முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

சாக்கு சொல்ல இடமில்லை

முடிவின் வார்த்தைகளாக உண்மையாக ஜெபிக்காத வாசகர்களுக்கு நான் சொல்லுவது:

இந்த ஆக்கத்தை வாசிக்கிற அனைவரும் ஜெபிக்கிற மக்களாக இருப்பீர்கள் என்பதை நான் நம்பவில்லை. ஒருவேளை நீங்கள் ஜெபிக்காத மக்களாக இருந்தால் நான் தேவனின் சார்பாக இன்று உங்களுக்கு சொல்லும் அறிவுரையை கவனமாக கேளுங்கள்.

ஜெபிக்காத வாசகர்களே! நான் மிகுந்த வேதனையுடன் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் இறந்தால், உங்கள் ஆத்துமாவை இழந்துவிடுவீர்கள். நீங்கள் மரணத்திற்கு பின்பு எழுந்திருக்கும்போது நித்தியத்திற்கும் பரிதாபமான நிலையில் இருப்பீர்கள். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற அனைவரையும், எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாக எச்சரிக்கிறேன். நீங்கள் ஜெபிக்காமல் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த ஒரு நல்ல காரியத்தை கூட காட்டமுடியாது.

எப்படி ஜெபிப்பது என்று தெரியாது என சொல்லுவது ஏற்று கொள்ளமுடியாதது. ஏனெனில் ஜெபம் என்பது கிறிஸ்தவத்தில் மிகவும் எளிமையான ஒரு செயல். ஜெபம் செய்வதற்கு நமக்கு புத்தக அறிவோ, பெரிய ஞானமோ அல்லது எதையாவது கற்றுக்கொள்ளவோ வேண்டியதில்லை. நம்முடைய இருதயத்தின் விருப்பத்தை தவிர வேறு எதுவும் அவசியமில்லை. ஒரு பலவீனமான குழந்தை தான் பசியில் இருக்கும் போது அழும். வறுமையில்வாடும் பிச்சைக்காரன் பிச்சையை கையேந்தி கேட்பான். அதுபோல் மிகவும் அறியாமையில் இருக்கும் மனிதன் கூட தேவனிடம் ஏதாவது சொல்ல விரும்பினால் நிச்சயம் அதை தன் மனதில் இருந்து சொல்லமுடியும்.

நான் ஜெபிப்பதற்கு ஏற்ற இடமில்லை என நீங்கள் சொல்லுகிற சாக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது. யார் வேண்டுமானாலும் தேடினால் தனிமையான இடத்தை கண்டுபிடிக்க முடியும். நமது ஆண்டவர் மலைகளில் சென்று ஜெபம் செய்தார். பேதுரு வீட்டின் மேல்மாடியில் ஜெபம் செய்தார். ஈசாக்கு வயலிலே ஜெபம் செய்தார். நாத்தான்வேல் அத்திமரத்தின் அடியில் நின்று ஜெபம் செய்தார். யோனா திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து ஜெபம் செய்தார். ஜெபிக்கிறவனுக்கு, எந்த ஒரு மறைவான இடமும், ஒரு ஜெபக்கூடமாகவும், ஒரு பெத்தேலாகவும், தேவனின் பிரசன்னம் இருக்கும் இடமாகவும் இருக்கும்.

எனக்கு ஜெபிப்பதற்கு நேரமில்லை என சொல்லுவதும் பயனற்றது. நேரத்தை முறையாக செலவிடும்போது நமக்கு நிறைய நேரங்கள் கிடைக்கிறது. காலம் மிகவும் குறுகியதுதான். ஆனால் நமக்கு ஜெபிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும் அளவிற்கு அது குறுகியதல்ல. தானியேலின் கையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அனைத்து விவகாரங்களையும் கையாளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஒரு நாளுக்கு மூன்றுவேளை ஜெபம் செய்தார். தாவீது ஒரு பெரிய ஜனக்கூட்டத்தின் ராஜாவாக இருந்தபோதும் அவர் சொல்லுகிறார்: "அந்திசந்தி (காலை, மாலை) மத்தியான வேளையிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்." (சங் 55:11). உண்மையாகவே நீங்கள் நேரத்தை கண்டுபிடிக்க விரும்பினால் அது நிச்சயம் கிடைக்கும்.

எனக்கு விசுவாசமும், புது இருதயமும் கிடைக்காதவரை நான் எப்படி ஜெபிப்பது என்று நீங்கள் சொல்வதும் ஏற்க தகுந்த காரணம் அல்ல. இப்படி ஜெபிக்காமல் இருப்பது பாவத்தின்மேல் பாவத்தை சேர்ப்பது போல் ஆகும். அது மனந்திரும்பாமல் இருந்து நரகத்திற்கு போவது போல மிகவும் கொடுமையானது. இதைக்காட்டிலும் மிகவும் மோசமானது “எனக்கு இவையெல்லாம் தெரியும், ஆனால் தேவனின் இரக்கத்திற்காக நான் அழுது கெஞ்சமாட்டேன்” என்று சொல்லுவதாகும். வேதத்தில் ஒருசில வசனங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா சொல்லுகிறார் “கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரை தேடுங்கள். அவர் சமீபமாய் இருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்." (ஏசா 55:6). ஓசியா சொல்லுகிறார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு. நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்" (ஓசி 14:1). பேதுரு மாயவித்தைக்காரனாகிய சீமோனிடம் சொல்லுகிறார்: “உன் துர்குணத்தைவிட்டு மனந்திரும்பி தேவனிடம் வேண்டிகொள்" (அப் 8:22). உங்களுக்கு விசுவாசமும் புது இருதயமும் வேண்டுமென்றால் அதற்காக தேவனிடம் சென்று அழுகையோடு வேண்டுதல் செய்யுங்கள். ஜெபிப்பதற்காக செய்யும் முயற்சியே பல நேரங்களில் மரித்த ஆத்துமாவை உயிரடையச் செய்கிறது.

ஜெபிக்காத வாசகர்களே, நீங்கள் தேவனிடம் எதையுமே கேட்கிறதில்லை. நீங்கள் நரகத்தோடும், மரணத்தோடும் உடன்படிக்கை செய்து கொண்டுவிட்டீர்களா? அவியாத அக்கினியிலும், புழுவின் மத்தியிலும் சமாதானத்தை கண்டுகொண்டீர்களா? உங்களின் எந்த பாவங்களும் மன்னிப்படைய தேவையில்லையா? நித்திய அழிவை குறித்த ஏதாவது பயம் உங்களுக்குள் இருக்கிறதா? ஏன் உங்களுக்கு பரலோகத்தின் மீது பசிதாகம் இல்லை? தயவுசெய்து உங்களுடைய இந்த நிலையில் இருந்து இன்றே விழித்து கொள்ளுங்கள். இன்றே உங்களுடைய முடிவை பற்றி சிந்தியுங்கள். இன்றே விழித்திருந்து தேவனை நோக்கி ஜெபியுங்கள். அநேகர், கர்த்தாவே! கர்த்தாவே! எங்களுக்கு திறவும் என்று கதறி அழப்போகிற நாள் வரப்போகிறது. ஆனால் அந்த கதறுதல் காலதாமதமானதால் மதிப்பில்லாமல் போகப்போகிறது. அநேகர் அந்நாட்களில் பாறைகளே எங்கள் மீது விழுங்கள், மலைகளே எங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று கதறி அழுவார்கள். நான் மிகுந்த பாசத்துடன் இன்றே உங்களை எச்சரிக்கிறேன். இது உங்களுடைய ஆத்துமாவினுடைய முடிவாய் இருந்துவிட வேண்டாம். இரட்சிப்பு உங்களுக்கு மிக அருகில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு முடிவில் பரலோகத்தை இழந்து போய்விடாதீர்கள்.

நீங்கள் இரட்சிப்பை விரும்புகிறீர்களா?

உண்மையாகவே இரட்சிக்கப்பட வேண்டும் என ஆசைக் கொண்டு, அதற்காக என்ன செய்ய வேண்டும், எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு நான் அன்பாக சில ஆலோசனைகளை சொல்லுகிறேன். சில வாசகர்கள் இந்த மனநிலையில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், அப்படி ஒருவர் இருந்தால் நான் அவருக்கு அன்பான அறிவுரை வழங்க வேண்டும்.

ஒரு பயணத்தை ஆரம்பிக்கும்போது நிச்சயமாக அதில் முதல்படி இருக்கும். அமைதியாக இருப்பதிலிருந்து முன்னோக்கி போகுதலில் நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்கிறது. இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானான் தேசம் சென்ற பயணம் மிகவும் நீண்டதும், இடைவிடாத பயணமாக இருந்தது. அவர்கள் யோர்தானை கடப்பதற்கு நாற்பது வருடங்கள் ஆயிற்று. அந்த பயணத்தை ஆரம்பித்தவுடன் அவர்கள் ராமசேஸிலிருந்து சுக்கோத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆவியின் கிரியையும் ஒரு மனிதன் எப்போது பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும் வெளிவந்து முதல்படி எடுத்து வைக்கிறானோ, அவன் இருதயத்திலிருந்து எப்போது ஜெபத்தை ஏறெடுக்கிறானோ அப்போது தான் நடக்க ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு கட்டிடமும் கட்டப்படுவதற்கு முன்பு முதலில் அடிக்கல் நாட்டப்பட வேண்டும். பின்பு அதின்மேல் அஸ்திபாரம் போடப்பட வேண்டும். நோவாவின் பேழை கட்டிமுடிக்கப்பட நூற்று இருபது ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும், நோவா அதை உருவாக்க வெட்டிய முதல் மரத்தின் மீது தனது கோடரியை வைத்த நாள் என்று ஒரு நாள் இருந்தது. சாலோமோன் கட்டின தேவாலயம் மிகவும் புகழ் பெற்றது; ஆனால் அந்த மோரியா மலையின் ஆழத்தில் அந்த பெரிய கல் நாட்டப்பட்ட நாள் ஒன்று இருந்தது. ஆவியானவரின் செயல்களை ஒரு மனிதனின் இருதயத்தில் எப்போது பார்க்க முடியுமென்றால், அவன் தனது இருதயத்தை ஜெபத்தின் மூலமாக தேவனிடம் ஊற்றும் போதுதான்.

என்ன செய்ய வேண்டும்

உண்மையாக இரட்சிப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால் நான் சொல்வதை செய்யுங்கள். இன்றே தனிமையான ஒரு இடத்திலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமனதோடும், ஆர்வத்தோடும் உங்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டும் என ஜெபம் செய்யுங்கள்.

நீர் பாவிகளை ஏற்று கொள்ளுகிறீர் என்று நான் கேள்விபட்டதாலும், “என்னிடம் வருபவர்களை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை என்று நீரே சொல்லியிருக்கிறீர் என்பதாலும் நான் உம்மிடம் வருகிறேன்” என்று அவரிடம் சொல்லுங்கள். நான் மிகவும் கீழ்த்தரமான பாவி என்றும், நான் உம்முடைய அழைப்பை ஏற்று விசுவாசத்தினால் உம்மிடம் வருகிறேன் என்றும் அவரிடம் சொல்லுங்கள். நான் இனி நித்தியமாக என்னை முழுவதுமாக உம்முடைய கைகளில் அர்ப்பணிக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் உங்களில் ஆதரவற்றவர்களாயும், நம்பிக்கையற்றவர்களாயும் உள்ளீர்கள் என அவரிடம் சொல்லுங்கள். அவர் உங்களை ஏற்று கொள்ளவில்லை என்றால் நீங்கள் அழிந்துபோவீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். பாவத்திலிருந்தும், அதின் குற்ற உணர்விலிருந்தும் உங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெபியுங்கள். உங்களை மன்னிக்கும்படியாகவும், உங்களுடைய பாவங்களை அவருடைய இரத்தத்தில் கழுவும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். உங்களுக்கு புது இருதயத்தை கொடுக்கும்படியாகவும், உங்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை அருளும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். இதுமுதல் அவருடைய சீஷனாயும், வேலைக்காரராயும் இருப்பதற்கு வேண்டிய விசுவாசத்தையும், கிருபையையும், நற்கிரியை செய்ய வல்லமையையும் கொடுக்கும்படியாக அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். வாசகர்களே இன்றே அவரிடம் செல்லுங்கள்.

உங்கள் சொந்த நடையில், சொந்த வார்த்தைகளில் அவரிடம் சொல்லுங்கள். ஒருவேளை வியாதியில் இருக்கும்போது மருத்துவர் உங்களிடம் வந்தால் அவரிடம் எங்கே வலிக்கிறது என்று நிச்சயம் சொல்லுவீர்கள். அதுபோல உங்கள் ஆத்துமா நிச்சயம் உங்கள் பாவத்தை உணர்ந்தால், இயேசுவிடம் சொல்வதற்கு சரியான காரியங்கள் இருக்கும். நீங்கள் பாவியாக இருப்பதினால் அவருடைய அழைப்பின் மீது சந்தேகப்படாதிருங்கள். பாவிகளை ஏற்று கொள்வது அவருடைய பணி. அவர் சொல்லியிருக்கிறார்: "நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்." (லூக் 5:32).

சந்தேகப்படாதீர்கள்

நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைத்து அவரிடம் செல்வதற்கு தயங்காதீர்கள். எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். காத்திருத்தல் சாத்தானிடமிருந்து வருகிறது. நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்களோ? அதே நிலைமையில் அவரிடம் செல்லுங்கள். உங்கள் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் அவரிடம் வருவது அவசியமாயிருக்கிறது. நீங்கள் சரியாக்கப்பட முடியாதபடிக்கு அவரிடம் இருந்து விலகி விடாதீர்கள்.

உங்களுடைய ஜெபங்கள் திக்கி திக்கி இருப்பதற்காகவும், அதில் வார்த்தைகள் வலிமையில்லாமல் இருப்பதற்காகவும், ஜெபத்தில் உங்கள் மொழிநடை எளிமையாக இருப்பதற்காகவும் பயப்படாதேயுங்கள். இயேசு கிறிஸ்துவால் உங்களை புரிந்து கொள்ள முடியும். எப்படி குழந்தையின் முதல் அழுகையை தாயால் புரிந்து கொள்ளமுடிகிறதோ, அதேபோல இரட்சகரும் பாவிகளின் வேண்டுதல்களை புரிந்து கொள்ளுகிறார். உங்களின் பெருமூச்சுகளையும், உங்களின் புலம்பல்களையும் அவரால் புரிந்து கொள்ளமுடியும்.

​​உடனடியாக பதில் கிடைக்காததால் விரக்தியடைய வேண்டாம். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து பதில் தாமதப்படும்போது, அது நிச்சயமாக ஏதோ ஒரு நல்ல நோக்கத்திற்காக தான் தாமதப்படும். நீங்கள் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும். ஒருவேளை தாமதமானால் அதற்காக காத்திருங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும்.

வாசகர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆசையிருந்தால் நான் உங்களுக்கு மேலே கொடுத்த அறிவுரைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இதை முழுமனதுடனம் நேர்மையாகவும் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் இரட்சிப்பை பெற்றுகொள்வீர்கள்.

 
கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.