முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

ஆசிரியர்: ஐசக் வாட்ஸ்

பாடல் பிறந்த கதை

1. பகலோன் கதிர் போலுமே
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடூழி காலம் வர்த்திக்கும்.
 
2. பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார்;
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.
 
3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே:
துன்புற்றோர் ஆறித் தேறுவார்,
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
 
4. பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்,
 ''நீர் வாழ்க, ராயரே'' என்பார்.

தென்கடல் தீவுகளில், டோங்கா என்ற, மிகவும் கொடூரமான, நாகரீகமற்ற நரமாமிசபட்சிணிகள் வாழ்ந்து வந்தனர். 1821-ம் ஆண்டு, ஒருநாள் பிஜித்தீவுகளில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்கள் கடற்கரைக்கு விரைந்து வந்து கொண்டிருந்த டோங்கா யுத்தப்படகைப் பார்த்து, திகிலடைந்து நின்றனர்.  ஆனால், ஆச்சரியவிதமாக, அப்படகில் வந்தவர்கள் அவர்களைக் கொல்லவில்லை.  மாறாக, ''வெள்ளை மனிதனின் மதத்தைப் பற்றி அறிய விரும்புகிறோம்.''  என்று கூறி ஒரு வேத புத்தகத்தை வாங்கினார்கள்.

ஆனால், அவர்களில் ஒருவருக்கும் வாசிக்கத் தெரியாததால், ஒரு மிஷனரி தைரியமாக அவர்களோடு புறப்பட்டுச்  சென்றார்.  அவர் அங்கு செய்த சிறந்த ஊழியத்தின் விளைவாக, 1862-ம் ஆண்டு, ஒரு பிரம்மாண்டமான கூட்டம் கூடியது.  ஒரு பெரிய ஆலமரத்தின் பரந்த கிளைகளுக்கடியில், டோங்கா, பிஜி, சுமோவா இன மக்களில் சுமார் 5000 பேர் கூடி வந்தனர்.

இந்த கூட்டத்திற்கு, ஜார்ஜ் ராஜா என்ற வயதான ஆதிவாசி அரசர் தலைமை தாங்கினார். வாலிப வயதில் நரமாமிச பட்சிணியாய் இருந்த அவர், இன்றோ, இயேசு கிறிஸ்துவை உத்தமமாய் பின்பற்றுகிறவர். அவர் தன் தீவுகளைக் கிறிஸ்தவத் தீவுகளாகப் பிரகடனப்படுத்தவும், அப்புதிய ராஜ்யத்திற்குக் கிறிஸ்தவ சாசனங்களைக் கொடுப்பதற்கும், இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.  இந்த முக்கிய நிகழ்ச்சியில், இச்சிறந்த பாடலை, அத்தீவுமக்கள் அனைவரும், தங்கள் தாய்மொழியில் மொழி பெயர்த்துப் பாடினார்கள்.

இப்பாடலை இயற்றிய புகழ்மிகு போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ், தன் வாழ்வின் கடைசி 30 ஆண்டுகளைப் பெலனற்று, செயலிழந்த நிலையில், தன் நண்பர் சர் தாமஸ் அப்னேயின் இல்லத்தில் கழித்தார். அந்நாட்களில், ஊழிய வாஞ்சை நிறைந்தவராய், இப்பாடலை எழுதினார்.

1719-ல், டாக்டர் ஐசக் வாட்ஸ் இப்பாடலை எழுதினபோது, நற்செய்தி மிஷனரி இயக்கங்கள் இன்னும் உருவாகவேயில்லை.  70 ஆண்டுகளுக்குப்பின், 1789-ல் தான், '' நவீன கால மிஷனரி இயக்கங்களின் தந்தை'' என்று அழைக்கப்படும் வில்லியம் கேரி, இயேசுவை அறியாது  இருளில் வாழும் மக்களுக்கு, நற்செய்தி அறிவிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை, முதன்முறையாகத் துணிந்து எடுத்துக் கூறினார்.  அப்போது கூட, திருச்சபையின் மூத்த போதகர்களுக்கு இத்தகைய ஆத்தும பாரமில்லாததினால், அவரை அதட்டி, அவமானப்படுத்தி, அமரச் செய்தனர்.  இதின் பின்னணியில் பார்க்கும்போது, இப்பாடல் நிச்சயமாகவே  மிஷனரி ஊழியத்தின் முன்னோடிப் பாடலாக விளங்குகிறது. இன்றும், மிஷனரிப் பாடல்களில் ஒரு சிறந்த பாடலாக, பல நாடுகளில், பல மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.

இப்பாடல், சங்கீதம் 72- ஐ மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இப்பாடலுக்கு, ''டியூக் தெரு'' என்ற ராகத்தை ஜான் ஹட்டன் 1793-ல் அமைத்துக் கொடுத்தார். இந்த ராகத்தை, அமைத்த சில நாட்களில், ஒரு விபத்தில் இவர் மரணமடைந்தார்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
ஒரு சாதாரணமான பிரசங்க பீடத்தில் நின்று இன்றை செய்தியின் தலைப்பு கிறிஸ்துவுக்காகப் பாடு சகிப்பதைப்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
மீட்புக்கு இரண்டு விஷயங்கள் முற்றிலும் அவசியமானவை: முதலாவது பாவத்தின் குற்ற உணர்விலிருந்தும் அதின்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
"இதற்காகப் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி ஜெபம் பண்ணுவானாக." (சங்கீதம் 32:6). தொடர்ந்து வாசிக்க...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 20, 2025
  உங்கள் பதில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் உங்களின் பதில் நித்தியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்....

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.