தேவனுடைய சத்தியமானது, இருபுறமும் ஆபத்தான, செங்குத்தான மலைச்சரிவுகளைக் கொண்ட ஒரு குறுகலான பாதையோடு சிறப்பாக ஒப்பிடப்படலாம்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இரண்டு பெரும் தவறுகளுக்கு இடையில் அது அமைந்திருக்கிறது. இந்த உருவகம் எந்த அளவிற்குப் பொருத்தமானது என்பதை, நாம் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு எளிதில் சாய்ந்துவிடக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். பரிசுத்த ஆவியானவரின் உதவி மட்டுமே நம்மை இதில் சமநிலையில் நிலைநிறுத்த முடியும்; அப்படிச் செய்யத் தவறும்பட்சத்தில் நாம் தவறிழைப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தவறு என்பது சத்தியத்தைப் புரட்டி அதை மறுதலிப்பதேயாகும்; அதாவது, சத்தியத்தின் ஒரு பகுதிக்கு எதிராக மற்றொரு பகுதிக்குக் குழிபறிப்பது என்று சொல்லலாம்.
இறையியல் வரலாறு இந்த உண்மையை மிகவும் அழுத்தமாகவும், அதேவேளையில் வருத்தமளிக்கும் விதத்திலும் எடுத்துரைக்கிறது. ஒரு சந்ததியினர், தங்கள் நாட்களில் மிகவும் தேவைப்பட்ட சத்தியத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்காகச் சரியாகவும் சிரத்தையுடனும் வழக்காடினார்கள். ஆனால், அடுத்த சந்ததியினர் அதில் தொடர்ந்து நடப்பதற்குப் பதிலாக, தங்கள் தரப்புத் தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள அறிவுப்பூர்வமாகப் போரிட்டனர். பொதுவாக, தாக்கப்பட்ட சத்தியத்தைப் பாதுகாக்கும் தீவிரத்தில், தங்கள் எதிர்த்தரப்பினர் எடுத்துரைத்த சமநிலையான சத்தியத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதன் விளைவாக, அதற்கடுத்த சந்ததியில் வரும் உண்மையான தேவ ஊழியன், முந்தையவர்கள் எதை மிக முக்கியமென்று கருதினார்களோ (ஆனால் தவறாகப் புரிந்துகொண்டார்களோ) அதைப் புறந்தள்ளவும், அவர்கள் எதை மறந்துபோனார்களோ அந்தச் சரியான சத்தியத்தை வலியுறுத்தவும் அழைக்கப்படுகிறான்.
‘ஒளிக்கதிர்கள் சூரியனிலிருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ அல்லது மெழுகுவர்த்தியிலிருந்தோ, எதிலிருந்து வந்தாலும் அவை நேர்க்கோட்டில்தான் பயணிக்கின்றன; ஆனால், மனிதனுடைய நடுக்கமற்ற கை கூட ஒரு வளைவில்லாத நேர்க்கோட்டை வரைய முடியாததுபோல, தேவனுக்காக நாம் செய்யும் செயல்கள் மிகவும் குறைவுள்ளவையாகவே காணப்படுகின்றன’ (டி. குத்திரி 1867). இது உண்மையோ இல்லையோ, நிச்சயமாக ஒரு மனிதன் தன் சுயபலத்தால் பின்வரும் இரு முரண்பாடான போதனைகளுக்கிடையில் உள்ள நேரான சத்தியத்தில் நடப்பது இயலாத காரியம்: தேவனுடைய அநாதி சித்தம் மற்றும் மனிதனுடைய பொறுப்பு; கிருபையிலான தெரிந்தெடுப்பு மற்றும் உலகளாவிய நற்செய்தி அறிவிப்பு; பவுலின் கூற்றுப்படி கிருபையினால் நீதிமானாக்கப்படுதல் மற்றும் யாக்கோபுவின் கூற்றுப்படி கிரியையினால் நீதிமானாக்கப்படுதல் ஆகியவை ஆகும். பல தருணங்களில், தேவனுடைய இறையாண்மை (முழுமையான சித்தம்) வலியுறுத்தப்படும் இடங்களில், மனிதனுடைய பொறுப்பு தட்டிக்கழிக்கப்பட்டிருக்கிறது; நிபந்தனையற்ற தெரிந்தெடுப்பு பற்றிப்பிடிக்கப்பட்ட இடங்களில், இரட்சிக்கப்படாதவர்களுக்குத் தடையின்றி நற்செய்தியைப் பிரசங்கித்தல் கைவிடப்பட்டிருக்கிறது. மறுபுறம், மனிதனுடைய பொறுப்பு உறுதிபடுத்தப்பட்டு நற்செய்தி ஊழியம் தொடர்ந்த இடங்களில், தேவனுடைய அநாதி சித்தமும், தெரிந்தெடுப்பின் சத்தியமும் துண்டாடப்பட்டது அல்லது முற்றிலும் மறக்கப்பட்டது.
நம்முடைய வாசகர்களில் பலர் மேலே சொல்லப்பட்ட உண்மைகளை விளக்கும் உதாரணங்களை வாசித்திருக்கலாம், ஆனால் சிலரே அதனைச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். விசுவாசத்திற்கும் நற்கிரியைகளுக்கும் இடையேயான சரியான தொடர்பை விளக்க முற்படும்போதும் இதே அளவு கடினத்தன்மையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருபுறம் சிலர் நற்கிரியைகளுக்கு வேதவாக்கியங்கள் அனுமதிக்காத அளவிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துத் தவறு செய்கிறார்கள்; மறுபுறம், வேதவாக்கியங்கள் நற்கிரியைகளுக்குக் கொடுத்திருக்கும் தகுந்த இடத்தைக் கொடுக்கச் சிலர் தவறிவிடுகிறார்கள். ஒரு பக்கத்தில், தேவனுக்கு முன்பாக நம்முடைய செயல்களின் மூலமாக நீதிமானாக்கப்படலாம் என்று எண்ணுவது மாபெரும் தவறாக இருந்தாலும், மறுபக்கத்தில், நாம் பரலோகம் செல்வதற்கு நம்முடைய நற்செயல்களும் அவசியம் என்பதையும், அவை நாம் நீதிமானாக்கப்பட்டதற்கான வெறும் ஆதாரங்களும் கனிகளும் மட்டுமே என்பதையும் மறுப்பவர்களும் சம அளவு குற்றம் செய்கிறார்கள். நாம் இப்பொழுது மிக மெல்லிய பனிக்கட்டிப் படலத்தின் மீது நடந்துகொண்டிருக்கிறோம் என்பதையும், கள்ளப்போதனை செய்கிறோம் என்று கடுமையாகக் குற்றம்சாட்டப்படும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதையும் நாங்கள் அறிவோம்; இருப்பினும், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள தெய்வீக உதவியையே நாடி, தேவனிடமே இந்தக் காரியங்களை ஒப்புவிக்கிறோம்.
சில வட்டாரங்களில் விசுவாசத்தின் முக்கியத்துவம் முழுவதும் நிராகரிக்கப்படாவிட்டாலும், நற்காரியங்கள் மிகைப்படுத்தப்பட வேண்டும் என்கிற வைராக்கியத்தால் அது மட்டம் தட்டப்படுகிறது. மாறாக, வேதக் கோட்பாடுகளில் மிகவும் உறுதியானவர்கள் (Orthodox) என்று அறியப்படுபவர்கள் மத்தியில் (அவர்களைத்தான் இப்போது பிரதானமாக மனதில் வைத்துப் பேசுகிறோம்), நற்கிரியைகளுக்கு அதற்கான சரியான இடம் அரிதாகவே கொடுக்கப்படுகிறது; அப்போஸ்தல சிந்தையுடன் நற்கிரியைகளில் தொடர்ந்து ஈடுபடும்படி விசுவாசிகள் மிகமிக அரிதாகவே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடுவோமோ அல்லது பாவிகள் கிறிஸ்துவின் நீதியின்மேல் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த நற்கிரியைகளின் மேல் நம்பிக்கை வைக்க அவர்களை உற்சாகப்படுத்திவிடுவோமோ என்ற ஐயமே இதற்கு முக்கியக் காரணம் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆனால், அப்படிப்பட்ட எந்தவொரு அச்சமும், ஒரு பிரசங்கியானவர் ‘தேவனுடைய முழு ஆலோசனையையும்’ பிரசங்கிப்பதைத் தடுத்துவிடக் கூடாது. அவருடைய பிரசங்கத்தின் மையக்கருத்து இழந்துபோனவர்களின் இரட்சகராகிய கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமே என்றால், அவர் அந்தச் சத்தியத்தில் எவ்வித சமரசமுமின்றி முன்னோக்கிச் செல்லக்கடவர்; பிலிப்பி பட்டணத்துச் சிறைச்சாலைக்காரனுக்குப் பவுல் அளித்த பதிலைப்போல (அப் 16:31), இந்த விசுவாசத்திற்கு அவர் முழு இடமளிக்கக்கடவர். ஆனால், அவருடைய தலைப்பு நற்கிரியைகள் என்றால், அதைப்பற்றி வேதவாக்கியங்கள் சொல்வதை உள்ளபடியே அவர் பிரசங்கிக்கக்கடவர்; ‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்க வேண்டும்’ (தீத்து 3:8) என்ற தெய்வீகக் கட்டளையை அவர் மறவாதிருக்கக்கடவர்.
இறுதியாகக் குறிப்பிடப்பட்ட இந்த வசனமானது, இக்காலத்தின் அலட்சியப்போக்கிற்கும், விழிப்பற்ற தன்மைக்கும், பயனற்ற செயல்களுக்கும், வெற்றுத் தம்பட்டங்களுக்கும் மிகவும் பொருத்தமான ஒரு எச்சரிப்பாகும். ‘நற்கிரியைகள்’ என்ற வார்த்தையானது புதிய ஏற்பாட்டில் ஒருமையிலோ அல்லது பன்மையிலோ முப்பதுக்கும் அதிகமான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆயினும், விசுவாசத்தைப் பிரசங்கித்து, வலியுறுத்தி, விளக்குபவர்கள் என்று மதிக்கப்படும் பிரசங்கிமார்கள்கூட, தங்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள், வேதத்தில் இந்த வார்த்தை ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கும் அளவிற்கு மிக அரிதாகவே அதைப்பற்றிப் பேசுகிறார்கள். திருமணத்தைக்குறித்து யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கர்த்தர் சொன்னார், ‘தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்’ (மாற் 10:9). அதேபோல, எபேசியர் 2:8-10ல் தேவன் இரண்டு மிக முக்கியமான ஆசீர்வாதமான காரியங்களை இணைத்திருக்கிறார்; அவைகளை நாம் நம்முடைய இருதயத்திலும் மனதிலும் பிரிக்கக்கூடாது, ஆனாலும் அவை இன்றைய நவீன பிரசங்க பீடங்களில் அடிக்கடி பிரிக்கப்படுகின்றன.
இரட்சிப்பானது கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு வருகிறது; இது நற்கிரியைகளினால் உண்டானதல்ல என்பதைத் தெளிவாகக் கூறும் முதல் இரண்டு வசனங்களை (எபே 2:8,9) நாம் எத்தனை முறை பிரசங்கிக்கக் கேட்டிருக்கிறோம்! ஆனால், கிருபை மற்றும் விசுவாசத்துடன் துவங்கும் அந்த வாக்கியமானது 10-ஆம் வசனத்தில்தான் நிறைவுறுகிறது; அங்கே ‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்’ என்று நமக்குச் சொல்லப்பட்டிருப்பது, எத்தனை முறை நமக்கு நினைவூட்டப்பட்டிருக்கிறது?
தேவனுடைய வார்த்தையைச் சுட்டிக்காட்டி நாம் இந்தத் தொடரைத் துவங்குகிறோம். இது பலவிதமான எண்ணங்களிலும், வித்தியாசமான வடிவமைப்புகளிலும் வாசிக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த வேதவாக்கியங்கள் உண்மையாகவே எப்படி ‘ஆதாயம் தரக்கூடியவை’ (பிரயோஜனமுள்ளவை) என்பதை 2 தீமோத்தேயு 3:16,17-ஆம் வசனங்கள், ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று வெளிப்படுத்துகின்றன. தேவன் மற்றும் கிறிஸ்துவைக் குறித்தும், பாவத்தைக் கடிந்துகொள்ளுதல் மற்றும் சீர்திருத்துதலைக் குறித்தும், ஜெபம் தொடர்பான அறிவுரைகளைக் குறித்தும் போதிக்கும் வேதவசனங்களை இதுவரை தியானித்த நாம், இப்போது அவை எப்படி ‘எல்லா நற்காரியங்களையும்’ குறித்து விளக்குகின்றன என்பதைக் கவனிப்போம். பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் தன் வேதவாசிப்பும் வேத ஆராய்ச்சியும் தனக்கு உண்மையிலேயே பலனளிக்கிறதா என்பதை ஒரு விசுவாசி உறுதிசெய்துகொள்ள, இது மற்றொரு அடிப்படை அளவுகோலாக இருக்கிறது.
1. நற்கிரியைகளின் உண்மையான இடம் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘பலர் கிறிஸ்தவ சமயவழி மரபுகளை ஒரு அமைப்பாக ஆதரிக்கத் தங்களுக்குள்ள ஆர்வத்தினால், பரிசுத்தத்தையும் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் குறைத்து மதிப்பிடும் விதத்தில் கிருபையினாலே இரட்சிப்பு என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த வேதவாக்கியங்களில் இதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கிறிஸ்துவின் இரத்தத்தின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம், தேவனுடைய கிருபையினால் இரட்சிப்பு இலவசமாகக் கிடைக்கிறது என்பதை அறிவிக்கும் அதே நற்செய்திதான், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் அவரில் பாவிகள் விசுவாசம் வைப்பதின் மூலம் இரட்சகரின் நீதியால் அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதியாக வலியுறுத்துகிறது; மேலும் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிக்க முடியாது என்பதையும் உறுதியாகக் கூறுகிறது; அதாவது, விசுவாசிகள் பாவநிவிர்த்தியின் இரத்தத்தினால் கழுவப்படுகிறார்கள்; அவர்களுடைய இருதயம் விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுகிறது, அன்பினால் கிரியை செய்து உலகத்தை மேற்கொள்ளுகிறது. எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் அந்த தேவகிருபையானது, அதைப் பெற்றுக்கொள்பவர்கள், தேவபக்தியற்றவைகளையும் உலகப்பிரகாரமான இச்சைகளையும் மறுதலித்து, தெளிந்த புத்தியுள்ளவர்களாய், நீதியுள்ள மற்றும் தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் போதிக்கிறது. வேதவாக்கியங்களின் அடிப்படையில் நற்கிரியைகளை விடாப்பிடியாக வலியுறுத்துவது கிருபையின் போதனைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாராவது நினைத்தால், அது தெய்வீக சத்தியத்தைக்குறித்து அவர்களுக்குள்ள அரைகுறையான மற்றும் மிகக் குறைவான அறிவையே காட்டிக்கொடுக்கிறது. தங்களுடைய தவறான நிலைப்பாட்டைக் காத்துக்கொள்வதற்காக, நீதியின் கனிகள் ஒரு கிறிஸ்தவனுக்கு முழுமையாகத் தேவை என்பதற்குச் சாதகமாக உள்ள வேதவாக்கியங்களை இருட்டடிப்பு செய்வது, தேவனுடைய வார்த்தையைப் புரட்டி மோசடியில் ஈடுபடுவதாகும்’ (அலெக்சாண்டர் கார்சன்).
நற்கிரியைகளைச் செய்யும்படி தேவனுடைய கட்டளை இருந்தாலும், நாம் அவற்றுக்கு உண்மையாகக் கீழ்ப்படிவதில் தோல்வி கண்டாலும், நம்மீது சுமத்தப்பட்ட கிறிஸ்துவின் நீதியினால் நாம் நீதிமான்களாக்கப்படுவதால், அந்தக் கிரியைகள் இல்லாமலேயே நாம் இரட்சிக்கப்படக்கூடுமானால், அந்த நற்கிரியைகளுக்கான கட்டளைக்கு என்ன வல்லமை இருக்கிறது? - இது போன்ற உணர்வற்ற ஆட்சேபனைகள், விசுவாசியின் தற்போதைய நிலை மற்றும் தேவனுடன் அவனுக்குள்ள தொடர்பைப் பற்றிய அறியாமையிலிருந்தே வருகின்றன. மறுபிறப்படைந்தவர்களின் இருதயங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கும் அதிகாரத்திற்கும் கீழ்ப்படியும்படியான வல்லமையான தாக்கத்திற்கு உட்பட்டதல்ல என்று எண்ணுவது, அவர்கள் நீதிமான்களாக்கப்படுவதற்குத் தேவையான உண்மையான விசுவாசம் அற்றவர்கள் என்பதையும், கிறிஸ்தவர்களின் சிந்தை அப்படிப்பட்ட வாதங்களால் பாழடைந்து போயிருப்பதையுமே காட்டுகிறது. மேலும், இது நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்கும், நம்முடைய பரிசுத்தமாக்கப்படுதலுக்கும் இடையில் தேவன் ஏற்படுத்தியுள்ள பிரிக்க இயலாத தொடர்பைக் கவனிக்கத் தவறுவதாகும். இவற்றில் ஒன்று மற்றொன்றில்லாமல் தொடர முடியும் என்று கருதுவது ஒட்டுமொத்த நற்செய்தியையே கவிழ்ப்பதற்கு ஒப்பாகும். இந்த ஆட்சேபனையைப் பற்றித்தான் அப்போஸ்தலன் ரோமர் 6:1-3 வசனங்களில் கையாளுகிறார்.
2. நற்கிரியைகளின் உண்மையான தேவையைப்பற்றி நாம் கற்பிக்கப்படும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்புண்டாகாது’ (எபி 9:22) என்றும், ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்’ (எபி 11:6) என்றும், ‘யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி 12:14) என்றும் சத்திய வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. பரலோகத்தில் பரிசுத்தவான்கள் வாழப்போகிற வாழ்க்கையானது, அவர்களுடைய மறுபிறப்பிற்குப் பின் இந்தப் பூமியிலே அவர்கள் வாழ்கிற வாழ்க்கையின் நிறைவும் முழுமையுமே ஆகும். இரண்டு வாழ்க்கைகளும் முற்றிலும் வேறுபட்டவை அல்ல; மாறாக பரிபூரணத்தின் அளவு மட்டுமே மாறுபடுகிறது. ‘நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்’ (நீதி 4:18). இங்கே கீழே தேவனுடன் நடத்தல் இல்லையென்றால், அங்கே பரலோகத்திலும் தேவனுடன் வாழுதல் என்பது இல்லை. இக்காலத்தில் அவருடன் உண்மையான ஐக்கியம் இல்லையென்றால், அங்கே நித்தியத்திலும் அவருடன் ஒன்றிணைதல் இல்லை. மரணம் இருதயத்தில் எந்த முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மரணத்தின்போது பரிசுத்தவான்களின் மிச்சமீதியான பாவங்களெல்லாம் முற்றிலும் நீக்கப்படுகின்றன என்பது உண்மையே என்றாலும், மரணத்தினால் அவர்களுக்குப் புதிதாக எந்தவொரு நற்குணமும் கொடுக்கப்படுவதில்லை. அப்படியானால், ஒருவன் தன் மரணத்திற்கு முன்னால் பாவத்தை வெறுத்துப் பரிசுத்தத்தை நேசிக்கவில்லை என்றால், அவன் மரணத்திற்குப் பிறகும் அப்படிச் செய்யப்போவதில்லை.
எவரும் நரகத்திற்குப் போக விரும்புவதில்லை; அதேசமயம், தவறாமல் அங்கு அழைத்துச் செல்லும் அந்த அகலமான பாதையை விட்டொழிக்கச் சிலரே விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். எல்லாரும் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள்; ஆனால், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் திரளான கூட்டத்தில், தங்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரே குறுகலான பாதையில் நடக்க உண்மையில் எத்தனை பேர் விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்? நற்கிரியைகள் இரட்சிப்புடன் கொண்டிருக்கும் தொடர்பின் சரியான இடத்தை நாம் இதிலிருந்து நிதானிக்க முடியும். அவை இரட்சிப்பைப் பெற்றுத்தரும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இரட்சிப்பிலிருந்து அவற்றைப் பிரிக்க முடியாது. அவை பரலோகத்திற்குச் செல்வதற்கான எந்த உரிமையையும் பெற்றுத்தருவதில்லை; ஆனாலும், தம்முடைய பிள்ளைகள் அங்கே வருவதற்கென்று தேவன் நியமித்திருக்கிற நியமங்களில் அவையும் ஒன்று. எந்த வகையிலும் நற்கிரியைகள் நித்திய ஜீவனைப் பெற்றுத்தருவதில்லை; ஆனால், அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைப்போல, நற்கிரியைகளும் ஒரு பாதையாக இருக்கின்றன. கிறிஸ்துவால் நமக்கென்று சம்பாதித்து வைக்கப்பட்டிருக்கும் சுதந்தரத்தைச் சென்றடைவதற்காக நாம் நடக்க வேண்டிய வழியைத் தேவன் நியமித்திருக்கிறார். தேவனுக்கு அனுதினம் கீழ்ப்படிந்து நடக்கும் வாழ்க்கை மட்டுமே, கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்காகச் சம்பாதித்திருப்பதில் மகிழுவதற்கான உண்மையான தகுதியை அளிக்கிறது – விசுவாசத்தினாலே கிடைக்கும் அந்தத் தகுதி, நம்முடைய மரணத்திலோ அல்லது அவருடைய வருகையிலோ முழுமையாகிறது.
3. நற்கிரியைகளின் வடிவமைப்பு நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்று மத்தேயு 5:16-ல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தில் ‘நற்கிரியைகள்’ என்ற வார்த்தை இங்குதான் முதன்முதலாகக் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது; மேலும், வேதவாக்கியங்களில் ஒரு காரியம் முதன்முதலில் குறிப்பிடப்படும்போது, அது அதன் தொடர்ச்சியான நோக்கத்தையும் பயன்பாட்டையும் சேர்த்தே வெளிப்படுத்தும் என்பது பொதுவான வேதவிதியாகும். கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய கிறிஸ்தவ சாட்சியை, தங்கள் வாழ்க்கையின் சத்தமில்லாத சாட்சியின் மூலம் (‘வெளிச்சம்’ பிரகாசிக்கும்போது ஒலியெழுப்புவதில்லை) வெளிப்படுத்த வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். மனுஷர் அவர்களுடைய நற்கிரியைகளைப் பார்த்து (அதைப்பற்றித் தம்பட்டம் அடிப்பதைக் கேட்டு அல்ல), பரலோகத்திலிருக்கிற அவர்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள் என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம். இங்கே நற்கிரியைகளின் அடிப்படையான நோக்கமும் வெளிப்படுகிறது: அது தேவனுடைய மகிமைக்காகவே செய்யப்பட வேண்டும்.
மத்தேயு 5:16-ன் உள்ளடக்கம் பொதுவாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுப் புரட்டப்படுகிறது; அதில் நாம் மேலும் சில கருத்துகளைக் கவனிக்கலாம். பல தருணங்களில் ‘நற்கிரியைகள்’, ‘வெளிச்சத்துடன்’ ஒப்பிடப்பட்டுக் குழப்பிக்கொள்ளப்படுகின்றன. அவை இரண்டும் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. ‘வெளிச்சம்’ என்பது க
5. நற்கிரியைகளின் உண்மையான தோற்றுவாய் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். மறுபடியும் பிறவாத மனிதர்கள் செய்யும் காரியங்கள், ஆவிக்குரிய தன்மையில் இல்லாவிட்டாலும், இயற்கையாகவும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகவும் நல்லவைகளாகத் தோன்றலாம். வேதத்தை வாசித்தல், தேவனுடைய ஊழியத்தில் பங்குபெறுதல், ஏழைகளுக்குப் பிச்சையளித்தல் போன்ற செயல்களை அவர்கள் வெளிப்பிரகாரமாகச் செய்யலாம்; அவற்றின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால், அவற்றின் பிரதான ஊற்று தேவ சிந்தையற்றதாக இருப்பதினால், திரியேக, ஒரே பரிசுத்த தேவனின் பார்வையில் அவை அழுக்கான கந்தை ஆடையைப் போலவே இருக்கின்றன. மறுபடியும் பிறவாதவர்கள் ஆவிக்குரிய கிரியைகளைச் செய்ய எவ்வித வல்லமையும் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்; ஆகவேதான், ‘நன்மைசெய்கிறவன் இல்லை; ஒருவனாகிலும் இல்லை’ (ரோமர் 3:12) என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய மாம்ச சிந்தை ‘தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது’ (ரோமர் 8:7). எனவே, ‘துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே’ (நீதி 21:4). விசுவாசிகள்கூடத் தாங்களாகவே நல்ல ஒன்றைச் சிந்திக்கவோ அல்லது நற்கிரியையைச் செய்யவோ தகுதியானவர்கள் அல்ல (2 கொரி 3:5). ‘தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்’ (பிலி 2:13) அவர்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
‘எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக் கூடும்’ (எரே 13:23). ஒருவன் முட்செடிகளிலிருந்து திராட்சைப்பழங்களையும், முட்பூண்டுகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்க முடியாததுபோல, மறுபடியும் பிறவாதவர்கள் நற்கனிகளைக் கொடுக்கவோ, நற்கிரியைகளைச் செய்யவோ முடியாது. நற்கிரியைகளைச் செய்வதற்கு நம்மில் பெலன் உண்டாகும்படி, முதலாவதாக ‘நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு’ (எபேசியர் 2:10), அவருடைய ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணி (கலா 4:6), அவருடைய கிருபை நம்முடைய இருதயங்களிலே ஊற்றப்பட வேண்டும் (எபே 4:7, 1 கொரி 15:10). அப்பொழுதும்கூட கிறிஸ்துவில்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது (யோவான் 15:5). பல நேரங்களில் நன்மையானதைச் செய்யும்படி நமக்கு விருப்பம் இருக்கிறது, ஆனால் அதை எப்படிச் செய்வதென்று நமக்குத் தெரிவதில்லை (ரோமர் 7:18). இது, தேவன் நம்மைச் ‘சகல நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்கி’, நம்மில் ‘இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை நடப்பிக்க’ (எபி 13:21) வேண்டும் என்று அவரை நோக்கிக் கெஞ்சி மன்றாடும்படி நம்மை முழங்கால்படியிடச் செய்கிறது. இதன்மூலம் நம்முடைய சுயசார்பு முற்றிலும் வெறுமையாக்கப்பட்டு, நம்முடைய ஊற்றுகளெல்லாம் தேவனிலேயே இருக்கின்றன (சங் 87:7) என்ற ஆழமான உணர்வுக்குக் கொண்டுவரப்படுகிறோம்; அதன்பிறகு, ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ (பிலி 4:13) என்பதைக் கண்டுகொள்கிறோம்.
6. நற்கிரியைகளின் மாபெரும் முக்கியத்துவம் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். இதைச் சுருக்கமாகச் சொல்வதானால்: 'நற்கிரியைகளின்' மூலம் தேவன் மகிமைப்படுத்தப்படுவதால் அவை மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை (மத் 5:16); அவற்றின் மூலம் நமக்கெதிராகப் பேசுபவர்களின் வாய் அடைக்கப்படுகிறது (1 பேது 2:12); அவற்றின் மூலம் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்கிறோம் (யாக் 2:13-17). மேலும், நாம் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க’ (தீத்து 2:10) நற்கிரியைகள் உதவுகின்றன. அவருடைய நாமத்தைத் தரித்திருப்பவர்கள், தங்கள் கிரியைகளினால் கிறிஸ்துவின் வழியிலும் ஆவியிலும் தொடர்ந்து நடக்கிறார்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் கிறிஸ்துவின் நாமத்திற்கு மேன்மையைக் கொண்டுவராது. அதே பரிசுத்த ஆவியானவர், அப்போஸ்தலனாகிய பவுலைத் தூண்டி, ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்’ (தீத்து 3:8) என்று எழுதச் செய்ததற்கு இதுவே காரணம். எனவே, நாம் உண்மையிலேயே ‘நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாக’ (தீத்து 2:14) இருப்போமாக.
7. நற்கிரியைகளின் உண்மையான நோக்கம் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். தேவன் நம்மை வைத்திருக்கிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் உறவிலும் நம்முடைய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டியவர்களாய் இருக்கிறோம். பெத்தானியா ஊரைச் சேர்ந்த மரியாள், இரட்சகரை அபிஷேகம்பண்ணிய செயலே (மத் 26:10, மாற் 14:6) புதிய ஏற்பாட்டில் ‘நற்கிரியை’ என்று முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், கவனிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. மனிதரால் தூற்றப்பட்டாலும், புகழப்பட்டாலும் இரண்டையும் ஒன்றாகவே கருதி, ‘பதினாயிரங்களில் சிறந்தவர்’ மேலேயே தன் கண்களை வைத்து, அவள் தன்னிடம் இருந்த விலையுயர்ந்த தைலத்தை அவர்மேல் ஊற்றினாள். மற்றொரு ஸ்திரீயான தொற்காள், ‘நற்கிரியைகளை மிகுதியாய்ச் செய்தாள்’ (அப் 9:36) என்று குறிப்பிடப்பட்டுள்ளது; மனிதர்களிடையே தேவன் மகிமைப்படும்படி, ஆராதனைக்குப் பின் மற்றவர்களுக்குப் பிரயோஜனமான ஊழியமும் வருகிறது.
நாம் ‘சகலவித நற்கிரியைகளுமான கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள வேண்டும்’ (கொலோ 1:10). பிள்ளைகளை வளர்த்தல், அந்நியரை உபசரித்தல், பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவுதல் (அவர்களுடைய தேவைகளைச் சந்தித்தல்), உபத்திரவப்படுபவர்களுக்கு உதவிசெய்தல் (1 தீமோ 5:10) ஆகியவையே ‘நற்கிரியைகளாக’ வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய வேதவாசிப்பும் வேத ஆராய்ச்சியும் நம்மை கிறிஸ்துவுக்கென்று நல்ல போர்வீரர்களாகவும், நாம் வாழும் நாட்டிற்கு நல்ல குடிமக்களாகவும், பூமியிலுள்ள நம்முடைய குடும்பத்திற்கு நல்ல அங்கத்தினர்களாகவும் (தாழ்மையானவர்களாக, கனிவுள்ளவர்களாக, சுயநலமற்றவர்களாக) மாற்றாவிட்டால், ‘எல்லா நற்கிரியைகளையும் முழுமையாகச் செய்தாலும்’ அதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.





