பேறுகாலப் பெண் எழுப்பும் குரல் போன்றும் தன் முதற் பிள்ளையைப் பெற்றெடுப்பவளின் வேதனைக் குரல் போன்றும் குரல் ஒன்று கேட்டேன். அது, மூச்சுத் திணறி, கைகளை விரித்து, “எனக்கு ஐயோ கேடு! கொலைஞர் முன்னால் நான் உணர் வற்றுக் கிடக்கிறேன்!” என்று அலறும் மகள் சீயோனின் குரலாகும்.