகளை ஏற்படுத்தியிருக்கும் தேவன், குறைந்தது மூன்று அம்சங்களை அதில் வடிவமைத்திருக்கிறார். முதலாவதாக, ஜெபமானது ஆராதனையாக இருப்பதால், எல்லாவற்றையும் கொடுக்கும் பிதாவானவர், அவரை அண்டிச் சேர்வதற்கு ஏற்றவிதமாக குமாரனுடைய நாமம், நம்மை உந்தித்தள்ளி வழி நடத்தும் வல்லமையுள்ள ஆவி யானவர் என உன்னதமான திரித்துவ தேவன் மதிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய எல்லாவற்றிற்காகவும், நாம் அவருடைய அன்பிலே வேண்டி நிற்கிறவர்களானபடியால், நம்முடைய இருதயத்தைத் தாழ்த்தி, நம்மை அவரிடத்தில் சார்ந்த ுகொள்ளும்விதமாக, நம்முடைய உதவியற்றதன்மையை நமக்கு உணர்த்தி, தேவனில்லாமல் நாம் ஒன்றும் செய்யமுடியாது என்பதை நமக்குச் சொந்தமாக்கிக் கொள் ளும்விதமாக ஜெபமானது அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறது. ஆனால் ஆவியானவர் நம்முடைய கையைப் பிடித்து, பெருமையை நம்மைவிட்டு விலக்கி, நம்முடைய இருதயத்திலும் நினைவுகளிலும் தேவனுக்கு அவருடைய உண்மையான இடத்தைக் கொடுக்கச் செய்யும்வரை இந்த உண்மை நம்மால் எவ்வளவு குறைவாக உணர்ந்து கொள்ளப்படுகிறது! மூன்றாவதாக, நமக்கென்று நாம் கேட்கும் நல்ல காரியங்களைப் பெற்றுக்கொள்ளும்விதமாக நடத்துகிறார்.
நம்முடைய ஜெபங்களுக்கு பதில் வராததற்கு மிக முக்கியமான காரணம், நாம் தவறான, அற்பமான முடிவைக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் பயப்படத்தக்கது. நம்முடைய இரட்சகர் சொன்னார், ‘கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்’ (மத் 7:7) என்று; ஆனால் யாக்கோபு மேலும் சிலவற்றை உறுதிப்படுத்துகிறார், ‘நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள்
-
தேவனுடைய வாக்குத்தத்தங்களை எப்படி மன்றாட வேண்டும் என்று வேதவாக்கியங்கள் கற்பிக்கும்பொழுது நாம் ஆதாயம் பெறுகிறோம்.
ஜெபம் கண்டிப்பாக விசுவா சத்தில் இருக்க வேண்டும் (ரோம 10:14), இல்லாவிட்டால் தேவன் அதைக் கேட்க மாட்டார். இப்பொழுது விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது (எபி 4:1; ரோம 4:21); ஆகையால், தேவன் நமக்குக் கொடுப்பேன் என்று உறுதியளித்திருக்கிறதை நாம் அறிந்திருக்காவிட்டால், நாம் ஜெபம்பண்ணவே முடியாது. நம்முடைய ஜெபமானது தேவனுடைய வாக்குத்தத்தங்களிலேயே இருக்கிறது, நாம் ஜெபிக்கு ம் அளவை அவை வரையறுக்கின்றன. தேவன் எதை வாக்குப்பண்ணியிருக்கிறாரோ, அந்த வாக்குத்தத்தத்திற்காகவே நாம் ஜெபம் பண்ண வேண்டும், வேறு எதற்கும் அல்ல. ‘மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்’ (உபா 29:29), ஆனால் அவருடைய சித்தத்தின் அறிவிப்பும், கிருபையின் வெளிப்பாடும் நமக்கு ச் சொந்தமானவை, நம்மை ஆளுகை செய்ய வேண்டியவை. உண்மையாகவே நாம் எதைக்குறித்தும் தேவையோடிருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், தேவன் சில வரம்புகளுக்குட்பட்டு அந்த வழிகளில் நமக்கு நல்லவற்றை உபயோகமானவற்றைத் தருவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். தேவன் நமக்கு இந்த உலக த்திற்குத் தேவையானவைகளையும் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபைக்குத் தேவையானவைகளையும் கூட வாக்குப்பண்ணிய ிருக்கிறார். எனவே, தெய்வீக வாக்குத்தத்தங்களுடன் எந்த அளவிற்கு நாம் பரிச்சயமாகியிருக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் நன்மை யானதைப் புரிந்துகொள்கிறோம், கிருபையும் இரக்கமும் ஆயத்தமாக்கப்பட்டு அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது, மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஜெபத்திற்காக நாம் நன்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
தேவனுடைய வாக்குத்தத்தங்களில் சில பொதுவானவை, குறிப்பானவை அல்ல; சில நிபந்தனைக்குட்பட்டவை; மற்றவை நிபந்தனையில்லாதவை; சில இந்த வாழ்க்கையில் நிறைவேற்றப்படுகின்றன, மற்றவை வருகிற உலகத்திற்கானவை. நம்முடைய குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கோ அல்லது அவசரத் தேவைகளுக்கோ அல்லது நம்முடைய விசுவாசத்திற்கு ஏற்றவிதமாக தேவனிடத்தில் கேட்பதற்கு எந்த வாக்குத்தத்தம் மிகவும் பொருத்தமானது என்று நாம் நாமாகவே நிதானிக்கமுடியாது. ஆகவே, நமக்கு வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது, ‘மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
-
வேதவாக்கியங்களின் மூலம் தேவனுக்கு முழுமையான கீழ்ப்படிதலுக்கு உட்படுத்தப்படும்பொழுது நாம் ஆதாயம் பெறுகிறோம். மேலே குறிப்பிட்டதுபோல, ஜெபத்தைக் கட்டளையாகக் கொடுத்ததில் தெய்வீக வடிவமைப்புகளில் ஒன்று, நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும் என்பதே. தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிடும்பொழுது இது வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. ஜெபமானது நம்முடைய ஒன்றுமில்லாத் தன்மையை ஏற்றுக்கொண்டு, நமக்கு எல்லா உதவிகளையும் செய்கிற அவரை நோக்கிப் பார்ப்பதே. நம்முடைய எல்லாத் தேவைகளையும் சந்திப்பதற்கு அவருடைய போதுமான தன்மையை சொந்தம் கொண்டாடுவதாகும். இது நம்முடைய ‘விண்ணப்பங்களை’ (பிலி 4:6) தேவனுக்குத் தெரியப்படுத்துவதாகும்; ஆனால்
விண்ணப்பங்கள் அவரிடமிருந்து அதிகாரமாகக் கேட்பதிலிருந்து வித்தியாசமானது. ‘கிருபையின் ஆசனம் என்பது ஏத ோ தேவனுக்கு முன்னால் வந்து நம்முடைய விருப்பங்களைக் கொட்டும் இடமல்ல’ (குர்னால்). நாம் தேவனுக்கு முன்னால் நம்முடைய நிலையை விரித்துக்காட்ட வே ண்டியவர்களாயிருக்கிறோம், ஆனால் அது அவருடைய உயர்ந்த ஞானத்தினாலே தீர்மானிக்கப்பட விட்டுவிடப்பட வேண்டும். அவருடைய இரக்கத்தைச்சார்ந்து நாம் வேண்டி நிற்கிறவர்களானபடியால், தேவனிடத்தில் உத்தரவிடவோ அல்லது அதிகாரமாகக் கேட்கவோ அங்கே இடமில்லை. நம்முடைய எல்லா ஜெபங்களிலும் நாம் இதைச் சொல்ல வேண்டும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது .
விசுவாசமானது தேவனுடைய வாக்குத்தத்தங்களில் மன்றாடி ஒரு பதிலை எதிர்பார
-
வேதவாக்கியங்களின் மூலம் ஜெபம் உண்மையான ஆழமான மகிழ்ச்சியாக மாறும்பொழுது நாம் ஆதாயம் பெறுகிறோம்.
ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் வெறும் ‘ஜெபத்தைச் சொல்வது’ என்பது ஒரு எரிச்சலூட்டும் செயல், அது செய்து முடிக்கப்பட்டவுடன் ஒரு நிவாரணத்தைத் தருவதால் அது ஒரு கடமையாகிறது. ஆனா ல் உண்மையான தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவதென்பது, அவருடைய மகிமையான வெளிச்சத்தின் சாயலைக் காண்பதென்பது, அவருடைய கிருபையின் ஆசனத்தில் பங்குபெறுவதென்பது, நமக்காக பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிற அந்த விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை முன்னரே சுவைத்துப் பார்ப்பதாகும். இந்த அனுபவத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவன் சங்கீதக்காரனுடன் சேர்ந்து, ‘தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்’ (சங் 73:28) என்று அவனும் சொல்லுவான். ஆம், அமைதிப்படுத்துவதால் இது இருதயத்திற்கு நல்லது; பலப்படுத்துவதால் விசுவாசத்திற்கு நல்லது; ஆசீர்வதிக்கப்படுவதால் ஆத்துமாவிற்கு நல்லது. ஆத்துமாவிற்கு இப்படிப்பட்ட ஐக்கியம் தேவனுடன் இல்லாமல் இருப்பதே நம்முடைய பதில்வராத ஜெபங்களுக்கு மூலக்காரணம்: ‘கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்’ (சங் 37:4).
ஆவியானவரின் ஆசீர்வாதத்தின் கீழ், ஜெபத்திலே இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்த
இரண்டாவதாக, ஜெபத்தின் மகிழ்ச்சியானது இருதயத்தின் பயத்தினாலும், தேவனை கிருபையின் ஆசனத்தின் மீது ஆத்துமா காண்பதினாலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது – காணுதலோ அல்லது எதிர்பார்ப்போ, அது மாம்சப்பிரகாரமான கற்பனையல்ல, அது ஆவிக்குரிய வெளிச்சம். நாம் விசுவாசத்தினாலே ‘அதிரிசனமானவரைத் தரிசி
மூன்றாவதாக, இறுதியாகக் குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து, இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் த





