தேவனுடைய சத்தியமானது, இருபுறமும் ஆபத்தான, செங்குத்தான மலைச்சரிவுகளைக் கொண்ட ஒரு குறுகலான பாதையோடு சிறப்பாக ஒப்பிடப்படலாம்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இரண்டு பெரும் தவறுகளுக்கு இடையில் அது அமைந்திருக்கிறது. இந்த உருவகம் எந்த அளவிற்குப் பொருத்தமானது என்பதை, நாம் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு எளிதில் சாய்ந்துவிடக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். பரிசுத்த ஆவியானவரின் உதவி மட்டுமே நம்மை இதில் சமநிலையில் நிலைநிறுத்த முடியும்; அப்படிச் செய்யத் தவறும்பட்சத்தில் நாம் தவறிழைப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தவறு என்பது சத்தியத்தைப் புரட்டி அதை மறுதலிப்பதேயாகும்; அதாவது, சத்தியத்தின் ஒரு பகுதிக்கு எதிராக மற்றொரு பகுதிக்குக் குழிபறிப்பது என்று சொல்லலாம்.
இறையியல் வரலாறு இந்த உண்மையை மிகவும் அழுத்தமாகவும், அதேவேளையில் வருத்தமளிக்கும் விதத்திலும் எடுத்துரைக்கிறது. ஒரு சந்ததியினர், தங்கள் நாட்களில் மிகவும் தேவைப்பட்ட சத்தியத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்காகச் சரியாகவும் சிரத்தையுடனும் வழக்காடினார்கள். ஆனால், அடுத்த சந்ததியினர் அதில் தொடர்ந்து நடப்பதற்குப் பதிலாக, தங்கள் தரப்புத் தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள அறிவுப்பூர்வமாகப் போரிட்டனர். பொதுவாக, தாக்கப்பட்ட சத்தியத்தைப் பாதுகாக்கும் தீவிரத்தில், தங்கள் எதிர்த்தரப்பினர் எடுத்துரைத்த சமநிலையான சத்தியத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதன் விளைவாக, அதற்கடுத்த சந்ததியில் வரும் உண்மையான தேவ ஊழியன், முந்தையவர்கள் எதை மிக முக்கியமென்று கருதினார்களோ (ஆனால் தவறாகப் புரிந்துகொண்டார்களோ) அதைப் புறந்தள்ளவும், அவர்கள் எதை மறந்துபோனார்களோ அந்தச் சரியான சத்தியத்தை வலியுறுத்தவும் அழைக்கப்படுகிறான்.
‘ஒளிக்கதிர்கள் சூரியனிலிருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ அல்லது மெழுகுவர்த்தியிலிருந்தோ, எதிலிருந்து வந்தாலும் அவை நேர்க்கோட்டில்தான் பயணிக்கின்றன; ஆனால், மனிதனுடைய நடுக்கமற்ற கை கூட ஒரு வளைவில்லாத நேர்க்கோட்டை வரைய முடியாததுபோல, தேவனுக்காக நாம் செய்யும் செயல்கள் மிகவும் குறைவுள்ளவையாகவே காணப்படுகின்றன’ (டி. குத்திரி 1867). இது உண்மையோ இல்லையோ, நிச்சயமாக ஒரு மனிதன் தன் சுயபலத்தால் பின்வரும் இரு முரண்பாடான போதனைகளுக்கிடையில் உள்ள நேரான சத்தியத்தில் நடப்பது இயலாத காரியம்: தேவனுடைய அநாதி சித்தம் மற்றும் மனிதனுடைய பொறுப்பு; கிருபையிலான தெரிந்தெடுப்பு மற்றும் உலகளாவிய நற்செய்தி அறிவிப்பு; பவுலின் கூற்றுப்படி கிருபையினால் நீதிமானாக்கப்படுதல் மற்றும் யாக்கோபுவின் கூற்றுப்படி கிரியையினால் நீதிமானாக்கப்படுதல் ஆகியவை ஆகும். பல தருணங்களில், தேவனுடைய இறையாண்மை (முழுமையான சித்தம்) வலியுறுத்தப்படும் இடங்களில், மனிதனுடைய பொறுப்பு தட்டிக்கழிக்கப்பட்டிருக்கிறது; நிபந்தனையற்ற தெரிந்தெடுப்பு பற்றிப்பிடிக்கப்பட்ட இடங்களில், இரட்சிக்கப்படாதவர்களுக்குத் தடையின்றி நற்செய்தியைப் பிரசங்கித்தல் கைவிடப்பட்டிருக்கிறது. மறுபுறம், மனிதனுடைய பொறுப்பு உறுதிபடுத்தப்பட்டு நற்செய்தி ஊழியம் தொடர்ந்த இடங்களில், தேவனுடைய அநாதி சித்தமும், தெரிந்தெடுப்பின் சத்தியமும் துண்டாடப்பட்டது அல்லது முற்றிலும் மறக்கப்பட்டது.
நம்முடைய வாசகர்களில் பலர் மேலே சொல்லப்பட்ட உண்மைகளை விளக்கும் உதாரணங்களை வாசித்திருக்கலாம், ஆனால் சிலரே அதனைச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். விசுவாசத்திற்கும் நற்கிரியைகளுக்கும் இடையேயான சரியான தொடர்பை விளக்க முற்படும்போதும் இதே அளவு கடினத்தன்மையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருபுறம் சிலர் நற்கிரியைகளுக்கு வேதவாக்கியங்கள் அனுமதிக்காத அளவிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துத் தவறு செய்கிறார்கள்; மறுபுறம், வேதவாக்கியங்கள் நற்கிரியைகளுக்குக் கொடுத்திருக்கும் தகுந்த இடத்தைக் கொடுக்கச் சிலர் தவறிவிடுகிறார்கள். ஒரு பக்கத்தில், தேவனுக்கு முன்பாக நம்முடைய செயல்களின் மூலமாக நீதிமானாக்கப்படலாம் என்று எண்ணுவது மாபெரும் தவறாக இருந்தாலும், மறுபக்கத்தில், நாம் பரலோகம் செல்வதற்கு நம்முடைய நற்செயல்களும் அவசியம் என்பதையும், அவை நாம் நீதிமானாக்கப்பட்டதற்கான வெறும் ஆதாரங்களும் கனிகளும் மட்டுமே என்பதையும் மறுப்பவர்களும் சம அளவு குற்றம் செய்கிறார்கள். நாம் இப்பொழுது மிக மெல்லிய பனிக்கட்டிப் படலத்தின் மீது நடந்துகொண்டிருக்கிறோம் என்பதையும், கள்ளப்போதனை செய்கிறோம் என்று கடுமையாகக் குற்றம்சாட்டப்படும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதையும் நாங்கள் அறிவோம்; இருப்பினும், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள தெய்வீக உதவியையே நாடி, தேவனிடமே இந்தக் காரியங்களை ஒப்புவிக்கிறோம்.
சில வட்டாரங்களில் விசுவாசத்தின் முக்கியத்துவம் முழுவதும் நிராகரிக்கப்படாவிட்டாலும், நற்காரியங்கள் மிகைப்படுத்தப்பட வேண்டும் என்கிற வைராக்கியத்தால் அது மட்டம் தட்டப்படுகிறது. மாறாக, வேதக் கோட்பாடுகளில் மிகவும் உறுதியானவர்கள் (Orthodox) என்று அறியப்படுபவர்கள் மத்தியில் (அவர்களைத்தான் இப்போது பிரதானமாக மனதில் வைத்துப் பேசுகிறோம்), நற்கிரியைகளுக்கு அதற்கான சரியான இடம் அரிதாகவே கொடுக்கப்படுகிறது; அப்போஸ்தல சிந்தையுடன் நற்கிரியைகளில் தொடர்ந்து ஈடுபடும்படி விசுவாசிகள் மிகமிக அரிதாகவே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடுவோமோ அல்லது பாவிகள் கிறிஸ்துவின் நீதியின்மேல் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த நற்கிரியைகளின் மேல் நம்பிக்கை வைக்க அவர்களை உற்சாகப்படுத்திவிடுவோமோ என்ற ஐயமே இதற்கு முக்கியக் காரணம் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆனால், அப்படிப்பட்ட எந்தவொரு அச்சமும், ஒரு பிரசங்கியானவர் ‘தேவனுடைய முழு ஆலோசனையையும்’ பிரசங்கிப்பதைத் தடுத்துவிடக் கூடாது. அவருடைய பிரசங்கத்தின் மையக்கருத்து இழந்துபோனவர்களின் இரட்சகராகிய கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமே என்றால், அவர் அந்தச் சத்தியத்தில் எவ்வித சமரசமுமின்றி முன்னோக்கிச் செல்லக்கடவர்; பிலிப்பி பட்டணத்துச் சிறைச்சாலைக்காரனுக்குப் பவுல் அளித்த பதிலைப்போல (அப் 16:31), இந்த விசுவாசத்திற்கு அவர் முழு இடமளிக்கக்கடவர். ஆனால், அவருடைய தலைப்பு நற்கிரியைகள் என்றால், அதைப்பற்றி வேதவாக்கியங்கள் சொல்வதை உள்ளபடியே அவர் பிரசங்கிக்கக்கடவர்; ‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்க வேண்டும்’ (தீத்து 3:8) என்ற தெய்வீகக் கட்டளையை அவர் மறவாதிருக்கக்கடவர்.
இறுதியாகக் குறிப்பிடப்பட்ட இந்த வசனமானது, இக்காலத்தின் அலட்சியப்போக்கிற்கும், விழிப்பற்ற தன்மைக்கும், பயனற்ற செயல்களுக்கும், வெற்றுத் தம்பட்டங்களுக்கும் மிகவும் பொருத்தமான ஒரு எச்சரிப்பாகும். ‘நற்கிரியைகள்’ என்ற வார்த்தையானது புதிய ஏற்பாட்டில் ஒருமையிலோ அல்லது பன்மையிலோ முப்பதுக்கும் அதிகமான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆயினும், விசுவாசத்தைப் பிரசங்கித்து, வலியுறுத்தி, விளக்குபவர்கள் என்று மதிக்கப்படும் பிரசங்கிமார்கள்கூட, தங்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள், வேதத்தில் இந்த வார்த்தை ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கும் அளவிற்கு மிக அரிதாகவே அதைப்பற்றிப் பேசுகிறார்கள். திருமணத்தைக்குறித்து யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கர்த்தர் சொன்னார், ‘தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்’ (மாற் 10:9). அதேபோல, எபேசியர் 2:8-10ல் தேவன் இரண்டு மிக முக்கியமான ஆசீர்வாதமான காரியங்களை இணைத்திருக்கிறார்; அவைகளை நாம் நம்முடைய இருதயத்திலும் மனதிலும் பிரிக்கக்கூடாது, ஆனாலும் அவை இன்றைய நவீன பிரசங்க பீடங்களில் அடிக்கடி பிரிக்கப்படுகின்றன.
இரட்சிப்பானது கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு வருகிறது; இது நற்கிரியைகளினால் உண்டானதல்ல என்பதைத் தெளிவாகக் கூறும் முதல் இரண்டு வசனங்களை (எபே 2:8,9) நாம் எத்தனை முறை பிரசங்கிக்கக் கேட்டிருக்கிறோம்! ஆனால், கிருபை மற்றும் விசுவாசத்துடன் துவங்கும் அந்த வாக்கியமானது 10-ஆம் வசனத்தில்தான் நிறைவுறுகிறது; அங்கே ‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்’ என்று நமக்குச் சொல்லப்பட்டிருப்பது, எத்தனை முறை நமக்கு நினைவூட்டப்பட்டிருக்கிறது?
தேவனுடைய வார்த்தையைச் சுட்டிக்காட்டி நாம் இந்தத் தொடரைத் துவங்குகிறோம். இது பலவிதமான எண்ணங்களிலும், வித்தியாசமான வடிவமைப்புகளிலும் வாசிக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த வேதவாக்கியங்கள் உண்மையாகவே எப்படி ‘ஆதாயம் தரக்கூடியவை’ (பிரயோஜனமுள்ளவை) என்பதை 2 தீமோத்தேயு 3:16,17-ஆம் வசனங்கள், ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று வெளிப்படுத்துகின்றன. தேவன் மற்றும் கிறிஸ்துவைக் குறித்தும், பாவத்தைக் கடிந்துகொள்ளுதல் மற்றும் சீர்திருத்துதலைக் குறித்தும், ஜெபம் தொடர்பான அறிவுரைகளைக் குறித்தும் போதிக்கும் வேதவசனங்களை இதுவரை தியானித்த நாம், இப்போது அவை எப்படி ‘எல்லா நற்காரியங்களையும்’ குறித்து விளக்குகின்றன என்பதைக் கவனிப்போம். பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் தன் வேதவாசிப்பும் வேத ஆராய்ச்சியும் தனக்கு உண்மையிலேயே பலனளிக்கிறதா என்பதை ஒரு விசுவாசி உறுதிசெய்துகொள்ள, இது மற்றொரு அடிப்படை அளவுகோலாக இருக்கிறது.
1. நற்கிரியைகளின் உண்மையான இடம் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘பலர் கிறிஸ்தவ சமயவழி மரபுகளை ஒரு அமைப்பாக ஆதரிக்கத் தங்களுக்குள்ள ஆர்வத்தினால், பரிசுத்தத்தையும் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் குறைத்து மதிப்பிடும் விதத்தில் கிருபையினாலே இரட்சிப்பு என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த வேதவாக்கியங்களில் இதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கிறிஸ்துவின் இரத்தத்தின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம், தேவனுடைய கிருபையினால் இரட்சிப்பு இலவசமாகக் கிடைக்கிறது என்பதை அறிவிக்கும் அதே நற்செய்திதான், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் அவரில் பாவிகள் விசுவாசம் வைப்பதின் மூலம் இரட்சகரின் நீதியால் அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதியாக வலியுறுத்துகிறது; மேலும் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிக்க முடியாது என்பதையும் உறுதியாகக் கூறுகிறது; அதாவது, விசுவாசிகள் பாவநிவிர்த்தியின் இரத்தத்தினால் கழுவப்படுகிறார்கள்; அவர்களுடைய இருதயம் விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுகிறது, அன்பினால் கிரியை செய்து உலகத்தை மேற்கொள்ளுகிறது. எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் அந்த தேவகிருபையானது, அதைப் பெற்றுக்கொள்பவர்கள், தேவபக்தியற்றவைகளையும் உலகப்பிரகாரமான இச்சைகளையும் மறுதலித்து, தெளிந்த புத்தியுள்ளவர்களாய், நீதியுள்ள மற்றும் தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் போதிக்கிறது. வேதவாக்கியங்களின் அடிப்படையில் நற்கிரியைகளை விடாப்பிடியாக வலியுறுத்துவது கிருபையின் போதனைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாராவது நினைத்தால், அது தெய்வீக சத்தியத்தைக்குறித்து அவர்களுக்குள்ள அரைகுறையான மற்றும் மிகக் குறைவான அறிவையே காட்டிக்கொடுக்கிறது. தங்களுடைய தவறான நிலைப்பாட்டைக் காத்துக்கொள்வதற்காக, நீதியின் கனிகள் ஒரு கிறிஸ்தவனுக்கு முழுமையாகத் தேவை என்பதற்குச் சாதகமாக உள்ள வேதவாக்கியங்களை இருட்டடிப்பு செய்வது, தேவனுடைய வார்த்தையைப் புரட்டி மோசடியில் ஈடுபடுவதாகும்’ (அலெக்சாண்டர் கார்சன்).
நற்கிரியைகளைச் செய்யும்படி தேவனுடைய கட்டளை இருந்தாலும், நாம் அவற்றுக்கு உண்மையாகக் கீழ்ப்படிவதில் தோல்வி கண்டாலும், நம்மீது சுமத்தப்பட்ட கிறிஸ்துவின் நீதியினால் நாம் நீதிமான்களாக்கப்படுவதால், அந்தக் கிரியைகள் இல்லாமலேயே நாம் இரட்சிக்கப்படக்கூடுமானால், அந்த நற்கிரியைகளுக்கான கட்டளைக்கு என்ன வல்லமை இருக்கிறது? - இது போன்ற உணர்வற்ற ஆட்சேபனைகள், விசுவாசியின் தற்போதைய நிலை மற்றும் தேவனுடன் அவனுக்குள்ள தொடர்பைப் பற்றிய அறியாமையிலிருந்தே வருகின்றன. மறுபிறப்படைந்தவர்களின் இருதயங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கும் அதிகாரத்திற்கும் கீழ்ப்படியும்படியான வல்லமையான தாக்கத்திற்கு உட்பட்டதல்ல என்று எண்ணுவது, அவர்கள் நீதிமான்களாக்கப்படுவதற்குத் தேவையான உண்மையான விசுவாசம் அற்றவர்கள் என்பதையும், கிறிஸ்தவர்களின் சிந்தை அப்படிப்பட்ட வாதங்களால் பாழடைந்து போயிருப்பதையுமே காட்டுகிறது. மேலும், இது நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்கும், நம்முடைய பரிசுத்தமாக்கப்படுதலுக்கும் இடையில் தேவன் ஏற்படுத்தியுள்ள பிரிக்க இயலாத தொடர்பைக் கவனிக்கத் தவறுவதாகும். இவற்றில் ஒன்று மற்றொன்றில்லாமல் தொடர முடியும் என்று கருதுவது ஒட்டுமொத்த நற்செய்தியையே கவிழ்ப்பதற்கு ஒப்பாகும். இந்த ஆட்சேபனையைப் பற்றித்தான் அப்போஸ்தலன் ரோமர் 6:1-3 வசனங்களில் கையாளுகிறார்.
2. நற்கிரியைகளின் உண்மையான தேவையைப்பற்றி நாம் கற்பிக்கப்படும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்புண்டாகாது’ (எபி 9:22) என்றும், ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்’ (எபி 11:6) என்றும், ‘யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி 12:14) என்றும் சத்திய வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. பரலோகத்தில் பரிசுத்தவான்கள் வாழப்போகிற வாழ்க்கையானது, அவர்களுடைய மறுபிறப்பிற்குப் பின் இந்தப் பூமியிலே அவர்கள் வாழ்கிற வாழ்க்கையின் நிறைவும் முழுமையுமே ஆகும். இரண்டு வாழ்க்கைகளும் முற்றிலும் வேறுபட்டவை அல்ல; மாறாக பரிபூரணத்தின் அளவு மட்டுமே மாறுபடுகிறது. ‘நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்’ (நீதி 4:18). இங்கே கீழே தேவனுடன் நடத்தல் இல்லையென்றால், அங்கே பரலோகத்திலும் தேவனுடன் வாழுதல் என்பது இல்லை. இக்காலத்தில் அவருடன் உண்மையான ஐக்கியம் இல்லையென்றால், அங்கே நித்தியத்திலும் அவருடன் ஒன்றிணைதல் இல்லை. மரணம் இருதயத்தில் எந்த முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மரணத்தின்போது பரிசுத்தவான்களின் மிச்சமீதியான பாவங்களெல்லாம் முற்றிலும் நீக்கப்படுகின்றன என்பது உண்மையே என்றாலும், மரணத்தினால் அவர்களுக்குப் புதிதாக எந்தவொரு நற்குணமும் கொடுக்கப்படுவதில்லை. அப்படியானால், ஒருவன் தன் மரணத்திற்கு முன்னால் பாவத்தை வெறுத்துப் பரிசுத்தத்தை நேசிக்கவில்லை என்றால், அவன் மரணத்திற்குப் பிறகும் அப்படிச் செய்யப்போவதில்லை.
எவரும் நரகத்திற்குப் போக விரும்புவதில்லை; அதேசமயம், தவறாமல் அங்கு அழைத்துச் செல்லும் அந்த அகலமான பாதையை விட்டொழிக்கச் சிலரே விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். எல்லாரும் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள்; ஆனால், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் திரளான கூட்டத்தில், தங்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரே குறுகலான பாதையில் நடக்க உண்மையில் எத்தனை பேர் விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்? நற்கிரியைகள் இரட்சிப்புடன் கொண்டிருக்கும் தொடர்பின் சரியான இடத்தை நாம் இதிலிருந்து நிதானிக்க முடியும். அவை இரட்சிப்பைப் பெற்றுத்தரும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இரட்சிப்பிலிருந்து அவற்றைப் பிரிக்க முடியாது. அவை பரலோகத்திற்குச் செல்வதற்கான எந்த உரிமையையும் பெற்றுத்தருவதில்லை; ஆனாலும், தம்முடைய பிள்ளைகள் அங்கே வருவதற்கென்று தேவன் நியமித்திருக்கிற நியமங்களில் அவையும் ஒன்று. எந்த வகையிலும் நற்கிரியைகள் நித்திய ஜீவனைப் பெற்றுத்தருவதில்லை; ஆனால், அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைப்போல, நற்கிரியைகளும் ஒரு பாதையாக இருக்கின்றன. கிறிஸ்துவால் நமக்கென்று சம்பாதித்து வைக்கப்பட்டிருக்கும் சுதந்தரத்தைச் சென்றடைவதற்காக நாம் நடக்க வேண்டிய வழியைத் தேவன் நியமித்திருக்கிறார். தேவனுக்கு அனுதினம் கீழ்ப்படிந்து நடக்கும் வாழ்க்கை மட்டுமே, கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்காகச் சம்பாதித்திருப்பதில் மகிழுவதற்கான உண்மையான தகுதியை அளிக்கிறது – விசுவாசத்தினாலே கிடைக்கும் அந்தத் தகுதி, நம்முடைய மரணத்திலோ அல்லது அவருடைய வருகையிலோ முழுமையாகிறது.
3. நற்கிரியைகளின் வடிவமைப்பு நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்று மத்தேயு 5:16-ல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தில் ‘நற்கிரியைகள்’ என்ற வார்த்தை இங்குதான் முதன்முதலாகக் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது; மேலும், வேதவாக்கியங்களில் ஒரு காரியம் முதன்முதலில் குறிப்பிடப்படும்போது, அது அதன் தொடர்ச்சியான நோக்கத்தையும் பயன்பாட்டையும் சேர்த்தே வெளிப்படுத்தும் என்பது பொதுவான வேதவிதியாகும். கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய கிறிஸ்தவ சாட்சியை, தங்கள் வாழ்க்கையின் சத்தமில்லாத சாட்சியின் மூலம் (‘வெளிச்சம்’ பிரகாசிக்கும்போது ஒலியெழுப்புவதில்லை) வெளிப்படுத்த வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். மனுஷர் அவர்களுடைய நற்கிரியைகளைப் பார்த்து (அதைப்பற்றித் தம்பட்டம் அடிப்பதைக் கேட்டு அல்ல), பரலோகத்திலிருக்கிற அவர்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள் என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம். இங்கே நற்கிரியைகளின் அடிப்படையான நோக்கமும் வெளிப்படுகிறது: அது தேவனுடைய மகிமைக்காகவே செய்யப்பட வேண்டும்.
மத்தேயு 5:16-ன் உள்ளடக்கம் பொதுவாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுப் புரட்டப்படுகிறது; அதில் நாம் மேலும் சில கருத்துகளைக் கவனிக்கலாம். பல தருணங்களில் ‘நற்கிரியைகள்’, ‘வெளிச்சத்துடன்’ ஒப்பிடப்பட்டுக் குழப்பிக்கொள்ளப்படுகின்றன. அவை இரண்டும் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. ‘வெளிச்சம்’ என்பது க
5. நற்கிரியைகளின் உண்மையான தோற்றுவாய் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். மறுபடியும் பிறவாத மனிதர்கள் செய்யும் காரியங்கள், ஆவிக்குரிய தன்மையில் இல்லாவிட்டாலும், இயற்கையாகவும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகவும் நல்லவைகளாகத் தோன்றலாம். வேதத்தை வாசித்தல், தேவனுடைய ஊழியத்தில் பங்குபெறுதல், ஏழைகளுக்குப் பிச்சையளித்தல் போன்ற செயல்களை அவர்கள் வெளிப்பிரகாரமாகச் செய்யலாம்; அவற்றின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால், அவற்றின் பிரதான ஊற்று தேவ சிந்தையற்றதாக இருப்பதினால், திரியேக, ஒரே பரிசுத்த தேவனின் பார்வையில் அவை அழுக்கான கந்தை ஆடையைப் போலவே இருக்கின்றன. மறுபடியும் பிறவாதவர்கள் ஆவிக்குரிய கிரியைகளைச் செய்ய எவ்வித வல்லமையும் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்; ஆகவேதான், ‘நன்மைசெய்கிறவன் இல்லை; ஒருவனாகிலும் இல்லை’ (ரோமர் 3:12) என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய மாம்ச சிந்தை ‘தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது’ (ரோமர் 8:7). எனவே, ‘துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே’ (நீதி 21:4). விசுவாசிகள்கூடத் தாங்களாகவே நல்ல ஒன்றைச் சிந்திக்கவோ அல்லது நற்கிரியையைச் செய்யவோ தகுதியானவர்கள் அல்ல (2 கொரி 3:5). ‘தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்’ (பிலி 2:13) அவர்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
‘எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக் கூடும்’ (எரே 13:23). ஒருவன் முட்செடிகளிலிருந்து திராட்சைப்பழங்களையும், முட்பூண்டுகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்க முடியாததுபோல, மறுபடியும் பிறவாதவர்கள் நற்கனிகளைக் கொடுக்கவோ, நற்கிரியைகளைச் செய்யவோ முடியாது. நற்கிரியைகளைச் செய்வதற்கு நம்மில் பெலன் உண்டாகும்படி, முதலாவதாக ‘நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு’ (எபேசியர் 2:10), அவருடைய ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணி (கலா 4:6), அவருடைய கிருபை நம்முடைய இருதயங்களிலே ஊற்றப்பட வேண்டும் (எபே 4:7, 1 கொரி 15:10). அப்பொழுதும்கூட கிறிஸ்துவில்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது (யோவான் 15:5). பல நேரங்களில் நன்மையானதைச் செய்யும்படி நமக்கு விருப்பம் இருக்கிறது, ஆனால் அதை எப்படிச் செய்வதென்று நமக்குத் தெரிவதில்லை (ரோமர் 7:18). இது, தேவன் நம்மைச் ‘சகல நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்கி’, நம்மில் ‘இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை நடப்பிக்க’ (எபி 13:21) வேண்டும் என்று அவரை நோக்கிக் கெஞ்சி மன்றாடும்படி நம்மை முழங்கால்படியிடச் செய்கிறது. இதன்மூலம் நம்முடைய சுயசார்பு முற்றிலும் வெறுமையாக்கப்பட்டு, நம்முடைய ஊற்றுகளெல்லாம் தேவனிலேயே இருக்கின்றன (சங் 87:7) என்ற ஆழமான உணர்வுக்குக் கொண்டுவரப்படுகிறோம்; அதன்பிறகு, ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ (பிலி 4:13) என்பதைக் கண்டுகொள்கிறோம்.
6. நற்கிரியைகளின் மாபெரும் முக்கியத்துவம் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். இதைச் சுருக்கமாகச் சொல்வதானால்: 'நற்கிரியைகளின்' மூலம் தேவன் மகிமைப்படுத்தப்படுவதால் அவை மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை (மத் 5:16); அவற்றின் மூலம் நமக்கெதிராகப் பேசுபவர்களின் வாய் அடைக்கப்படுகிறது (1 பேது 2:12); அவற்றின் மூலம் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்கிறோம் (யாக் 2:13-17). மேலும், நாம் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க’ (தீத்து 2:10) நற்கிரியைகள் உதவுகின்றன. அவருடைய நாமத்தைத் தரித்திருப்பவர்கள், தங்கள் கிரியைகளினால் கிறிஸ்துவின் வழியிலும் ஆவியிலும் தொடர்ந்து நடக்கிறார்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் கிறிஸ்துவின் நாமத்திற்கு மேன்மையைக் கொண்டுவராது. அதே பரிசுத்த ஆவியானவர், அப்போஸ்தலனாகிய பவுலைத் தூண்டி, ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்’ (தீத்து 3:8) என்று எழுதச் செய்ததற்கு இதுவே காரணம். எனவே, நாம் உண்மையிலேயே ‘நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாக’ (தீத்து 2:14) இருப்போமாக.
7. நற்கிரியைகளின் உண்மையான நோக்கம் நமக்குப் போதிக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். தேவன் நம்மை வைத்திருக்கிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் உறவிலும் நம்முடைய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டியவர்களாய் இருக்கிறோம். பெத்தானியா ஊரைச் சேர்ந்த மரியாள், இரட்சகரை அபிஷேகம்பண்ணிய செயலே (மத் 26:10, மாற் 14:6) புதிய ஏற்பாட்டில் ‘நற்கிரியை’ என்று முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், கவனிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. மனிதரால் தூற்றப்பட்டாலும், புகழப்பட்டாலும் இரண்டையும் ஒன்றாகவே கருதி, ‘பதினாயிரங்களில் சிறந்தவர்’ மேலேயே தன் கண்களை வைத்து, அவள் தன்னிடம் இருந்த விலையுயர்ந்த தைலத்தை அவர்மேல் ஊற்றினாள். மற்றொரு ஸ்திரீயான தொற்காள், ‘நற்கிரியைகளை மிகுதியாய்ச் செய்தாள்’ (அப் 9:36) என்று குறிப்பிடப்பட்டுள்ளது; மனிதர்களிடையே தேவன் மகிமைப்படும்படி, ஆராதனைக்குப் பின் மற்றவர்களுக்குப் பிரயோஜனமான ஊழியமும் வருகிறது.
நாம் ‘சகலவித நற்கிரியைகளுமான கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள வேண்டும்’ (கொலோ 1:10). பிள்ளைகளை வளர்த்தல், அந்நியரை உபசரித்தல், பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவுதல் (அவர்களுடைய தேவைகளைச் சந்தித்தல்), உபத்திரவப்படுபவர்களுக்கு உதவிசெய்தல் (1 தீமோ 5:10) ஆகியவையே ‘நற்கிரியைகளாக’ வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய வேதவாசிப்பும் வேத ஆராய்ச்சியும் நம்மை கிறிஸ்துவுக்கென்று நல்ல போர்வீரர்களாகவும், நாம் வாழும் நாட்டிற்கு நல்ல குடிமக்களாகவும், பூமியிலுள்ள நம்முடைய குடும்பத்திற்கு நல்ல அங்கத்தினர்களாகவும் (தாழ்மையானவர்களாக, கனிவுள்ளவர்களாக, சுயநலமற்றவர்களாக) மாற்றாவிட்டால், ‘எல்லா நற்கிரியைகளையும் முழுமையாகச் செய்தாலும்’ அதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.
கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த உலகத்திலே அவரை மகிமைப்படுத்தி கனப்படுத்த வேண்டுமென்பதை, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற அனைவரும் குறைந்தபட்சம் பெயரளவிலாவது ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இதை எப்படிச் செய்ய வேண்டும், அவர் நம்மிடத்திலிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது ஏதோ ஒரு ‘சபையில்’ சேர்ந்து, அதனுடைய பல செயல்பாடுகளில் பங்குபெற்று அதை ஆதரிப்பது என்று. மற்றவர்கள் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசி, ‘தங்களுடைய தனிப்பட்ட வேலையைக்’ கருத்தாய்ச் செய்வது என்று. இன்னும் சிலர் இப்படிக் கற்பனை செய்து கொள்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவருடைய வேலைக்காக இன்னும் கொஞ்சம் அதிகமான பணத்தைச் செலவிடுவது என்று. நாம் அவருக்கென்று பரிசுத்தமாய் வாழ்ந்து, வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அவருடைய சித்தத்துக்கு அடிபணிந்து நடப்பதின் மூலமே கிறிஸ்து கனப்படுத்தப்படுகிறார் என்பதை உண்மையில் வெகு சிலரே உணர்ந்திருக்கிறார்கள். ‘பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்’ (1 சாமு 15:22) என்ற வார்த்தையை வெகு சிலரே உண்மையில் நம்புகிறார்கள்.
‘கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டு’ (கொலோ 2:6) நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்காவிட்டால் நாம் கிறிஸ்தவர்களே அல்ல. இந்த வாக்கியத்தைச் சிரத்தையுடன் சிந்தித்துப் பார்க்க உங்களை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். தங்களுடைய இருதயத்தில் மாற்றம்பெறாமல், சுயம் தங்களை முழுவதுமாக ஆண்டுகொண்டிருக்கும்பொழுது, கிறிஸ்துவின் ‘செய்து முடிக்கப்பட்ட பணியில்’ விசுவாசம் வைத்திருப்பதாக நினைக்கவைத்து சாத்தான் பலரை இன்று ஏமாற்றிக்கொண்டிரு
‘என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?’ (லூக் 6:46). கிறிஸ்து கேட்பது நம்முடைய வாழ்க்கையில் கீழ்ப்படிதலையே தவிர, பிரகாசமான வெறும் வாயின் வார்த்தைகளை அல்ல. யாக்கோபு 1:22 நம்மை எவ்வளவு ஆராய்ந்து துக்கப்படவைக்கும் வார்த்தை! ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயுமிருங்கள்!’ வசனத்தைக் ‘கேட்பவர்களில்’ பலவகைகள் உண்டு: வழக்கமாகக் கேட்பவர்கள், நன்றியுணர்ச்சியுடன் கேட்பவர்கள், ஆர்வத்துடன் கேட்பவர்கள்; ஐயோ, அவர்கள் கேட்பது வாழ்க்கையிலே இணைக்கப்படவில்லை: அவர்களுடைய வாழ்க்கையை அது ஒழுங்குபடுத்தவில்லை. மேலும், வசனத்தின்படி நடக்காதவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள் என்று தேவன் சொல்கிறார்.
ஐயோ, அப்படிப்பட்ட எத்தனைப் பேர் இன்று கிறிஸ்தவ உலகில் இருக்கிறார்கள்! அவர்கள் மாய்மாலக்காரர்கள் அல்ல, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள். கிருபையினாலேயே தாங்கள் இரட்சி
‘எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்’ (2 தீமோ 3:7). இப்பொழுது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘அபாயகரமான காலத்திற்கு’ மிக முக்கியமான அடையாளங்களில் இதுவும் ஒன்று. மக்கள் இந்த போதகர், அந்த போதகர் என்று பலருக்குச் செவிசாய்க்கி
தேவன் தம்முடைய வா
1. வேதவாக்கியங்களின் மீது தேவனுடைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது; அவர் மாறாதவராகையால், அவர் எதிர்பார்ப்புகளும் மாறாதவை என்பதைக் கண்டுகொள்ளும்பொழுது ஒரு மனிதன் ஆதாயம் பெறுகிறான். இக்காலத்தில் மனிதனிடம் தேவன் தன்னுடைய எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பது ஒரு மிகப்பெரிய மோசமான தவறாகும். ஏனென்றால் அது முற்காலத்தில் தேவன் கொடுத்த கற்பனைகள் கடுமையானவைகள் போலும், நீதியற்றவைகளாக இருந்தது போலும் ஆகிவிடும். அப்படியல்ல! ‘நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் நீதியாயும், பரிசுத்தமாயும், நன்மையுமாயும் இர
2. தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் மனிதன் எப்படி முழுமையாகப் பாவத்தில் தோல்வியடைந்திருக்கிறான் என்பதைக் கண்டுகொள்ளும்பொழுது அவன் வேதத்திலிருந்து ஆதாயம் பெற்றுக்கொள்கிறான். கடந்த பத்தியில் நாம் பார்த்தபடி, தேவன் மனிதனிடம் கொண்டிருக்கும் மிக உயர்ந்த எதிர்பார்ப்பை அவன் கண்டுகொள்ளும்வரை, எந்த மனிதனும் தான் எப்பேர்ப்பட்ட பாவி என்பதைக் கண்டுகொள்ள முடியாது. தேவனின் தரத்துடன் ஒப்பிடும்பொழுது தான் எப்படி முடிவில்லாமல் விழுந்துபோயிருக்கிறான் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தும் மனிதனின் பயனுக்காக நாம் சிலவற
3. தேவன் தன்னுடைய ஜனங்களிடமிருந்து எதிர்பார்க்கும் தன்னுடைய சொந்த எதிர்பார்ப்பைத் தன்னுடைய அளவில்லாக் கிருபையின் மூலம் அவரே கொடுத்திருக்கிறார் என்று வேதவாக்கியங்களின் மூலம் போதிக்கப்படும்பொழுது ஒரு மனிதன் ஆதாயம் பெறுகிறான்.
மீட்கப்பட்டவர்கள், புதுப்பிக்கப்படுகிறார்கள் (மறுபிறப்பு) என்பது இரட்சிப்பின் விமர்சையான, மகிமையான அற்புதமாகும். ஒரு மாற்றம் அவர்களுக்குள்ளாக ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் ஒளியேற்றப்படுகிறது, அவர்களுடைய இருதயம் மாற்றமடைகிறது, அவர்களுடைய ஆசைகள் புதுப்பிக்கப்படுகின்றன. அவர்கள் ‘கிறிஸ்துவுக்குள்ளாகப் புதுசிருஷ்டியாகிறார்கள்’ (2 கொரி 5:17). இந்த அதிசயமான கிருபையை தேவன் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார்: ‘என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்’ (எபி 8:10). இருதயமானது இப்பொழுது தேவனுடைய பிரமாணத்திற்குச் செவிசாய்க்கிறது: ஒரு புதிய நடத்தை இருதயத்திற்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது, அதனுடைய எதிர்பார்ப்புகளுக்கு இருதயம் பதிலளிக்கிறது; அதை நடப்பிக்க ஒரு உண்மையான விருப்பம் அங்கே இருக்கிறது. ஆகவேதான், ‘என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடம் சொல்லிற்று’ (சங் 27:8) என்று உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாவால் சொல்ல முடிகிறது.
தன்னை விசுவாசிக்கிறவர்களை நீதிமான்களாக்கும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்குப் பரிபூரணமாகக் கீழ்ப்படிந்தது மட்டுமல்லாமல், மாம்ச சிருஷ்டிகளை மாற்றம்பெறச் செய்து, தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு அவசியமான பரிசுத்த ஆவியானவரையும் அவர்களுக்காக அனுப்பியிருக்கிறார். கிறிஸ்து ‘அக்கிரமக்காரருக்காக’ மரித்திருந்தாலும் (ரோம 5:6), அவர்களை நீதிமான்களாக்கும்பொழுது கூட அவர்களைப் பாவிகளாகப் பார்த்தாலும் (ரோம 4:5), அவர்களை அந்த அருவருப்பான நிலையிலேயே விட்டுவிடுகிறதில்லை. அதற்கு மாறாக, அக்கிரமத்தையும், உலக இச்சைகளையும் மறுதலிக்கும்படியாகத் தன்னுடைய ஆவியினாலே அ
தேவன் ஒரு மனிதனின் பாவத்தை முழுமையாக மன்னித்து அவனுடைய மனசாட்சியில் உணர்த்தும்பொழுது, உன்னதமான கிருபையின
‘என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னில் அன்பாயிருக்கிறான்’ (யோவா 14:21) என்று இயேசு சொன்னார். பழைய ஏற்பாடானாலும் சரி, நற்செய்தி அல்லது நிருபங்களானாலும் சரி, தன்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாத எவரையும் தன்னில் அன்புகூர்ந்தவர்களாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பு என்பது உணர்ச்சிகளுக்கு மேற்பட்டது; இது செயல்பாட்டின் தத்துவம், தேன் போன்ற இனிமையான வெளிப்படுத்துதல்களைவிட மேலாகத் தன்னை வெளிப்படுத்துகிறத
தேவனுக்குக் கீழ்ப்படிதல் என
தேவனுக்குத் தேவைப்படும் இந்தக் கீழ்ப்படிதலானது அவரை நேசிக்கும் இருதயத்திலிருந்து மட்டுமே புறப்பட முடியும். ‘நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்’ (கொலோ
4. தேவனுக்குக் கீழ்ப்படிவது நம்மேல் விழுந்த கடமை என்பதைப் பார்க்கும்பொழுது மட்டுமல்ல, அவருடைய கற்பனைகளின் மீதான வாஞ்சை நம்மில் விதைக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்பவன் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பவனே’ (சங் 1:2). மீண்டும் நாம் வாசிக்கிறோம், ‘கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங் 112:1). அவருடைய வாக்குத்தத்தங்களை நான் மதிக்குமளவிற்கு, அவர
பின்வருவனவற்றை உன்னிப்பாகக் கவனிக்கும்படி, மீண்டுமாக
5. தேவனுடைய எல்லாக் கற்பனைகளுக்கும் ஒருவனுடைய இருதயமும் சித்தமும் இணங்கும்பொழுது அவன் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறான்.
உண்மையான ஆவிக்குரிய கீழ்ப்படிதலென்பது முழுமையானது. புதிதாக்கப்பட்ட ஒரு இருதயம் தேவனுடைய கற்பனைகளிலிருந்து தமக்கு வேண்டியதை மட்டும் பொறுக்கிக்கொண்டிருக்காது: அப்படிச் செய்யும் மனிதன் தேவனுடைய சித்தத்தைச் செய்யவில்லை, தன்னுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருக்கிறான். நாம் எல்லாக் காரியங்களிலும் சிரத்தையுடன் தேவனைப் பிரியப்படுத்த விரும்பாவிட்டால், நாம் உண்மையாக எந்தக் காரியத்தையும் செய்ய விரும்பவில்லை என்ற இந்தக் கருத்தில் தவறு செய்துவிடாதிருங்கள். சுயம் வெறுக்கப்பட வேண்டும்; நாம் ஆசைப்படுகிற சில காரியங்களை மட்டுமல்ல, முழு சுயத்தையும்! பாவம் என்று அறிந்திருக்கும் எந்த ஒன்றையும் விருப்பத்துடன் நம்மில் அனுமதித்தல் முழு நியாயப்பிரமாணத்தையும் மீறுவதாகும் (யாக் 2:10,11). ‘நான்
6. தேவனுடைய சித்தத்தைச் செய்யவைக்கும் கிருபைக்காக ஆத்துமா ஜெபிக்கும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். கிறிஸ்துவுக்குள்ளான மறுபிறப்பில், தேவனுடைய வார்த்தைக்கேற்ற கீழ்ப்படியும் சுபாவத்தைப் பரிசுத்த ஆவியானவர் உருவாக்குகிறார். இருதயம் தேவனால் வெற்றிக்கொள்ளப்படுகிறது. இப்பொழுது அவரைப் பிரியப்படுத்த ஒரு ஆழமான உண்மையான விருப்பம் இருக்கிறது. ஆனால் அந்தப் புதிய சுபாவத்திற்கு எந்த உள்ளான வல்லமையும் இல்லை, பழைய சுபாவம் அல்லது மாம்சம் அதற்கு எதிராகப் போரிடுகிறது, மேலும் சாத்தானும் எதிர்க்கிறான். ஆகவே ஒரு கிறிஸ்தவன் கதறுகிறான், ‘நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்திலில்ல
அநேகமாகப் பலருடைய சிந்தையில் இப்பொழுது எழும்பியிருக்கும் கேள்விக்கு நாங்கள் பதிலுரைக்க விரும்புகிறோம்: இந்த வாழ்க்கையில் தேவன் நம்மிடத்தில் பரிபூரண கீழ்ப்படிதலைக் கேட்கிறார் என்று நீங்கள் உறுதிபடக் கூறுகிறீர்களா? நாங்கள் பதிலுரைக்கிறோம், ஆமாம்! தேவன் அதைவிடக் குறைவான தரத்தை நம் முன்னால் வைக்கமாட்டார் (1 பேது 1:15). அப்படியானால் உண்மையான கிறிஸ்தவன் அந்தத் தரத்திற்கு இருக்கிறானா? ஆம் மற்றும் இல்லை! ஆம், அவனுடைய இருதயத்தில், மேலும் அந்த இருதயத்தை தேவன் பார்க்கிறார் (1 சாமு 16:7). ஒவ்வொரு மறுபிறப்படைந்த மனிதனும் தன்னுடைய இருதயத
‘கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக
என்னுடைய விருப்பங்களெல்லாம்
7. கீழ்ப்படிதலின் பலனில் நாம் மகிழும்பொழுது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘தேவபக்தியே மிகுந்த ஆதாயம்’ (1 தீமோ 4:8).
புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த ‘உலகத்தைக்’ குறித்தும், அதைக் குறித்த அவனது மனப்போக்கைக் குறித்தும் மிகக் குறைவாக எழுதப்படவில்லை. அதன் உண்மையான தன்மை வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது; மேலும், விசுவாசி அதற்கெதிராக முறையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறான். தேவனின் பரிசுத்தமான வார்த்தையானது பரலோகத்திலிருந்து வரும் வெளிச்சமாகவும், ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கையாகவும்’ (2 பேதுரு 1:19) இருக்கிறது. அதன் தெய்வீக ஒளிக்கதிர்கள் காரியங்களை அவற்றின் உண்மையான நிறத்தில் வெளிப்படுத்துகின்றன; காரியங்கள் தவறான அலங்கரிப்புகளாலும் கவர்ச்சியாலும் மறைக்கப்பட்டிருப்பதை அந்த ஒளிக்கதிர்கள் அவற்றுள் ஊடுருவி வெளிப்படுத்துகின்றன. அதிக பிரயாசமும் பணமும் செலவழிக்கப்பட்டு, கண்மூடித்தனமான ஏமாற்றுகளால் வெகுவாக உயர்த்தப்பட்டு மெச்சிக்கொள்ளப்படும் இந்த உலகமானது ‘தேவனுக்குப் பகை’ என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவருடைய பிள்ளைகள் அதனுடன் ‘ஒத்துப்போகவோ’ அல்லது தங்கள் ஆசையை அதன்மீது வைக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.
இப்பகுதியானது நாம் இனி பார்க்கவிருக்கும் பகுதிகளைவிட எந்த வகையிலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததல்ல; மேலும், இதை உண்மையாய் வாசிப்பவர் தன்னை ஆராய்ந்து பார்க்கத் தேவனின் கிருபையையும் நாடுவார். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குப் போதித்துள்ள போதனை இப்படியாகச் சொல்கிறது: "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய கலப்படமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" (1 பேதுரு 2:3). மேலும், இதுதான் தன்னுடைய உண்மையான நிலையா என்பதைக் கண்டுபிடிக்கும்படி, தன்னை உண்மையாகவும் சிரத்தையுடனும் பரிசோதித்துப் பார்க்கும்படியும் அது அறிவுறுத்துகிறது. வேதத்தைப் பற்றிய வெறும் அறிவுடன் நாம் திருப்தியடைந்துவிடாமல், நம்முடைய நடைமுறையான வளர்ச்சியைக் குறித்தும், கிறிஸ்துவின் சாயலுடன் ஒத்திருப்பதைக் குறித்தும் நாம் அதிக கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம்மை நாமே பரீட்சித்துப் பார்க்கக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால், "என்னுடைய வேத வாசிப்பும் ஆராய்ச்சியும், உலகப்பிரகாரமான பற்றுதலிலிருந்து என்னை விடுவித்திருக்கிறதா?" என்பதே.
1. இந்த உலகத்தின் உண்மையான தன்மையைப் பகுத்தறியும் விதமாக நம்முடைய கண்கள் திறக்கப்படும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ஒரு கவிஞன் இப்படியாக எழுதினான்: "கடவுள் பரலோகத்திலிருக்கிறார் - உலகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது." ஒருவகையில் இது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மை என்றாலும், ‘உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறபடியால்’ (1 யோவான் 5:19) மற்றொரு வகையில் இது மிகவும் தவறாகும். நம்முடைய இருதயமானது இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலே பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்படுவதாலேயே, மனிதர்களிடையே மிகுந்த மதிப்பைப் பெற்றிருப்பது "தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது" (லூக்கா 16:15) என்பதை நாம் அறிகிறோம். ‘உலகமானது’ மிகப்பெரும் ஏமாற்றுப்பேர்வழி, வெறுமையான குமிழி, மிகவும் கேடான ஒன்று, அது ஒருநாள் சுட்டெரிக்கப்படப் போகிறது என்பதை ஒரு ஆத்துமா கண்டுகொள்ளும்போது, அது தேவனுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
நாம் மேலும் செல்லும்முன்னர், ஒரு கிறிஸ்தவன் நேசிக்க மறுக்க வேண்டிய ‘உலகத்தை’ வரையறை செய்வோம். பரிசுத்த வேதாகமத்தின் பக்கங்களில், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமான பொருள்களில் இந்த வார்த்தை காணப்படுகிறது. ஆனாலும், அதன் பின்னணியத்தைக் கூர்ந்து கவனித்தால், அதன் நோக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்த ‘உலகம்’ என்பது ஒரு அமைப்பு அல்லது காரியங்களின் ஒழுங்கமைப்பு; அது தன்னில்தானே முழுமையுள்ளதாய் இருக்கிறது. எந்தவொரு அந்நியப் பொருளும் அதனுள் நுழைய முடியாது; அப்படியே நுழைந்தாலும் அது அதன் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது. உலகமானது வீழ்ந்துபோன மனிதத் தன்மையாகும்; அதுவே மனிதக் குடும்பங்களிலும் செயல்படுகிறது. அதனுடைய பண்புகளுக்கேற்ற கட்டமைப்பையே நடைமுறை வழக்கமாக அது வெளிப்படுத்துகிறது. இது ஒரு ‘மாம்ச சிந்தையின்’ ராஜ்யம்; "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது" (ரோமர் 8:7). எங்கெல்லாம் ‘மாம்ச சிந்தை’ இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘உலகம்’ இருக்கிறது; ஆகவே ‘உலகப்பிரகாரமானது’ என்பது தேவனில்லாத உலகமாகும்.
2. உலகமானது எதிர்க்கப்பட வேண்டிய மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய சத்துரு என்பதைக் கற்றுக்கொள்ளும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட" (1 தீமோத்தேயு 6:12) ஒரு கிறிஸ்தவன் அழைக்கப்படுகிறான்; அப்படியானால், சந்தித்து முற்றிலுமாக அழித்துப்போட வேண்டிய எதிரிகள் இருக்கிறார்கள் என்று பொருள். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற பரிசுத்த திரித்துவம் இருப்பதுபோலவே, மாம்சம், உலகம் மற்றும் பிசாசு என்ற தீய திரித்துவமும் இருக்கிறது. தேவனுடைய பிள்ளை அவற்றுடன் ஒரு முடிவான போர் புரிய அழைக்கப்படுகிறான். ‘முடிவான’ என்று நாம் சொல்வதற்குக் காரணம், ஒன்று அவன் அவற்றை வெற்றிகொள்வான் அல்லது அவை அவன்மீது வெற்றி கொள்ளும். என் வாசகரே, ‘உலகமானது சாவுக்கேதுவான பகை’ என்பதை உங்கள் மனதில் உறுதியாக முடிவு செய்துகொள்ளுங்கள். "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்" (1 யோவான் 5:4) என்று எழுதப்பட்டுள்ளதால், உங்கள் இருதயத்திலிருந்து உலகப் பற்றை முற்றிலுமாக நீங்கள் அழித்துப் போடாவிட்டால், நீங்கள் தேவனுடைய பிள்ளையல்ல.
இந்த உலகம் ஏன் ‘மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்பதற்கான பல காரணங்களில், பின்வரும் காரணங்களும் உள்ளன. முதலாவதாக, அதனுடைய கவர்ந்திழுக்கும் பொருள்கள் அனைத்தும், ஒரு ஆத்துமாவிற்கு தேவன்மீதுள்ள பற்றைச் சிதறடித்து, அவனை தேவனுக்கு அந்நியனாக்கிவிடுகின்றன. காணப்படுகிறவைகள், இருதயத்தைக் காணப்படாதவைகளிலிருந்து திருப்பிவிடும் தன்மையுடையதாக இருப்பதால் அப்படியாகிறது. இரண்டாவதாக, இந்த உலகத்தின் ஆவியானது, கிறிஸ்துவின் ஆவிக்கு முற்றிலும் முரணானது; ஆகவேதான், "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்" (1 கொரிந்தியர் 2:12) என்று அப்போஸ்தலன் எழுதினான். மூன்றாவதாக, இதன் கவலைகளும் கரிசனைகளும் பக்திவிருத்திக்கும் பரலோக வாழ்க்கைக்கும் எதிரானவைகள். மற்ற மனிதர்களைப்போல, ஒரு கிறிஸ்தவனும் வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்; ஆனாலும் அவன் வேலை செய்யும்போது, தன் வேலையைச் செய்வதைத் தாண்டி, இச்சையான எதிலும் மனதைச் செலுத்தாதபடி தன்னைத் தொடர்ச்சியாகக் காத்துக்கொள்ள வேண்டும்.
"நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" (1 யோவான் 5:4). தேவன் அருளிய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும். இப்பொழுது மறைந்திருந்தாலும், நிச்சயமான நித்தியத்தின் உண்மைகளால் இருதயம் நிறைந்திருக்கும்போது, கேடு விளைவிக்கும் உலகப் பொருட்களின் தாக்கத்திலிருந்து அது விடுவிக்கப்படுகிறது. விசுவாசக் கண்கள் உலகப் பொருட்களின் உண்மை நிறத்தை அறிந்துகொண்டு, அவைகள் வெறுமையானவை, மாயையானவை என்பதையும், மேலான நித்தியத்தின் மகிமையான காரியங்களுடன் அவை எவ்வகையிலும் ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்பதையும் கண்டுகொள்கின்றன. கிறிஸ்துவின் பரிபூரணத்தையும், தேவப் பிரசன்னத்தையும் உணர்ந்துகொள்ளுதல், இந்த உலகத்தை வெறுமையைவிடக் கீழானதாக்கிவிடுகிறது. தெய்வீக மீட்பர் தன்னுடைய பாவத்திற்காக மரித்து, தன்னுடைய விடாமுயற்சிக்காகவும் இறுதி இரட்சிப்பிற்காகவும் எல்லாக் காரியங்களையும் அவர் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை ஒரு கிறிஸ்தவன் பார்க்கும்போது, "உம்மைத் தவிர இவ்வுலகத்தில் எனக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை" என்று அவன் வியக்கிறான்!
இந்த வரிகளை வாசிக்கும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? முந்தைய பத்தியில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளலாம்; ஆனால், உங்களுடைய வாழ்க்கை உண்மையில் எப்படி இருக்கிறது? மறுபடியும் பிறவாதவர்கள் மிகவும் மதிப்புமிக்கதாக எண்ணும் காரியங்கள் உங்களைக் கவர்ந்திழுத்து அடிமையாக்குகின்றனவா? அவன் மகிழ்ந்திருக்கும் உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து விலகிவிடு, அவன் துன்மார்க்கன்: உங்களுடைய நிலையும் இதுதானா? அல்லது உங்களுடைய தற்போதைய மகிழ்ச்சியும் திருப்தியும், உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட முடியாத ஆவிக்குரிய பொக்கிஷங்களின்மீது இருக்கிறதா? இந்தக் கேள்விகளை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; தேவனுடைய பிரசன்னத்தில் இவற்றை உண்மையாய் எண்ணிப் பார்க்கும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவற்றுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான பதிலே உங்கள் ஆத்துமாவின் உண்மை நிலையைக் காட்டும்; மேலும், "நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி" என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்களா என்பதையும் அது சுட்டிக்காட்டிவிடும்.
3. நம்மை இப்பொழுதிருக்கிற ‘பொல்லாத பிரபஞ்சத்தினின்று’ விடுவிக்கும்படி கிறிஸ்து மரித்தார் (கலாத்தியர் 1:4) என்பதைக் கற்றுக்கொள்ளும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். தேவகுமாரன் நியாயப்பிரமாணத்தை ‘நிறைவேற்ற’ மட்டுமல்ல (மத்தேயு 5:17), ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கும்’ (1 யோவான் 3:8), ‘இனிவரும் கோபாக்கினைக்கு நம்மை நீங்களாக்கி இரட்சிக்கவும்’ (1 தெசலோனிக்கேயர் 1:10), பாவத்திலிருந்து நம்மை மீட்கவும் (மத்தேயு 1:21), மேலும் இந்த உலகத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி அதன் கவர்ந்திழுக்கும் தாக்கத்திலிருந்து ஆத்துமாவை விடுவிக்கவும் இவ்வுலகிற்கு வந்தார். பழங்காலத்தில் தேவன் இஸ்ரவேலரோடு செயல்பட்ட விதத்திலிருந்து இது முன்குறிப்பாய் அமைகிறது. அவர்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தார்கள்; ‘எகிப்து’ இந்த உலகத்திற்கான ஒரு அடையாளம். பார்வோனுக்குச் செங்கற்களைச் செய்வதில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு, அவர்கள் கொத்தடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் யெகோவா, தம்முடைய வல்லமையினால், அவர்களை அந்த ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவித்து, ‘இரும்பு உலையிலிருந்து’ வெளியே கொண்டுவந்தார். கிறிஸ்துவும் அதையேதான் செய்தார். அவர் விசுவாசிகளின் இருதயங்களிலுள்ள உலகத்தின் அதிகாரத்தை உடைக்கிறார். உலகத்தின் இன்பங்கள் மீதான நாட்டத்திலிருந்தும், உலகம் தங்களை ஒதுக்கித்தள்ளிவிடுமோ என்ற பயத்திலிருந்தும் அவர் அவர்களை விடுவிக்கிறார்.
கிறிஸ்துவானவர் தம்முடைய பிள்ளைகளின் பாவங்களைப் போக்கத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார்; அதன் விளைவாக, இவ்வுலகத்தின் தீய சக்தியிலிருந்தும் அதன் ஆளுகையிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும். அதன் பிரபுவாகிய சாத்தானிடமிருந்தும், அதனுள் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் இச்சைகளிலிருந்தும், அதற்குச் சொந்தமான மனிதனின் வீண்பேச்சுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட செயலைச் செய்ய, பரிசுத்தவான்களுக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுடன் இணைந்து செயல்படுகிறார். அவர் அவர்களுடைய நினைவுகளையும் உணர்வுகளையும் இவ்வுலகக் காரியங்களிலிருந்து பரலோகத்தை நோக்கித் திருப்புகிறார். தம்முடைய வல்லமையைச் செயல்படுத்தி, அவர்களைச் சூழ்ந்துள்ள நன்னெறிகெட்டு நடக்கச் செய்யும் தாக்கங்களிலிருந்து அவர்களை விடுவித்து, பரலோகத்தின் தரத்திற்கு அவர்களை மாற்றுகிறார். ஒரு கிறிஸ்தவன் கிருபையிலே வளரும்போது, இதை அறிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்கிறான். தற்போதைய ‘தீய உலகத்திலிருந்து’ தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ள விரும்புகிறான்; ஆகவே, தன்னை முற்றிலுமாக விடுவிக்கும்படி அவன் தேவனைக் கெஞ்சுகிறான். முன்பு அவனைக் கவர்ந்திழுத்த ஒன்று, இப்பொழுது அவனுக்குத் துக்கத்தைத் தருகிறது. அவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட தேவனை மிகவும் துக்கப்படுத்தும் அந்த இடத்திலிருந்து, தான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்திற்காக அவன் ஏங்குகிறான்.
4. உலகத்திலிருந்து நம்முடைய இருதயங்களின் பற்று நீக்கப்படும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்" (1 யோவான் 2:15). ஒரு பிரயாணிக்கு அவனது வழியிலுள்ள தடங்கல் எது? ஓடுபவனுக்கு அவன்மீதுள்ள ஒரு பாரமான சுமை, பறக்கும் பறவைக்கு அதைக் கவர்ந்திழுத்துப் பின்பு அதன் கால்களை இறுகப் பிடித்துக்கொள்ளும் பசை – அதுபோலவே ஓட்டத்தைத் தொடருகிற ஒரு கிறிஸ்தவனுக்கு இவ்வுலகப் பற்று காணப்படுகிறது. அது ஒன்று தேவனுடைய வழிகளிலிருந்து அவனை முழுவதுமாகத் திருப்பிவிடும், அல்லது அவனை உலகத்திற்குள்ளாக மயக்கி இழுத்துவிடும், அல்லது அவனை வலுக்கட்டாயமாக தேவனைவிட்டு வெளியே தள்ளிவிடும். உண்மை என்னவென்றால், இருதயத்திலிருந்து அந்தத் தீய சிந்தைகள் அகற்றப்படும்வரை, தெய்வீக வழிநடத்துதல்களுக்கு நம்முடைய காதுகள் செவிடாகவே இருக்கும். இந்த உலக உணர்வுகளிலிருந்து நாம் மேலெழும்பாதவரை, தேவனுக்குக் கீழ்ப்படிதலை நாம் முழுமையாகச் செயல்படுத்த இயலாது. வழுவழுப்பான உருண்டையின்மீது தண்ணீர் தங்காமல் வழிந்துவிடுவதைப் போல, மாம்ச சிந்தையிலிருந்து பரலோக சத்தியமும் வழிந்துவிடுகிறது.
உலகம் கிறிஸ்துவைவிட்டுப் பின்னிட்டுத் திரும்பியிருக்கிறது; அவருடைய நாமம் பல இடங்களிலே அறிவிக்கப்பட்டாலும், அது அவருடன் எந்த மெய்யான தொடர்பையும் ஏற்படுத்துவதில்லை. உலகத்தின் எல்லா விருப்பங்களும் வடிவமைப்புகளும் சுயத்தைப் பிரியப்படுத்துபவையே. அவர்களுடைய நோக்கமும் நடக்கையும் வேறு வகையிலேயே இருக்கட்டும்; சுயம் பிரதானமானதாகவும், சுயத்தைப் பிரியப்படுத்த அவர்கள் எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தட்டும். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்; அவர்கள் இந்த உலகத்தைவிட்டு வெளியே செல்ல முடியாது. தேவன் குறித்திருக்கும் காலம் வரை அவர்கள் இந்த உலகத்திலே வாழ வேண்டும். அவர்கள் இங்கே இருக்கும்போது தங்கள் வாழ்க்கைக்காகச் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தைத் தாங்க வேண்டும், உலகப்பிரகாரமான வேலைகளையும் கவனிக்க வேண்டும். ஆனால், உலகம் அவர்களை மகிழ்விக்குமென்றாலும், அதிலே அன்புகூற அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்களுடைய ‘பொக்கிஷமும்’ ‘பங்கும்’ வேறொரு இடத்திலே கண்டுகொள்ளக்கூடியதாய் இருக்கிறது.
இந்த உலகமானது விழுந்துபோன மனிதனின் ஒவ்வொரு உள்ளுணர்வையும் கவர்ந்தழைக்கிறது. இது அவனை மயக்க ஆயிரக்கணக்கான பொருட்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவை அவனது கவனத்தைக் கவர்கின்றன; அந்தக் கவனம், அதைக் குறித்த ஆசையையும் விருப்பத்தையும் அவனில் தோற்றுவிக்கிறது. உணர்வற்ற விதமாக, அவை அவனுடைய இருதயத்தில் மிகவும் ஆழமான பதிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. எல்லா வகைகளிலும் அவை மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. உலகத்தின் கவர்ச்சியும் கவர்ந்திழுக்கும் தன்மையும் பல்வேறுபட்ட வகைகளில் இருப்பினும், அதனுடைய நோக்கமும் இன்பமும் இவ்வுலகத்தின் மகிழ்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆகையால், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன?" (மத்தேயு 16:26). ஒரு கிறிஸ்தவன் ஆவியானவரால் நடத்தப்படுவதால், அவர் ஆத்துமாவிற்குக் கிறிஸ்துவைக் காண்பிப்பதின் மூலமாக அவனுடைய நினைவுகள் இந்த உலகத்திலிருந்து திசைதிருப்பப்படுகின்றன. ஒரு சிறுகுழந்தை தனக்கு மிகவும் பிரியமான ஒன்றைப் பெற்றுக்கொள்ள, தன்னிடமுள்ள ஒரு மதிப்பற்ற பொருளை உடனடியாக விட்டுவிட எப்படி ஆயத்தமாயிருக்குமோ, அதைப் போல தேவனுடன் ஐக்கியம் கொண்டிருக்கும் ஒரு இருதயம் சொல்லும்: "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு... எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்" (பிலிப்பியர் 3:8).
5. உலகத்தைவிட்டுப் பிரிந்து வாழும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். "உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாயிருக்கிறான்" (யாக்கோபு 4:4). இப்படிப்பட்ட வசனம் நம் ஒவ்வொருவரையும் முற்றுமுழுவதுமாக ஆராய்ந்து நம்மை நடுங்கச் செய்ய வேண்டும். தேவகுமாரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கக் காரணமான இந்த உலகத்தில், எப்படி நான் அதன் இன்பங்களை விரும்பி அதனுடன் ஒத்துப்போக முடியும்? அப்படிச் செய்தால் அது அவருடைய எதிராளிகளுடன் என்னை அடையாளப்படுத்திவிடுமே! ஓ! என்னுடைய வாசகரே, இதில் எந்தத் தவறும் செய்துவிடாதீர்கள். இப்படியாக எழுதப்பட்டுள்ளது: "ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை" (1 யோவான் 2:15). பழைய ஏற்பாட்டில் தேவனுடைய பிள்ளைகளைக் குறித்து, "அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்" (எண்ணாகமம் 23:9) என்று சொல்லப்பட்டுள்ளது. உறுதியாக அவனது குணத்திலும், நடத்தையிலும், விருப்பங்களிலும், நாட்டங்களிலும் காணப்படும் அந்த வித்தியாசம்—மறுபிறப்படைந்தவனையும் மறுபிறப்படையாதவனையும் வேறுபடுத்தும் அந்த ஆவிக்குரிய வித்தியாசம்—அவனை நிச்சயமாக உலகத்திலிருந்து பிரித்தெடுக்கும். வேறொரு உலகத்தில் குடியுரிமை இருப்பதாகவும், வேறொரு ஆவியினால் நடத்தப்படுவதாகவும், வேறொரு சட்டத்தினால் ஆளப்படுவதாகவும் சொல்லிக்கொள்ளும் நாம், இவை அனைத்தையும் அவமதிப்பவர்களோடு கைகோர்த்துச் செல்ல முடியாது! நம்மில் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நம்முடைய கிறிஸ்தவப் பிரயாணத்தை வெளிப்படுத்தட்டும். "இந்தச் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமலிருப்பதின்" (ரோமர் 12:2) மூலமாக, நாம் உண்மையில் ‘அடையாளப் புருஷராய்’ (சகரியா 3:8) இருக்கக்கடவோம்.
6. உலகத்தின் மீதான வெறுப்பைச் செயல்படுத்தும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். உலகத்தின் தோற்றத்தையும் அதன் ஒழுங்கான தன்மையையும் பாதுகாக்க எத்தனை கடின முயற்சிகள் எடுக்கப்படுகின்றன! தன்னுடைய மதிக்கத்தக்க பொதுவான நடைமுறை, நாகரிகமான மொழிநடை, உபகாரங்கள் மற்றும் அறநிலையங்கள் போன்ற செயற்கையான காரியங்களின் மூலம் அது தனக்கு மரியாதை தேடிக்கொள்ள முயலுகிறது. அப்படியே அதன் பெயரளவு திருச்சபைகளும், பேராலயங்களும், அதன் ஆயர்களும், பேராயர்களும் உட்புறத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் சீர்கேட்டை வெளிப்புறமான அலங்கரிப்புகளால் மூடி மறைக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். தனக்கு ஒரு நன்மதிப்பைக் கொடுக்க அதனுடன் ‘கிறிஸ்தவம்’ சேர்க்கப்படுகிறது. கிறிஸ்துவின் ‘நுகத்தை’ தங்கள்மேல் சுமந்துகொள்ளாத ஆயிரக்கணக்கானவர்கள், பரிசுத்த கிறிஸ்துவின் நாமத்தை மட்டும் தங்கள் உதடுகளில் சொல்கிறார்கள். அவர்களைக் குறித்து தேவன் சொல்கிறார்: "இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" (மத்தேயு 15:8).
அப்படிப்பட்டவர்களைக் குறித்து ஒரு உண்மையான கிறிஸ்தவனின் மனப்போக்கு எப்படியாக இருக்க வேண்டும்? வேதத்தின் பதில் தெளிவானது: "இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு" (2 தீமோத்தேயு 3:5). "நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (2 கொரிந்தியர் 6:17). இந்தத் தெய்வீகக் கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது அவர்களை என்ன தொடரும்? நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நிரூபணம் செய்வோம்: "நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகிக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது" (யோவான் 15:19). குறிப்பாக எந்த ‘உலகம்’ இங்கே காட்டப்படுகிறது? இதற்கு முந்தைய வசனம் இக்கேள்விக்குப் பதில் தரட்டும்: "உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்." எந்த ‘உலகம்’ கிறிஸ்துவைப் பகைத்து அவரை மரணத்திற்கு நேராகத் துன்பப்படுத்தியது? சமய உலகம்; தேவனுடைய மகிமைக்குத் தங்களை வைராக்கியம் உள்ளவர்களைப் போலக் காட்டிக்கொண்டவர்களே. இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்துவை அவமதிக்கும் பெயரளவு கிறிஸ்தவ உலகத்தைவிட்டுப் பின்னிட்டுத் திரும்பட்டும்; அவனது மிகவும் கொடூரமான, ஆழமான மற்றும் நன்னெ
7. நாம் இந்த உலகத்தைவிட்டு உயர்ந்த நிலையை அடையும்போது, வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம்.
இப்பொழுது, என் வாசகரே, இந்த அதிகாரத்தில் உள்ளவைகளை வைத்து உண்மையாகவே உங்களை அளந்துபார்க்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைக் கண்டுபிடியுங்கள். முதலாவதாக, உங்களுடைய ஓய்வு நேரங்களில் உங்கள் மனதின் முன்னால் நிற்கும் காரியங்கள் எவை? உங்கள் மனது எதைக் குறித்து ஓடிக்கொண்டிருக்கிறது? இரண்டாவதாக, உங்களுடைய தெரிந்தெடுப்புகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்கின்றன? ஒரு மாலை நேரத்தையோ அல்லது ஓய்வு நாளின் மதிய வேளையையோ எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று முடிவுசெய்யும்போது, நீங்கள் எதைத் தெரிந்தெடுக்கிறீர்கள்? மூன்றாவதாக, எந்தத் தருணங்களில் நீங்கள் அதிகமாக வருந்துகிறீர்கள்? ஏதோ ஒரு உலகப் பொருளை இழந்தபொழுதா? அல்லது தேவனுடனான ஐக்கியத்தை இழந்தபொழுதா? எது உங்களை மிகவும் துக்கப்படுத்துகிறது? உங்களுடைய திட்டங்கள் தோல்வியைத் தழுவியபொழுதா? அல்லது கிறிஸ்துவுக்குள் உங்கள் இருதயம் குளிர்ந்தபொழுதா? நான்காவதாக, நீங்கள் கலந்துரையாட உங்களுக்கு மிகவும் பிடித்த தலைப்பு எது? அன்றைய நாளின் உலகச் செய்தியை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்களா? அல்லது ‘முற்றிலும் அழகுள்ளவரைப்’ பற்றிப் பேசுபவர்களைச் சந்திப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய ‘நல்ல எண்ணங்கள்’ நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அல்லது அவைகள் வெறுமையான கனவுகள்தானா? நீங்கள் முழங்காலில் செலவிடும் நேரம் முன்னைவிட அதிகரித்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? தேவனுடைய வார்த்தை உங்களுக்குச் சுவைக்க இனிதாயிருக்கிறதா? அல்லது உங்கள் ஆத்துமா அதன்மீதுள்ள இனிய சுவையை இழந்துவிட்டதா?
தன்னுடைய பிள்ளைகளின் மீது, அவருடைய கிருபையின் ஐசுவரியத்தைப் பொழிந்தருள வேண்டும் என்கிற மிக இன்பமான தேவனின் சித்தத்தை தெய்வீக வாக்குத்தத்தங்கள் வெளிப்படுத்துகின்றன. அவைகள் அவருடைய இருதயத்தின் வெளிப்படையான சாட்சிகள்; அவர் முழு நித்தியத்திற்கும் அவர்கள் மீது அன்புகூருகிறார் என்பதையும், அவர்களுக்காகவும் அவர்களைக் குறித்தும் அவர் எல்லாக் காரியங்களையும் முன்குறித்திருக்கிறார் என்பதையும் அவைகள் காட்டுகின்றன. மனிதனிலும், தன்னுடைய குமாரனின் செய்து முடிக்கப்பட்ட பணியிலும், இக்காலத்திற்கும் நித்தியத்திற்கும் அவர்களுடைய முழுமையான இரட்சிப்பிற்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் செய்து முடித்துவிட்டார். வாக்குத்தத்தங்களைக் குறித்த உண்மையான, தெளிவான மற்றும் ஆவிக்குரிய அறிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில், வானளாவிய மகிமையான கிருபையில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களைப் போல, வேதவாக்கியங்களில் சிதறிக்கிடக்கும் மகா உன்னதமான விலைமதிப்பில்லா வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு முன்பாக வைப்பது தேவனுக்குப் பிரியமாயிருந்தது. அவைகளினாலே கிறிஸ்துவுக்குள் அவர்களைக் குறித்த தேவனுடைய சித்தம் அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவருக்குள்ளாகப் பரிசுத்த ஸ்தலத்தை எடுத்துக்கொள்ளும்படியாகவும், அவர்களுடைய நிலையோ சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும், இதன் மூலமாக எல்லா நேரங்களிலும் அவருடைய கிருபையிலும் இரக்கத்திலும் அவரில் உண்மையான ஐக்கியம் கொள்ளும்படியாகவும் அவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
நல்லதைக் கொடுக்கும்படிக்கோ அல்லது கெட்டதை நீக்கும்படிக்கோ தெய்வீக வாக்குத்தத்தங்கள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. ஆசீர்வதிக்கப்பட்ட அவைகள் இருக்கும் வண்ணமாகவே, அவருடைய பிள்ளைகளுக்கு தேவனின் அன்பை வெளிப்படுத்தி அறிவிக்கின்றன. தேவனுடைய அன்புடன் தொடர்புடைய மூன்று படிகள் உள்ளன: முதலாவதாக, அதைச் செயல்படுத்த அவருக்கு ஒரு உள்ளான நோக்கம் உண்டு; இறுதியாக அந்த நோக்கத்தை உண்மையாகவே செயல்படுத்துதல்; ஆனால் அதற்கிடையில் அதன் பயனாளிகளுக்கு அந்த நோக்கத்தைக் கிருபையாக வெளிப்படுத்துவது. அன்பு மறைக்கப்பட்டிருக்கும்பொழுது நாம் அதினால் ஆறுதல் அடைய முடியாது. இப்பொழுது ‘அன்பாகவே’ இருக்கும் தேவன் தன்னுடையவர்கள் மீது அன்புகூருவது மட்டுமல்ல, சரியான நேரத்தில் தன்னுடைய அன்பை அவர்களுக்கு முழுமையாக விளங்கப்பண்ணுவது மட்டுமல்ல, அதற்கிடையில் நாம் அவருடைய இரக்கமுள்ள சித்தங்களை அறிந்துகொண்டவர்களாகவும், அவருடைய அன்பிலே நாம் இனிமையாகத் தங்கியிருக்கும்படியாகவும், அவருடைய உண்மையான வாக்குத்தத்தங்களில் நாம் நம்மை முழுமையாக ஆறுதல்படுத்திக்கொள்ளவும் செய்வார். ‘தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்!’ (சங் 139:17) என்று நம்மால் அங்கே சொல்ல முடியும்.
2 பேதுரு 1:4-ல் தெய்வீக வாக்குத்தத்தங்கள் ‘மகா மேன்மையும் அருமையுமானவைகள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்பர்ஜன் அவர்கள் சுட்டிக்காட்டியது போல, ‘உன்னதமான தன்மையும், விலைமதிப்பற்ற தன்மையும் ஒருபோதும் இணைந்து செல்வதில்லை, ஆனால் இத்தருணத்தில் இவை மிக அதிக அளவில் இணைந்திருக்கின்றன’. யெகோவா தன்னுடைய இருதயத்தை வெளிப்படுத்தத் தன்னுடைய வாயைத் திறக்கப் பிரியப்படும்பொழுது, அதை அவர் தனக்கே உரிய தகுதியுடனும், உயர்ந்த வல்லமையுடனும் செழுமையுடனும் செய்கிறார். பிரியமான லண்டன் போதகரை மீண்டும் குறிப்பிட வேண்டுமானால்: ‘அவைகள் உன்னதமான தேவனிடத்திலிருந்து வருகின்றன, அவைகள் மகா பெரிய பாவிகளுக்கு வந்திருக்கின்றன, அவைகள் நல்ல முடிவுகளுக்காகச் செயல்படுகின்றன மற்றும் பெரிய காரியங்களுடன் செயல்படுகின்றன’. அவைகளின் உன்னதத் தன்மையை இயற்கையான அறிவு புரிந்துகொள்ள முடியுமென்றாலும், ஒரு புதுப்பிக்கப்பட்ட இருதயம் மட்டுமே அவைகளின் மகா பெரிய விலைமதிப்பற்ற தன்மையை ருசித்து, தாவீதுடன் சேர்ந்து, ‘உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்’ (சங் 119:103) என்று சொல்ல முடியும்.
1. வாக்குத்தத்தங்கள் யாருக்குச் சொந்தமானவைகள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். அவைகள் கிறிஸ்துவுக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியவை. ‘தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே’ (2 கொரி 1:20). மூவரான பரிசுத்த தேவனுக்கும், பாவம் நிறைந்த சிருஷ்டிக்கும் இடையில், அவர்கள் சார்பில் தேவனை முழுவதுமாகத் திருப்திப்படுத்திய அந்த மத்தியஸ்தரைத் தவிர வேறு எவரும் இணைப்பாயிருக்க முடியாது. ஆகையினாலே அந்த மத்தியஸ்தர் எல்லா நல்லவற்றையும் தன்னுடைய மக்களுக்கா
3. தேவனுடைய வாக்குத்தத்தங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நோக்கத்தை நாம் அறிந்துகொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘அனுதின வாழ்க்கையின் பொது இடங்களில் சில கிறிஸ்தவர்களின் நடக்கை, கிறிஸ்தவம் என்பது ஏதோ ஒரு பந்துபோலவும், பொது உலக வாழ்க்கைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு அசாதாரணமானதாகவும் சொப்பனத்தைப் போலவும் இருக்கிறது; இவையெல்லாம் உண்மை என்பதைவிட அவைகள் கடவுள் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுக்கதையாக அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆவிக்குரி
தேவன் வாக்குப்பண்ணியிருப்பதால், பரிசுத்தம் காணப்படாவிட்டாலும் அவர் தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார் என்று ஒருவரும் நினைக்க வேண்டாம்: ஒரு பரிபூரணத்தின் விலையில் (பரிசுத்தமில்லாத் தன்மையில்) அவர் மற்றொரு பரிபூரணத்தை (வாக்குத்தத்தங்களை) செயல்படுத்துவதில்லை. கிறிஸ்துவினுடைய தியாகமான செயலை தேவன் பெரிதுபடுத்தி, அதன் கனிகளைத் தன்னுடைய செயலைக் குறித்து வருத்தப்படாத அக்கறையற்ற ஆத்துமாவின் மேல் வைத்து கனப்படுத்துவார் என்று ஒருவரும் கற்பனை செய்துகொள்ள வேண
தேவபக்தியற்றவர்கள் ஓயாமல் சந்தோஷத்தைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் அதைக் கண்டுபிடிப்பதில்லை. அதைத் தேடுவதில் தீவிரமாகச் செயல்பட்டு சோர்ந்துபோகிறார்கள்; ஆனால், அவையெல்லாம் வீணான முயற்சியே. அவர்களுடைய இருதயங்கள் தேவனைவிட்டுத் திரும்பியிருப்பதால், சந்தோஷம் இல்லாத கீழான இடங்களில் அதைத் தேடுகிறார்கள். மெய்ப்பொருளாகிய தேவனை நிராகரித்துவிட்டு, கேலிக்குள்ளாகும்படி நிழலை நோக்கிச் சிரத்தையுடன் தேடுகிறார்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் மாத்திரமே பாவிகளை மகிழ்ச்சியாக்க முடியும் என்பது பரலோகத்தின் அநாதி கட்டளையாகும்; ஆனால், இதை அவர்கள் நம்புவதில்லை. ஆகவே, எங்கே சிறந்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று விசாரித்துக்கொண்டே ஒரு சிருஷ்டியிடமிருந்து மற்றுமொரு சிருஷ்டியை நோக்கிச் செல்கிறார்கள்; ஒரு உடைந்த நீரூற்றிலிருந்து மற்றொன்றிடம் செல்கிறார்கள். 'என்னிடத்தில் நீங்கள் அதைக் கண்டுகொள்ளலாம்' என்று அவர்களை ஈர்க்கும் ஒவ்வொரு உலகப் பொருளும் சொல்கிறது; ஆனால், விரைவில் அது அவர்களை ஏமாற்றிவிடுகிறது. ஆனாலும், இன்றும் புதிதாகச் சந்தோஷத்தைத் தேடிக்கொண்டு, நேற்று தங்களை ஏமாற்றிய அதே சிருஷ்டியிடம் செல்கிறார்கள். ஒரு சொகுசான சிருஷ்டியிடம் பலவிதமாகப் பரிசோதித்துப் பார்த்தபிறகு, இது வெறுமையே என்பதைக் கண்டுகொண்டால், ‘இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்’ (யோவான் 4:13) என்ற நம்முடைய தேவனின் வார்த்தையை மெய்ப்பிக்கும் விதமாக, அவர்கள் மற்றொரு சிருஷ்டியிடம் செல்கிறார்கள்.
இப்பொழுது மற்றுமொரு உச்சநிலைக்கு நாம் செல்வோம்: சந்தோஷமாயிருப்பது பாவம் என்று கருதுகிற சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதைக் கேட்கும்போது நம்முடைய வாசகர்களில் பலர் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறைவான பாக்கியம் பெற்ற அவர்களுடன் நாம் செயல்படும் அதேவேளையில், நீங்களாவது (வாசகர்கள்) சூரிய ஒளிமிக்க சூழ்நிலைக்கு வந்திருப்பதற்காக நன்றியுள்ளவர்களாயிருங்கள். வெளிப்படையாகப் பதிவுசெய்வதற்குப் பதிலாக, பெருவாரியான உதாரணங்கள் மூலமும், சிலவற்றைச் சம்பந்தப்படுத்திக் காட்டியும், எப்பொழுதும் வெளிச்சம் குறைந்த இடத்திலேயே இருப்பதுதான் தங்கள் கடமையென்று ஒருசிலர் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தோஷத்தின் உணர்வுகள் ஒளியின் தூதனைப்போலக் காணப்படும் சாத்தானால் ஏற்படுத்தப்பட்டவை என்று அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள். இந்தப் பாவம் நிறைந்த உலகத்தினுள் நாம் இருப்பதால் மகிழ்ச்சியாயிருப்பதே துன்மார்க்கமான ஒன்றென்று அவர்கள் முடிவுகட்டிவிடுகிறார்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றறிந்து மகிழ்ச்சியாயிருப்பது ஒரு துணிகரமான செயல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மேலும், அப்படி மகிழ்ச்சியாயிருக்கும் இளம் கிறிஸ்தவர்களிடம், "நீங்கள் மீண்டும் பாவக் குழியில் இடறிவிழ அதிக காலம் செல்லாது" என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவரையும், இந்த அதிகாரத்தின் பின்வரும் பகுதியை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்கும்படி மென்மையுடன் வேண்டுகிறோம்.
‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’ (1 தெசலோனிக்கேயர் 5:16). தேவன் நம்மை என்ன செய்யக் கட்டளையிட்டிருக்கிறாரோ, அதைச் செய்வது நிச்சயமாகப் பாதுகாப்பற்ற ஒன்றாக இருக்க முடியாது. சந்தோஷமாயிருப்பதற்குத் தேவன் தடைவிதிப்பதில்லை. இல்லை, சாத்தானே நாம் நம்முடைய சுரமண்டலத்தை (மகிழ்ச்சியின் கீதத்தை) கீழே வைக்கச் செய்யப் போராடுகிறான். ‘கர்த்தருக்குள் துக்கமாயிருங்கள்; துக்கமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ என்று கட்டளையிடும் எந்தக் குறிப்பும் வேதவாக்கியங்களில் இல்லை. ஆனால், ‘நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்’ (சங்கீதம் 33:1) என்று உற்சாகப்படுத்தும் புத்திமதி இருக்கிறது. வாசகரே, நீங்கள் ஓர் உண்மையான கிறிஸ்தவரானால் (இத்தருணத்தில் வேதவாக்கியங்களினால் உங்களைப் பரிசோதித்து இக்கருத்தை உறுதிசெய்துகொண்டிருக்க வேண்டும்), கிறிஸ்து உங்களுடையவர்; அவருக்குள் இருக்கிற எல்லாம் உங்களுக்குரியதே. அவர் உங்களை உற்சாகப்படுத்திக் கட்டளையிடுகிறார்: ‘சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள்; பூர்த்தியாய்க் குடியுங்கள்’ (உன்னதப்பாட்டு 5:1). அவருடைய அன்பின் விருந்துக்கு எதிராக நீங்கள் செய்யக்கூடிய ஒரே பாவம் என்னவென்றால், மிகக் குறைவான அளவில் அதில் நீங்கள் பங்குபெறுவதே. ‘உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்’ (ஏசாயா 55:2) என்பது ஏற்கனவே பரலோகத்திலிருப்பவர்களுக்காகச் சொல்லப்பட்டதல்ல; மாறாக, தற்பொழுது பூமியிலிருக்கும் பரிசுத்தவான்களுக்கே சொல்லப்பட்டது. இது எங்களை இப்படியாகச் சொல்லச் செய்கிறது:
1. சந்தோஷமாயிருப்பது நம்முடைய கடமை என்பதை உணர்ந்துகொள்ளும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ (பிலிப்பியர் 4:4). இங்கே சந்தோஷமாயிருப்பதை ஒரு விசுவாசி தனிப்பட்ட விதத்தில், தற்காலத்தில் மற்றும் நிரந்தரமாகச் செய்யவேண்டிய கடமையாகப் பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார். நாம் சந்தோஷமாயிருக்க வேண்டுமா அல்லது கவலையாயிருக்க வேண்டுமா என்ற ஒரு தெரிவை கர்த்தர் நமக்குக் கொடுக்கவில்லை; ஆனால், மகிழ்ச்சியாயிருப்பதைக் கடமையாக்கியிருக்கிறார். நாம் சந்தோஷமாயில்லாதிருப்பது, செய்ய வேண்டிய ஒன்றை நாம் செய்யாமலிருப்பதால் செய்யும் பாவமாகும் (செய்யத்தவறிய பாவம் - Sin of omission). அடுத்தமுறை நீங்கள் ஒரு பிரகாசமான கிறிஸ்தவனைச் சந்திக்கும்போது, அவனைக் கடிந்துகொள்ளாதீர்கள்; சந்தேகக் கோட்டைக்குள் வாழும் நீங்கள் உங்களையே கடிந்துகொள்ளுங்கள். தெய்வீக ஊற்றாகிய அவனது உற்சாகத்தைக் கேள்வி கேட்பதற்கு நீங்கள் ஆயத்தமாவதற்குப் பதிலாக, உங்களுடைய பரிதாப நிலையை நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.
நாங்கள் இங்கே குறிப்பிடுவது மாம்சப்பிரகாரமான மகிழ்ச்சியல்ல; அதாவது, மாம்சத்தின் மூலம் வரும் சந்தோஷத்தை நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. பூமிக்குரிய ஐசுவரியத்திலிருந்து சந்தோஷத்தைத் தேடுவது பயனற்றது; அது அடிக்கடி தனக்கென்று இறக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு பறந்துவிடுகிறது. சிலர் தங்களுடைய குடும்ப வட்டங்களில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள்; அது அதிகபட்சம் சில வருடங்கள் மட்டுமே நீடிக்கிறது. இல்லை, நாம் ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்றால்’ அது எப்பொழுதுமே நிலைநிற்கிற பொருளில் மாத்திரமே இருக்க முடியும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சியையும் நாங்கள் குறிப்பிடவில்லை. பைத்தியக்காரர்போல் நடந்துகொள்ளும்போது மாத்திரமே உற்சாகமூட்டும் மகிழ்ச்சியுடன் காணப்படும் சிலர் இருக்கிறார்கள்; அதின் விளைவோ பயங்கரமானது. இல்லை, இது புத்திக்கூர்மையாக, நிலையாக ஓர் இருதயம் தேவனுக்குள் மகிழுவது. தேவனுடைய ஒவ்வொரு குணாதிசயமும், விசுவாசத்துடன் சிந்திக்கப்படும்போது, அது இருதயத்தைக் கீதம் பாடச்செய்யும். நற்செய்தியின் ஒவ்வொரு போதனையும் உண்மையாகப் புரிந்துகொள்ளப்படும்போது, அது மகிழ்ச்சியையும் துதியையும் முன்னின்று அழைக்கும்.
சந்தோஷம் என்பது கிறிஸ்தவக் கடமைகளில் ஒன்று. ஒருவேளை இதை வாசிப்பவர் வியப்படையலாம்: "என்னுடைய உணர்வுகளாகிய சந்தோஷமும் கவலையும் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை; சூழ்நிலைகள் உத்தரவிடுவதால் சந்தோஷமாயிருப்பதற்கோ அல்லது கவலையாயிருப்பதற்கோ எனக்கு நானே உதவிசெய்துகொள்ள முடியாது" என்று சொல்லலாம். ஆனால், நாங்கள் மறுபடியும் சொல்கிறோம், ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்’ என்பது தெய்வீகக் கட்டளை; ஆகவே, அதற்குப் பெருமளவில் கீழ்ப்படிய வேண்டியது ஒருவனுடைய சொந்த சக்திக்குட்பட்டதாயிருக்கிறது. என்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதற்கு நானே பொறுப்பு. கவலையான நினைவுகள் இருக்கும்பட்சத்தில் கவலையாக இருப்பதைத் தவிர்க்க முடியாது என்பது உண்மை; ஆனால், என்னுடைய மனம் அதிலேயே உழல்வதை நான் தடுத்து நிறுத்த முடியும். என்னுடைய இளைப்பாறுதலுக்காக நான் என் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் ஊற்ற முடியும்; என் பாரத்தை அவர்மேல் போட முடியும். அவருடைய நற்குணத்தையும், நல்ல வாக்குத்தத்தங்களையும், எனக்காகக் காத்திருக்கும் மகிமையான எதிர்காலத்தையும் தியானிக்கும்படியாக அவருடைய கிருபையை நான் நாட முடியும். நான் வெளிச்சத்திலே போய் நிற்க வேண்டுமா அல்லது நிழலிலே மறைந்துகொள்ள வேண்டுமா என்பதை நானே தீர்மானிக்க வேண்டும். கர்த்தருக்குள் சந்தோஷமாயில்லாதிருப்பதென்பது துரதிர்ஷ்டத்தைவிட மோசமானது; இது அறிக்கைசெய்து விட்டுவிட வேண்டிய ஒரு பாவம்.
2. நாம் உண்மையான சந்தோஷத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ளும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். 1 யோவான் 1:3,4-ம் வசனங்களில் அந்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது: ‘எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்’. தேவனோடுள்ள நம்முடைய ஐக்கியத்தின் குறைவான தன்மையையும், அதனுடைய குறுகிய தன்மையையும் நாம் பார்க்கும்போது, ஒப்பீட்டு அளவில் பல கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாயிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 'ஓ, மகிழ்ச்சியின் நாள் என் பங்கை உம்மீது வைத்தது, என் இரட்சகா, என் தேவனே! இந்த ஒளிரும் இருதயம் மகிழ்ச்சியாயிருக்கட்டும், இவ்வருகையை உலகெங்கும் சொல்லட்டும்' என்று பலமுறை நாம் பாடுகிறோம். ஆம், ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர வேண்டுமானால், கிறிஸ்துவானவர் தொடர்ச்சியாகவும் நிலையாகவும் நம்முடைய மனதிலும், இருதயத்திலும் வீற்றிருக்க வேண்டியவராயிருக்கிறார். எங்கே மிகுந்த விசுவாசமும் அதைத் தொடர்ந்த அன்பும் இருக்கிறதோ, அங்கு மாத்திரமே மிகுந்த மகிழ்ச்சியும் இருக்கும்.
‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’. நாம் ‘எப்பொழுதுமே’ மகிழ்ச்சியாயிருக்கக்கூடிய வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. மற்ற எல்லாம் மாறக்கூடியது, நிலையில்லாதது. இன்று நம்மை மகிழ்வூட்டும் ஒன்று நாளை நம்மைத் துக்கப்படுத்தலாம். ஆனால், செழுமையான காலங்களைப்போல, வறட்சியான காலங்களிலும் நாம் மகிழ்ந்திருக்கும்படி, கர்த்தர் எப்பொழுதும் மாறாதவராகவே இருக்கிறார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் அதற்கு அடுத்த வசனம் சொல்கிறது: ‘உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக, கர்த்தர் சமீபமாயிருக்கிறார்’ (பிலிப்பியர் 4:5). எல்லா வெளிப்பிரகாரமான காரியங்களிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்; அவைகள் உங்களை அதிகம் மகிழ்வூட்டுவதாகத் தோன்றும்போது அதில் இழுப்புண்டு விடாதீர்கள், மகிழ்ச்சியாக்காதபோது துவண்டுவிடாதீர்கள். உலகம் உங்களிடத்தில் புன்னகை பூக்கும்போது உச்சத்திற்குச் செல்லாதீர்கள்; அது உங்களை முறைத்துப் பார்க்கும்போது சோர்ந்துபோகாதிருங்கள். வெளிப்பிரகாரமான சொகுசுகளில் உணர்வுகளை அதிகமாய்க் காட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: தேவனே ‘சமீபத்திலிருக்கும்போது’ நாம் ஏன் அவைகளுடன் நிரம்பியிருக்க வேண்டும்? துன்பங்கள் கோரமாக இருந்தாலும், உலகப்பிரகாரமான இழப்பு பெரிதாக இருந்தாலும், ‘தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்’ (சங்கீதம் 46:1) – தங்களை அவர்மேல் ஊற்றிவிடுபவர்களை ஆதரிக்கவும் தாங்கவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாதிருங்கள்’ (பிலிப்பியர் 4:6). உலகப்பிரகாரமான காரியங்கள் பயமுறுத்தும் கவலைகளை உள்ளடக்கியவை; ஆனால், ஒரு கிறிஸ்தவன் அப்படியிருக்க முடியாது.
‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ (யோவான் 15:11). கிறிஸ்துவின் இந்த மதிப்புமிக்க வார்த்தைகள் மனதிலே சிந்திக்கப்பட்டு, இருதயத்தில் நம்பப்படும்போது அவை சந்தோஷத்தைத் தவிர வேறொன்றையும் பிறப்பிக்க முடியாது. கிறிஸ்துவுக்குள் இருப்பதைப் போன்ற ஒரு மகிழ்ச்சியான இருதயமானது, சத்தியத்தை அறிகிற அறிவின் அன்பிலிருந்து வருகிறது. ‘உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது’ (எரேமியா 15:16). ஆம், கர்த்தருடைய வார்த்தைகளைப் புசித்து, உண்பதன்மூலமே ஆத்துமா செழிப்படைகிறது; நம்மால் அவரை நோக்கிப் பாடவும் இருதயத்தில் கீதஞ்சொல்லவும் முடிகிறது.
‘அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன்’ (சங்கீதம் 43:4). ஸ்பர்ஜன் அவர்கள் நன்றாய்ச் சொன்னதுபோல, பலிபீடத்தின் அடையாளமாயிருக்கும் கிறிஸ்துவண்டை, எத்தனை உற்சாகத்துடன் ஒரு கிறிஸ்தவன் நெருங்க வேண்டும்! தெளிவான வெளிச்சம் மிகப்பெரும் ஆழமான ஆசையைத் தூண்ட வேண்டும். சங்கீதக்காரன் புறஜாதிகளின் சம்பிரதாயங்களை நம்பாதவனாகையால், அவன் விரும்பியது வெறும் பலிபீடத்தையல்ல: அவனுடைய ஆத்துமா ஆவிக்குரிய ஐக்கியத்தையும், தன்னுடைய அந்தச் செயலின் மூலம் தேவனோடுள்ள ஐக்கியத்தையுமே அவன் நாடினான். தேவன் இல்லாவிட்டால் அந்த ஆராதனையில் என்ன பயன் இருக்கிறது? வெறுமையான ஓடுகளையும் பதரையும்தவிர உண்மையில் அதில் என்ன இருக்கிறது? பரிசுத்த வெளிப்பாடுகளுடன் தாவீது தன்னுடைய ஆண்டவரைப் போற்றுவதைக் கவனியுங்கள்! அது அவனுடைய மகிழ்ச்சி மட்டுமல்ல, ஆனந்த மகிழ்ச்சி; தேவன் மகிழ்ச்சியின் ஊற்றல்ல, மகிழ்ச்சியைத் தருபவரல்ல அல்லது மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவர் மாத்திரமல்ல; அவரே அந்த மகிழ்ச்சி! "என்னுடைய ஆனந்த மகிழ்ச்சி" அதாவது, ஆத்துமாவே, என்னுடைய சந்தோஷத்தின் மெய்ப்பொருள் அவரே என்பதே அதன் கருத்தாகும்.
‘அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்’ (ஆபகூக் 3:17, 18). இது உலகப்பிரகாரமானவர்கள் அறியாத ஒன்று; ஐயோ! இந்த அனுபவத்திற்குக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் அந்நியராகவே இருக்கிறார்கள்! ஆவிக்குரிய மற்றும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சியின் ஊற்றானது தேவனிலிருந்து புறப்படுகிறது; அவரிடத்திலிருந்து அது முன்னோக்கிப் பாய்கிறது. பழைய ஏற்பாட்டுத் திருச்சபை, ‘என் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது’ (சங்கீதம் 87:7) என்று சொன்னபோது இது அவளால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இரகசியம் உண்மையாய்ப் போதிக்கப்பட்டிருக்கிற ஆத்துமா மகிழ்ச்சியானது!
3. நமக்குச் சந்தோஷத்தின் உன்னத மதிப்பு கற்றுக்கொடுக்கப்படும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். பறவைக்கு அதன் இறக்கைகள்போல, ஓர் ஆத்துமாவிற்கு மகிழ்ச்சி இருக்கிறது; அது நம்மை இந்த உலகத்தின் காரியங்களைவிட்டு உயரே எழும்பச் செய்கிறது. இது நெகேமியா 8:10-ல் வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டுள்ளது: ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்’. இஸ்ரவேலின் சரித்திரத்தில் நெகேமியாவின் காலம் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறிய கூட்டம் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பாலஸ்தீனத்திற்குத் திரும்பியிருந்தது. சிறையாகக் கொண்டுபோகப்பட்டவர்களால் நீண்டகாலமாக மறக்கப்பட்டிருந்த நியாயப்பிரமாணமானது, இப்பொழுது மறுபடியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள காணியாட்சியின் சட்டமாக நிலைநாட்டப்பட வேண்டியதாயிருந்தது. அச்சமயத்தில் கடந்தகாலத்தின் அவர்களுடைய பல பாவங்கள் நினைவுக்கு வந்தன. தெய்வீக ஆராதனையையும் தெய்வீக நியாயப்பிரமாணத்தையும் தங்கள் நடுவில் கொண்டவர்களாய் புதிய தேசமாக உருவெடுத்திருப்பதில், அவர்களுடைய கண்ணீர் இயற்கைக்கு மாறாக அவர்களுடைய நன்றியுணர்வுடன் கலந்தது. ஜனங்களுடைய ஆவியின் வல்லமை குறைய ஆரம்பித்தால் அவர்களால் தற்போதைய கடினமான நிலைமையை எதிர்கொள்ள முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்த அவர்களின் தலைவன் அவர்களிடம்: ‘நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன் என்றான்’.
பாவ அறிக்கையும், பாவத்திற்காக மனஸ்தாபப்படுதலும் முக்கியமான ஒன்று; அவைகள் இல்லாமல் தேவனோடுள்ள ஐக்கியத்தைத் தொடர முடியாது. ஆனாலும், உண்மையான மனந்திரும்புதல் ஏற்படும்பொழுதும், தேவனுடன் காரியங்கள் சரிசெய்யப்படும்பொழுதும், நாம் ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாட’ (பிலிப்பியர் 3:13) வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்முடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தால் நாம் உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியும். ஒருவன், தனக்கு அன்பானவர் இறந்திருக்கும்போது, அந்த இடத்தை நெருங்குவது அவனுக்கு எத்தனை வேதனை தருவதாக இருக்கிறது! அதே மனிதன் தன்னுடைய மணவாட்டியைச் சந்திக்கப் புறப்படும்போது எத்தனை உற்சாகத்துடன் செல்கிறான்! வாழ்க்கையின் போராட்டங்களுக்குப் புலம்பல்கள் ஏற்புடையதல்ல. எங்கே நம்பிக்கை இல்லையோ, அங்கே அவர்கள் கீழ்ப்படிவதற்கும் எந்தப் பெலனும் இல்லை. அங்கே சந்தோஷம் இல்லையென்றால், அங்கே ஆராதனையும் இருக்க முடியாது.
என் பிரியமான வாசகரே, செய்யப்படவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன; மற்றவர்களுக்குத் தேவைப்படுகிற சேவை செய்யப்படவேண்டியதாயிருக்கிறது; மேற்கொண்டு வர வேண்டிய சோதனைகள் உள்ளன; போர்செய்ய வேண்டிய போராட்டங்கள் உண்டு. நம்முடைய இருதயங்கள் கர்த்தருக்குள் மகிழ்ந்துகொண்டிருந்தால் மாத்திரமே நாம் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம். நம்முடைய ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறிக்கொண்டிருக்குமென்றால், நம்முடைய இருதயங்கள் கவலையில்லா மகிழ்ச்சியால் நிறைந்திருக்குமென்றால், நம்முடைய வேலை எளிதாயிருக்கும்; கடமைகள் இன்பமாயிருக்கும்; கவலைகள் தாங்கக்கூடியதாயிருக்கும்; பொறுமை சாத்தியமாகும். கடந்தகாலத் தோல்விகளின் சோகமான நினைவுகளோ அல்லது உற்சாகமற்ற எதிர்காலத் தீர்மானங்களோ நம்மை இழுத்துச் சென்றுவிடாது. கரங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமென்றால், இருதயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இரட்சகரைப்பற்றி இப்படியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது: ‘அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல்’ (எபிரெயர் 12:2).
கிறிஸ்து இருதயத்தில் பிரதானமாக இருக்கும்போது, சந்தோஷம் அதை நிரப்புகிறது. நம்முடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் அவர் இலக்காகவும், ஒவ்வொரு நோக்கத்திற்கும் மூலமாகவும் (Source), எல்லா இச்சைகளையும் அடக்கியாள்பவராகவும் இருக்கும்போது, இருதயத்தைச் சந்தோஷம் நிரப்பும்; மேலும், உதடுகளிலிருந்து துதி எழும்பும். இவைகளைக் கொண்டிருப்பது நாளின் ஒவ்வொரு மணிநேரமும் சிலுவையைச் சுமந்துகொண்டிருப்பதை உள்ளடக்கியது; நாம் ஒன்று இல்லாமல் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளாதபடிக்குத் தேவன் அப்படிச் செய்திருக்கிறார். சுயத்தைத் துறத்தல், வலது கையைத் தறித்துப்போடுதல், வலது கண்ணைப் பிடுங்கிப்போடுதல் ஆகியவை ஆவியானவர் ஆத்துமாவில் நுழையும் வழிகள். உள்ளே வரும்போது தேவனின் புன்முறுவல், அவருடைய அன்பின் நிச்சயம், நிலைத்திருக்கும் பிரசன்னம் ஆகிய சந்தோஷங்களைத் தன்னுடன் எடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் நாம் எந்த மனநிலையுடன் உலகத்தில் நுழைகிறோம் என்பதையும் இது அதிகமாகச் சார்ந்திருக்கிறது. மற்றவர்கள் நம்மைச் செல்லமாகவும் மென்மையாகவும் நடத்த வேண்டுமென்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். நாம் உயர்வாக நடத்தப்பட வேண்டுமென்று விரும்பினால், அப்படி நடக்காதபோது நாம் சோர்ந்துபோவோம். சுயத்தை மறந்து மற்றவர்கள் மகிழ்ச்சிபெற ஊழியம் செய்வதே மகிழ்ச்சியின் இரகசியமாகும். ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே அதிக பாக்கியம்’; ஆகவே, நாம் ஊழியம் பெறுவதைவிட மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதே நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
6. நம்முடைய சந்தோஷத்திற்குத் தடையாயிருப்பவைகளை விடாமுயற்சியுடன் தவிர்க்கும்போது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். ஏன் அநேகக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமில்லாமல் காணப்படுகிறார்கள்? அவர்களெல்லாரும் ஒளியின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமில்லையா? ‘ஒளி’ என்ற வார்த்தை, தேவனுடைய தன்மையையும், அவரோடுள்ள நம்முடைய தொடர்பையும், எதிர்காலத்தில் நாம் சேருமிடத்தையும், மேலும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நமக்கு விளக்கிக் காட்டுவதற்காக வேதவாக்கியங்களிலே பலமுறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையிலே ஒளியைப்போல நன்மைபயக்கும் மற்றும் அழகான பொருள் வேறு எது? ‘தேவன் ஒளியாயிருக்கிறார்; அவரில் எவ்வளவேனும் இருளில்லை’ (1 யோவான் 1:5). நாம் ஒளியில் தேவனோடு நடக்கும்போது மட்டுமே நம்முடைய இருதயம் உண்மையான சந்தோஷத்தினால் பூரிப்படையும். அவருடனான ஐக்கியத்தைத் தடுக்கும் காரியங்களை நாம் வேண்டுமென்றே அனுமதிப்பதே நம்முடைய ஆத்துமாவைக் குளிர்ந்துபோகச் செய்து இருளடையச் செய்கிறது. மாம்சத்தைத் திருப்திப்படுத்துவதும், உலகத்துடன் ஒத்துப்போவதும், தடைசெய்யப்பட்ட பாதையில் நுழைவதுமே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நோய்வாய்ப்படச் செய்து, நம்மை உற்சாகமற்றவர்களாக மாற்றுகிறது. ‘உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்ப எனக்குத் தாரும்’ (சங்கீதம் 51:12) என்று தாவீது கதற வேண்டியிருந்தது. அவன் கட்டுப்பாடற்றவனாகவும், சுயத்தைத் திருப்திப்படுத்துபவனாகவும் மாறியிருந்தான். சோதனை வந்தபோது அதை எதிர்த்துநிற்க அவனில் பெலனில்லை. அதற்கு அடிபணிந்தான்; ஒரு பாவம் மற்றொன்றிற்கு வித்திட்டது. அவன் பின்வாங்கிப்போய் தேவனோடுள்ள தொடர்பை இழந்தான். அறிக்கை செய்யப்படாத பாவம் அவனது மனசாட்சியை அழுத்தியது. ஓ, என்னுடைய சகோதர சகோதரிகளே! அப்படிப்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் நம்முடைய சந்தோஷத்தை இழந
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.