கிறிஸ்தவ ஒழுங்கு

துன்பத்தின் மத்தியில் தேவனே நீர் எங்கே இருக்கிறீர்?
ஆசிரியர்: ஷங்கர்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

 இக்கட்டுகள் என்னை மிகவும் நொறுக்குகிறது, தேவனே! நீர் எங்கே இருக்கிறீர்? இப்படிப்பட்ட கேள்விகளை நம் அனைவரும் ஒரு கட்டத்தில் கேட்டிருப்போம். ஆனால் சில நேரங்களில் அல்லது பெரும்பாலான நேரங்களில், நமது பிரச்சனைகளில் முதலில் நாம் கேள்வி கேட்பது தேவனை தான்.

நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் சீராக நடக்கும்போது எழுப்பபடாத இந்தக் கேள்விகள், துன்பங்கள் வந்தவுடன் ஏரளாமாக எழுகின்றன. சிலர் நேரடியாகக் கேட்காவிட்டாலும், மனதிற்குள்ளாக "ஆண்டவரே, உமக்கு எங்கள் மீது உண்மையாகவே அக்கறை இல்லையா?" போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லி நேரத்தைக் வீணாக போக்குவார்கள்.

ஆனால், இந்தக் கேள்விகளுக்கு வேதம் முன்னதாகவே பதிலளித்துள்ளது. சொல்லப்போனால் இங்கு பிரச்சனை பதில்களைக் கண்டுபிடிப்பது அல்ல, மாறாக பதில்களை ஏற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

அது உண்மையா..? என்று நீங்கள் யோசிப்பதற்கு முன், மக்கள் துன்பத்தில் இருக்கும்போது தேவன் எங்கே இருக்கிறார், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வேதத்திலிருந்து உங்களுக்குக் காண்பிக்க முயற்சிக்கிறேன். அதற்கு முன், தேவனுடைய ஒரு முக்கியமான குணாதிசயத்தை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

தேவன் ஆவியாய் இருக்கிறார். அதாவது அவருக்கு சரீரமில்லை. ஆவியாய் இருக்கும் தேவன், எல்லா இடங்களிலும் அவருடைய முழு இருப்பைக் கொண்டுள்ளார். அதனால்தான் தேவனை எங்கும் நிறைந்தவர் என்று சொல்கிறோம். மனிதர்கள் துன்பங்களைச் சந்திக்காதபோது எங்கும் நிறைந்த தேவன் இருக்கிறார் என்பதையும், மனிதர்கள் துன்பங்களைச் சந்திக்கும்போதும் அவர் இருக்கிறார் என்பதையும் முதலில் நம்முடைய மனதில் சரியாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இனி, வேதத்தில் துன்பங்களைச் சந்தித்த மக்களைப் பற்றியும், அந்தக் துன்பங்களின் மத்தியில் தேவன் அவர்களை எவ்விதமாக சந்தித்தார் என்பதை பார்ப்போம்.

நாம் முதலில், யோசேப்பிடம் இதைக்குறித்து கேட்போம்.

யோசேப்பே! உன் சகோதரர்கள் உன்னை ஒரு குழியில் தள்ளிவிட்டு இஸ்மவேலர்களிடம் விற்றுவிற்றுப் போட்டார்கள். நீ செய்யாத ஒரு தவறுக்காக போத்திபாரால் சிறையில் அடைக்கப்பட்டாய், நீ பல துன்பங்களை அனுபவித்தாய். தேவன் எங்கே இருக்கிறார் என்று உனக்கு யோசிக்கத் தோன்றவில்லையா? என்று யோசேப்பிடம் கேட்டால்,

யோசேப்பு, ஆதியாகமம் 39:20,21 வசனத்தை நமக்கு காண்பித்து "அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து," என்னுடைய துன்பத்தில் தேவன் எனக்கு துணையாக இருந்தார். என்று யோசேப்பு பதிலளிப்பார்.

இரண்டாவதாக, தானியேலிடம் இந்த கேள்வியை கேட்போம்.

தானியேலே! நீ சிறந்த புத்திசாலித்தனம் கொண்டவனும், தலைவர்களிடையே புகழ்பெற்றவனும், நம்பகமானவனுமான உன்னை சிங்கத்தின் குகையில் வீசிவிட்டார்களே, "கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்ன தவறு செய்தேன்? 'நீர் எங்கே இருக்கிறீர்' என்று ஏன் கேட்கவில்லை?" என தானியேலிடம் கேட்போம்.

பின்னர் (தானியேல் 6:22) வசனத்தை காண்பித்து "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்;" தேவன் என்னோடேகூட சிங்கங்களின் கெபியில் இருந்தார். என்று தானியேல் சொல்வார்.

மூன்றாவதாக, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களிடம் கேட்போம்.

நீங்கள் இருக்கும் படகை ஒரு பெரிய புயல் தாக்கியது, அப்போது நீங்கள், "ஆண்டவரே, உமக்கு எங்களைக்குறித்து கவலையில்லையா?" என்று கேட்டீர்கள். அந்த நேரத்தில் ஆண்டவரே எங்கே இருக்கிறீர்? என்று சீஷர்களிடம் கேட்டால், இயேசுகிறிஸ்து எங்களோடு அதே படகில் இருந்தார், நாங்களே விசுவாசமில்லாமல் பயத்தோடே ஆண்டவரிடம் கேள்வி கேட்டோம். என்று சீஷர்கள் பதில் சொல்வார்கள். (மாற்கு 4:35-41)

இறுதியாக, இந்த இரண்டு பெரிய மனிதர்களிடம் கேட்போம்.

பவுலும் சீலாவும், நீங்கள் நிறைய அடிக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன, இருட்டான, வெளிச்சம் இல்லாத சிறைச்சாலையில் அடைப்பட்டு உள்ளீர்கள். இவையெல்லாம் மிகுந்த வேதனையிலும், வாழ்க்கையின் மீதான விரக்தியிலும், மரணம் எங்களுக்கு வந்தால் நலமாக இருக்குமோ என்ற சிந்தனை இருந்திருக்க வேண்டியபோது, நீங்கள் எப்படி விசித்திரமாக தேவனை துதித்து பாடல்களைப் பாடுகிறீர்கள்.  தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்? நாங்கள் இவ்வளவு துன்ப படுகிறபோது, உமக்கு கவலையில்லையா? என்ற கேள்வியை கேட்டால்,

"உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?" அந்த நள்ளிரவு நேரத்தில், அந்த இருண்ட சிறையில், எங்களுக்கு ஏற்ப்பட்ட துன்பத்தின் மத்தியில், தேவன் அங்கே எங்களோடு இருந்தார், ஆகையால் தான் நாங்கள் அவரைப் துதித்து பாடி ஜெபித்தோம். என்று பவுலும் சீலாவும் சிரித்துக்கொண்டே பதிலளிப்பார்கள். (அப்போஸ்தலர் 16:19-26).

நாம் இங்கு கவணிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், நம்முடைய வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு நமது பாவத்தின் விளைவுகளே காரணம். அவைகள் நம்முடன் இருக்க வேண்டியதே! நாம் அவைகளுடன் பயணிக்க வேண்டியதே! துன்பத்தின் வாயிலாக தான் நாம் முழுமையடைந்து, சர்வவல்லமையுள்ள தேவனை அதிகமாக சார்ந்து இருப்போம். அந்த சோதனைகளில் நமக்கு தேவன் துணையாயிருந்து வழிநடத்துகிறார்.

"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசுகிறிஸ்து சொல்லிய வார்த்தைகளை நினைவுக்கொள்வோம். உலகத்தின் இறுதிவரை நம்முடைய சோதனைகளிலும், உபத்திரவங்களிலும், கண்ணீரிலும் தேவன் நம்மோடிருப்பார் என்பதை அது குறிக்கிறது.

நம்முடைய சோதனைகளில் நாம் தேவனைசனெ கேள்வி கேட்காமல், அவரைப் புகழ்ந்து பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சோதனைகள் எதுவரை நீடிக்கும் என்று நாம் தேவனிடம் கேட்கும்போது, "துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்." (1 பேதுரு 1:6) என்ற வசனத்தை நினைவில் கொள்வோம். இந்தப் போராட்டங்களும், பாடுகளும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. அதன் பிறகு, நமக்கு தேவனோடு நித்திய நித்தியமான மகிழ்ச்சி...

தேவன் நமக்கு துனையாக இருப்பாராக ஆமென்...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.