19
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, “இவை எதைக் குறிக்கின்றன?” என்று நான் வினவினேன். அதற்கு அவர், “இவைதாம் யூதாவையும் இஸ்ரயேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள்” எனப் பதிலளித்தார்.
20
அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காண்பித்தார்.
21
“இவர்கள் எதற்காக வருகிறார்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு அத்தூதர், “எவரும் தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே: யூதா நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்திய வேற்றினத்தாரின் கொம்புகளை உடைத்தெறியவும் அவர்களைத் திகில் அடையச் செய்யவுமே இவை வந்திருக்கின்றன” என்று பதிலுரைத்தார்.