நான் அவரைக் காண்பேன்: ஆனால் இப்போதன்று: நான் அவரைப் பார்ப்பேன்: ஆனால் அண்மையிலன்று: யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்: சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.