தேவன் உங்களுக்குக் கொடுத்த உங்களது உடல் அழகில் தவறு எதுவும் இல்லை, அவ்வாறே அதில் தீமையும் எதுவும் இல்லை. இது தேவனால் படைக்கப்பட்டது. தேவனால் படைக்கப்பட்டதெல்லாம் மிகவும் நல்லதாக இருந்தது போலவே சரீரமும் நல்லதாகவே இருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தேவனால் வடிவமைக்கப்பட்டது: பெண் “ஆணுக்காக” உருவாக்கப்பட்டாள் என்று வேதம் கூறுகிறது. (1 கொரிந்தியர் 11:9). உங்களது சரீர அழகும், அழகான வடிவமைப்பும் ஒரு மனிதனின் இருதயத்தைத் திருப்திப்படுத்த வேண்டுதே தவிர, எல்லா ஆண்களையும் அல்ல. தேவன் உங்களை அந்த ஓர் ஆணுடன் இணைத்திருந்தால், எல்லா வகைகளிலும், அந்த அழகை அவனிடம் மட்டுமே கொடுங்கள்.
அப்பொழுது அவர் பிற பெண்களின் அழகு மற்றும் கவர்ச்சிக்கு ஆட்கொள்ளப்படாதவராக அல்லது குறைவான சோதனையைச் சந்திப்பவராக இருப்பார். இவ்வாறு நீங்கள் பயன்படுத்தினால், உங்களது உடல் அழகானது, அதை உங்களுக்கு அருளிய தேவனை மகிமைப்படுத்தும். மேலும் அது யாருக்குக் கொடுக்கப்பட்டதோ அந்த மனிதனுக்கு மட்டுமே சேவை செய்யும். இதற்கு மாறாக நீங்கள் உங்கள் சரீரத்தை முழு உலகமும் பார்க்கும்படி காட்சிப் பொருளாக்கினால் நீங்கள் விபச்சாரம் செய்கிறீர்கள், இப்படிச் செய்வதன் மூலமாக நீங்கள் உங்களையே மகிமைப்படுத்துவது மட்டுமின்றி, பிசாசுக்கும் சேவை செய்கிறவர்களாக மாறிவிடுவீர்கள்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.