தேவபக்தியற்றவர்கள் ஓயாமல் சந்தோஷத்தைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் அதைக் கண்டுபிடிப்பதில்லை. அதைத் தேடுவதில் தீவிரமாகச் செயல்பட்டு சோர்ந்துபோகிறார்கள்; ஆனால், அவையெல்லாம் வீணான முயற்சியே. அவர்களுடைய இருதயங்கள் தேவனைவிட்டுத் திரும்பியிருப்பதால், சந்தோஷம் இல்லாத கீழான இடங்களில் அதைத் தேடுகிறார்கள். மெய்ப்பொருளாகிய தேவனை நிராகரித்துவிட்டு, கேலிக்குள்ளாகும்படி நிழலை நோக்கிச் சிரத்தையுடன் தேடுகிறார்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் மாத்திரமே பாவிகளை மகிழ்ச்சியாக்க முடியும் என்பது பரலோகத்தின் அநாதி கட்டளையாகும்; ஆனால், இதை அவர்கள் நம்புவதில்லை. ஆகவே, எங்கே சிறந்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று விசாரித்துக்கொண்டே ஒரு சிருஷ்டியிடமிருந்து மற்றுமொரு சிருஷ்டியை நோக்கிச் செல்கிறார்கள்; ஒரு உடைந்த நீரூற்றிலிருந்து மற்றொன்றிடம் செல்கிறார்கள். 'என்னிடத்தில் நீங்கள் அதைக் கண்டுகொள்ளலாம்' என்று அவர்களை ஈர்க்கும் ஒவ்வொரு உலகப் பொருளும் சொல்கிறது; ஆனால், விரைவில் அது அவர்களை ஏமாற்றிவிடுகிறது. ஆனாலும், இன்றும் புதிதாகச் சந்தோஷத்தைத் தேடிக்கொண்டு, நேற்று தங்களை ஏமாற்றிய அதே சிருஷ்டியிடம் செல்கிறார்கள். ஒரு சொகுசான சிருஷ்டியிடம் பலவிதமாகப் பரிசோதித்துப் பார்த்தபிறகு, இது வெறுமையே என்பதைக் கண்டுகொண்டால், ‘இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்’ (யோவான் 4:13) என்ற நம்முடைய தேவனின் வார்த்தையை மெய்ப்பிக்கும் விதமாக, அவர்கள் மற்றொரு சிருஷ்டியிடம் செல்கிறார்கள்.
இப்பொழுது மற்றுமொரு உச்சநிலைக்கு நாம் செல்வோம்: சந்தோஷமாயிருப்பது பாவம் என்று கருதுகிற சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதைக் கேட்கும்போது நம்முடைய வாசகர்களில் பலர் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறைவான பாக்கியம் பெற்ற அவர்களுடன் நாம் செயல்படும் அதேவேளையில், நீங்களாவது (வாசகர்கள்) சூரிய ஒளிமிக்க சூழ்நிலைக்கு வந்திருப்பதற்காக நன்றியுள்ளவர்களாயிருங்கள். வெளிப்படையாகப் பதிவுசெய்வதற்குப் பதிலாக, பெருவாரியான உதாரணங்கள் மூலமும், சிலவற்றைச் சம்பந்தப்படுத்திக் காட்டியும், எப்பொழுதும் வெளிச்சம் குறைந்த இடத்திலேயே இருப்பதுதான் தங்கள் கடமையென்று ஒருசிலர் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தோஷத்தின் உணர்வுகள் ஒளியின் தூதனைப்போலக் காணப்படும் சாத்தானால் ஏற்படுத்தப்பட்டவை என்று அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள். இந்தப் பாவம் நிறைந்த உலகத்தினுள் நாம் இருப்பதால் மகிழ்ச்சியாயிருப்பதே துன்மார்க்கமான ஒன்றென்று அவர்கள் முடிவுகட்டிவிடுகிறார்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றறிந்து மகிழ்ச்சியாயிருப்பது ஒரு துணிகரமான செயல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மேலும், அப்படி மகிழ்ச்சியாயிருக்கும் இளம் கிறிஸ்தவர்களிடம், "நீங்கள் மீண்டும் பாவக் குழியில் இடறிவிழ அதிக காலம் செல்லாது" என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவரையும், இந்த அதிகாரத்தின் பின்வரும் பகுதியை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்கும்படி மென்மையுடன் வேண்டுகிறோம்.
‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’ (1 தெசலோனிக்கேயர் 5:16). தேவன் நம்மை என்ன செய்யக் கட்டளையிட்டிருக்கிறாரோ, அதைச் செய்வது நிச்சயமாகப் பாதுகாப்பற்ற ஒன்றாக இருக்க முடியாது. சந்தோஷமாயிருப்பதற்குத் தேவன் தடைவிதிப்பதில்லை. இல்லை, சாத்தானே நாம் நம்முடைய சுரமண்டலத்தை (மகிழ்ச்சியின் கீதத்தை) கீழே வைக்கச் செய்யப் போராடுகிறான். ‘கர்த்தருக்குள் துக்கமாயிருங்கள்; துக்கமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ என்று கட்டளையிடும் எந்தக் குறிப்பும் வேதவாக்கியங்களில் இல்லை. ஆனால், ‘நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்’ (சங்கீதம் 33:1) என்று உற்சாகப்படுத்தும் புத்திமதி இருக்கிறது. வாசகரே, நீங்கள் ஓர் உண்மையான கிறிஸ்தவரானால் (இத்தருணத்தில் வேதவாக்கியங்களினால் உங்களைப் பரிசோதித்து இக்கருத்தை உறுதிசெய்துகொண்டிருக்க வேண்டும்), கிறிஸ்து உங்களுடையவர்; அவருக்குள் இருக்கிற எல்லாம் உங்களுக்குரியதே. அவர் உங்களை உற்சாகப்படுத்திக் கட்டளையிடுகிறார்: ‘சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள்; பூர்த்தியாய்க் குடியுங்கள்’ (உன்னதப்பாட்டு 5:1). அவருடைய அன்பின் விருந்துக்கு எதிராக நீங்கள் செய்யக்கூடிய ஒரே பாவம் என்னவென்றால், மிகக் குறைவான அளவில் அதில் நீங்கள் பங்குபெறுவதே. ‘உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்’ (ஏசாயா 55:2) என்பது ஏற்கனவே பரலோகத்திலிருப்பவர்களுக்காகச் சொல்லப்பட்டதல்ல; மாறாக, தற்பொழுது பூமியிலிருக்கும் பரிசுத்தவான்களுக்கே சொல்லப்பட்டது. இது எங்களை இப்படியாகச் சொல்லச் செய்கிறது:
1. சந்தோஷமாயிருப்பது நம்முடைய கடமை என்பதை உணர்ந்துகொள்ளும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ (பிலிப்பியர் 4:4). இங்கே சந்தோஷமாயிருப்பதை ஒரு விசுவாசி தனிப்பட்ட விதத்தில், தற்காலத்தில் மற்றும் நிரந்தரமாகச் செய்யவேண்டிய கடமையாகப் பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார். நாம் சந்தோஷமாயிருக்க வேண்டுமா அல்லது கவலையாயிருக்க வேண்டுமா என்ற ஒரு தெரிவை கர்த்தர் நமக்குக் கொடுக்கவில்லை; ஆனால், மகிழ்ச்சியாயிருப்பதைக் கடமையாக்கியிருக்கிறார். நாம் சந்தோஷமாயில்லாதிருப்பது, செய்ய வேண்டிய ஒன்றை நாம் செய்யாமலிருப்பதால் செய்யும் பாவமாகும் (செய்யத்தவறிய பாவம் - Sin of omission). அடுத்தமுறை நீங்கள் ஒரு பிரகாசமான கிறிஸ்தவனைச் சந்திக்கும்போது, அவனைக் கடிந்துகொள்ளாதீர்கள்; சந்தேகக் கோட்டைக்குள் வாழும் நீங்கள் உங்களையே கடிந்துகொள்ளுங்கள். தெய்வீக ஊற்றாகிய அவனது உற்சாகத்தைக் கேள்வி கேட்பதற்கு நீங்கள் ஆயத்தமாவதற்குப் பதிலாக, உங்களுடைய பரிதாப நிலையை நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.
நாங்கள் இங்கே குறிப்பிடுவது மாம்சப்பிரகாரமான மகிழ்ச்சியல்ல; அதாவது, மாம்சத்தின் மூலம் வரும் சந்தோஷத்தை நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. பூமிக்குரிய ஐசுவரியத்திலிருந்து சந்தோஷத்தைத் தேடுவது பயனற்றது; அது அடிக்கடி தனக்கென்று இறக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு பறந்துவிடுகிறது. சிலர் தங்களுடைய குடும்ப வட்டங்களில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள்; அது அதிகபட்சம் சில வருடங்கள் மட்டுமே நீடிக்கிறது. இல்லை, நாம் ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்றால்’ அது எப்பொழுதுமே நிலைநிற்கிற பொருளில் மாத்திரமே இருக்க முடியும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சியையும் நாங்கள் குறிப்பிடவில்லை. பைத்தியக்காரர்போல் நடந்துகொள்ளும்போது மாத்திரமே உற்சாகமூட்டும் மகிழ்ச்சியுடன் காணப்படும் சிலர் இருக்கிறார்கள்; அதின் விளைவோ பயங்கரமானது. இல்லை, இது புத்திக்கூர்மையாக, நிலையாக ஓர் இருதயம் தேவனுக்குள் மகிழுவது. தேவனுடைய ஒவ்வொரு குணாதிசயமும், விசுவாசத்துடன் சிந்திக்கப்படும்போது, அது இருதயத்தைக் கீதம் பாடச்செய்யும். நற்செய்தியின் ஒவ்வொரு போதனையும் உண்மையாகப் புரிந்துகொள்ளப்படும்போது, அது மகிழ்ச்சியையும் துதியையும் முன்னின்று அழைக்கும்.
சந்தோஷம் என்பது கிறிஸ்தவக் கடமைகளில் ஒன்று. ஒருவேளை இதை வாசிப்பவர் வியப்படையலாம்: "என்னுடைய உணர்வுகளாகிய சந்தோஷமும் கவலையும் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை; சூழ்நிலைகள் உத்தரவிடுவதால் சந்தோஷமாயிருப்பதற்கோ அல்லது கவலையாயிருப்பதற்கோ எனக்கு நானே உதவிசெய்துகொள்ள முடியாது" என்று சொல்லலாம். ஆனால், நாங்கள் மறுபடியும் சொல்கிறோம், ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்’ என்பது தெய்வீகக் கட்டளை; ஆகவே, அதற்குப் பெருமளவில் கீழ்ப்படிய வேண்டியது ஒருவனுடைய சொந்த சக்திக்குட்பட்டதாயிருக்கிறது. என்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதற்கு நானே பொறுப்பு. கவலையான நினைவுகள் இருக்கும்பட்சத்தில் கவலையாக இருப்பதைத் தவிர்க்க முடியாது என்பது உண்மை; ஆனால், என்னுடைய மனம் அதிலேயே உழல்வதை நான் தடுத்து நிறுத்த முடியும். என்னுடைய இளைப்பாறுதலுக்காக நான் என் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் ஊற்ற முடியும்; என் பாரத்தை அவர்மேல் போட முடியும். அவருடைய நற்குணத்தையும், நல்ல வாக்குத்தத்தங்களையும், எனக்காகக் காத்திருக்கும் மகிமையான எதிர்காலத்தையும் தியானிக்கும்படியாக அவருடைய கிருபையை நான் நாட முடியும். நான் வெளிச்சத்திலே போய் நிற்க வேண்டுமா அல்லது நிழலிலே மறைந்துகொள்ள வேண்டுமா என்பதை நானே தீர்மானிக்க வேண்டும். கர்த்தருக்குள் சந்தோஷமாயில்லாதிருப்பதென்பது துரதிர்ஷ்டத்தைவிட மோசமானது; இது அறிக்கைசெய்து விட்டுவிட வேண்டிய ஒரு பாவம்.
2. நாம் உண்மையான சந்தோஷத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ளும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். 1 யோவான் 1:3,4-ம் வசனங்களில் அந்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது: ‘எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்’. தேவனோடுள்ள நம்முடைய ஐக்கியத்தின் குறைவான தன்மையையும், அதனுடைய குறுகிய தன்மையையும் நாம் பார்க்கும்போது, ஒப்பீட்டு அளவில் பல கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாயிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 'ஓ, மகிழ்ச்சியின் நாள் என் பங்கை உம்மீது வைத்தது, என் இரட்சகா, என் தேவனே! இந்த ஒளிரும் இருதயம் மகிழ்ச்சியாயிருக்கட்டும், இவ்வருகையை உலகெங்கும் சொல்லட்டும்' என்று பலமுறை நாம் பாடுகிறோம். ஆம், ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர வேண்டுமானால், கிறிஸ்துவானவர் தொடர்ச்சியாகவும் நிலையாகவும் நம்முடைய மனதிலும், இருதயத்திலும் வீற்றிருக்க வேண்டியவராயிருக்கிறார். எங்கே மிகுந்த விசுவாசமும் அதைத் தொடர்ந்த அன்பும் இருக்கிறதோ, அங்கு மாத்திரமே மிகுந்த மகிழ்ச்சியும் இருக்கும்.
‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’. நாம் ‘எப்பொழுதுமே’ மகிழ்ச்சியாயிருக்கக்கூடிய வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. மற்ற எல்லாம் மாறக்கூடியது, நிலையில்லாதது. இன்று நம்மை மகிழ்வூட்டும் ஒன்று நாளை நம்மைத் துக்கப்படுத்தலாம். ஆனால், செழுமையான காலங்களைப்போல, வறட்சியான காலங்களிலும் நாம் மகிழ்ந்திருக்கும்படி, கர்த்தர் எப்பொழுதும் மாறாதவராகவே இருக்கிறார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் அதற்கு அடுத்த வசனம் சொல்கிறது: ‘உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக, கர்த்தர் சமீபமாயிருக்கிறார்’ (பிலிப்பியர் 4:5). எல்லா வெளிப்பிரகாரமான காரியங்களிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்; அவைகள் உங்களை அதிகம் மகிழ்வூட்டுவதாகத் தோன்றும்போது அதில் இழுப்புண்டு விடாதீர்கள், மகிழ்ச்சியாக்காதபோது துவண்டுவிடாதீர்கள். உலகம் உங்களிடத்தில் புன்னகை பூக்கும்போது உச்சத்திற்குச் செல்லாதீர்கள்; அது உங்களை முறைத்துப் பார்க்கும்போது சோர்ந்துபோகாதிருங்கள். வெளிப்பிரகாரமான சொகுசுகளில் உணர்வுகளை அதிகமாய்க் காட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: தேவனே ‘சமீபத்திலிருக்கும்போது’ நாம் ஏன் அவைகளுடன் நிரம்பியிருக்க வேண்டும்? துன்பங்கள் கோரமாக இருந்தாலும், உலகப்பிரகாரமான இழப்பு பெரிதாக இருந்தாலும், ‘தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்’ (சங்கீதம் 46:1) – தங்களை அவர்மேல் ஊற்றிவிடுபவர்களை ஆதரிக்கவும் தாங்கவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாதிருங்கள்’ (பிலிப்பியர் 4:6). உலகப்பிரகாரமான காரியங்கள் பயமுறுத்தும் கவலைகளை உள்ளடக்கியவை; ஆனால், ஒரு கிறிஸ்தவன் அப்படியிருக்க முடியாது.
‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ (யோவான் 15:11). கிறிஸ்துவின் இந்த மதிப்புமிக்க வார்த்தைகள் மனதிலே சிந்திக்கப்பட்டு, இருதயத்தில் நம்பப்படும்போது அவை சந்தோஷத்தைத் தவிர வேறொன்றையும் பிறப்பிக்க முடியாது. கிறிஸ்துவுக்குள் இருப்பதைப் போன்ற ஒரு மகிழ்ச்சியான இருதயமானது, சத்தியத்தை அறிகிற அறிவின் அன்பிலிருந்து வருகிறது. ‘உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது’ (எரேமியா 15:16). ஆம், கர்த்தருடைய வார்த்தைகளைப் புசித்து, உண்பதன்மூலமே ஆத்துமா செழிப்படைகிறது; நம்மால் அவரை நோக்கிப் பாடவும் இருதயத்தில் கீதஞ்சொல்லவும் முடிகிறது.
‘அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன்’ (சங்கீதம் 43:4). ஸ்பர்ஜன் அவர்கள் நன்றாய்ச் சொன்னதுபோல, பலிபீடத்தின் அடையாளமாயிருக்கும் கிறிஸ்துவண்டை, எத்தனை உற்சாகத்துடன் ஒரு கிறிஸ்தவன் நெருங்க வேண்டும்! தெளிவான வெளிச்சம் மிகப்பெரும் ஆழமான ஆசையைத் தூண்ட வேண்டும். சங்கீதக்காரன் புறஜாதிகளின் சம்பிரதாயங்களை நம்பாதவனாகையால், அவன் விரும்பியது வெறும் பலிபீடத்தையல்ல: அவனுடைய ஆத்துமா ஆவிக்குரிய ஐக்கியத்தையும், தன்னுடைய அந்தச் செயலின் மூலம் தேவனோடுள்ள ஐக்கியத்தையுமே அவன் நாடினான். தேவன் இல்லாவிட்டால் அந்த ஆராதனையில் என்ன பயன் இருக்கிறது? வெறுமையான ஓடுகளையும் பதரையும்தவிர உண்மையில் அதில் என்ன இருக்கிறது? பரிசுத்த வெளிப்பாடுகளுடன் தாவீது தன்னுடைய ஆண்டவரைப் போற்றுவதைக் கவனியுங்கள்! அது அவனுடைய மகிழ்ச்சி மட்டுமல்ல, ஆனந்த மகிழ்ச்சி; தேவன் மகிழ்ச்சியின் ஊற்றல்ல, மகிழ்ச்சியைத் தருபவரல்ல அல்லது மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவர் மாத்திரமல்ல; அவரே அந்த மகிழ்ச்சி! "என்னுடைய ஆனந்த மகிழ்ச்சி" அதாவது, ஆத்துமாவே, என்னுடைய சந்தோஷத்தின் மெய்ப்பொருள் அவரே என்பதே அதன் கருத்தாகும்.
‘அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்’ (ஆபகூக் 3:17, 18). இது உலகப்பிரகாரமானவர்கள் அறியாத ஒன்று; ஐயோ! இந்த அனுபவத்திற்குக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் அந்நியராகவே இருக்கிறார்கள்! ஆவிக்குரிய மற்றும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சியின் ஊற்றானது தேவனிலிருந்து புறப்படுகிறது; அவரிடத்திலிருந்து அது முன்னோக்கிப் பாய்கிறது. பழைய ஏற்பாட்டுத் திருச்சபை, ‘என் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது’ (சங்கீதம் 87:7) என்று சொன்னபோது இது அவளால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இரகசியம் உண்மையாய்ப் போதிக்கப்பட்டிருக்கிற ஆத்துமா மகிழ்ச்சியானது!
3. நமக்குச் சந்தோஷத்தின் உன்னத மதிப்பு கற்றுக்கொடுக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். பறவைக்கு அதன் இறக்கைகள்போல, ஓர் ஆத்துமாவிற்கு மகிழ்ச்சி இருக்கிறது; அது நம்மை இந்த உலகத்தின் காரியங்களைவிட்டு உயரே எழும்பச் செய்கிறது. இது நெகேமியா 8:10-ல் வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டுள்ளது: ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்’. இஸ்ரவேலின் சரித்திரத்தில் நெகேமியாவின் காலம் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறிய கூட்டம் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பாலஸ்தீனத்திற்குத் திரும்பியிருந்தது. சிறையாகக் கொண்டுபோகப்பட்டவர்களால் நீண்டகாலமாக மறக்கப்பட்டிருந்த நியாயப்பிரமாணமானது, இப்பொழுது மறுபடியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள காணியாட்சியின் சட்டமாக நிலைநாட்டப்பட வேண்டியதாயிருந்தது. அச்சமயத்தில் கடந்தகாலத்தின் அவர்களுடைய பல பாவங்கள் நினைவுக்கு வந்தன. தெய்வீக ஆராதனையையும் தெய்வீக நியாயப்பிரமாணத்தையும் தங்கள் நடுவில் கொண்டவர்களாய் புதிய தேசமாக உருவெடுத்திருப்பதில், அவர்களுடைய கண்ணீர் இயற்கைக்கு மாறாக அவர்களுடைய நன்றியுணர்வுடன் கலந்தது. ஜனங்களுடைய ஆவியின் வல்லமை குறைய ஆரம்பித்தால் அவர்களால் தற்போதைய கடினமான நிலைமையை எதிர்கொள்ள முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்த அவர்களின் தலைவன் அவர்களிடம்: ‘நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன் என்றான்’.
பாவ அறிக்கையும், பாவத்திற்காக மனஸ்தாபப்படுதலும் முக்கியமான ஒன்று; அவைகள் இல்லாமல் தேவனோடுள்ள ஐக்கியத்தைத் தொடர முடியாது. ஆனாலும், உண்மையான மனந்திரும்புதல் ஏற்படும்பொழுதும், தேவனுடன் காரியங்கள் சரிசெய்யப்படும்பொழுதும், நாம் ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாட’ (பிலிப்பியர் 3:13) வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்முடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தால் நாம் உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியும். ஒருவன், தனக்கு அன்பானவர் இறந்திருக்கும்போது, அந்த இடத்தை நெருங்குவது அவனுக்கு எத்தனை வேதனை தருவதாக இருக்கிறது! அதே மனிதன் தன்னுடைய மணவாட்டியைச் சந்திக்கப் புறப்படும்போது எத்தனை உற்சாகத்துடன் செல்கிறான்! வாழ்க்கையின் போராட்டங்களுக்குப் புலம்பல்கள் ஏற்புடையதல்ல. எங்கே நம்பிக்கை இல்லையோ, அங்கே அவர்கள் கீழ்ப்படிவதற்கும் எந்தப் பெலனும் இல்லை. அங்கே சந்தோஷம் இல்லையென்றால், அங்கே ஆராதனையும் இருக்க முடியாது.
என் பிரியமான வாசகரே, செய்யப்படவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன; மற்றவர்களுக்குத் தேவைப்படுகிற சேவை செய்யப்படவேண்டியதாயிருக்கிறது; மேற்கொண்டு வர வேண்டிய சோதனைகள் உள்ளன; போர்செய்ய வேண்டிய போராட்டங்கள் உண்டு. நம்முடைய இருதயங்கள் கர்த்தருக்குள் மகிழ்ந்துகொண்டிருந்தால் மாத்திரமே நாம் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம். நம்முடைய ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறிக்கொண்டிருக்குமென்றால், நம்முடைய இருதயங்கள் கவலையில்லா மகிழ்ச்சியால் நிறைந்திருக்குமென்றால், நம்முடைய வேலை எளிதாயிருக்கும்; கடமைகள் இன்பமாயிருக்கும்; கவலைகள் தாங்கக்கூடியதாயிருக்கும்; பொறுமை சாத்தியமாகும். கடந்தகாலத் தோல்விகளின் சோகமான நினைவுகளோ அல்லது உற்சாகமற்ற எதிர்காலத் தீர்மானங்களோ நம்மை இழுத்துச் சென்றுவிடாது. கரங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமென்றால், இருதயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இரட்சகரைப்பற்றி இப்படியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது: ‘அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல்’ (எபிரெயர் 12:2).
கிறிஸ்து இருதயத்தில் பிரதானமாக இருக்கும்போது, சந்தோஷம் அதை நிரப்புகிறது. நம்முடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் அவர் இலக்காகவும், ஒவ்வொரு நோக்கத்திற்கும் மூலமாகவும் (Source), எல்லா இச்சைகளையும் அடக்கியாள்பவராகவும் இருக்கும்போது, இருதயத்தைச் சந்தோஷம் நிரப்பும்; மேலும், உதடுகளிலிருந்து துதி எழும்பும். இவைகளைக் கொண்டிருப்பது நாளின் ஒவ்வொரு மணிநேரமும் சிலுவையைச் சுமந்துகொண்டிருப்பதை உள்ளடக்கியது; நாம் ஒன்று இல்லாமல் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளாதபடிக்குத் தேவன் அப்படிச் செய்திருக்கிறார். சுயத்தைத் துறத்தல், வலது கையைத் தறித்துப்போடுதல், வலது கண்ணைப் பிடுங்கிப்போடுதல் ஆகியவை ஆவியானவர் ஆத்துமாவில் நுழையும் வழிகள். உள்ளே வரும்போது தேவனின் புன்முறுவல், அவருடைய அன்பின் நிச்சயம், நிலைத்திருக்கும் பிரசன்னம் ஆகிய சந்தோஷங்களைத் தன்னுடன் எடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் நாம் எந்த மனநிலையுடன் உலகத்தில் நுழைகிறோம் என்பதையும் இது அதிகமாகச் சார்ந்திருக்கிறது. மற்றவர்கள் நம்மைச் செல்லமாகவும் மென்மையாகவும் நடத்த வேண்டுமென்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். நாம் உயர்வாக நடத்தப்பட வேண்டுமென்று விரும்பினால், அப்படி நடக்காதபோது நாம் சோர்ந்துபோவோம். சுயத்தை மறந்து மற்றவர்கள் மகிழ்ச்சிபெற ஊழியம் செய்வதே மகிழ்ச்சியின் இரகசியமாகும். ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே அதிக பாக்கியம்’; ஆகவே, நாம் ஊழியம் பெறுவதைவிட மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதே நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
6. நம்முடைய சந்தோஷத்திற்குத் தடையாயிருப்பவைகளை விடாமுயற்சியுடன் தவிர்க்கும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். ஏன் அநேகக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமில்லாமல் காணப்படுகிறார்கள்? அவர்களெல்லாரும் ஒளியின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமில்லையா? ‘ஒளி’ என்ற வார்த்தை, தேவனுடைய தன்மையையும், அவரோடுள்ள நம்முடைய தொடர்பையும், எதிர்காலத்தில் நாம் சேருமிடத்தையும், மேலும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நமக்கு விளக்கிக் காட்டுவதற்காக வேதவாக்கியங்களிலே பலமுறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையிலே ஒளியைப்போல நன்மைபயக்கும் மற்றும் அழகான பொருள் வேறு எது? ‘தேவன் ஒளியாயிருக்கிறார்; அவரில் எவ்வளவேனும் இருளில்லை’ (1 யோவான் 1:5). நாம் ஒளியில் தேவனோடு நடக்கும்போது மட்டுமே நம்முடைய இருதயம் உண்மையான சந்தோஷத்தினால் பூரிப்படையும். அவருடனான ஐக்கியத்தைத் தடுக்கும் காரியங்களை நாம் வேண்டுமென்றே அனுமதிப்பதே நம்முடைய ஆத்துமாவைக் குளிர்ந்துபோகச் செய்து இருளடையச் செய்கிறது. மாம்சத்தைத் திருப்திப்படுத்துவதும், உலகத்துடன் ஒத்துப்போவதும், தடைசெய்யப்பட்ட பாதையில் நுழைவதுமே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நோய்வாய்ப்படச் செய்து, நம்மை உற்சாகமற்றவர்களாக மாற்றுகிறது. ‘உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்ப எனக்குத் தாரும்’ (சங்கீதம் 51:12) என்று தாவீது கதற வேண்டியிருந்தது. அவன் கட்டுப்பாடற்றவனாகவும், சுயத்தைத் திருப்திப்படுத்துபவனாகவும் மாறியிருந்தான். சோதனை வந்தபோது அதை எதிர்த்துநிற்க அவனில் பெலனில்லை. அதற்கு அடிபணிந்தான்; ஒரு பாவம் மற்றொன்றிற்கு வித்திட்டது. அவன் பின்வாங்கிப்போய் தேவனோடுள்ள தொடர்பை இழந்தான். அறிக்கை செய்யப்படாத பாவம் அவனது மனசாட்சியை அழுத்தியது. ஓ, என்னுடைய சகோதர சகோதரிகளே! அப்படிப்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் நம்முடைய சந்தோஷத்தை இழந





