“கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள். புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது...." எரேமியா 10: 1-3
கிறிஸ்துமஸ் வருகிறது! ஆனால் "கிறிஸ்துமஸ்" என்றால் என்ன? அதன் பெயரே அதன் மூலத்தைக் குறிக்கவில்லை "கிறிஸ்து-மாஸ்"? இது புற தெய்வ வழிபாடுகளிலிருந்து அதாவது ரோமன் கத்தோலிக்க மூலத்திலிருந்து ஆரம்பித்தது. ஆனால், சிலர், கிறிஸ்துமஸ் இரட்சகரின் பிறப்பை நினைவுகூரும் நேரம் என கூறுகின்றனர். அது அப்படியா? அத்தகைய நினைவுகூருதலுக்கு யார் அனுமதி அளித்தது? நிச்சயமாக தேவன் இல்லை. நம்முடைய இரட்சகர் அவருடைய சீஷர்களை அவரின் மரணத்தை அவரை நினைவுகூரும்படி கட்டளையிட்டார், ஆனால் வேதத்தில் ஆதியாகமம் முதல் அவருடைய பிறப்பைக் கொண்டாடச் சொல்லும் ஒரு வசனம் கூட இல்லை. மேலும், இயேசு கிறிஸ்து எப்போது, எந்த மாதத்தில் அவர் பிறந்தார் என்பது யாருக்குத் தெரியும், அந்த காரியத்தில் வேதம் அமைதியாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பிறந்த நாள் நினைவுகள் பார்வோனுடைய மற்றும் ஏரோதினுடைய இந்த இருவரின் பிறந்தநாளை மட்டும் குறிப்பட்டுள்ளது. (ஆதியாகமம் 40:20) (மத்தேயு 14:6) அதற்கு காரணம் உண்டு. இது "நம்முடைய படிப்பினைக்காக" பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படியானால், நாம் அந்த டிப்பினையை ஜெபத்துடன் மனதில் எடுத்துக் கொண்டோமா?
மேலும் "கிறிஸ்துமஸ்" கொண்டாடுவது யார்? முழு "நாகரிக உலகம்." ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் விசுவாசத்தை அறிக்கையிடாத பல்லாயிரம் கணக்கானவர்கள், மேலும் அவரைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தும், தங்கள் செயல்களில் அவரை மறுதலித்து, கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைக் கௌரவிக்கும் பாசாங்கில் களிப்புகளில் சேரும் பல்லாயிரம் கணக்கானவர்களுமே. அதை அதன் அடித்தளத்தில் வைத்து, நாங்கள் கேட்போம், அவருடைய நண்பர்கள் அவரது எதிரிகளுடன் மாம்சமான உலகப்பிரகாரமான அநுபவிப்பபுகளில் ஒன்றுபடுவது பொருத்தமானதா? உலகின் மகிழ்ச்சியில் அப்படிப் பங்கேற்பதில், இந்த உலகம் புறக்கணித்த அவர், விருப்பப்படுவார் அல்லது புகழப்படுவார் என' உண்மையிலேயே மீண்டும் பிறந்த எந்த ஆன்மாவும் நினைக்க முடியுமா? மெய்யாகவே மக்களின் பழக்கவழக்கங்கள் வீண்; மேலும், "தீமை செய்ய திரளான மக்களைப் பின்தொடர வேண்டாம்" (யாத்திராகமம். 23:2) என்று எழுதப்பட்டுள்ளது.
"சிறுவர்களுக்கு நல்ல நேரத்தைக் கொடுப்பது” என்னும் அடிப்படையில் சிலர் "கிறிஸ்துமஸைக் அநுசரிப்பதை" வாதிடுவார்கள். ஆனால் நம்முடைய இரட்சகரின் பிறப்பைக் கௌரவிக்கும் போர்வையின் கீழ் இதை செய்வது ஏன்? பண்டிகை கால மாம்ச களியாட்டங்களில் நடப்பவற்றுடன், அவருடைய பரிசுத்த நாமத்தை தொடர்புபடுத்தி இழுப்பது ஏன் அவசியமானது? இதுவா உலகத்தின் மாதிரியான "எகிப்திலிருந்து" சிறியவர்களை உங்களுடன் அழைத்துச் செல்கிறது? (யாத்திராகமம் 10:9-10), அல்லது இது இன்றைய எகிப்தியர்களுடன் அவர்களின் "ஒரு பருவத்திற்கான பாவத்தின் இன்பங்களில்" (எபிரேயர் 11:25) கலப்பதா? "பிள்ளையானவன் நடகக்வேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என வேதம் கூறுகிறது. (நீதிமொழிகள் 22:6). தேவனுடைய மக்கள் தங்கள் குழந்தைகளை "கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்" (எபேசியர் 6:4), வளர்க்கும்படி வேதம் கட்டளையிடுகிறது. ஆனால் அது சிறுவர்களுக்கு "நல்ல நேரத்தை” கொடுப்பது நம்முடையது கடமை என்று எங்கே குறிப்பிடுகிறது? இறைவனின் ஆசீர்வாதத்தை நாம் பொருத்தமாக கேட்க முடியாத எதிலும் ஈடுபடும் போது நாம் எப்போதாவது குழந்தைகளுக்கு "நல்ல நேரத்தை" கொடுக்கிறோமா?
"பண்டிகைக் காலத்தின்" சில மோசமான விசயங்களைத் தவிர்ப்பவர்களும் உள்ளனர், ஆயினும்கூட, அவர்கள் நடைமுறையில் உள்ள பரிசுகளை பரிமாறும் "கிறிஸ்துமஸ்" வழக்கத்திற்கு கடுமையான அடிமைத்தனத்தில் உள்ளனர். "பரிமாற்றம்” என்று நாம் கூறுகிறோம், அது உண்மையில் பல நேரங்களில் சமளிக்கும் வழக்கங்களாக இருக்கிறது.
இந்த ஆண்டு திரும்ப கொடுக்கும் நோக்கத்திற்காக, கடைசி ஆண்டில் பரிசு தந்தவர்களின் பட்டியல் காகிதத்தில் அல்லது நினைவாக வைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அல்ல, நண்பருக்கு வழங்கப்படும் "பரிசு" அவரிடமிருந்து அல்லது அவளிடமிருந்து அவர்கள் பெற எதிர்பார்க்கும் உலக செல்வங்கள் அதே மதிப்புள்ளதாக இருக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் எடுக்கப்படுகிறது. இதனால், அதனை வாங்க முடியாத பலர். வெறுமனே பெறப்படக்கூடிய மற்றவர்களுக்கு ஈடாக பொருட்களை விரயாமான இருக்கும் காசும், வீணானக்கிய ஒவ்வொரு மணி நேரமும் கவனத்தில் கொள்ளப்படபடும்! இந்த வருடத்தின் இறுதி நாட்கள் வரும்போது நாம் இன்னும் பூமியில் இருப்போமானால், எழுத்தாளரும் வாசகரும் கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன்பாக வாழவும் செயல்படவும் அவரது கிருபையைத் ஊக்காக தேடுவோமாக. அவரது "மிகவும் சிறப்பு" என்பது இப்போது எண்ணற்ற ஆன்மாக்களிடமிருந்து நாம் பெறக்கூடிய ஏளனங்களுக்கும் கேலிகளுக்கும் போதுமான இழப்பீடாக இருக்கும்.
எந்த ஒரு கிறிஸ்தவ வாசகனும் அவன் அல்லது அவள் பரிசுத்த ஆண்டவரின் முன் நிற்கும் போது, அவர்கள், பூமியில் "மிகக் கண்டிப்பாக" வாழ்ந்ததற்காக வருத்தப்படுவார்கள், என்று ஒரு கணம் சிந்தித்து பார்க்கமுடியுமா? "ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகள்" (1பேதுரு 2:11) இல் இருந்து விலகுவதில் "மிகவும் தீவிரமானவர்கள்" என்பதால், அவருடைய சொந்தங்களில் யாரையும் அவர் கண்டிக்கும் ஆபத்து சிறிதளவேனும் இருக்கிறதா? நாம் "சிறிய விசயங்களில்" சமரசம் செய்துகொள்வதன் மூலம் இன்று உலக மதவாதிகளின் நல்ல எண்ணத்தையும் நல்ல வார்த்தையையும் பெறலாம், ஆனால் அந்த நாளில் நாம் அவரின் ஒப்புதலின் புன்னகையை பெறுவோமா? ஓ..! அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டு, அழிந்து வரும் மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் குறைவாக கவலைபடுவோமாக!
"தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக” (யாத்திராகமம் 23:2). பிரபல்யான கருத்தான அலையுடன் மிதப்பது எளிதான விசயம்; ஆனால் நீந்துவதற்கு, அதிக கிருபையுடன் விடாமுயற்சியுடன் தேவனிடமான தேடுதல் தேவைப்படுகிறது. இருப்பினும், பரலோகத்தின் வாரிசுகள் அதையேச் செய்ய அழைக்கப்படுகின்றனர்: "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2), தன்னை மறுதலித்து, சிலுவையை எடுத்துக்கொண்டு, நிராகரிக்கப்பட்ட கிறிஸ்துவைப் பின்பற்றல் வேண்டும்.
எவ்வளவு கவனத்துடன், எழுத்தாளரும் வாசகரும், "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்: ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குளள்தைப் பற்றிக்கொண்டிரு." (வெளிப்படுத்தல் 3:11) எனும் இரட்சகரின் அந்த வார்த்தைக்கு செவிசாய்க்க வேண்டும். ஒ..! இதனால் நம் ஒவ்வொருவராலும் உண்மையாக, “உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்." (சங்கீதம் 119:101) என சொல்ல முடியும்.
எங்கள் இறுதி வார்த்தை போதகர்களுக்கு. உங்களுக்கான கர்த்தருடைய வார்த்தை, வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு." (1தீமோ 4:12). உங்களுக்குத் தெரிந்த, விசுவாசத்தின் அனைத்து அடிப்படைகளும் மறுக்கப்படுகிற, மிகவும் கெடுதலான ஊழல் மிக்க "தேவாலயங்கள்", "கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்” கொண்டிருப்பார்கள் அல்லவா? நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்களா? நீங்களா வேதப்பூர்வமற்ற பணம் திரட்டும்" முறைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து, பின்னர் வேதப்பூர்வமற்ற "கிறிஸ்துமஸ் சேவைகளுக்கு" அனுமதி வழங்கினால் நீங்கள் சீரானவராக இருப்பீர்களா? உங்கள் மக்களுக்கு முன்பாக இதில் தேவனின் உண்மையை, உறுதியாக, ஆனால் அன்புடன் முன்வைக்க கிருபையைத் தேடுங்கள், மேலும் புறமதத்தையும், ரோமன்கத்தோலிக்க மற்றும் உலக பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவதில் உங்களுக்குப் பங்கு இல்லை என்று அறிவியுங்கள்.
பின்வரும் பகுதி சார்லஸ் எச். ஸ்பர்ஜன் அவர்களின் 81 -ம் சங்கீதத்தின் விளக்கமான "தாவீதின் கருவூலத்திலிருந்து” தரப்படுகிறது:
"மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய (புனித) பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்” (வசனம் 3). கீழ்ப்படிவே நமது வழிபாட்டை ஒழுங்குபடுத்துவதே தவிர, ஆசையும் உணர்ச்சியும் அல்ல; எந்த சடங்குகளின் ஆடம்பரமும் அல்லது படிநிலை ஒழுங்குமுறையும் வழங்க முடியாத ஆழ்ந்தமைந்த புனிதத்தன்மையை, தேவனின் நியமனங்கள் சடங்குகள் மற்றும் நேரங்களுக்கு கொடுக்கின்றன. யூதர்கள் நியமிக்கப்பட்ட மாதத்தை மட்டும் அல்ல. அந்த மாதத்தின் தெய்வீகமாக பிரிக்கப்பட்ட பகுதியையும் கடைப்பிடித்தனர். முன்னைய காலத்தில் கர்த்தருடைய மக்கள் ஆராதனைக்காக நியமிக்கப்பட்ட நேரங்களை வரவேற்றனர்; நாமும் அதே களிப்பை பின்பற்றுவோம். மேலும் ஓய்வுநாளைப் பற்றி... "மகிழ்ச்சி" மற்றும் "கௌரவம்" தவிர வேறேதும் பேசாமலிருப்போம். இந்த பகுதியை மனிதனால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் மற்றும் விரதங்களுக்கு ஆணையாக கோருபவர்கள் சந்திர ரோகிகளாக தான் இருக்க வேண்டும். நாமோ ரோம் அல்லது பேராயர் நியமிக்கும் பண்டிகைகளை அல்ல மாறாக, கர்த்தர் நியமித்த பண்டிகைகளையே கொண்டாடுவோம்.
“(ஏனெனில்) இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாககோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது' (வசனம் 4). கர்த்தரின் இரக்கத்தை நினைக்க, ஒரு குறிப்பிட்ட புனித பருவம் தனியாக பிரித்துவைக்கப்பட வேண்டும் என்பது அனைத்து கோத்திரத்ததாரையும் கட்டும் பிரமாணமாக இருந்தது; மேலும் மெய்யாக அது தேவனுக்குரியது. அவருக்கு, அத்தகைய சிறப்பு மரியாதைக்கான, உரிமை கோருவதலும் இருந்தது. கிறிஸ்துமஸ், அறுவடை விழா வாரம் மற்றும் பிற போப்பின் விழாக்கள் கடைபிடிக்கப்படுவது ஒரு தெய்வீக சட்டத்தால் நிறுவப்பட்டது நிரூபிக்கப்படும் போது, நாமும் அவற்றில் கலந்துகொள்வோம், ஆனால் அதுவரை இல்லை. கரத்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது போல் மனிதர்களின் மரபுகளை நிராகரிப்பதும் நமது கடமையாகும்.