| 1 | மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நெபோவுக்கு ஐயோ கேடு! அது பாழடைந்து கிடக்கிறது. கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. | எரே 9:26 எரே 25:21 எரே 27:3 ஆதி 19:37 எண் 24:17 2நாளா 20:10 ஏசா 15:1-16 ஏசா 25:10 ஏசா 27:3 எசே 25:8-11 ஆமோ 2:1 ஆமோ 2:2 செப் 2:8-11 |
| 2 | போவாபின் புகழ் மங்கிவிட்டது: எஸ்போனில் அதற்குத் தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது: “வாருங்கள்: அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்”. மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்: வாள் உன்னைத் துரத்தி வரும். | எரே 48:17 ஏசா 16:14 |
| 3 | ஓரொனாயிமினின்று கூக்குரல் ஒலிக்கிறது. 'கொடுமை பேரழிவு' எனக் கேட்கிறது. | எரே 4:20 எரே 4:21 எரே 47:2 ஏசா 15:2 ஏசா 15:8 ஏசா 16:7-11 ஏசா 22:4 |
| 4 | மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது: அதன் குழந்தைகளின் அழுகுரல் கேட்கின்றது. | எண் 21:27-30 |
| 5 | லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில் அவர்கள் அழுதுகொண்டே போகிறார்கள்: ஓரொனாயிமுக்கு இறங்கிச் செல்லும் வழியில் அழிவின் புலம்பல் கேட்கிறது. | ஏசா 15:5 |
| 6 | தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்: பாலை நிலத்துக் காட்டுக்கழுதைபோல் மாறுங்கள். | எரே 51:6 ஆதி 19:17 சங் 11:1 நீதி 6:4 நீதி 6:5 மத் 24:16-18 லூக் 3:7 லூக் 17:31-33 எபிரெ 6:18 |
| 7 | உன் கோட்டைகளையும் கருவூலங்களையும் நம்பியிருந்தாய்: நீயும் கைப்பற்றப்படுவாய். கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்: அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அதனோடு செல்வார்கள். | எரே 9:23 எரே 13:25 சங் 40:4 சங் 49:6 சங் 49:7 சங் 52:7 சங் 62:8-10 ஏசா 59:4-6 எசே 28:2-5 ஓசி 10:13 1தீமோ 6:17 வெளிப் 18:7 |
| 8 | “அழிப்போன்” ஒவ்வொரு நகருக்கும் வருவான். எந்த நகரும் தப்பாது. ஆண்டவர் சொல்லியிருப்பது போல் பள்ளத்தாக்குகள் பாழாகும்: சமவெளிகள் அழிக்கப்படும். | எரே 48:18 எரே 6:26 எரே 15:8 எரே 25:9 எரே 51:56 |
| 9 | மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்: அது பறந்தோடட்டும்: அதன் நகர்கள் பாழாக்கப்படும்: அவை குடியிருப்போர் அற்றுப் போகும். | எரே 48:28 சங் 11:1 சங் 55:6 ஏசா 16:2 வெளிப் 12:14 |
| 10 | ஆண்டவர்தம் அலுவலை அக்கறையின்றிச் செய்பவன் சபிக்கப்பட்டவன்: குருதி சிந்தாமல் தன் வாளை வைத்திருப்பவனும் சபிக்கப்பட்டவனே. | எரே 50:25 எண் 31:14-18 நியா 5:23 1சாமு 15:3 1சாமு 15:9 1சாமு 15:13-35 1இரா 20:42 |
| 11 | மோவாபு இளமைமுதல் அமைதியில் வாழ்ந்துவருகிறது: மண்டியை அடியில் கொண்ட பழந் திராட்சை இரசம் அது. அது கலத்தினின்று கலத்திற்கு மாற்றப்படாதது: நாடுகடத்தப்படாதது: அதன் சுவை குன்றவில்லை: அதன் நறுமணம் மாறவில்லை. | சங் 55:19 சங் 73:4-8 சங் 123:4 நீதி 1:32 சகரி 1:15 |
| 12 | எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் “கவிழ்ப்போரை” அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்: அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்: அதன் சாடிகளை நொறுக்குவார்கள். | எரே 48:8 எரே 48:15 எரே 25:9 ஏசா 16:2 எசே 25:9 எசே 25:10 |
| 13 | இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும். | எரே 48:7 எரே 48:39 எரே 48:46 நியா 11:24 1சாமு 5:3-7 1இரா 11:7 1இரா 18:26-29 1இரா 18:40-29 ஏசா 2:20 ஏசா 16:12 ஏசா 45:16 ஏசா 45:20 ஏசா 46:1 ஏசா 46:2 |
| 14 | “நாங்கள் படைவீரர்கள்: போரில் வல்லவர்கள்” என்று நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்? | எரே 8:8 சங் 11:1 ஏசா 36:4 ஏசா 36:5 |
| 15 | “மோவாபையும் அதன் நகர்களையும் அழிப்பவன் வந்துவிட்டான்: அதன் சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர். | எரே 48:8 எரே 48:9-25 |
| 16 | மோவாபின் அழிவு அண்மையில் உள்ளது: தீங்கு அதை நோக்கி விரைந்து வருகிறது. | எரே 1:12 உபா 32:35 ஏசா 13:22 ஏசா 16:13 ஏசா 16:14 எசே 12:23 எசே 12:28 2பேது 2:3 |
| 17 | அதைச் சுற்றியிருப்போரே, நீங்கள் அனைவரும் அதற்காகத் துக்கம் கொண்டாடுங்கள். அதன் புகழை அறிந்திருப்போரே, நீங்கள் அனைவரும் “வலிமைமிக்க செய்கோல் முறிந்தது எங்ஙனம்? மேன்மைமிக்க கோல் உடைந்தது எவ்வாறு?” என்று கேளுங்கள். | எரே 48:31-33 எரே 9:17-20 ஏசா 16:8 வெளிப் 18:14-20 |
| 18 | மகள் தீபோனின் குடிமகனே, உன் மேன்மையை விட்டு இறங்கி வா: வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள். மோவாபை அழிப்பவன் உனக்கு எதிராக எழுந்துவிட்டான்: உன் கோட்டைகளை அவன் தகர்த்து விட்டான். | எரே 46:18 எரே 46:19 ஏசா 47:1 |
| 19 | அரோயேரின் குடிமகனே! நீ சாலை ஓரமாய் நின்று கவனி: ஓட்டம்பிடிக்கிறவனையும் தப்பி ஓடுகிறவளையும் நோக்கி, “என்ன நடந்தது?” என்று கேள். | எண் 32:34 உபா 2:36 2சாமு 24:5 1நாளா 5:8 |
| 20 | மோவாபு அழிக்கப்பட்டுச் சிறுமைக்குள்ளானது: அழுது புலம்புங்கள்: கூக்குரலிடுங்கள்: மோவாபு பாழடைந்துவிட்டது என அர்னோனில் அறிவியுங்கள். | எரே 48:1-5 ஏசா 15:1-5 ஏசா 15:8-5 ஏசா 16:7-11 |
| 21 | சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது: ஓலோன், யாகுசா, மேப்பாத்து, | எரே 48:8 எசே 25:9 செப் 2:9 |
| 22 | தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம், | எரே 48:1 எரே 48:18 எண் 32:34 |
| 23 | கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன், | எரே 48:1 ஆதி 14:5 |
| 24 | கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது. | எரே 48:41 ஆமோ 2:2 |
| 25 | மோவாபின் கொம்பு முறிந்து விட்டது: அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர். | சங் 75:10 புலம் 2:3 தானி 7:8 தானி 8:7-9 தானி 8:21-9 சகரி 1:19-21 |
| 26 | மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்: ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்: ஏளனத்துக்கு ஆளாகும். | எரே 13:13 எரே 13:14 எரே 25:15-17 எரே 25:27-29 எரே 51:7 எரே 51:39 எரே 51:57 சங் 60:3 சங் 75:8 ஏசா 29:9 ஏசா 51:17 ஏசா 63:6 புலம் 3:15 புலம் 4:21 எசே 23:31-34 நாகூ 3:11 வெளிப் 16:19 |
| 27 | இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா? | சங் 44:13 சங் 79:4 நீதி 24:17 நீதி 24:18 புலம் 2:15-17 எசே 25:8 எசே 26:2 எசே 26:3 எசே 35:15 எசே 36:2 எசே 36:4 ஒபதி 1:12 ஒபதி 1:13 மீகா 7:8-10 செப் 2:8 செப் 2:10 மத் 7:2 |
| 28 | மோவாபின் குடிமக்களே, நகர்களை விட்டு வெளியேறுங்கள்: பாறைப் பகுதியில் குடியேறுங்கள். பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள். | எரே 48:9 நியா 6:2 1சாமு 13:6 ஏசா 2:19 ஒபதி 1:3 ஒபதி 1:4 |
| 29 | மோவாபின் செருக்கைப் பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்: பெரிதே அதன் இறுமாப்பு! அதன் ஆணவம், செருக்கு, அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம் கேள்வியுற்றோம். | நீதி 8:13 ஏசா 16:6 செப் 2:8-15 |
| 30 | அதன் திமிரை நான் அறிவேன், என்கிறார் ஆண்டவர். அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்: அதன் செயல்கள் யாவும் பொய். | ஏசா 16:6 ஏசா 37:28 ஏசா 37:29 |
| 31 | மோவாபை முன்னிட்டு நான் ஓலமிடுவேன்: மோவாபு முழுவதையும் குறித்து அலறியழுவேன்: கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப் புலம்புவேன். | ஏசா 15:5 ஏசா 16:7-11 |
| 32 | சிப்மாவின் திராட்சைக் கொடியே, யாசேருக்காக அழுவதைவிட அதிகமாய் உனக்காக அழுவேன். உன் கொடிகள் கடல் வரை படர்ந்துள்ளன: யாசேர் கடலை எட்டியுள்ளன. கோடைப் பழங்கள்மீதும் திராட்சைப் பழங்கள்மீதும் “அழிப்போன்” பாய்ந்து வந்தான். | எண் 32:38 |
| 33 | செழிப்பான மோவாபு நாட்டினின்று மகிழ்ச்சியும், அக்களிப்பும் அகற்றப்பட்டுவிட்டன: திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்: மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன் எவனும் இலலை: மகிழ்ச்சியின் ஆரவாரம் அங்கு எழுவதில்லை. | எரே 25:9 எரே 25:10 ஏசா 9:3 ஏசா 16:9 ஏசா 24:7-12 ஏசா 32:9-14 யோவே 1:12 யோவே 1:16 வெளிப் 18:22 வெளிப் 18:23 |
| 34 | எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது: சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது. | எரே 48:2 ஏசா 15:4-6 |
| 35 | மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர். | எரே 48:7 எண் 22:40 எண் 22:41 எண் 28:14 எண் 28:28-30 ஏசா 15:2 ஏசா 16:12 |
| 36 | எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது: என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன. | எரே 4:19 ஏசா 15:5 ஏசா 16:11 ஏசா 63:15 |
| 37 | அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன: தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது. | எரே 16:6 எரே 41:5 எரே 47:5 ஏசா 3:24 ஏசா 15:2 ஏசா 15:3 எசே 7:18 எசே 27:31 ஆமோ 8:10 மீகா 1:16 |
| 38 | மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்: ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர். | ஏசா 15:3 ஏசா 22:1 |
| 39 | இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று. | எரே 48:17 புலம் 1:1 புலம் 2:1 புலம் 4:1 வெளிப் 18:9 வெளிப் 18:10 வெளிப் 18:15 வெளிப் 18:16 |
| 40 | ஆண்டவர் கூறுவது இதுவே: ஒருவன் கழுகைப்போல் பாய்ந்து வருவான்: மோவாபின்மீது தன் இறக்கைகளை விரிப்பான். | எரே 4:13 உபா 28:49 புலம் 4:19 எசே 17:3 தானி 7:4 ஓசி 8:1 |
| 41 | நகர்கள் பிடிபடும்: கோட்டைகள் கைப்பற்றப்படும். அந்நாளில் மோவாபிய படைவீரர்களின் இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும். | எரே 4:31 எரே 6:24 எரே 30:6 எரே 49:22 எரே 49:24 எரே 50:43 எரே 51:30 ஏசா 13:8 ஏசா 21:3 ஏசா 26:17 ஏசா 26:18 மீகா 4:9 மீகா 4:10 1தெச 5:3 |
| 42 | மோவாபு அழிக்கப்படும்: இனி அது ஒரு மக்களினமாய் இராது. அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமை அடித்துக் கொண்டது. | எரே 48:2 எரே 30:11 எஸ்தர் 3:8-13 சங் 83:4-8 ஏசா 7:8 மத் 7:2 |
| 43 | மோவாபின் மகனே, திகிலும் படுகுழியும் கண்ணியுமே உன்முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். | உபா 32:23-25 சங் 11:6 ஏசா 24:17 ஏசா 24:18 புலம் 3:47 |
| 44 | திகிலுக்கு அஞ்சி ஓடுபவன் படுகுழியில் விழுவான்: படுகுழியினின்று வெளியே வருபவன் கண்ணியில் மாட்டிக்கொள்வான். அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின்மீது வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர். | எரே 16:16 1இரா 19:17 1இரா 20:30 ஏசா 37:36-38 ஆமோ 2:14 ஆமோ 2:15 ஆமோ 5:19 ஆமோ 9:1-4 |
| 45 | தப்பியோடுவோர் எஸ்போனின் நிழலில் வலுவிழந்து நிற்கின்றனர்: எஸ்போனிலிருந்து நெருப்பு கிளம்பிற்று: சீகோனிலிருந்து தீப்பிழம்பு புறப்பட்டது: மோவாபின் நெற்றியை அது விழுங்கிற்று: கலக்காரரின் உச்சந்தலையை அது பொசுக்கிற்று. | எண் 21:28 ஆமோ 2:2 |
| 46 | மோவாபே, உனக்கு ஐயோ கேடு! கெமோசின் மக்கள் அழிந்துபோயினர்: உன் புதல்வர் நாடு கடத்தப்பட்டனர்: உன் புதல்வியரும் நாடுகடத்தப்பட்டனர். | எண் 21:29 |
| 47 | ஆயினும், இறுதி நாள்களில் அடிமைத்தனத்தினின்று மோவாபை நான் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர். மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முற்றிற்று. | எரே 46:26 எரே 49:6 எரே 49:39 ஏசா 18:7 ஏசா 19:18-23 ஏசா 23:18 எசே 16:53-55 |