27
எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்: “எஸ்போனுக்கு வாருங்கள்: அது கட்டப்படட்டும்: சீகோன் நகர் நிறுவப்படட்டும்.
28
நெருப்பு, எஸ்போனிலிருந்தும் நெருப்புத் தழல் சீகோன் நகரிலிருந்தும் சென்றது: அது மோவாபிலுள்ள அர் நகரையும் அர்னோன் மேடுகளிலுள்ள தலைவர்களையும் விழுங்கிவிட்டது.
29
மோவாபு! உனக்கு ஐயோ கேடு: கெமொசின் மக்களே, உங்களுக்கு முடிவு வந்துவிட்டது: எமோரிய அரசன் சீகோனுக்கு கெமோசின் காரணமாய் அவன் புதல்வர் புறங்காட்டி ஓடினர்: அவன் புதல்வியர் சிறைக் கைதிகளாயினர்:
30
எனவே எஸ்போன் முதல் தீபோன் வரை அழிந்தது: மேதபா வரையுள்ள நோபுபாக்குப் பகுதியைப் பாழாக்கினோம்.”